Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவில் சரத் பொன்சேக்காவும், எம்.கே. நாராயணனும் சந்தித்துள்ளனர்

Featured Replies

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொசிங்டனில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கிவருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து

கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொசிங்டனில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கிவருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து

கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வு அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அதில ஒருவர் பரந்தன் காம் இற்குக் கொடுத்த பிரத்தியேக தகவலின்படி மகிந்தவுக்கு ஆப்புவைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. :lol:

இது இங்கிருந்து எடுக்கப்பட்டு தன் சொந்த சரக்காக பரந்தனால் காட்டப்படுகின்றது

இதன் மூலம் இதுதான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாதுகாப்பு சரத் பொன்சேகா சந்திப்புக்கள்

06 November 09 03:09 pm (BST)

சரத் பொன்சேக்காவின் அரசியல் பிரவேசத்துடன் ஜனாதிபதி இராணுவத்தினர் குறித்து பாரிய சந்தேகத்திலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேக்காவின் அரசியல் பிரவேசத்துடன் ஜனாதிபதி இராணுவத்தினர் குறித்து பாரிய சந்தேகத்திலுள்ளதாகவும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவை முழுமையாக மறுசீரமைக்க அவர் தீர்மானித்திருப்பதாகவும் அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கும், ஜனாதிபதி மாளிகைக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் செல்லும் சந்தர்ப்பங்களில் இராணுவத் தலைமையகத்தின் ஊடக செல்லும் போது இராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் பயணிப்பது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இன்று முதல் இராணுவத் தலைமையகத்தின் ஊடாக செல்லும் போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை இராணுவத் தலைமையகத்தில் நிறுத்திவைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 4ம் திகதி முழங்காவில் பிரதேசத்தில் 651வது படைப் பிரிவின் தலைமையகத்திற்குச் சென்று விடுதலைப் புலிகளுக்கெதிராக யுத்தத்தை வழிநடத்திய சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் கூட, கைக்கெட்டிய தூரத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சித்தாக தெரியவருகிறது.

ஜனாதிபதியை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வேலிகளுக்கு வெளியிலிருந்தே ஜனாதிபதி இராணுவத் தலைவர்களுடன் கைகுலுக்கியுள்ளார். அத்துடன், இந்த இராணுவ அதிகாரிகளுக்கிடையே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் அரசியல் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இராணுவத்தினருடன் மாத்திரமே கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டமையானது ஏனைய இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா இலங்கை திரும்ப முன்னர், ஜனாதிபதி இராணுவத் தளபதியுடன் இராணுவத்தினரின் நலன்களை அறியும் நோக்கில் ஊடகங்களுடன் திடீரென வன்னிக்குச் சென்றிருந்தார். சரத் பொன்சேக்கா, இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தால் படையினரின் கௌரவமும், கவனமும் அவர்பால் திரும்பியிருக்கும் என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஜனாதிபதி அவர் இல்லாத நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலுள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்ட் படையினர் அகற்றப்பட்டுள்ளனர் :

இராணுவத் தலைமையகம் மற்றும் கொழும்பிலுள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்ட்டின் படையினர் அகற்றப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் அவற்றின் பாதுகாப்புப் பொறுப்புக்களுக்கு வேறொரு படைப் படையினரை ஈடுபடுத்துமாறு இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிங்க படைப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு படையினரும் பணியிலிருக்கும் இடங்களிலிருந்து நகர வேண்டாம் என கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதன்காரணமாக இராணுவத் தலைமையகத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆயுத மோதலொன்று ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேக்கா இலங்கைத் திரும்பியதை அடுத்தே இராணுவத் தலைமையகத்திலுள்ள சிங்க படைப் பிரிவைச் சேர்ந்த படையினரை அங்கிருந்து அகற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் மனோ பெரேராவே செயற்பட்டுள்ளார். மனோ பெரேரா இராணுவத் தலைமையகம் மற்றும் கூட்டுப் படை நடவடிக்கைத் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருக்கும் அதிகாரியாவார்.

இதில் விடேச அம்சம் என்னவெனில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா ஆகியோர் தற்போது பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள படைப் பிரிவின் அதிகாரிகளாவர். அத்துடன், சரத் பொன்சேக்கா சிங்க படைப் பிரிவின் அதிகாரியாவார். அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பாதுகாப்புப் பணியிலிருந்தும் சிங்க படைப் பிரிவின் படையினர் அகற்றப்பட்டு, கஜபா படைப் பிரிவின் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவத்தில் கடமையாற்றியபோது கஜபா படைப் பிரிவின் அதிகாரியாக கடமையாற்றிய போது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தப் பிரிவின் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இராணுவத்தின் படைப் பிரிவுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் எந்தச் சந்தர்ப்பத்திலும் மோதலாக மாற இடமிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் காப்பாற்றவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார் :

இராணுவத்தினரிடம் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின்படியே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற தலைப்பில் கடந்த ஒக்டோபர் 12ம் திகதி லங்கா நியூஸ் வெப் இணையத்தில் வெளியாகிய செய்தி சம்பந்தமாகவும் அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேக்காவிடம் விசாரணை நடத்தவிருந்ததாக வொஸிங்டனிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். சரணடையச் சென்ற நடசேனும், புலித்தேவனும் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அதிகாரிகள் சரத் பொன்சேக்காவிற்கு அறிவித்துள்ளனர். பொன்சேக்கா இந்தக் கேள்விகளுக்கு பதில் வழங்குவதைத் தவிர்த்து ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் காப்பாற்றிய நிலையில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டதாகவும், தூதரக அலுவலக அதிகாரிகள் அவருக்கு உச்சளவிலான ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கோதாபய ராஜபக்ஷவும் பிரதமரும் அமெரிக்காவில் ராஜ் ராஜரட்னத்துடன் மதிய நேர விருந்தில் கலந்துகொண்டுள்ளனர் :

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கோடிஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்துடன் மதிய நேர விருந்தில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதாக வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன், பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ராஜ் ராஜரட்னம் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதமர் ராஜ் ராஜரட்னத்துடன் நடத்திய பேச்சுக்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க பாரிய நிதியுதவிகளை வழங்க ராஜ் ராஜரட்னம் இணங்கியிருந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா வொஷிங்டனில் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளார்.

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா வொஷிங்டனில் தங்கியிருந்த போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனைச் சந்தித்துள்ளதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கைச் சந்திக்கவிருந்த போதிலும், பிளேக் சுகவீனமுற்றிருந்ததால் அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

அதேவேளை, சரத் பொன்சேக்கா உத்தியோகபூர்வ பணிகளுக்கு அப்பால் சந்திக்கும் நபர்கள் குறித்து அறிவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின்படி புலனாய்வுச் சேவை அதிகாரிகள் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16953&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.