Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு சொல்லும் பாடம். ......11.2006 தமிழீழக் கல்விக் கழகத்தின் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு சொல்லும் பாடம்............

"வரலாறு சொல்லும் பாடம்" என்ற இந்த நூலை புலம்பெயர் உறவுகள், குறிப்பாக இளையோர் வாசிக்க வேண்டிய வரலாற்று ஆவணமாகும். தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து எப்படி இல்லாது அழிக்கலாம் என்ற சிங்களத்தினது நிகழ்ச்சி நிரலைப் அழகாகச் சொல்லியுள்ளது. இதனை வாசிக்குட்படுத்தவதூடாக எமதினத்தினது எதிர்காலம் தொடர்பான மதிப்பீட்டிற்கும் வரலாற்றை அறிய முயல்வோருக்கும் பயனுடையதாகும்.

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

------------------------------------

ஈழத்தமிழினத்தின் உரிமைப்போராட்டங்கள் வீறுபெற்ற காலங்களில் அவற்றைத் தணித்துவைக்கும் நோக்குடன் பேரினவாதிகளால் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப்பட்ட பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், வாக்குறுதிகள், உடன்பாட்டுக் குறிப்புகள் ஏமாற்றங்கள் என்று ஈழத்தமிழினம் பட்டுணர்ந்த கடந்த கால அரசியற் பாடங்களை ஈழத்தமிழர்களுக்கு நினைவூட்டுவதற்காக பேச்சுவார்த்தை, உடன்படிக்கை என உலகளாவிய அழுத்தங்கள் எம்மினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட காலத்தில், தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாற்றைக் கூறும் “ வரலாறு சொல்லும் பாடம் „ என்ற இந்நூலின் முதலாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

தமிழீழ மாணவர்களுக்கு அவர்களின் உண்மை வரலாற்றினை உணரவைக்கும் பெரும் பணியை ஆர்வத்தோடு விரும்பியேற்ற தமிழீழ ஆசிரியப் பெருந்தகைகளுக்கு உதவுகின்ற வகையில் கல்லச்சில் பொறிக்கப்பட்ட 2000படிகள் முதலாம் பதிப்பாக ஈழத்தமிழர் இன எழுச்சிப் பாசறையினால் வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்த நூல் பகுதி பகுதியாக, அரசியற்றுறை வெளியீடான வழிகாட்டி மாத இதழில் வெளிவந்தது.

பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று டொனமூர் அவர்களால் அன்று வழங்கப்பட்ட மதியுரைகளைத் துளிகூட மதிக்காமல், தமிழ்மக்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்து, தனிச்சிங்கள அமைச்சரவை அமைத்து இனவெறியோடு செயற்பட்ட சிங்களப் பெரும்பான்மை இனத்தை நம்பி, ஆங்கிலேய அரசியலறிஞர் சோல்பரிப்பிரபு தமிழ் மக்களையும் சேர்த்து ஆளும் உரிமையைச் சிங்களப் பெரும்பான்மையினரிடம் கையளித்துச் சென்றதானது, பின்னர் தமிழினத்தை எத்தகைய அரசியற் பாழுங் கிணற்றில் வீழ்த்தியிருக்கிறது என்பதையும் பௌத்த சிங்களவர் தவிர ஏனையமக்கள் இந்த மண்ணில் மானத்தோடு மனிதர்களாக வாழ சிங்கள இனம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்ற வகையில் கடந்த ஒரு நூற்றாண்டு அரசியல் வரலாறு சுருக்கமாகவும் அழகாகவும்“ வரலாறு சொல்லும் பாடம்„ என்ற இந்தச் சிறு நூலினூடாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

தமிழினத்துக்குப் பெரும் பாதுகாப்பு என்று சோல்பரிப்பிரபு அமைத்து வழங்கிய அரசியல் வரம்புகளையெல்லாம் சிங்கள “இனவாதிகள் „ எப்படித் திட்டமிட்டுத் தகர்த்தெறிந்தார்கள் என்பது பற்றியும் சிங்களவரை நம்பிய சோல்பரிப்பிரபு காலங்கடந்து“இனவாதத்தைப் „ புரிந்து கொண்டு வருந்திப் புலம்பியமை பற்றியும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

சோல்பரிப்பிரபுக்குப் பின்னர் இலங்கைத் தீவின் இனச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்கு உதவுவதாக வந்தவர்களும் கடந்தகால வரலாற்றைச் சற்றும் எண்ணிப் பார்க்காது, தமது நலன்களைப் பேணும் மையக்குறிக்கோளுடன் கூடிய பழையபாணித் தீர்வையே தமிழினத்தின் மீது திணிக்க முயன்றனர். அடுத்து, பிரபாகரன் தலைமையிலான இன்றைய தமிழ்த் தலைமை பழைய தலைமைகளைப் போலன்றி, விழிப்புடனும் உறுதியுடனும் இருந்து சிங்களத்தின் சூழ்ச்சிகளை எதிர்கொண்டமை பற்றியும், தெளிவுபடுத்துகின்ற வகையில், ஈழத்தமிழர் இன எழுச்சிப் பாசறை இந்நூலை ஆக்கித்தந்திருக்கிறது.

தமிழீழத்திலும், உலகளாவிய அளவில் பரந்தும் வாழுகின்ற லழத்தமிழர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பல அரிய செய்திகளுடனும் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களுடனும் ஆவணங்களுடனும் மெருகூட்டப்பட்டு இரண்டாவது பதிப்பாக இந்நூலை வெளியிடுவதில் ஈழத்தமிழர் இன எழுச்சிப் பாசறை மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

……11.2006

வெ.இளங்குமரன்

பொறுப்பாளர்

தமிழீழக் கல்விக் கழகம்

Edited by nochchi

நொச்சி, இதனை இணையத்தின் மூலம் வாங்க முடியுமா? தெரிந்தால் தகவல் தரவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, இதனை இணையத்தின் மூலம் வாங்க முடியுமா? தெரிந்தால் தகவல் தரவும்

நிழலியவர்களே நிச்சயமாகத் தகவல் கிடைத்தால் அறியத் தருகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

varlarusollumpadamfo.jpg w1350.png

varalarusollumpadammu.jpg w1180.png

51pakkam.jpg w1105.png

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தில் நடைபெற்ற இஸ்லாமியச் சகோதரர்கள் மீதான சிங்களப் பேரினவாத்தின் தாக்குதல் தொடர்பான பதிவு

vsppallivasal.jpg w1162.png

வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டோரில் சிலர்...

vspvelikkadaisiraiyil.jpg w1058.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1976 புத்தளத்தில் படுகொலை. 2010 வெளியேற உத்தரவு. வெளியேறாவிடில் கொலைதானே! வரலாறும் நடைமுறையும் தொடர்கிறது.

தமிழனோ மதத்தையும் கட்சியையும் கைத்தடியாக்கியே தமிழரின் அழிவுக்கு வித்திடுகிறான். இவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு எப்போது தமிழானிகின்றானோ அப்போதே இந்த அவமதிப்புகளும், அவலங்களும் விடைபெறும். அதுவரை காட்சிகள் மாறாது. அவமானத்துடன் கூனிக் குறுகி வாழ்வதுதான் விதியாகும். நிமிரவேண்டும்! அனைத்தையும் கடந்து..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொச்சியவர்களே, இந்த நூலை எங்கே எப்படிப் பெறலாம். இதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் மேலும் அறியும் ஆவலைத் தூண்டவதாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.