Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா?

Featured Replies

இராசி பலன் (பொதுப்பலன் )- உங்களுக்கு பொருந்துகிறதா?

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷராசி அன்பர்களே!

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமான தோற்ற மும் நடுத்தர உயரமும் கொண்டவராக இருப்பீர்கள். எதையும் கண்டுகொள்ளாதவர் மாதிரி தெரிந்தாலும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அக்கறையும் நிரம்பியவர்கள். சுற்றுச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் சக்தியும் கொண்ட வர்கள். உடம்பில் முகத்தில் கைகளில் அல்லது தொடையில் மச்சம், தழும்பு அல்லது வடுக்காயம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பொதுஅறிவு இருக்கும். அதனால் பிறர் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அதைப் பற்றித் தெரிந்திருக்கும் ஞானம் உடையவர்கள். பலரிடமும் அபிப்பிராயமும் ஆலோ சனையும் கேட்டாலும் எந்த ஒரு காரியத்திலும் சொந்த விருப்பம் என்று ஒன்று இருக்கும். அதன்படியே செயல்படுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் மறைத்துப் பேசத் தெரியாது. எதுவானாலும் நேருக்கு நேர் கூறும் பழக்கம் உடையவர்கள். அதனால் மற்றவர்களின் விமர்சனங்கள் ஏற்பட்டாலும் அதைப் பற்றித் துளியும் கவலை கொள்ளமாட்டீர்கள்.

உங்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர்களுக் காக எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக் கொண்டு அவர்களுக்காக வாதாடி சாதனை படைப்பீர்கள். ஒரு காரியத்தை உங்களை நம்பி ஒப்படைத்தால் அதை வெற்றியோடு செயல்படுத்தி முடிக்கும்வரை ஓயமாட் டீர்கள். அதேசமயம் சாமான்யமாக எந்த ஒரு பொறுப் பையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் திறனுடைய நீங்கள் உங்களையே புரிந்து கொள்ள முடியாதவர் களாகவும் இருப்பீர்கள். தெய்வ வழிபாடு இருந்தாலும் சில விஷயங்களில் பலவீனமான பழக்க - வழக்கத்துக்கு அடிமையாகவும் இருப்பீர்கள். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களை நம்பி பணவிரயம் செய்து முடிவில் பகை, விரோதம் ஆகிவிடும். பூர்வீகச் சொத்து இருந்தும் பயன்படாது. விரயம் ஆகலாம். பிள்ளைகள் ஆதரவாலும் அவர்தம் சம்பாத்தியத்தாலும் சொத்து சுகங்களைத் தேடிக் கொள்ளவும்- அனுபவிக்கும் யோகமும் அமையும். சிலர் பூர்வீக எல்லையை விட்டு இடம் மாறி வாழலாம். சிலகாலம் வாடகை வீடு பிறகு ஒத்தி வீடு அப்புறம் சொந்த வீட்டில் வாழும் யோகமும் உண்டு. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடித்தான் முன்னுக்கு வரவேண்டிய நிலை!

எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள். அதனால் மூளை நரம்புகளில் சில தொல்லைகள் ஏற்படலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுவீர்கள். பணவிரயத்தைத் தவிர மற்ற வகைகளில் கவலை இராது. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கென்று செலவு வந்துவிடும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களை வசியப் படுத்துவீர்கள். உங்கள் வாக்கை மற்றவர்கள் தெய்வ வாக்காக- தேவ வாக்காக மதித்து மரியாதை செய்வார்கள். தாய் - தகப்பனார் உறவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழலாம்; அல்லது அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து வாழலாம். சகோதர வகையிலும் ஆதரவு, அனுசரணையை எதிர்பார்க்க முடியாது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட வேண்டும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே!

ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் புதிய நண்பர் களுடனோ அல்லது விருந்தாளிகளுடனோ திடீ ரென்று பழகுவது சிரமமே. பழகிவிட்டால் சகஜமாகப் பழகி மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். உங்களைப் புகழ்ந்து பேசினால் மயங்கி விடுவீர்கள். பிறருக்கு அடி பணிவது உங்களுக்குப் பிடிக்காத செயல். நேர்மை யுடன் வாழ்வதே உங்களுக்குப் பிடித்தமானதாகும். தர்க்கம், விதண்டாவாதம் செய்வதில் கெட்டிக்கார ரான நீங்கள் எந்தப் பக்கமும் பேசி வெற்றி பெறுவீர் கள். சாதுவான குணம் கொண்ட உங்களைச் சீண்டி விட்டால் பயங்கரமான கோபம் கொள்வீர்கள்! பார்ப் பதற்கு சாதாரண ஆளாக இருப்பினும், எதிர்த்தவர் களின் பலம் குறையும்வரை விரட்டி அடிப்பீர்கள். நடந்ததை உலகம் பூராவும் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்துவீர்கள். அதனால் யாருமே உங்களிடம் மோதிப் பார்க்க அஞ்சுவார்கள். வயதில் சிறுவராக இருப்பினும், அந்தஸ்தில் குறைந்து இருப்பினும் உங்களுடைய புத்திமதிகளை யாவரும் ஏற்று உங்களைப் போற்றிப் புகழ்ந்திடுவார்கள். உங்கள் கைராசியானது அடுத்தவர்களுக்கு மட்டுமே பலன் தரும்- பயன் தரும்! உங்களுக்கு அல்ல!

வாக்கு ஸ்தானம் புதன் என்பதால் சிரித்துப் பேசியே யாவரையும் கவர்ந்துவிடுவீர்கள். ஆடம்பரப் பிரியராக இல்லாவிட்டாலும் பார்வைக்கு செல்வந்தர் குடும்பத் தில் பிறந்தது போன்ற தோற்ற அமைப்பு கொண்டவ ராகக் காணப்படுவீர்கள். மிகவும் வெண்மையான உடைகளை அதிகம் விரும்புவீர்கள். பணத்தை அதிகம் செலவழிக்க மாட்டீர்கள். உங்களுடைய சகிப்புத்தன்மையும் பொறுமையுமே உங்களுடைய வெற்றிக்குக் காரணம். எக்காரியத்தை எடுத்தாலும்- அது மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி; உங்களுக்காக இருந்தாலும் சரி - அதில் உண்மையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். நீங்கள் மற்றவ ருடைய அபிப்பிராயத்திற்குச் செவிசாய்க்க வேண்டும். மற்றவர்களுக் காக உழைப்பதைவிட உங்களுக்காகவும் உழைக்க வேண்டும். கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும், மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே!

மிதுனராசியில் பிறந்த நீங்கள் கோபம் வரும்போது கூட சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் மனதில் பழி உணர்ச்சியைப் பதித்துக் கொள்வீர்கள். குதர்க்கமும் கிண்டலும் கொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவீர்கள். தந்திரமாகப் பேசும் காரியவாதி. நீங்கள் பிறரை எளிதில் நம்பமாட்டீர்கள். சந்தேகப் பேர்வழி. நயமாக - பணிவாகப் பேசியே உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளித் தோற்றத்திற்கு அப்பாவிபோல இருப்பினும் மனதில் உயர்ந்த ஹீரோ என்றும்; புத்திசாலி என்றும் நினைப் பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததைப் போல சொன்ன சொல்லையும் காப்பாற்ற மாட்டீர்கள்! எதிலும் புதுமை தேவை என்று அடிக்கடி கூறுவீர்கள். உடம்பு என்றும் இளமையுடன் இருக்க பயிற்சி செய்வீர்கள்.

பெண்களிடம் பேசுவதற்கும் அவர்களுடைய நட்பைப் பெறுவதற்கும் முயற்சி செய்து வருவீர்கள். அவர்களை நம்பிக்கைக்கு உரியவராகச் செய்வதிலும் கெட்டிக்காரர்தான். பல பெண்களின் நட்பும் அவர் களால் பல ஆதாயங்களையும் பெறுவீர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். வெளியில் பார்ப்பதற்கு தைரியசாலி போல தோன்றினாலும் மனதுக்குள் கோழை! சிறிய விஷயமானாலும் பிறர் உதவியை நாடுவீர்கள். மற்றவரின் அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் உங்க ளுடைய எண்ணத்தை யாரிடமும் கூறமாட்டீர்கள். நீங்கள் மழுப்பிப் பேசியே காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களால் கோபத்தை மட்டும் அடக்க முடியாது. எவ்விஷயத்தையும் தோண்டித் துருவி ஆராயும் மனம் கொண்டவர். ஆனால் உங்கள் மனதில் சந்தேகமும் பயமும் எப்பொழுதும் இருக்கும். 3-ல் இருந்த சனியால் மனதில் இனம்புரியாத கவலைகள், வேதனைகள் இருந்தன. உடலிலும் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படலாம். பணப்பிரச்சினை இருந்தது. மருத்துவச் செலவு, குடும்பத்திற்காகத் தேவையில்லாத வீண் செலவுகள் அடுத்தவர்க்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு அதனால் பல வகையாலும் விரயங்கள் - இப்படிப் பல சிரமத்திற்கு உள்ளானீர்கள். எங்கும் யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அதேபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் அனுகூலமும் பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். வாங்கிய இடத்தில் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுவீர்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே!

கடக ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பு கொண்ட வர். உங்களை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. விழிப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள். எவ்வளவு நஷ்டம், கஷ்டம் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர். கூட்டாளி சேர்க்கையால் புதிய பழக்க- வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சிலகாலம் போதை வஸ்துகளுக்கு அடிமையாவீர்கள். பிறந்த இடம் விட்டு வனவாசம் மாதிரி வெளியிடத் தில் வாழ்வீர்கள். அப்படி வாழ்வதே முன்னேற்றம் தரும்! இளமைக் காலத்தில் கல்வி தடைப்படும். சிறப்பாகப் பயில இயலாது; பயின்றாலும் பலன்கள் இராது. பிறகு படிப்பைத் தொடரலாம். சகோதரர்களுடன் இளமை யில் ஒற்றுமையுடன் வாழ்வீர்கள். ஆனால் காலப்போக் கில் பண விவகாரத்தில் பிரிவு ஏற்பட்டு பிறகு ஒன்று சேர்வீர்கள். அன்னையின் அரவணைப்பு இளமைக் காலம் வரை தொடரும். உங்களுக்கென்று வாழ்க்கை ஏற்பட்டு தாய், தகப்பன் ஒற்றுமை குறைந்து தனிக்குடித் தனம் அமையும்போது வேறுபடும். தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வீர்கள். புத்திர விருத்தி உண்டு. அவர்களிடம் சுயநலமும் அவசர புத்தியும் கொண்ட சிக்கனவாதி எனப் பெயர் வாங்குவீர்கள். நீங்கள் பெற்ற புகழ், பெயர், அந்தஸ்தை உங்கள் வாரிசுகளால் பெற முடியாது. எந்தக் குடியில் பிறந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நன்கு தெரிந்தவர்களாக இருப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செய்ய ஆர்வம் கொண்டிருப்பீர் கள். மக்களுக்குப் பொதுத் தொண்டு செய்யவும், பொதுமக்களிடையே கலந்து உறவாடவும் விரும்புவீர் கள். ஊருக்காக உழைப்பவர் நீங்கள்! உயர்ந்த கல்வி இல்லை என்றாலும், அறிவு, திறமை, ஞானம் இயற்கை யாகவே பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு ஞாபகசக்தி அதிகம். நீங்கள் எக்காரியத்தையும் விரைவாக முடிப்பீர்கள். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதைச் சுலபப் படுத்தி சீக்கிரம் முடிப்பீர்கள். நீங்கள் எக்காரியத்தைத் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தோல்வி அடைந்தாலும் விடாமல் அதீத முயற்சி செய்து அக்காரியத்தை முடித்து வெற்றி அடைவீர்கள். எவ்விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் பல முறை தீர ஆலோசனை செய்து அக்காரியத்தில் இறங்குவீர்கள். அப்படி இறங்கிவிட்டால் அக்காரியத்தை முடிக்கும் வரை தூக்கம் வராது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து நின்று வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நடப்பீர்கள். மற்றவர்களை அடக்கியாள ஆசைப்படு வீர்கள். உங்கள் விருப்பப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவீர்கள். பசி நேரத்தில் சூடாகவும், காரம் அதிகமாகவும் உள்ள உணவை விரும்பி உண்பீர்கள். மற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகள் எதுவும் சாப்பிட மாட்டீர்கள். மாமிசம் உண்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குளிர்ந்த நீரில் நீராடுதல், ஓடை, ஆறு, நீர்வீழ்ச்சிகளில் நீந்திக் குளிப்பதற்கு மிகவும் ஆசைப்படுவீர்கள். இயற்கையாக, அமைதியாக வாழ்வதற்கு விரும்புவீர்கள். அகங்காரம் கொள்வதும் தற்பெருமை பேசுவதும் சிலசமயம் உண்டு! மற்றவர்களின் அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் பணிந்து போக மாட்டீர்கள். உண்மை, சத்தியம், நேர்மை இவற்றிற்குக் கட்டுப்பட்டு நடப்பீர் கள். பெரும் படையே திரண்டு வந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சந்தித்துப் போராடி வெற்றி அடைவீர்கள்.

தைரியம், துணிச்சல் கொண்டிருப்பீர்கள். தர்க்க வாதம் செய்வதில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். உங்கள் வார்த்தையில் கம்பீரம் இருக்கும். மற்றவர் களை எளிதில் வசீகரிப்பீர்கள்! நகைச்சுவையுடன் உரையாடுவீர்கள். கவிதைகள்கூட எழுதுவீர்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. பொதுஅறிவை பல புத்தகங்களைப் படித்தும் கேட்டும் விருத்தி செய்து கொள்வீர்கள். உயர்கல்வி யோகம் இல்லையென்றாலும் பல கலைகளையும் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு புத்திர தோஷம் இருப்பதால், குறைந்த எண்ணிக்கை யிலே குழந்தைகள் பிறக்கும். சகல லட்சணங்களும் பொருந்திய அழகிய குழந்தைகளைப் பெறுவீர்கள். மகனை புகழ் பெற வளர்ப்பீர்கள். தர்ம காரியங்கள் பல செய்வீர்கள். மெய்ஞ்ஞான கருத்துகளையும், தத்துவ ஆராய்ச்சிகளையும் செய்வீர்கள். வெளியூர் பயணம், கோவில், குளங்கள் சுற்றுதல், யாத்திரை செல்லுதல் போன்றவற்றில் அதிக ஆசை கொண்டிருப்பீர்கள். தெய்வ பக்தியும் குரு சிந்தனையும் எப்போதும் மனதில் குடிகொண்டிருக்கும். சிறு வயதிலேயே தகப்பனார் ஆதரவு குறையும். உடல் நலனில் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். கோர்ட், வம்பு, வழக்கு ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே வரும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் கூட்டுத் தொழில் லாபமும் நன்மையும் கொடுக்கும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே!

கன்னி ராசியில் பிறந்த நீங்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்க - வழக்கங்களையும் கைக் கொள்வீர்கள். வசீகரத் தோற்றம் கொண்டிருப்பீர்கள். யாவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். அளந்து பேசுவீர்கள். அகம்பாவம் இராது. நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் கூறிப் பாராட்டு பெறுவீர்கள். மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். பிறர்க்கு கல்வி புகட்டுவது, ஓவியம் வரைவது, மொழி மாற்றம் செய்வது போன்றவை பிடித்தவையாக இருக்கும். அதுவே தொழிலாகவும் அமையலாம். சகோதர பாசம் உண்டு. குடும்பத்திற்கு முதல் குழந்தையாக நீங்கள் பிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிக உழைப்பு உங்களுக்குப் பிடிக்காது. மூளையை அதிகம் பயன்படுத்தி தொழில் செய்வீர்கள். தூரதேச பயணம் பிடிக்காது. ஆனால் கடல் கடந்து போகும் சூழ்நிலை ஏற்படும். பயந்த சுபாவம் கொண்டி ருப்பீர்கள். எதையும் மதி நுட்பத்தால் அதன் சூட்சமத் தைப் புரிந்து கொள்வீர்கள். எவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். நேர்வழியில் பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற எண்ணமுடையவர். தாய்ப்பாசம் மிகக் கொண்டவர். தாயின் ஆதரவும் அன்பும் ஆசியும் உங்கள் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக இருக்கும். சுகமான வாழ்க்கையையே விரும்புவீர்கள். எவ்வளவு துன்பம் வந்தாலும், பண நெருக்கடி வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வசதி குறையாது. பேராசை கொள்ள மாட்டீர்கள்.

சுயமான வீடு, வாகனம், நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குழந்தைகள் பிறந்ததும் வசதி ஏற்படும். வீடு சிறிதாக இருப்பினும் எல்லா வசதிகளும் பெற்று சுகபோகமாக வாழலாம்! எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிர்காலம் பற்றி பலவிதமான கேள்விகள் மனதில் எழும். அவற்றை மற்றவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வீர்கள். பள்ளியில் படிப்பதைவிட நூல் நிலையங்களில் அதிக படிப்பைப் பெறுவீர்கள். படித்ததைக் குறித்து வைத்துக் கொள்வீர்கள். பொது அறிவு நிரம்பப் பெற்றவராவீர்கள். புத்தகமும் கையுமாக அறிவு ஆராய்ச்சியில் கருத்தை செலுத்திக் கொண்டிருப்பீர்கள். நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். துணிச்சலான காரியங்களில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். தூக்கத்திலும் உங்களுக்கு விழிப்பு உண்டு. ஞாபகசக்தி அதிகம் கொண்டிருப்பீர்கள். எளிதில் யாரிடமும் ஏமாறமாட்டீர்கள். ஆனால் புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். புராதன பொருள், புத்தகம் மற்றும் கலைப் பொருள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். பலனை எதிர்பாராமல் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். கோவில் திருப்பணிகள் செய்வீர்கள்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலாம் ராசி அன்பர்களே!

துலாம் ராசியில் பிறந்த நீங்கள் பேசுவதற்கு முன்பே சிரிப்பு வருவது உங்கள் சிறப்பு! இயற்கையாகவே நீங்கள் சுகத்தை அனுபவிக்கக்கூடியவர் அல்ல. மற்றவர்களுக்கு சுகத்தை அளிக்கக் கூடியவர். உங்கள் புன்னகையே புகழ்பெறக் கூடியது. வாழ்க்கையில் சிறு வயதில் பெரும்பாலும் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல சுகத்தை அனுபவிப் பீர்கள். மண், மனை, வண்டி வாகன வசதியும் செல்வாக் கும் பெற்று வாழ்வீர்கள். புத்திர தோஷம் அல்லது புத்திர கவலை ஏற்படும். பெண் மக்களே அதிகம். பிணி பீடைகள் உங்களுக்கு அதிகம் வராது. சிறு சிறு நோய் கள் ஏற்பட்டு விரைவில் குணமாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வீர்கள். அதனால் வயிறு சம்பந்தமான கோளாறும் அஜீரணம், வாய்வு, புளியேப்பம் போன்றவையும் ஏற்படும். குடும்பத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வரவு- செலவு சரியாக இருக்கும். பணத்தை சேமித்து வைக்க முடியாது. ஆனாலும் நேர்மை, உண்மை, நம்பிக்கையுடன் வாழ்வீர்கள். நீண்ட நாள் கடன் வாங்கி வட்டி கட்டுவீர்கள். உயர்ந்த வாடகை, ஆடம் பர செலவுகளுக்கே வருமானம் போதாது. மிதமிஞ்சிய காம இச்சை கொண்டிருப்பீர்கள். வெகு எளிதில் ஒழுக்கம் தவறும் சூழ்நிலை ஏற்படும். கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்கு அடங்கிப் போக மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் அநேக ரகசியங்கள் புரிந்துகொள்ள முடியாமல் புதைந்து கிடக்கும். அதை யாருமே தெளிவாக அறிய முடியாது. நீங்கள் எதைச் செய்தாலும்- சரியோ தவறோ- சரியான காரணம் காட்டுவீர்கள். சிலகாலம் சர்வாதிகாரியாக விளங்குவீர்கள். நல்ல மனைவி அமைவாள். தினசரி செய்தி, நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டு. கணிதம், ஜோதிடம், சாஸ்திரம் ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள். பூஜை, புனஸ்காரத்தைக் கடைப்பிடிப்பீர்கள். பக்தியும் பொது அறிவும் அதிகம் கொண்டவர். பல நூல்களை வாங்க செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செய்வீர்கள். பல திட்டங்கள் போடுவதும் கற்பனை சிறகடிப்பதும் பயணத்தில்தான். அமர்ந்தபடியே உறங்குவீர்கள். முன்கோபம் கொண்டவர். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். திட்டமிட்டுக் காரியம் செய்தல், கடமை உணர்ச்சி, நியாயம், நேர்மை ஆகியவற்றிற்கு அதிகம் மதிப்பு தருவீர்கள். பழைய சம்பிரதாயங் களைக் கைவிட மாட்டீர்கள். அடுத்தவர்கள் துன்பம் கண்டு இரக்கத்துடன் உதவி செய்வீர்கள். ஆனால் உங்களால் உதவி பெற்றவர் உங்களுக்குத் துன்பம் செய்வது கண்டு வேதனைப்படுவீர்கள். நியாயம் வழங்குவதில் சிறந்து விளங்குவீர்கள். தெய்வபக்தி கொண்டும் பெரியோர்களிடம் மதிப்பு கொண்டும் இருப்பீர்கள்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி அன்பர்களே!

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் வேடிக்கையாகப் பிறரை கிண்டல் செய்வது உங்கள் வாடிக்கையாகும். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். ஆனால் வார்த்தைகளில் அனல் பறக்கும். எதிலும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் முடிவில் இருக்காது. கொஞ்சம் சோம்பல் கொண்டிருப்பீர்கள். எண்ணத்தால் உயர்ந்து பலவிதமான கற்பனைகளைச் செய்வீர்கள். ஆனால் செயலில் மந்தமாக இருப்பீர்கள். மற்றவர்களைப்போல பணப்பற்றாக்குறை ஏற்படாது. அதேசமயத்தில் பணத் தேக்கமும் இராது. தேவை அறிந்து பணம் உங்களிடம் வந்துசேரும். சகோதர- சகோதரிகளிடம் ஒற்றுமை இராது.

உங்களுக்கென தனி வழி வகுத்துக் கொள்வீர்கள். கஷ்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் கொள்கையையும் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். எதிர்காலத்தை அறியும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள். தத்துவங்களையும் வேதாந்தங்களையும் பேசுவீர்கள். சமயத்தில் குடும்பத்தையும்கூட வெறுப்பீர்கள். பெற்றோ ரின் ஆதரவு உண்டு. அவர்களுடைய வீடு, நிலத்தில் வாழ்வீர்கள். உங்கள் சோம்பலால் சிலவற்றைப் புறக் கணிப்பீர்கள். சொத்து, சுகம் உள்ள குடும்பங்களில் பிறந்தாலும், உங்கள் தகப்பனார் சம்பாதித்த அளவுக் குச் சம்பாதிப்பது கஷ்டம். உற்றார்- உறவினர் தொல்லை தருவார்களேயன்றி ஆதரிக்க மாட்டார்கள்.

சொந்தவீடு இருப்பினும் மிகப் பழமையானதாக இருக்கும். குறை உள்ள வீட்டில் வசிப்பீர்கள். பெரிய வீட்டில் சிதிலமடைந்த அறைகள் மற்றும் சந்து பொந் தாக நுழைதலுமாக இருக்கும். நல்ல புதுமையான- அழகான வீடாக இருந்து அதில் வாழ்ந்தால் நிம்மதி இராது. வயது கடந்த பின்பே சுயமாக மண், பூமி, வீடுகள் ஏற்பட்டு வசதியுடன் வாழ்வீர்கள். பூசப்படாத கட்டிடமாக இருக்கும்.

புத்திக் கூர்மையுடன் செயல்படும் உங்களால் மேன்மை அடைய இயலாது. பட்டப் படிப்பு, மேல்படிப்பு படித்தாலும் பலன் இராது. தொழில்நுட்பக் கல்வி பயில வாய்ப்பு உண்டு. சாதாரணமாக எந்த நோயும் உடலைத் தாக்காது. ஆனால் காயம் ஏற்படுதல், உஷ்ணக் கட்டி, தீப்புண் தழும்பு போன்றவை ஏற்படும். கடன் வாங்குவதில் தயக்கம் கொள்வீர்கள். எவ்வளவு பிரச்சினை வந்தாலும் கலக்கமோ கவலையோ கொள்ளாமல் சிந்தித்துப் பார்த்து சுலபமாகப் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். புதுமையாக எதையாவது கண்டுபிடித்து புகழ்பெற முயற்சி செய்வீர்கள். அபாரமான அறிவுக் கூர்மையும், வளமிக்க கற்பனையும், புதுமையான சிந்தனைகளையும் கொண்டிருப்பீர்கள். சகல கலைகளிலும் வல்லவராக இருப்பீர்கள். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் கொண்டிருப்பீர்கள். ஆனால் நேரம் இல்லை என்பீர்கள்.

மந்திர- தந்திர சாஸ்திரங்களை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ஜாதகத்தையும் தெய்வத்தையும் சில நேரங்களில் வெறுத்தும் பேசுவீர்கள். உங்களுக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். மற்றவரை பேச்சால் துன்புறுத்தி விடுவீர்கள்!

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசி அன்பர்களே!

தனுசு ராசியில் பிறந்த நீங்கள் எடுத்த எந்தக் காரியத் தையும் திறமையுடன், வெற்றியுடன் முடிப்பீர்கள். மற்றவர்க்கு மரியாதை கொடுப்பீர்கள். ஆனால் யாருக்கும் கீழ்படிந்து அடிமையாவது பிடிக்காது. கள்ளம், கபடமின்றி எல்லாரிடத்திலும் உள்ளன்புடன் பழகுவீர்கள். வெளிப்படையாக மனதில் இருப்பது உதட்டில் வெளிவரும். சிலநேரங்களில் வெகுளித் தனமாகவும் பேசுவீர்கள். கடவுளிடத்தில் அந்தரங்க மாக ஆத்மார்த்தமான பக்தியைக் கொண்டிருப்பீர் கள். கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் சமயத் தில் கூரிய அம்புபோல பாயும். உங்களுக்குத் தெரிந் ததை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து கற்றும் கொடுப்பீர்கள். தீயவர்களுடன் நட்புகொள்ள மாட்டீர்கள். பிடிவாதம், வேகம், கோபம் கொண்டிருப்பீர்கள். விளையாட்டு உடற் பயிற்சிகளில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வருங் காலத்தை முன்கூட்டி உரைக்கும் தீர்க்கதரிசன உள்ளுணர்வு சக்தி கொண்டிருப்பீர்கள்.

கருத்தரங்கு, வழக்காடு மன்றம் போன்ற கூட்டங் களில் சுவைபட மணிக்கணக்கில் பேசுவீர்கள். செல் வாக்கு உண்டு. சகோதர விருத்தி குறைவு; ஒற்றுமையும் குறைவு. சிறு வயது முதலே சகோதரன் மேல் இனம் தெரியாத வெறுப்பு இருக்கும். இளவயது முதலே சுயதொழில் செய்யவே ஆர்வம் இருக்கும். சிரமம் இருந்தாலும் நேர்மையான வழியில் பணம் சேர்க்கவே ஆசைப்படுவீர்கள். குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் பெறும் தொழில்களைச் செய்யவே ஆசைப்படு வீர்கள். தாய்க்கு உங்கள்மீது பாசம் அதிகம். கல்வியை விட உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாக இருக்கும். கல்வியில் பெரிய படிப்பு பயில இயலாமல் தடை ஏற்படும். படிப்புக்குத் தகுதியான வேலை கிடைக் காது. கற்பனை அதிகம். அதனால் உங்கள் வாழ்க்கைத் துணைவியும் தொழிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என கற்பனை செய்து உருவம் தருவீர்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறாமல் ஏமாற்றம் அடையலாம். புத்திரர் சந்ததி அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு புத்திர பாக்கியமே இருக்கும். அதற்காகக் கவலைப்படமாட்டீர்கள்.

எதையும் விளையாட்டுப் போக்கில் எடுத்துக் கொள்ளும் உள்ளம் கொண்டவர் என்பதால் எதற்காகவும் கவலைப்பட மாட்டீர்கள். வயிற்றுக் கோளாறு, நீரினால் ஏற்படும் பிணிகள், வாயு சம்பந்தமான நோய் சில சமயம் தோன்றி துன்பப்படுவீர்கள். கடன், நோய், எதிரி களால் வம்பு, வழக்கு இவற்றில் ஏதேனும் ஒன்று நிரந்தரமாக இருக்கும். சட்ட விரோதமாகத் தீய வழிகளில் சென்று பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். நீதித்துறை மற்றும் மருத்துவத் துறைகளில் இருப்பவர்கள் அநேகர் உங்கள் லக்னமே! தகப்பனாருடன் ஒற்றுமை குறைந்து காணப்படும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசி அன்பர்களே!

மகர ராசியில் பிறந்த நீங்கள் சொல்லில் உறுதி கொண்டிருப்பீர்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வீர்கள். இசை ஞானம் கொண்டவர். இசையில் ஆர்வம் உண்டு. கடன் பெறுவதும் மற்றவர்க் குக் கடன் கொடுப்பதும் உங்களுக்குப் பிடிக்காத செயல்களாகும். சகோதரர்களிடமிருந்து பிரிந்து வாழ்வீர்கள். அவர்களால் பண உதவியோ ஆதரவோ கிட்டாது. அன்னையின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். ஆனால் தாய்க்கு அடிக்கடி பிணி, பீடை வாட்டிவிடும். நீங்கள் ஆடம்பர வசதியையோ செல்வச் சிறப்பையோ விரும்ப மாட்டீர்கள். தனிமையையும் அமைதியான வாழ்க்கையையும் விரும்புவீர்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழ்வீர்கள்.

சுயமாக வீடும் வாகனமும் நன்கு அமையும். கல்வியில் தேர்ச்சி பெற்று உயர்தரக் கல்வியும் பயில வாய்ப்புண்டு. பெண் சந்ததியே அதிகம் இருக்கும். மக்கள் அனைவரும் நல்ல புகழ், செல்வம் பெற்று வாழ்வார்கள். புத்திர, புத்திரிகளின் பரிபூரண அன்பைப் பெறுவீர்கள். பித்தம், உஷ்ணம் சம்பந்தமான பிணிகள் நடு வயதிற்குமேல் ஏற்படும். கடன் தொல்லை, பகை- விரோதம், கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாகக் கொண்டிருப்பீர்கள். ஆரம்பகாலத்தில் ஆதரவற்ற வாழ்க்கையாய் இருந்தாலும் சில காலத்திற்குப் பின் சுகமும் உற்சாகமும் குறையாமல் முன்னேறி வாழ்வீர்கள்.

சுயநலம் கொண்டிருப்பீர்கள். அவசர புத்தியினால் தீய விளைவைச் சந்திப்பீர்கள். கற்பனை வளம் மிகுந்தும் எதையும் சோதனை செய்து பார்ப்பதில் ஆர்வமும் கொண்டிருப்பீர்கள். சிலவேளைகளில் நிலையான குணமில்லாமல் காலத்தை வீணாக்குவீர்கள். மற்றவர்களைச் சுலபமாக நம்பமாட்டீர் கள். ஆன்மிகத்தில் பற்று கொண்டிருப்பீர்கள். கோவில், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டிருப் பீர்கள். உங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளும் தற்பெருமை கொண்டிருப்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள்.

எதையும் பெரிய அளவில் செய்யும் திறன் கொண்டிருப்பீர்கள். அது மற்றவர்களைப் பாதிக்கவும் செய்யும். எதிர்பாராத செல்வம் தேடி வரும். வாழ்க்கையில் அநேக கஷ்டங்களைச் சந்தித்து முன்னேறுவீர்கள். உயர்ரக ஆடைகளையே உடுத்துவீர்கள். சுவை குன்றாத உணவுப் பொருட்களையே நேரம் தவறாமல் உட்கொள்வீர்கள். தன்னம்பிக்கை மிகுந்தும் உழைப்பில் நம்பிக்கை கொண்டும் இருப்பீர்கள். மற்றவர்கள் தீங்கு செய்தாலோ அவமதித்தாலோ மன்னிக்க மாட்டீர்கள். அவர்கள் உங்கள் காலில் விழும்வரை வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுவீர்கள். மற்றவரிடம் சொல்லி அவர்களை அவமானப்படுத்து வீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற மனைவி அமைவாள்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசி அன்பர்களே!

கும்ப ராசியில் பிறந்த நீங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வீர்கள். பொறுமைசாலி. சதா ஏதாவது சிந்தினையுடன் இருப்பீர்கள். பிறரை எளிதில் எடைபோடுவீர்கள். சொந்த காரியங்களுக்குச் செலவு செய்யும் நேரத்தைவிட பிறர் காரியங்களுக்கு தான் அதிக நேரத்தைப் பயன்படுத்துவீர்கள். நண்பர் களுக்காக எதையும் செய்யும் உண்மையான அன்பு கொண்டிருப்பீர்கள். உள்ளத்தில் தோன்றியதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளியிடுவீர்கள். நயந்து குழைந்து மெல்லிய குரலில் பேசத் தெரியாது.

எதற்கும் விட்டுக் கொடுக்காத நீங்கள் மனைவி வந்தபின் வீண் பிடிவாதத்தைக் குறைக்கும் மனப்பக்கு வத்தை அடைவீர்கள். மிடுக்கான தோற்றம், பெருந் தன்மை, உண்மை, நேர்மை ஆகியவற்றைக் கொண்டி ருப்பீர்கள். தேவை வரும்போது எவ்வளவு பெரிய தொகையானாலும் ஏதேனும் ஒரு வழியில் சமாளித்து விடுவீர்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் அவசரத்திற்கு அடுத்தவர் உதவியை நாடுவீர்கள்.

உடன் பிறந்தோர் எண்ணிக்கை குறைவாக இருக் கும். சகோதர ஆதரவு பெறமுடியாது. உங்களுடைய உழைப்பும் முயற்சியும் அடுத்தவர்களுக்கே பயன்படும். உங்களுக்குப் பயன் இல்லை. தாயாரின் அன்பும் பாசமும் உண்டு. ஆனால் அவருக்கு அடிக்கடி நிரந்தர பிணியும் ஏற்படும். உங்களை உங்கள் தகப்பனாரும் மனைவியும் புரிந்த அளவு, சகோதர- சகோதரிகளும் தாயாரும் புரிந்துகொள்வது கடினம்.

பழைய வீடுகளையும் வாகனங்களையும் புதுப் பித்து வாழ்வீர்கள். இளமைக் காலத்தில் வறுமையும் கஷ்டமும் அனுபவித்தாலும், பிறகு உங்கள் சுய முயற்சியால் நடுத்தர வயதிற்குமேல் சுய வீடு, வாகனம், ஆடம்பர வசதியும் பெற்று மேன்மையுடன் வாழ்வீர்கள். அப்பொழுது கூட பழையதை நினைத்துப் பார்ப்பீர்கள். பிறக்கும்போது குடிசையில் பிறந்தாலும் கோபுரமாக உயர வாய்ப்பு பெற்றவர். உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்க்கு எடுத்துரைப்பீர்கள். நீங்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். பலமுறை யோசித்துப் பார்த்து உங்களுக்கு அனுசரணையாகவோ அல்லது பிடித்ததுபோல் நடந்துகொண்டால் மட்டுமே நம்புவீர்கள். உங்கள் செயல்திறனால் பின்வரும் சந்ததியினரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

இசையிலும் சங்கீதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அரசியலில் நுழைந்தால் விடாமுயற்சி கொண்டு பெரும் பதவியை அடைவீர்கள். தொழில் துறையில் ஈடுபட்டாலும் பெரும் தொழிலதி பர் ஆவீர்கள். பொதுவாக நீங்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறீர்களோ, எந்த லட்சியத்தை அடைய நினைத்து விடா முயற்சியுடன் ஈடுபடுகிறீர்களோ, அதை நிச்சயம் அடைவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமம் இல்லை. எப்பொழுதும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே!

மீன ராசியில் பிறந்த நீங்கள் திடமான நம்பிக்கை யுடனும் நன்னெறியுடனும் தன்னடக்கத்துடனும் சிறந்து விளங்குவீர்கள். பொறுப்புகள் வரும்போது சாமர்த்தியமாக நழுவிக் கொள்வீர்கள். பிறரை நன்கு புரிந்து கொள்வீர்கள். மற்றவர் ஏதேனும் தீங்கு செய்தால் அவர்களிடம் கூறாமல் பிறரிடம் சொல்லி கேலியும் கிண்டலும் செய்வீர்கள். சிரித்துப் பேசி மற்றவர்களை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள். நயமாகவும் அபிநயத்துடன் முகத்தில் பாவனை காட்டியும் பேசுவீர்கள். குடும்பத்தில் பெரும்பாலும் கடைக்குட்டியாக இருப்பீர்கள். அல்லது மற்றவருக்குச் செல்லப் பிள்ளையாக இருப்பீர்கள். சகோதரிகள்மேல் பாசம் கொண்டிருந்தாலும் விலகியே வாழ்வீர்கள். தாயாரின் அன்பும் அரவணைப்பும் பெரிய வயதுவரை உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும். எவ்வகையிலும் வசதி குறையாமல் சுக ஜீவனம் செய்வீர்கள்.

கல்வியில் உயர்படிப்பு பயிலும் வேளையில் தடை ஏற்பட்டு பின்னர் தொடர்ந்து பயிலுவீர்கள். நீங்கள் பிறந்தது ஓரிடம், வளர்ந்தது ஓரிடம், கல்வி பயின்றது வேறிடம் என இடம் மாறி மாறி வாழ்வீர்கள். கலைப் பயிற்சி, விஞ்ஞான ஆராய்ச்சி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெறுவீர்கள். அறிவு நூல்கள் பலவற்றையும் படித்து அறிவை விருத்தி செய்து கொள்வீர்கள். பெரும்பாலும் உங்களுக்குப் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். ஆண் வாரிசு ஒன்று அல்லது இரண்டு ஏற்பட்டு மனவேதனை அடைவீர்கள். இளைய தாரத்துக்கு ஆண் வாரிசு உண்டாகும். உங் களை எதிர்ப்பவர்களின் தடைகள்தான் உங்கள் முன் னேற்றத்தின் படிக்கட்டுகள் ஆகும். சாதாரணமாகக் கடன் தொல்லை இருக்காது. ஆனால் கடன் இருக்கும். சுயதொழில் நிறுவனம் ஆகியவற்றை விரிவுபடுத்தவும், வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாலும், பெண்மக்கள் திருமணத்திற் காகவும் கடன் வாங்க நேரிடும். ஆனால் ஒரு கடனைக் கட்டினால் மறுகடன் வாங்குவீர்கள். நண்பருக்காக எதையும் செய்யும் குணம் கொண்டிருப்பீர்கள். அதனால் மற்றவரின் பகையையும் பெறுவீர்கள். பாராட்டு பெறமாட்டீர்கள். இருப்பினும் தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் என்று கூறுவீர்கள். நன்றாக நயந்து பேசும் நண்பர்களையெல்லாம் நல்லவர் என நம்பி மோசம் போவீர்கள்.

புது சிந்தனைகளையும் மாறுபட்ட புதுமையான கருத்தையும் சிறந்த தத்துவங்களையும் கூறுவீர்கள். இயற்கையாகவே இளம்வயது முதலே கூர்மையான அறிவினைப் பெற்றிருப்பீர்கள். ஆனால் உங்களுடைய கூச்ச சுபாவத்தால் திறமையை வெளிப்படுத்தத் தயங்குவீர்கள். பிற்காலத்தில் மற்றவர் ஆச்சரியம்படும்படியான செயல்களைச் செய்து காட்டுவீர்கள். பாதி வயதிற்கு மேல்தான் உங்கள் திறமை வெளிப்படும். இளமைக் காலத்திலேயே, வசதியான குடும்பத்தில் பிறந்த- படித்த- அழகான பெண் மனைவியாக வருவாள்.

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பதிவாகிவிட்டதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.