Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேயிலையும் இறப்பரும் சிறிலங்காவை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுகின்றன: பொருளாதாரம் மெல்லத் தலை நிமிர்கி்ன்றது

Featured Replies

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலை, ரப்பர் ஆகியவற்றுக்கான கொள்வனவுக் கட்டளைகள் அதிகரித்திருப்பதை அடுத்து சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சி குறையத் தொடங்கியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2SUOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போச்சுடா போச்சு உள்ள நின்மதியையும் கெடுக்க ஆப்பு வச்சிட்டாங்கள்.

தேத்தண்ணி குடிக்காதே கார் ஓடாதேஎண்டு விளக்கமும் குடுக்கப்போறாங்கள்.

அடுத்ததா என்ன கொண்டுவருவாங்களோ?

இலங்கை வணிகச் சின்னங்கள் http://www.srilanka.com/exports/exports.php

புறக்கணி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30854

ஏற்றுமதியில் தமிழர் பங்கு:

தேயிலை, சுவைப் பொருட்கள், மீன், தேங்காய் பொருட்கள், இரப்பர், உடைகள் அணிகலங்கள், கனிம கற்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். இலங்கை 7.076 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் கணிசமான பொருட்களை புகலிடத், தமிழ்நாட்டு தமிழர்கள் கொள்வனவு செய்கிறார்கள். பழகிய பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த தலைப்படுகிறார்கள். இந்த வருமானம் இலங்கை அரசு இலங்கைத் தமிழரைக் அழிக்கும் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சனம் உண்டு.

உலக இறப்பர் விலை: http://www.mongabay.com/images/commodities/charts/rubber.html

உலக தேயிலை விலை: http://en.wikipedia.org/wiki/File:%C3%89volution_du_prix_moyen_du_th%C3%A9_depuis_1989.jpg

இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கும் வன்முறைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தமது நிதி உதவ இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து தமிழ் மக்களும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு புகலிட அமைப்புகள் கோரி வருகின்றார்கள். இந்தக் கோரிக்கை முன்னர் பல்வேறு கட்டங்களில் முன்வைக்கப்பட்ட போதும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இம்முறை இந்த அமைப்புகள் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தீவரமாக செயற்படுகிறார்கள்.

இந்தப் புறக்கணிப்பு சிங்கள மக்களுக்கோ, அல்லது தனிப்பட்ட வணிகர்களையோ அல்லது வணிக நிறுவனங்களையோ இலக்காக கொள்ளவில்லை. மாற்றாக வெறிபிடித்த இலங்கை அரசுக்கு எதிராது என்றே புறக்கணிப்பாளரால் கூறப்படுகிறது.

பொருட்கள் புறக்கணிப்பு வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காலனித்துவ பிரித்தானியப் பொருட்களைக் புறக்கணிக்க கோரியது இங்கு குறிப்பிடத்தக்கது.

புறக்கணிப்படக்கூடிய பொருட்களின் பட்டியல்

விமான நிறுவனங்கள்

தொலைக்காட்சி சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள்

இலங்கை வங்கிகள்

சுற்றுலா

உணவும் குடிபானங்களும்

விசுக்கோத்துகள்

இலங்கை மீன் மற்றும் கடலுணவு

இறக்குமதி சுவைப்பொருட்கள், தானியங்கள்

தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள்

குளிர்பானங்கள்

மதுபானங்கள்

இலங்கைத் தேயிலை

சுகாதாரப் பொருட்கள்

சவர்க்காரம்

சம்பு

பற்பசை

உடைகள், அணிகலங்கள்

Edited by akootha

சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் !

விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி அரக்கனுக்கு முண்டு கொடுத்துத் தூக்கிவிட்டு தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்து நிற்கின்ற கொடுமை நடக்கிறது.

வீதிகளில் இறங்கி சர்வதேசத்தின் மௌனத்தை உடைக்கும் பணிகளை முன்னெடுத்தோம். சர்வதேச நிறுவனங்களின் கதவுகளை தட்டினோம். உண்ணாநோன்பிருந்தோம். தம் உடலிலே தீ மூட்டி, தீக்குளித்து தம் எதிர்ப்பினைப் புரியவைக்க முயன்றனர் எங்கள் உறவுகள். தமிழகமெங்கும் பெரும் தொடர் போராட்டங்களில் எங்கள் உறவுகள் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேசத்தின் மௌனம் மெல்லக் கலைகின்ற தோற்றம் தெரிகின்றபோதும் மனச்சாட்சியின் கதவுகள் முழுதாய் திறக்கும் என்ற நம்பிக்கையோடு இன்னும் எத்தனை காலம்தான் நாம் காத்திருக்க முடியும்?

புதிய புதிய களங்களைத் திறந்து எல்லா முனைகளிலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு எம்மிடமுள்ளது. இத்தகைய களங்களில் ஒன்றாகவே சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மற்றும் சிறிலங்கா அரசுக்குப் பொருளாதாரப் பலம் சேர்க்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் எதிரான ஒரு பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க உங்களை அழைக்கிறோம். தமது வளங்களை எல்லாம் போரிலே குவித்து ஓர் இறுதி யுத்தத்தை முன்னெடுத்து நிற்கும் பேரினவாதத்தின் மீது இந்தப் பகிஸ்கரிப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டியது எங்கள் எல்லோரதும் தார்மீகப் பொறுப்பல்லவா? புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப் பகிஸ்கரிப்பை தீர்க்கமுடன் முன்னெடுப்பது, சிறிலங்காவை பொருளாதார முனையில் சிதைப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அன்பான தமிழீழ உறவுகளே,

சர்வதேச முண்டுகொடுப்போடு எம் உறவுகள் மீது தினமும் குண்டுமழை பொழிந்து, நூற்றுக்கணக்கில் எம் மக்களைத் தினமும் கொன்றொழிக்கும் சிறிலங்கா அரசின் மீது பெரும் பொருளாதார யுத்தமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவையை காலம் எங்கள் கைகளில் விட்டிருக்கிறது.

நாங்கள் வாங்குகின்ற, சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் ஒவ்வொரு பொருட்களும் அந்த அரசுக்கு பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது என்பதை அறிவீர்கள். இந்தப் பணம் மீண்டும் மீண்டும் எங்கள் மக்கள் மீதே குண்டுகளாய் விழுகின்ற கொடுமையும் நடக்கிறது. சிறிலங்கா அரசுக்கு எதிராய் வீதிகளில் இறங்கி பெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கினற் நாமே, எம் மக்கள் மீது வீசுகின்ற ஒவ்வொரு குண்டுக்கும் மறைமுகமாகப் பணம் கொடுத்து உதவலாமா என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

அன்பான தமிழீழ மக்களே,

சிறிலங்காவின் அனைத்து பொருளாதார நலன்களுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட முன்வாருங்கள்.

சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு வலுச்சேர்க்கும் அனைத்தையும் புறக்கணிப்போம் என எம்மக்களின் பெயரால் உறுதியேற்போம்.

1. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து வகையாக உணவுப் பொருட்களையும் புறக்கணிப்போம்.

2. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்களைக் கொண்டு வேறு நாடுகளில் தயாராகும் உணவுப் பொருட்களைப் ( உதாரணம்: தேயிலை வகைகள்) புறக்கணிப்போம்.

3. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் எவ்வகையான குளிர்பான, மதுபான வகைகளையும் வாங்கமாட்டோம்.

4. சிறிலங்காவில் தயாராகும் ஆடை வகைகளை அணிய மாட்டோம்.

5. சிறிலங்காவிற்கு எக்காரணம் கொண்டும் வங்கிகள் மூலம் பணம் அனுப்ப மாட்டோம்.

6. சிறிலங்காவில் எக்காரணம் கொண்டும் எவ்வகையான முதலீடுகளையும் செய்யமாட்டோம். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளையும் வங்கி இருப்புக்களையும் மீளப் பெறுவோம்.

7. சிறிலங்கா விமான சேவை (Srilankan Airlines) மூலம் பயணம் செய்ய மாட்டோம்.

8. சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் பத்திரிகைகளைப் புறக்கணிப்போம்.

9. சிறிலங்கா பத்திரிகைகளில் எவ்வகையான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம். சிறிலங்காப் பொருட்களுக்கான விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்தும்படி வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களை வேண்டுவோம்.

10. இவ்வாறான புறக்கணிப்பை மேற்கொள்ளும்படி மற்றவர்களையும் தூண்டுவோம்.

கடந்த காலங்களில் எம் தாயகம் மீது பற்றுக் கொண்டு நீங்கள் பல வழிகளிலும் ஆற்றிய பங்கை நாம் அறிவோம். இதன் அடுத்த கட்டமாக நாம் முன்னெடுக்க நினைக்கின்ற பொருளாதாரப் புறக்கணிப்பிற்கும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

உங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சிறிலங்கா தவிர்ந்த வேறு நாடுகளிலிருந்து பெற்றுத் தரும்படி வர்த்தக நிறுவனங்களிடம் வற்புறுத்துங்கள்.

சகல விதமான மருந்துப் பொருட்களையும் உணவையும் தடைசெய்து பெரும் இனவழிப்புப் போரை எம் மக்கள் மீது நடத்திவரும் ஓர் அரசுக்கெதிராக ஒன்றிணைந்து இப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டக் குழு

http://www.boycottsrilanka.info/node/1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.