Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக (கே.எஸ். பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சாகரா.. எனது நாவல் படித்துப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உங்கள் அபிப்பிராயத்தை எழுதலாமே.

எதிர்பார்க்கிறேன்

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.

சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.

இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

சகாரா அக்கா, நூலை உங்கள் பார்வையில் அழகாய் சொல்லி இருக்கிறீங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கும். இந்தவகையில் நீங்கள் விபரிக்கின்ற சில விசயங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக.. ஸ்ரெல்லாவின் காதல் விசயம், மற்றது மதனலேனாளின் எடுப்பான தோற்றம். கதாசிரியர் நீங்கள் சொன்னமாதிரி பல விசயங்களை நல்லாய் நினைவுபடுத்தி எழுதி இருக்கிறார். எனக்கும் வாசிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்திச்சிது. நான் கடைசியாக ஊரில இருந்தது பதினைஞ்சு வருசங்களுக்கு முன்னம்தான். ஆனால்.. பல விசயங்களை நினைவுபடுத்திப்பார்ப்பதே கடினமாய் இருக்கிது. ஆனால் இங்கு நூலில் எத்தனையோ பல வருடங்களுக்கு முன்னர் தான் பெற்ற அனுபவங்களை, தரிசனத்தின் சிறிய சிறிய விபரங்களைக்கூட நுணுக்கமாக, அழகாக ஆசிரியர் வர்ணனை செய்து இருக்கிறார்.

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

கலைஞன் உங்கள் பார்வையும் எனது பார்வையும் வித்தியாசமாக இருக்குந்தானே. அதைப்போல கதாசிரியரின் பார்வையும் இன்னொரு விதமாக இருக்கும். இன்னும் வாசிக்கும் மற்றையோருக்கு இங்கு குறித்த எம்மூவரைக் காட்டிலும் வேறு விதமானமாகத் தோன்றும். மொத்தத்தில் வாசகர்கள் அத்தனை பேரையும்ஒரு கதாசிரியன் ஒரு நாவலில் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை நீங்களும், நானும், ஏன் இந்நாவலைப்படைத்த கதாசிரியரும் உணர்வார். இந்நாவலை வாசித்த போது எனக்குள் தோன்றிய கருத்துகளை முழுவதையும் இங்கு எழுதாவிட்டாலும் சில இடங்களில் இப்படியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருந்தேன் கலைஞன். மற்றப்படி குறைகள் பிடிக்கும் நோக்கில் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” கரையும் கரை சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தைத் தளமாகக் கொண்டு விரிந்திருக்கிறது. பருவப் பெயர்ச்சிக் காற்றுகளை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் செய்பவர்களின் வாழ்விற்குள் கரை தேடும் கட்டு மரங்களைத் தேடிச் சென்றிருக்கிறார் கதாசிரியர். நெய்தலின் வனப்பை தென்னோலைச் சலசலப்பாகவும், பழுத்த தென்னோலைகள் நெட்டுக்கழன்று விழும்போது காற்றின் திசைக்கு ஒப்ப அதனோடு பயணித்து தென்னையின் அடியில் வீழாது சற்றுத் தள்ளி விழும் ஒரு நிகழ்வை எழுதும்போது கதாசிரியர் கையாண்ட விதத்திலேயே அவர் அந்தக் கடற்கரையில ஓலை விழும் அழகையும் சலசலப்பும் அவரை எவ்வளவுதூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. விட்டுக் கொடுக்காத மனித சுபாவங்களும், காதல் என்ற ஒற்றைச்சொல்லினுள்ளே ஒடுங்கியுள்ள பல் பரிமாணங்களும், விடைகள் அற்றுப்போன வினாக்களாக தொக்கி நிற்கின்றன.

சீதனம் வாங்கி மணந்தவர்களிடம் ஏற்பட்ட அந்தஸ்துப் பேதமும், பிரியங்கள் அற்ற வெறுமை தோய்ந்த வாழ்க்கையும் இந்நாவலின் மூலம் சொல்லாமல் கிடக்கும் சோகங்களைச் சொல்லிச் செல்கிறது. ஒரு தந்தைக்கு மகிழ்வளித்த அதே வீட்டில் மகனின் மனம் பறிபோவது நெருடலாக இருக்கிறது. ஸ்ரெல்லாவின் அம்மா இவ்விடயத்தில் தன் எதிர்ப்பை காட்டாமல் ஒதுங்குவது என்பது ஒழுக்க நெறிகளைச் சிதைத்துப் போடுவதாக அமைகிறது. ஒருநாள் பழக்கத்திலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், உரிமையோடு சரளமாகப்பழகுவதும் காதல் என்று பார்க்கத் தோன்றவில்லை. கதாசிரியர் மனங்களின் புனிதமான இணைப்பாகவே இக்காதலைச் சித்தரிக்க விழைந்தாலும் நாவலில் அதனை அதாவது அவ்விருவரின் சந்திப்பை இச்சந்திப்பு ஏற்படுத்தக்கூடிய மனப் போராட்டத்தை சித்தரிக்கத் தவறிவிட்டார். ஏனெனில் ஒரு இளம் விதவையான பெண்ணுக்கு இன்னொரு ஆண்மகனுடன் நட்பு ஏற்படுமாயின் அது அவளையும் அவள் சார்ந்த உறவுகளையும் எப்படியெல்லாம் சீரழிக்க முயலும் என்பதை அவளின் மனஞ்சார்ந்ததான போராட்டமாகவும், ஏற்கனவே காதல் என்று பழகி பின் ஏமாந்த விரக்தியில் இருக்கும் ஒரு இளைஞன் ஒரு விதவைப் பெண்ணான அவள்மீது தான் கொள்ளும் காதல் பற்றி தன்னிலை சார்ந்த சுயவிமர்சனத்தையும் செய்ய வேண்டிய ஒரு பகுதியை இந்நாவலின் தளத்தில் காண முடியவில்லை. இவ்விடத்தில் ஒரு மேலோட்டமாகக் கதை நகர்ந்திருக்கிறது. இவ்விடத்தை கதாசிரியர் தவற விட்டாரா அல்லது தவிர்த்து விட்டாரா என்பதை கதாசிரியர்தான் கூறவேண்டும்.

இந்நாவலில் சில சிறப்பம்சங்களான அந்தந்தப் பிரதேசத்தில் பாவிக்கப்படும் சொற்களை நாவலில் பயன்படுத்தியுள்ளார் உதாரணத்திற்கு “குட்டான்” என்கிற மாதிரியான சொற்கள் இன்று பேச்சில்கூட இல்லாமல் அற்றுப் போயிருக்கும் சொற்களாக இருக்கின்றன. அடுத்து இன்னொரு விடயம் மதனலேனாளின் ரவிக்கையின் முடிச்சுகள்… அந்தநாட்களில் கொக்கிகளையோ, ஊசிகளையோ பாவிக்காத பெண்கள் இரவிக்கைகளை முடிச்சுப் போட்டு முடிவதை அவதானித்திருக்கிறேன். கதாசிரியர் கச்சிதமான அவதானித்து எழுத்தில் பின்னி எடுத்திருக்கிறார். சந்தியில் சிற்பம் ஏற்ற நின்ற மதனலேனாளின் எடுப்பான மார்புகள் திமிர இரவிக்கையை முடிந்திருந்தாள் என்ற அந்த இடம் தொடர்ந்து வாசித்த எனது வாசிப்பில் பொருத்தமற்று நிற்கிறதோ என்று தோன்றுகிறது காரணம் பாடசாலையில் ஓஎல் படிக்கச் செல்லும் அவளின் இளைய மகள் லேடீஸ் சைக்கிளில் செல்லக்கூடிய அளவில் வைத்திருக்கும் நாகரீகமான நிலையில் இருக்கும் தாயாகிய அவள் எப்படி மெயின் ரோட்டில் ரவிக்கைக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கும் அநாகரிகமான தோற்றத்தில் நிற்க முடியும்? கதாசிரியர் எழுதியிருக்கும் தெளிவான காட்சிகள் சில இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு பொருத்தமின்றி நிற்பது போல் தோன்றினாலும் இந்தக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி வைக்கும் இடத்தில் கதாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மரியாம்பிள்ளையின் பிள்ளைப்பாசமும், கடந்த காலத்தை எண்ணி தனக்குள் உருகும் கணங்களும் முத்திரை பதிக்கும் இடங்களாக இருக்கின்றன. மற்றும் ஸ்ரெல்லாவுடன் பஸ்ஸில் சில்மிசம் செய்யும் இளைஞன் போன்ற இடங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.( மணியண்ணே ரைட் அழகாக வெளிப்பட்டிருக்கிறது) இதே மாதிரி நாவலின் சில கனமான இடங்களில் கொஞ்சம் விரிவுபடுத்தி கதாசிரியர் முத்திரை பதித்திருந்தால் ஈழத்து நாவல் இலக்கியத்தில் உச்சம் பெற்ற நாவலாக இது அமையும். ஒரே வீட்டிலேயே இரு சகோதரிகளையுமே ஒருவன் தன் வலையில் மாட்டியிருப்பதையும் தெளிவான சகோதரிகள் புரிந்து கொள்வதும், குற்றமற்ற நட்போடு வரும் கதரினைத் தவிர்ப்பதா கதைப்பதா என்பது மாதிரியான இடங்கள் ஒரு நாவலின் முழுமைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. மற்றது கடலோடிகளின் வெள்ளிபார்த்த கணிப்புகள், மான்பாய்ஞ்சவெளிக் காற்றில் சைக்கிள் உலக்குவது எல்லாம் அருமையாக இருக்கிறது. ஒரு கடலோரக் கிராமத்தின் சுவார்ஸ்யமான கதையை இந்நாவலில் புகுத்திய கதாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொருவர் மனங்களுக்குள்ளும் இழையோடும் ஏக்கங்கள், சோகங்கள் அவர்களுக்கு மட்டுமானதாகவே உள்ளுக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியம் இந்நாவல்.

ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விமர்சனம் செய்யும் முறைமைகள் எனக்குத் தெரியாது. இந்நாவல் பற்றிய ஒரு எண்ணப்பதிவே இது. தவறுகளும், பார்வைக்குழப்பங்களும் இருக்கக்கூடும் கதாசிரியர் தனது நாவலைப்பற்றிய என்னுடைய பதிவை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்தார் அதற்கிணங்கவே இதுவரை விமர்சனம் எழுதிப்பழக்கமில்லாதவள் எழுதியிருக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளி இதனை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதனை அவர் மேற்கொள்ளும் பதிவில் இருந்தே அறிய முடியும். அத்தகைய பதிவை எதிர்பார்க்கிறேன். இதில் கதாசிரியருக்கு ஏதேனும் மனச்சங்கடம் ஏற்றட்டிருப்பின் மன்னிக்கவும்.

வல்வை சாகராவிற்கு உங்கள் விமர்சனத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். எழுதியது சந்தோசம். உங்கள் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது என் நோக்கமல்ல. இருப்பினும் ஒரு படைப்பாளியின் தன்னிலை விளக்கமாக இதை ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன்.

அந்தோனி ஸ்ரெல்லாவின் மீதான தன் விருப்பத்தை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பகுதி..

"எங்கெல்லாமோ சென்று அவனே எதிர்பார்க்காத வகையிலே, ஆஸ்பத்திரியில் கண்ட அவளில் வந்து நின்றது. அவளின் அமைதியான சிரிப்பும், பார்வையும், பழகிய பண்பும், அவன் நினைவுகளைத் திசை திருப்ப விடாமல் திரும்பத் திரும்ப அவளிடமே கொண்டு சென்று விட்டது.

"இவ்வளவு எளிதாக வேறொருத்தியால் பட்ட காயத்தை ஆற்றிக் கொண்டு, இவள் மேல் சலனப்படும் அளவிற்கு, தன்னுடைய மனம் வைராக்கியம் அற்றதா" என்று அந்தோனி தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

"பட்டபாடே போதும்.... இனி இந்த மாதிரி யோசிக்கவே கூடாது" என்ற அலைமோதும் எண்ணத்தின் தொடர்ச்சியாக...

"அவள் யாரென்றே தெரியாது....திருமணம் முடித்தவளா... இல்லையா என்று தெரியாது....ஒரு வார்த்தை ஆதரவாகப் பேசி விட்டாள் என்பதற்காக..."

தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து சிரித்தவன் - சற்று உரத்துச் சிரித்திருக்க வேண்டும்.

"என்ன அந்தோனி... சிரிச்சனியோ...| என்ற நட்சத்திரத்தின் ஆச்சர்யத்தொனி கலந்த கேள்வியினால், மீண்டும் சூழலை உணரும் நிலைக்கு வந்தான்.

மற்றது மூன்று மாதங்கள் மட்டுமே திருமண வாழ்வின் சுகந்தங்களைஅனுபவித்து தட்டிப்பறிக்கப்பட்ட அந்த வாழ்வை அந்த இளம்விதவை மீளப்பெறவேண்டும் என்ற என்விருப்பம் தவறானதா?

பாரதிதாசனின் "கோரிக்கையற்று கிடக்குதண்ணே..இங்கு வேரிற் பழுத்த பலா.." என்று வரிகள் வரும். கோருவார் அற்று கிடக்கும் அந்தசோகத்தை நினத்தேன்.

தந்தைக்கு மகிழ்வு தந்த வீட்டிலேயே மகன் உற்வு கொள்வது நெருடலாக இருந்தாலும் அப்படி நிகழ்வதின் சாத்தியம் இல்லையா?

நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. இப்படி நிகழ்ந்தது. அதனால் அவர்கள்வாழ்வு திசை திரும்பியது என்று சொல்லவந்தேன்.

“:அபூர்வராகங்கள்” படம் பார்த்தீர்களா?

மதனேளாவின் ரவிக்கை முடிச்சு பற்றிய பகு்தி இதுதான்..

ஏன் அதிகம் சொல்ல வேண்டும்? இந்தச் செக்கல் பொழுதில்...

ஐஸ், மரத்தூள் போட்டு மீன் நிரப்பிய மரப்பெட்டிகளை றோட்டுக்கரையில் அடுக்குவித்து விட்டு, அவற்றை கொழும்புக்கு கொண்டு போகும் மயிலிட்டி லொறிகளுக்காக காத்துக் கொண்டுதான் மதலேனா நிற்கிறாள்.

'வஞ்சனை'யின்றி வளர்ந்து விட்ட உடம்பில் சாரம் போல சுற்றியுள்ள கம்பாயமும், சட்டை ஊசிகளுக்கு க~;டம் கொடுக்காமல் முடிந்து விட்ட மேல்சட்டையும், கழுத்தில் தொடங்கி பின்னர் காணாமல் எங்கோ மறைந்து விட்ட சங்கிலியுமாக, வாயின் வெற்றிலைச்சாற்றை விரல்களின் ஊடே பீச்சியடித்துவிட்டு, நாரியில் கைதரித்து பலாலிச்சந்திப்பக்கமாக பார்த்துக்கொண்டு நின்றாள்.

இருள் கவ்வும் நேரத்தில் கணவன் செய்யவேண்டியதை தான் செய்யவந்த மதலேனாள் போட்ட அவச்ர முடிச்சு..

உங்கள் விமர்சனம் என்னை மனதளவில் எந்த வகையிலும் பாதிக்காது. யாழ்கள அன்பர்களில் என்நாவலைப் பெற்றுக்கொண்டவர்கள் என்று நான் நிச்சயமாக அறிந்த நீங்களும் கலைஞனும் விமர்சன்ம எழுதியது சந்தோசமே.

அன்புடன்

கே.எஸ்.பால்சச்நதிரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கே. எஸ். பாலச்சந்திரன் அண்ணா

தந்தைக்கு மகிழ்வு தந்த வீட்டிலேயே மகன் உற்வு கொள்வது நெருடலாக இருந்தாலும் அப்படி நிகழ்வதின் சாத்தியம் இல்லையா?

இதை வாசிக்கும்போதுதான் எனக்கும் கதையின் அந்தப்பகுதி மீண்டும் நினைவுக்கு வருகின்றது. கதையில் தந்தையின் அதேபாணியில் மகனும் சென்றது... தந்தைக்கும் மகனுக்கும் கிட்டத்தட்ட ஒரேவிதமான அனுபவங்கள் ஏற்பட்டது.. சாத்தியப்படாத விசயம் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும்... அதை கதையில் நீங்கள் கொஞ்சம் மாற்றி எழுதி இருக்கலாமோ என்று யோசிக்கின்றேன்.

நன்றி கலைஞன், தந்தை திருமணம் முடித்து பிள்ளகளும் இருக்கும்போது வேறோரு பெண்ணோடு தொடர்பு கொண்டார். அந்தோனி அப்படியல்ல.அவன் அப்போது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு பெண்ணினால் கைவிடப்பட்டபோது அவனுக்கு இந்த உறவு ஏற்பட்டது. அவனது வாழ்வில் திருமபவும் மாற்றத்தை அவனது பெற்றோரே கொண்டுவந்தார்கள்.

ஓம் ஐயா... ஆனால்.. தந்தை நோண்டியாக்கிவிட்ட ஓர் குடும்பத்தினுள் மகனும் காலைவச்சுப் பார்த்தது எதிர்பாராதவிசயம் எண்டாலும்... நடைமுறை வாழ்வில கொஞ்சம் சிக்கலான விசயம்தானே. சிலவேளைகளில.. ஸ்ரெல்லாவின் தாயாருக்கு அந்தோனியின் அப்பா ஏமாற்றி இருந்தாலும்.. அவரில் உள்ளூர அன்பு இருந்து இருக்கலாம்.

கே.எஸ். இன் நாவலை நான் இன்னமும் படிக்கவில்லை.ஈழத்து எழுத்தாளர்கள்தான் என்றும் எனது முதல் சொய்ஸ்.படிக்க ஆவலாக இருக்கின்றது.

ஒரு வாசகன் அல்லது விமர்சகன் ஒரு நாவலை படித்தவுடன் அவனுக்கு மனதில் உடன்வரும் அயிப்பிராயமே உண்மையான விமர்சனம்.

எத்தனையோ ஆயிரம் பெயர்கள் நாவலை படிப்பார்கள் எல்லோருக்கும் தன்நிலை விமர்சனம் கொடுக்க முடியாது.வாசிப்பவனின் மனதிற்கு என்ன படுகின்றதோ அதை அப்படியே விட்டு விட வேண்டும் அதுவே உண்மை நிலை ஊட.

சிந்துபைரவி படம் பார்த்து வந்த கையுடன் பாலச்சந்தரை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது.படம் எப்படி என்று கேட்டார்.மிக நல்ல தமிழ்படம் என்று சொன்னேன்.அதன் அர்த்தம் புரிந்து என்னுடன் வந்த நண்பர் எனது காலை உழக்கினார்.இருந்தாலும் சிவக்குமாரை கடைசியில் அப்படி ஒரு குடிக்காக "தண்ணீர்தொட்டி தேடிவந்த "பாடல் பாட வைத்திருக்க கூடாது என்று சொன்னேன்.அவருக்கு வந்ததே கோவம்.படமே அதுதான் என்று ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.நீர் என்ன அப்படிச் சொல்கின்றீர் என்று எகிறிவிட்டார்.இன்றும் நான் அந்தப்படத்தை பார்க்கும் போது நான் சொன்னது சரி போல் தான் எனக்கு படுகின்றது.எனக்கு அவர் தன்னிலை விளக்கம் தேவையில்லை நான் படம் பார்த்தவுடன் எனக்கு வந்த அபிப்பிராயமே உண்மையான விமர்சனம்.

தன்னிலை விளக்கமா.. யார் யாருக்கு கொடுக்கிறது? புரியவில்லை. ஒரு படைப்பை செய்த கதாசிரியர் அல்லது கலைஞன் தன்னிலை விளக்கம் கொடுக்காவிட்டால் அந்த படைப்பை வேறு பரிமாணங்களில் - கோணங்களில் பார்ப்பது மிகவும் கடினம் அல்லது முடியாது. சுவிட்சை போட லைட் எப்பிடி எரியுது எண்டு தெரியாட்டிக்கு வெறும் லைட்டை காண்பவர்களுக்கு - அனுபவிப்பவர்களுக்கு அதனால் பிரச்சனை இல்லை. ஆனால்.. அதை உருவாக்குபவர்களுக்கு ஆதி அந்தம் தெரிஞ்சிருக்க வேண்டும். எனவே, விமர்சனங்கள் வரும்போது படைப்பாளி தனது படைப்புபற்றிய விளக்கத்தை நிச்சயம் கொடுக்கவேண்டும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பக்கங்களை பார்வையிடுங்கள். நன்றி

http://ksbcreations.blogspot.com/2009_12_17_archive.html

http://ksbcreations.blogspot.com/2009_12_26_archive.html

http://ksbcreations.blogspot.com/2009_12_16_archive.html

Edited by கே.எஸ்.பாலச்சந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.