Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவை கைது செய்யும் எண்ணம் அரசாங்கத்திடம்இல்லை;இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா சினமன் லேகசைட் ஹோட்டலில் படையிலிருந்து தப்பியோடியவர்களுடன் தங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

இவர்களை இனங்கண்டு நாம் வெளியேற்றி யுள்ளோமே தவிர பொன்சேகாவை நாம் கைது செய்யவுமில்லை. செய்யப்போவதுமில்லை.சரத் பொன்சேகாவுக்கு எங்கும் செல்வதற்கு உரிமை உண்டு. அவர் விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்தில் சென்று வரலாம் என்றார்.

எனினும் இச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா சரத் பொன்சேகாவுடன் இருந்தவர்கள் அரசாங்கத்தினால் அவருக்குப் பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.இச் சம்பவங்களினால் கொழும்பில் ஒரு விதமான பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.sankamam.com

கொழும்மில் பதற்றம் ஏற்படுத்தினால்தானே பொன்சேகாவிற்குக் கிலி பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போர்க்குற்றவாளி ஜனாதிபதியாகி அமெரிக்காவின் ஜனநாயகப்பாதையில் பயணித்ததற்காக அதனாலேயே பாரட்டப்பட்டிருக்கிறான். இன்னொரு போர் குற்றவாளியை பாதுகாக்கச் சொல்லி அமெரிக்காவே சொல்லி இருக்குது.

ஆனால் இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்காலுக்கு... பதில் சொல்ல உலகில் யாரும் இல்லை.

ஆக சிங்களமும் சர்வதேசமும் சிறீலங்காவை அப்பழுக்கற்ற போர்க்குற்றமற்ற தேசமாக மாற்றிவிட்டுள்ளன.

தமிழர்களையே பொன்சேகாவிற்கு வாக்கும் போட வைச்சு.. அவனை பத்திரமா மேற்குலகிற்கு அனுப்பி வைத்து விடப் போகிறார்கள். சிங்களவர்களை மகிந்தவிற்கு வாக்குப் போடவைச்சு சன நாயகத்தை வேரூன்றச் செய்துவிட்டார்கள்.

ஆனால் மொத்தத்தில் தமிழன்.. எல்லாத்தையும் இழந்து ஏமாந்து நிற்கிறான். இதைத்தான் தேர்தலுக்கு முன்னாலும் சொன்னார்கள்.. 1983 இல் இருந்து பிரபாகரனும் சொல்லிக் கொண்டு வந்தார்.

இப்போ இறுதில் சிங்கள மக்களின் விருப்பத்தைத் தாண்டி தமிழர்களுக்கு தீர்வும் இல்லை. 1983 இல் சர்வதேசத்தின் கண் முன்னாலேயே தலைநகரில் வைத்து கொல்லப்பட்டதிற்கும் தமிழனுக்கு நீதியில்லை.. 2009 இல் முள்ளிவாய்க்காலில் வைத்துக் கொல்லப்பட்டதிற்கும் தமிழரின் சாவிற்கு உலகில் நீதி கேட்கவும் யாரும் இல்லை.

எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் கச்சிதமாக மூடி மறைக்கப்பட்டு ஏய்ப்பர்கள் மன்னிப்பர்களாகி விட்டுள்ளனர்.

இதுதான் இன்றைய உலகம். புரிந்து கொண்டால் சரி..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன யாயினி நீங்கள் இப்படி செய்தி போட்டு ஆக்களையும் புலம்ப விட்டுடீன்கள். பி பி சி இண்டைக்கு வேற மாதிரி தலைப்பு போட்டிருக்கு.

Sri Lanka may 'take action' over opposition candidate

Page last updated at 17:43 GMT, Thursday, 28 January 2010

Sri Lanka is considering taking action against defeated presidential candidate Sarath Fonseka, the defence secretary has told the BBC.

Gotabaya Rajapaksa - the brother of President Mahinda Rajapaksa - said that Gen Fonseka had allegedly divulged sensitive information to the public.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8486025.stm

உலகத்திற்கு சிங்கள அரசாங்கம் என்று கூறி அட்டகாசம் செய்யும் குழுக்கள் எவ்வளவு குப்பையானவை எண்டு நாங்கள் உலகத்திற்கு காடினதிலும் பாக்க சிங்களவன் தனுக்குள்ள அடிபட்டு நல்லா ஷோ காடுறான். இப்ப வெளினாடுல இருக்கிற சிங்கள கை கூலிகளும் பதுங்க தொடங்கிட்டுதுகள். முந்தி அவை பெருமையா ஸ்ரீ லங்கா எண்டு சொல்லி திரிஞ்சவை. இப்ப சந்தி சிரிக்குதெண்டவுடனே கட்சி மாற தயார்.

பொன்சேகாவை கைது செய்யும் எண்ணம் அரசாங்கத்திடம்இல்லை;இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

அதுதானே அரசாங்கத்துக்கு பொன்சேகாவை போட்டுத் தள்ளும் எண்ணம்தானே இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.