Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீ சிவஞான சுவாமிகள்

Featured Replies

ஸ்ரீ பாஷ்யசாரராகிய சிவஞான சுவாமிகள்

ஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள்

திருவாவடுதுறை ஆதீன வித்வான்

----------

சுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப்ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள்.

அவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல.

1. தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்பவர்கள் செய்த உரைகளில் உள்ள ஆசங்கைகளை நீக்கிச் சூத்திரங்களின் மெய்ப் பொருள் இது என்று காட்டிச் சுவாமிகள் "தொல்காப்பியச்சூத்திர விருத்தி" செய்தருளினார்கள்.

2. நன்னூலுக்குத் திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப் புலவர் செய்த உரையையைச் சுவாமிகள் திருத்தம் செய்து "நன்னூல் விருத்தி" எனப் பெயர் தந்து உலகிற் பரப்பினார்கள்.

3. தருக்கம் கற்பவர்கள் படிக்கும் தருக்கசங்கிரக நூலையும் அதன் உரையாகிய "தருக்க சங்கிரகதீபிகை" யையும் சுவாமிகள் தமிழிலே மொழி பெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தருக்க வறிவை உண்டாக்கினார்கள்.

4. வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதம் முதலிய நூல்களில் கூறப்படும் சிவ பரத்துவத்தை ஒருங்கு உணரும்படி வடமொழியில் அப்பதீக்ஷ¢தர் செய்த "சிவதத்துவ விவேகம்" என்னும் நூலைச் சுவாமிகள் சைவத் தமிழ் மக்கள் வடமொழி ஞான நூற் பொருளை எளிதில் அறியுமாறு அவ்வாறு தமிழில் மொழி பெயர்த்தருளினார்கள்.

5. சைவசித்தாந்த அறிவு பாலர்களுக்கு உண்டாகுமாறு வடமொழியில் சர்வாத்ம சம்பு சிவாசாரியர் செய்த "சித்தாந்த பிரகாசிகை" என்னும் நூலைச் சுவாமிகள் இனிய வசன நடையில் மொழி பெயர்த்தருளினார்கள்.

6. வடமொழியிலே சொல்லப்பட்ட காஞ்சிபுர மகிமையைத் தமிழிலே திராக்ஷ¡பாகமான கவிகளாலே சுவாமிகள் "காஞ்சிப் புராணம்" என்னும் பெயரால் இனிமை வாய்ப்பப் பாடியருளினார்கள். மகா வித்துவான் மீனாக்ஷ¢சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய பெரும்புலவர்கள் செய்த புராண காவியங்கட்கெல்லாம் வழிகாட்டியாயுள்ளது இப்புராணமே. இதில் சித்திர கவிகளுக்கு இலக்கியம் காணலாகும்.

7. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒவ்வோர் குறள் வெண்பாவை எடுத்து அதன் கருத்தைப் பெரும்பான்மை புராண இதிகாசக் கதைகளாலும் சிறுபான்மை சிந்தாமணி முதலிய நூல்களிலுள்ள கதைகளாலும் விளக்கிச் "சோமேசர முதுமொழி வெண்பா" என்னும் அரிய நூலைச் சுவாமிகள் இயற்றியருளினார்கள்.

8. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி, கலைசைப்பதிற்றுப் பத்தந்தாதி, இளைசைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன சுவாமிகள் இயற்றியருளிய "பக்திரசப் பிரபந்தங்க" ளாம்.

9. வைத்தியநாத நாவலர் செய்த இலக்கண விளக்க நூல் உரைகளிலுள்ள பொருந்தாக் கருத்துக்களை எடுத்துக் காட்டி இலக்கண விதிகளின் மெய்ப்பொருள் இது என்று விளக்கிச் சுவாமிகள் "இலக்கண விளக்கச் சூறாவளி" செய்தருளினார்கள்.

10. திருவண்ணாமலை ஞானப்பிரகாச முனிவர் சிவஞான சித்தியாருக்குக் கூறிய உரையின் பொருந்தாமையைச் "சிவசமவாத வுரை மறுப்பு" என்னும் நூலால் சுவாமிகள் விளக்கியருளினார்கள்.

11. சிவாகமங்களுக்கெல்லாம் உரையாணியாகிய சிவஞான சித்தியாருக்கு, முதனூலாகிய சிவஞான போத வார்த்திகங்களுக்கும் வழிநூலான சிவப்பிரகாசத்திற்கும் சிவாகமங்களுக்கும் இணங்கச் சுவாமிகள் அருமருந்தன்ன "பொழிப்புரை" அருளிச் செய்திருக்கிறார்கள்.

அவ்வுரைக்கு இணையாக நிற்பது திருக்குறட் "பரிமேலழகருரை" யொன்றே.

12. வடமொழிச் சிவஞானபோதச்சூத்திரங்களுக்க

Edited by ArumugaNavalar

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

12. வடமொழிச் சிவஞானபோதச்சூத்திரங்களுக்க��

� "மெய்கண்டதேவர்" அருளிய வார்த்திகத்தின்மேல் "சிவஞான பாஷ்யம்" என்னும் பேருரையும், "சிவஞான போதச் சிற்றுரை" யென்னும் லகுவியாக்யானமும் செய்தருளித் தமிழில் பாஷ்யமில்லாதிருந்த குறையைச் சுவாமிகள் நீக்கியருளினார்கள்.

அன்றியும் சுவாமிகள், கச்சியப்ப முனிவர் மதுரகவி சுப்பிரமணிய முனிவர் முதலிய நன்மாணாக்கர்கள் பன்னிருவருக்குத் தமிழ் வடமொழி நூல்கள் கற்பித்தருளினார்கள். இம் மாணாக்கர்கள் புதிய நூல்கள் பல இயற்றியும், பல நன்மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தும் தமிழை வளர்த்தார்கள்.

இவ்விதம் நமது சுவாமிகள் தாம் திருவாவடுதுறை சென்ற பன்னிரண்டாம் வயது முதல் இருபது வருஷங்களுக்குள் தாம் அடைந்த யோக முதிர்ச்சியால் தமிழ் மொழிக்கு இலக்கண நிச்சயம் தருக்க நிச்சயம் செய்தும், வேதாகம விஷயங்களைச் சுருக்கி எளிதில் விளங்கும்படி மொழிபெயர்த்தும், உத்தம காவிய மியற்றியும், திருக்குறட் பொருளை விளக்கியும், பக்திரசப் பிரபந்தங்கள் அருளியும், தவறான கொள்கைகளை மறுப்பு நூல்களால் விலக்கியும், ஞான சாஸ்திரங்களுக்கு உரை வகுத்தும், தமிழிலே பாஷ்யமில்லாதிருந்த பெருங் குறையை நீக்கியும், பல நன் மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தும் தமிழ் மொழி சைவ சமய மென்னும் இரண்டையும் வாழ்வித்தருளிய பெருந்தகையார் ஆவர்.

அவர்கள் சாலிவாகன சகம் 1707. விசுவாவசு வருடம் சித்திரை-மீ 8-உ ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயிலிய நக்ஷத்திரத்தில் தம்முடைய 32-வது வயதில் திருவாவடுதுறையில் அத்துவிதமுத்தியடைந்தார்கள்.

அவர்களுடைய குருபூஜை விழாவைச் சிறப்புறச் செய்தும் அவர்கள் அருளிய கட்டளை வழி நடந்தும் இன்புறுதல் சைவசமயிகள் அனைவருக்கும் கடப்பாடாம்.

சுவாமிகளது 181 -வது குருபூஜை நாளது விசுவாவசு வருடம் சித்திரைமீ 26உ (8-5-1965) யாதலால் சைவர்களனைவரும் அந்நாளை நன்னாளாகப் போற்றுதல் வேண்டும்.

நன்றி ஐயா.

  • 4 months later...
  • தொடங்கியவர்

சிவஞான சுவாமிகள் பற்றிய சொற்பொழிவு

http://video.google.com/videoplay?docid=-7103999354007683469

நன்றி :http://pattamuthu.blogspot.com

12. வடமொழிச் சிவஞானபோதச்சூத்திரங்களுக்க�

� "மெய்கண்டதேவர்" அருளிய வார்த்திகத்தின்மேல் "சிவஞான பாஷ்யம்" என்னும் பேருரையும், "சிவஞான போதச் சிற்றுரை" யென்னும் லகுவியாக்யானமும் செய்தருளித் தமிழில் பாஷ்யமில்லாதிருந்த குறையைச் சுவாமிகள் நீக்கியருளினார்கள்.

அன்றியும் சுவாமிகள், கச்சியப்ப முனிவர் மதுரகவி சுப்பிரமணிய முனிவர் முதலிய நன்மாணாக்கர்கள் பன்னிருவருக்குத் தமிழ் வடமொழி நூல்கள் கற்பித்தருளினார்கள். இம் மாணாக்கர்கள் புதிய நூல்கள் பல இயற்றியும், பல நன்மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தும் தமிழை வளர்த்தார்கள்.

இவ்விதம் நமது சுவாமிகள் தாம் திருவாவடுதுறை சென்ற பன்னிரண்டாம் வயது முதல் இருபது வருஷங்களுக்குள் தாம் அடைந்த யோக முதிர்ச்சியால் தமிழ் மொழிக்கு இலக்கண நிச்சயம் தருக்க நிச்சயம் செய்தும், வேதாகம விஷயங்களைச் சுருக்கி எளிதில் விளங்கும்படி மொழிபெயர்த்தும், உத்தம காவிய மியற்றியும், திருக்குறட் பொருளை விளக்கியும், பக்திரசப் பிரபந்தங்கள் அருளியும், தவறான கொள்கைகளை மறுப்பு நூல்களால் விலக்கியும், ஞான சாஸ்திரங்களுக்கு உரை வகுத்தும், தமிழிலே பாஷ்யமில்லாதிருந்த பெருங் குறையை நீக்கியும், பல நன் மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தும் தமிழ் மொழி சைவ சமய மென்னும் இரண்டையும் வாழ்வித்தருளிய பெருந்தகையார் ஆவர்.

அவர்கள் சாலிவாகன சகம் 1707. விசுவாவசு வருடம் சித்திரை-மீ 8-உ ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயிலிய நக்ஷத்திரத்தில் தம்முடைய 32-வது வயதில் திருவாவடுதுறையில் அத்துவிதமுத்தியடைந்தார்கள்.

அவர்களுடைய குருபூஜை விழாவைச் சிறப்புறச் செய்தும் அவர்கள் அருளிய கட்டளை வழி நடந்தும் இன்புறுதல் சைவசமயிகள் அனைவருக்கும் கடப்பாடாம்.

சுவாமிகளது 181 -வது குருபூஜை நாளது விசுவாவசு வருடம் சித்திரைமீ 26உ (8-5-1965) யாதலால் சைவர்களனைவரும் அந்நாளை நன்னாளாகப் போற்றுதல் வேண்டும்.

நுற்றுகணக்கான நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார் என்று சந்தோசபட்டாலும்.

மனிதனின் முன்னேற்றத்திற்கு உதவ கூடியதாக ஏதுவுமே இல்லை என்பது கவலையளிக்கின்றது.

  • தொடங்கியவர்

post-3961-127090218108_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.