Jump to content

கனேடிய பல்கலாச்சார வானொலி தமிழ் பண்பலை | Thamil FM 101.3


Recommended Posts

வணக்கம், கனேடிய பல்கலாச்சார வானொலியில போகிற பதிகம் பாடு நிகழ்ச்சியை கேட்கச்சொல்லி பலர் அன்புத்தொல்லை. இன்று கூகிழில தேடி தட்டித் தடவி ஒரு மாதிரி அந்த வலைத்தளத்தை - நிகழ்ச்சியின் தொடுப்பை கண்டுபிடிச்சன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. ஜனநாயக முறையில வாக்கெடுப்பெல்லாம் நடாத்துறீனம். குழந்தைகளாக இருக்கிறபடியால கீழ் உள்ள பாடலை இணைச்சு இருக்கிறன். விருப்பமானதுக்கு - ஆளுக்கு இல்லை - பாட்டுக்கு வாக்கை குத்த வேண்டியதுதான். உதில இருக்கிற எல்லாருமே நல்லாய்தான் பாடி இருக்கிறீனம். எல்லாருக்கும் வாழ்த்துகள்! Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ?

Pathi-Come-paadu / பதி-Come-பாடு

http://www.cmr.fm/thamilfm/songs/182.mp3

வானொலி வலைத்தளம்: http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20

Link to comment
Share on other sites

Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ
?

பதி--------.பாடவிரும்புபவர் வானொலி நிலைய வரவேற்பாளரை அழைத்து பதிகம் பாடு

நிகழ்ச்சியில் பங்குபற்ற போவதாக்கூறி தனது விபரங்களை பதியவேண்டும்

கம் (COME)------வா வானொலி நிலையத்துக்கு வா(வானொலி நிலையம் வந்துதான் பாடவேண்டும்)

பாடு-------பாடு நீங்கள் விரும்பிய பாடலை பாடுங்கள்

பதி(ந்துவிட்டு)கம் (வந்து) பாடு

இதுதான் மச்சான் அவையின்ர விளக்கம்

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி சிவா. சிவா சீ.எம்.ஆர் வானொலியிண்ட தீவிர ரசிகரோ? முந்தி வேலை முடிஞ்சு வரேக்க இரவு பன்னிரண்டு சொச்சம் இதிலை ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போகும். அதை நான் கேட்கிறது.

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி சிவா. சிவா சீ.எம்.ஆர் வானொலியிண்ட தீவிர ரசிகரோ? முந்தி வேலை முடிஞ்சு வரேக்க இரவு பன்னிரண்டு சொச்சம் இதிலை ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போகும். அதை நான் கேட்கிறது.

வாகனத்தில் போகும் பொழுது அவ்வப்போது கேட்பதுண்டு

வெள்ளி இரவு 12 மணிக்கு விகடம் நகைச்சுவை நிகழ்ச்சி

விரும்பிக்கேட்பதுண்டு

Link to comment
Share on other sites

ரெண்டு பேர் குரலை மாத்தி கதைப்பீனம், அந்த நிகழ்ச்சியோ சிவா? நான் பன்னிரண்டு மணிக்கு போற பகிடி நிகழ்ச்சியை முந்தி கேட்கிறது. வேலையால மிசிசாகாவில இருந்து டொரோண்டோவுக்கு வரேக்க சுமார் முப்பது நாப்பது நிமிசம் வீட்ட காரில வந்து சேருகிறதே தெரியாது. அது ஒவ்வொரு வெள்ளியும் மாத்திரமோ போகிறது. எனக்கு இப்ப நினைவில்லை.

Link to comment
Share on other sites

அதுவா??? எஸ்.ரி.செந்தில்நாதன் தான் முக்கிய பங்கு வகிக்கிறாராம், நிகழ்ச்சி நகைச்சுவையாக இருக்கலாம் இருப்பினும் இணைப்பில் வருபவை மப்பிலை சற்று அதிகமாக உளறுவதாக கேள்விப்பட்டேன், நிகழ்சித் தொகுப்பாளர்களும் அதிகளவிலை இரட்டை அர்த்தத்திலை பேசினம் என்றும் ஒரு குறைபாடு உள்ளதுங்கோ.

இருப்பினும் இணைப்பிற்கு நன்றியெங்கோ!

Link to comment
Share on other sites

வருகிறவை மப்பில வாறதுக்கு வானொலிகாரர் என்ன செய்கிறது வல்வை அண்ணை. யாழுக்கும்தான் பலர் மப்பில வாறீனம். ஒன்றும் செய்ய ஏலாது. வேணுமென்றால் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை பலூன் ஊதச்சொல்லுற பரிசோதனை மாதிரி ஏதாச்சும் வைச்சு அதில சித்தி அடையுற ஆக்களை மாத்திரம் உள்ள விடலாம். கருத்துக்களம் என்று பார்த்தால் ஒவ்வொரு தடவையும் உள்நுழைவு செய்கிறதுக்கு சிக்கலான குறியீட்டை கொடுத்து அதை அப்படியே சரியாக பெட்டியில நிரப்புமாறு கேட்கலாம். உதாரணமாய் புதிதாக மின்னஞ்சல் பதியேக்க நிரப்புமாறு கொடுக்கிற குறியீட்டு எழுத்து மாதிரி. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.