Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவர்கள் உயிராயுதம் ஏந்தினார்கள்: விஜயகுமாரன்

Featured Replies

mkumar.jpg

தமிழ் உணர்வாளன் முத்துக்குமார் உயிர் நீத்து ஒரு வருடம் முடிவடைகிறது. அவனின் தொடர்ச்சியாக தமிழகத்தில் பதினெட்டு உணர்வாளர்களும் ஜெனீவாவில் முருகதாஸும் இன்னுயிரத் தந்தாவது தமிழர்களையும் உலகத்தையும் விழித்தெழ வைத்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றி விடவேண்டுமென்று தம்மை எரித்துக் கொண்டனர். வாழ்வு மகத்தானது; கொண்டாடப் படவேண்டியது; பாதியிலேயே தம் வாழ்வை முடித்துக் கொண்ட இச்சகோதரர்கள் தம்மிலும் மேலாக தம் சக மனிதர்களை நேசித்தவர்கள், வாழ்ந்து போராடியிருக்கலாம். ஆனால் தமிழினப் படுகொலையைத் தாங்க முடியாமல் மனம் சோர்ந்து ஒருவர் பின் ஒருவராக நம்மிடமிருந்து பிரிந்து சென்றார்கள்.

ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை கொலை செய்த ராஜிவ் காந்தியைப் புலிகள் கொலை செய்தனர் என்பதைச் சாட்டாக வைத்து, ஈழ விடுதலை பற்றியோ ஈழ மக்களது அவல வாழ்வு பற்றியோ யாரும் வாய் திறக்கக் கூடாது என்ற சர்வாதிகாரச் சூழல் நிலவிய காலத்தில், ஒரு சில இடதுசாரிகளும், தமிழ் தேசியர்களும் மட்டுமே தமிழகத்தில் போராடிக் கொண்டு இருந்தனர். அராஜகத்தின் இருள் வெளிகளைக் கிழித்துக் கொண்டு முத்துக்குமாரினது மரணச் செய்தி வந்தது. அவ்னது இறுதி அறிக்கை இந்திய மத்திய அரச போர் வெறியர்களையும், கருணாநிதி போன்ற தமிழையும் தமிழரையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் மக்கள் விரோதிகளையும், தமிழ்நாட்டு காங்கிரஸ் கயவர்களையும் அம்பலப்படுத்தி போர்முரசு கொட்டியது.

அவனது மரணம் தமிழ் மக்களின் மனதிலே தீயாய் பற்றிக் கொண்டது. அவனது உடல் வைக்கப்பட்ட வேளையிலும், இறுதி ஊர்வலத்தின் போதும் மக்கள் ஆயிரக் கணக்கில் கூடி அஞ்சலி செய்தனர். மக்களின் எழுச்சியைக் கண்டு பயந்த "மானாட" கலைஞர் தொலைக்காட்சி முதலாளி கருணாநிதி எழுச்சியின் முன்னணிப் படையாய் நின்ற மாணவரைத் தடுப்பதற்காக கல்லூரிகளை மூடினார். மாணவர்களை சென்னையில் தங்க இடமில்லாது தமது ஊர்களிற்கு திரும்பிப் போகச் செய்வதற்காக கல்லூரிகளை மூடிய கருணாநிதியை, மாணவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக கல்லூரிகளை மூடியதாக புகழ்ந்து பண்பாடினார் நாடாளுமன்ற கூட்டணிக்காக காங்கிரசுடனும் திமுகவுடனும் தொங்கிக் கொண்டிருக்கும் திருமாவளவன்.

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழமக்களின் கொலைகளை நியாயப்படுத்திய ஊழல்நாயகி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் வை. கோபாலசாமி தேர்தலிற்கு சிலமாதங்களே இருந்த நிலையிலும் கூட மகனின் மந்திரிப் பதவியை விடாமல், காங்கிரஸ் கொலையாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஈழமக்களிற்காக போலிக் கண்ணீர் வடித்த ராமதாஸ் என வாக்குப் பொறுக்கிகள் எல்லோரும் முத்துக்குமாரது இறுதி நிகழ்வுகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். போராட்ட அமைப்புகளினதும், மாணவர்களினதும் கடும் எதிர்ப்பினால் இப்பிழைப்புவாதிகள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப் பட்டனர்.

புலம்பெயர் நாடுகளில் புலியெதிர்ப்பு அரச ஆதரவுக் குழுக்கள் இணையத் தளங்களில் அவனது மரணத்தைக் கொச்சைப் படுத்தினர். காய்ச்சல் வந்து சாகலாம், கான்சர் வந்து சாகலாம் ஆனால் மக்களிற்காக சுண்டு விரலையும் அசைக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் இக்கொள்கை வீரர்கள் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்றனர். முத்துக்குமார் இளமையான தன் வாழ்வையே துச்சமென நினைத்து தன்னை எரியூட்டினான். ஆனால் மகிந்தாவே எம்மை காப்பாற்றும் என்று மன்றாடும் இப்பிழைப்பு வாதிகள் அவனது மரணத்திலும் தமது அரச விசுவாசத்தைக் காட்டினர்.

சில ஒற்றைப் பரிமாண வரட்டு இடதுசாரிகள், உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்வது பிழையானது என்று விவாதம் பிளந்தனர். முத்துக்குமார் உணர்ச்சி வசப்படவில்லை; எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தனது வாழ்வின் கடைசித் தருணங்களில், மருத்துவர்களிடமும் காவல் துறையினரிடமும் அவன் தனது அறிக்கையைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தான். தனது உயிரைக் காப்பாற்றுங்கள் என்று அவன் கதறவில்லை. ஈழ மக்களின் உயிர்களைக் காப்பாற்றுங்கள் எனபதே அவனது வேண்டுகோளாக இருந்தது. வாழ்ந்து போராடுவது அல்லது போராட்டத்திற்கு வாழ்வைக் கொடுப்பது என்ற முடிவுகளில் ஒன்றையே அவன் தேர்வு செய்திருந்தான். ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தன்னையும் தன் கவிதைகளையும் அன்று புலிகளின் கீழிருந்த அராஜகச் சூழல் தாங்க முடியாமல் தீயிட்டுக் கொழுத்திய போதும், இவ்வரட்டுவாதிகள் இம்மாதிரியான விமர்சனத்தையே வைத்து அவளை இரண்டாம் முறையாகச் சாக வைத்தனர்.

அவனது வாழ்வு முடிந்த இந்த ஒரு வருடத்தில் ஈழப்போராட்டம் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போயினர். இலட்சக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் அடைபட்டுள்ளனர். வெளியில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் மறுக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலே காங்கிரஸ் கொலையாளிகள் மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஈழ மக்களை அழித்த அனுபவங்களை வைத்து மாவோயிஸ்டுகளையும் மலைவாழ் மக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து எந்த ஒரு அரச பதவியையும் ஏற்காத பெரியாரின் வழிவந்தவர் என்று சொல்லும் கருணாநிதி, தனது பதவிக்குட்பட்ட நிலையிலே தான் செய்ய முடிந்ததைச் செய்கிறேன் என்று முனகுகிறார்.

சனீஸ்வரன் பாலுவின் (பட்டம் உபயம் யாழ் வலம்புரி பத்திரிகை) தலைமையிலே இலங்கை போன தமிழகக் குழு வாயெல்லாம் பல்லாக நின்று மகிந்தவுடன் படம் எடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறது. மேலும் முகாம்களில் இருக்கும் மக்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் இக்குழு அறிக்கை விட்டிருக்கிறது. உண்மை தான்; பணம், பதவிக்காக சோனியா, கருணாநிதி என்று எவர் காலடியில் விழுவதற்கும் ஆயத்தமாய் இருக்கும் இவர்களை விடச் சிறையில் இருந்தாலும் அம்மக்கள் சுதந்திர வாழ்வு தான் வாழ்கிறார்கள். திடீர் ஈழமாதா ஜெயலலிதா தேர்தல் தோல்விக்குப் பிறகு வேடத்தைக் கலைத்து விட்டார்.

ஈழத்திலே தமிழ்க்கூட்டமைப்பு சரத் பொன்சேகவிற்கு வாக்களிக்கச் சொல்லி மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களிற்கு துரோகம் செய்துள்ளது. டக்ளஸ், கருணா, பிள்ளையான் எல்லாம் ஜனநாயக மோகம் தலைக்கேறி மகிந்தவிற்கு வாக்குப் போடுமாறு மக்களைத் துப்பாக்கி முனையில் அன்பாகக் கேட்கிறார்கள். யாழ் பல்கலைக்கழக் மாணவர்கள் அரசியலிற்கு வராமல் ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டுமென மாணவர்களின் பெற்றோரை விட அக்கறை காட்டி முகமூடி போட்டுக் கொண்டு துண்டுப் பிரசுரம் விடுகின்றனர்.

எனினும் "சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத மண்ணில் பாறை பிளந்து பயன் விளைவிப்பான்" என்று ஈழத்து மகாகவி பாடியது போல் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இக்கடினமான சூழ்நிலைகளிலும் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ந்து போராடுவதே முத்துக்குமாரிற்கும் உயிர்தியாகம் புரிந்த மற்றைய தமிழ் உணர்வாளர்களிற்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும்.

http://kuralweb.com/20100128/mkumar.aspx

எனினும் "சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத மண்ணில் பாறை பிளந்து பயன் விளைவிப்பான்" என்று ஈழத்து மகாகவி பாடியது போல் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இக்கடினமான சூழ்நிலைகளிலும் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ந்து போராடுவதே முத்துக்குமாரிற்கும் உயிர்தியாகம் புரிந்த மற்றைய தமிழ் உணர்வாளர்களிற்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும்.

தமிழனுக்கு உயிராயுதாம் தேவையா? நாமிழந்த உயிராயுதத்திற்கு கணக்கேயில்லை.....வேண்டாம் இனிமேலும் உயிராயுதம்.....வேணும் கூடியிருந்து குழிபறிக்கும் உத்தமர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உயிராயுதங்கள் தேவையில்லை. சும்மா...ஆய்வு..அது..இது..என்று பீலாவிடுகிற தியாகிகள்தான் தேவை.

முத்துக்குமாரை பற்றியும் ஆய்வுசெய்து விளாசுவினம்...

அப்ப இவையள்தான் இங்கை கனக்கா உலாத்துகினம்.

நாளைக்கே தமிழர்களுக்க ஏதாச்சும் விடிவு வருமாக இருந்தால் அதுவும் இந்த ஆய்வாள 'சோப்ளாங்கி'களால் வராது.

முத்துக்குமார் வித்தியாசமானவன்...

எல்லாரும் கதைப்பதில் மட்டுமே கருத்தா இருந்தபோது

அவன்மட்டுமே செயலுக்கு போனான்.

அவனின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.