Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் உறவுகளே...!!!

Featured Replies

கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான்.

எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும்

விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர்

நாம்.

உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின்

பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள்.

இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற

வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர்கள் நாங்கள்.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?

இந்த நவீன தொழில் நுட்ப உலகத்தில் இலத்திரனியல் ஊடகம் என்பது மிக முக்கிய

காரணி.வானொலி,தொலைக்காட்சி,கணணி இவைகள் தான் இப்போது தொடர்பாடல் உலகத்தில் மிக முக்கியமான காரண கர்த்தாக்கள்.

புலம் பெயர் தேசங்களில்,மேற்கத்தையவர்களின் ஊடகங்களுடன் ஒப்பிடும் போது

தொழில்நுட்ப ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் ஒப்பிட முடியாத அளவுக்கு பின்

தங்கியிருக்கிறது தமிழர் ஊடகங்கள்.இருந்தாலும் மக்களின் உணர்வுகளையும்,

அவர்களின் மன வெளிப்பாடுகளையும் காத்திரமாக வெளிக்கொணரும் பணியில் தமிழர்

ஊடகங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

அந்த வகையில் அவுஸ்திரேலிய மண்ணிலே "இன்பத்தமிழொலி" வானலை ஊடகம் கடந்த 15 வருடங்களாக தனது சேவையை இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்காக செய்து வருகிறது.புலம் பெயர் தேச ஒன்றில் 15 வருட வானொலி சேவை என்பது மிக எழிதான காரியம் அல்ல.அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்பது விபரிக்க முடியாதவை.

தனி ஒரு ஊடகவியலாளனாக இருந்து ஊடகப்பணி செய்வது என்பதே பல சவால்களை சந்திக்கும் ஒரு பணி.அப்படியிருக்கும் போது,ஒரு வானொலி ஊடகத்தினை 15 ஆண்டுகளாக, பல சிரமங்களினை தாண்டியும் பல விமர்சனங்களை கடந்தும் நடாத்துவது என்பது மிகப்பெரிய சமுதாயப்பணி.

"இன்பத்தமிழ் ஒலி" இந்த ஊடகம் அவுஸ்திரேலிய,நியுசிலாந்து தமிழ் உறவுகளின்

தோள்கொடுக்கும் நல்லுணர்வால் பிறந்து ,தவழ்ந்து,நடைபயின்று இன்று ஓட்டும்

பிள்ளையாக வழர்ந்து இருக்கிறது.இது இங்கு வாழும் தமிழர்களுக்கெல்லாம் பெருமை.

"இன்பத்தமிழொலியின்" இயக்கம் அதன் வளர்ச்சி அதன் பெருமை கேட்கும் நேயர்களின்

கைகளிலும்,நல் உள்ளம் கொண்ட இதயங்களிடமும் இருக்கிறது.இருப்பினும் இத்தனை

ஆண்டுகளாக இந்த ஊடகத்தினை பல தடைகளை,சவால்களை,விமசனங்களை தாண்டி மிகக்குறைந்த ஆட்பலத்துடன் மிகச்சிறப்பாக வழிநடாத்தும் "பாலசிங்கம் பிரபாகரனின்" பணி திறமையானது.

இத்தனை ஆண்டுகளாக அவருக்கு தோள் கொடுக்கும் சகோதர ஊடக சகோதரர்களின் தன்னலமற்ற ஊடகப்பணியும் பாராட்டுதற்குரியது.

ஒரு ஊடகம் இல்லை ஊடகவியலாளன் வளரும் போது அந்த ஊடகத்தினையோ இல்லை ஊடகவியலாளனையோ தட்டிக்கொடுத்து வளர்த்துவிடாமல், இல்லை அதைவிட முன்னேற்றமாக வளர முயற்சிக்காமல், மாறாக வளரும் அந்த ஊடகத்தினையோ இல்லை ஊடகவியலாளனையோ வளரவிடாமல் திரை மறைவிலே கழுத்தறுத்து காலை வாரிவிடும் செயல் புரிவது தமிழ் ஊடகத்துறையில் ஊறிப்போன ஒரு நாற்றம்.இது கசக்கும் யதார்த்தம்.

பல தடைகளை தாண்டி வானலையில் தவழ்ந்து உங்களின் வீடு தேடி வரும் "இன்பத்தமிழ்

ஒலி".ஆனால் ஒவ்வொரு நாளும் அந்த ஒலி அனுபவிக்கும் வலி என்பது அதை ஒருவாக்கும்

பிரபாகரனுக்கும்,அவரோடு பணி புரியும் சகோதரர்களுக்கும் மட்டுமே புரியும்.

ஒவ்வோரு ஆண்டும் இந்த " இன்பத்தமிழ் ஒலியின்" சுவாசக்காற்றை புதுப்பித்து

முன்னைய ஆண்டைவிட ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு மாற்றத்தோடு புத்துணர்வோடு பயணிக்க வைக்கும் நேயர்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது.

வானொலி கேட்கும் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பின்

முக்கியத்துவம் என்பது எழுத்தாலோ இல்லை பேச்சாலோ புரியவைக்க முடியாது.

இன்பத்தமிழ் ஒலி எங்களின் வானொலி,அது எங்களின் குடும்பத்தில் ஒருவன் என்பதை

மனதார ஆத்மார்த்தமாக உணரவேண்டும்.அந்த உணர்வின் வெளிப்பாடாய் எங்கள்

ஒவ்வொருவரினதும் மனமார்ந்த பங்களிப்பு அமையவேண்டும்.

இந்த அவுஸ்திரேலிய மண்ணில், மக்களின் மன ஓட்டமுணர்ந்து மக்களின் இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேறும் மிகச்சவாலான பணிகளை எல்லாம் செய்தது செய்து கொண்டிருப்பது இந்த ஊடகம்.

எம் இனம் எம் நாடு பரிதவித்து கூக்குரல் இட்டு அழுகையில் அந்த அழுகுரலை இந்த

மண்ணில் கேக்கவைத்து எம்மையெல்லாம் உணர்வோடு அவர்களுக்காய் குரல் கொடுக்க

வைத்தது இந்த ஊடகம் தான்.

அவுஸ்திரேலிய மண்ணில் திக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் எம்மை வானலை ஊடாக வந்து உணர்வூட்டி ஒருமைப்பாட்டோடு எம் உறவுகளுக்காய் எம் தாயகத்துக்காய் குரல்

கொடுக்க உறவுப்பாலம் அமைத்தது இந்த ஊடகம் தான்.

இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு தமிழனும் ஏதொ ஒரு வகையில்,நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ இந்த ஊடகத்தினால் பயன் பெற்றோம்.பயன் பெற்ற நாம் நன்றிக்கடனாய் இதனை தாங்கிப்பிடித்து தோள் கொடுக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமை.

ஒரு ஊடகம் வளர்வதால் அது சார்ந்திருக்கும் ஊடகவியலாளன் வளர்ந்துவிடுவான்,அவன்சமுதாயத்தில் பிரபலமாகிவிடுவான் அவன் முன்னேறிவிடுவான் என்ற கீழ்த்தரமான சிந்தனையுடைய சில சமுதாய கறையான்களின் விமர்சனம் எவ்வளவு கேவலமானது என்பதை நாம் அறிவோம்.

ஆனந்த இரவு,கருத்துக்களம்,நேருக்கு நேர்,களமும் நாமும்,வணக்கம்

அவுஸ்திரேலியா,மழலை அமுதம் போன்ற நிகச்சிகள்,இன்பத்தமிழொலியின் பெருமை

சொல்லும் நிகச்சிகள்.

கருத்துக்களம் மக்கள் மனம் திறக்கும் பல்வேறு கருப்பொளுடன் ஒலிக்கும்

கருத்துப்பகிர்வு நிகழ்வு.நேருக்கு நேரும் அப்படியே.

களமும் நாமும் தாயக செய்திகளையும் சம கால அரசியல் போக்கையும் ஆராயும்

நிகழ்ச்சி.

வணக்கம் அவுஸ்திரேலியா காலை வேளை பல்வுவை நிகழ்ச்சி.மழலை அமுதம்

சின்னஞ்சிறார்களின் தமிழுணர்வையும் திறமைகளையும் வெளிக்கொணரும் நிகழ்ச்சி.

"இன்பத்தமிழொலியின் வெள்ளி ஆனந்த இரவு" என்பது பல்வேறான விமர்சனத்துக்கு

உள்ளாகிறது.ஆனந்த இரவு நிகழ்ச்சி விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை விட அதை

தொகுத்து வழங்கும் பிரபாகரன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார் என்பதே உண்மை.

"ஆனந்த இரவு " என்பது கேட்கும் நேயர்களுக்கு சந்தோசமாகவும் சம்பந்தப்பட்ட ஒரு

சிலருக்கு கசப்பான இரவாகவும் அமைகிறது எனலாம்.இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒரு

மனம் திறந்த ஆரோக்கியமான சமுதாயம் கட்டி எழுப்பப்படவேண்டும் என்பதே அந்த

நிகழ்ச்சிப்படைப்பாளரின் எண்ணம்.ஆனால் அதை ஒரு சிலர் அவர்களை சமுதாய கறையாண்கள் என்றே சொல்லலாம், தவறான வழியில் பயன் படுத்துகிறார்கள் வானலையில் தகாத வார்த்தை பிரயோகங்களோடு விதண்டாவாத கருத்துக்களை சொல்கிறார்கள்.

அது அந்த நேரத்தில் அதை தொகுத்து வழங்கும் ஊடகவியலாளனை கோபமூட்டுகிறது.அந்த இடத்தில் பாலசிங்கம் பிரபாகரன் என்ன, எவர் இருந்தாலும் பதிலுக்கு கடுமையான பாணியில் பதில் கொடுப்பது ஒரு யதார்த்தமான ஊடகவியலாளனின் இயல்பு.எல்லாவற்ரையும் கேட்டுவிட்டு உணர்வுகளை

அடக்கி நாவை குறுக்கி போலிக்கு சிரித்து மழுப்பி வெறும் தொலைபேசி பரிமாற்றம்

செய்யும் உணர்வற்ற ஊமையாய் எல்லோரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க

முடியாது.சமுதாயத்தின் குப்பைகள்,கேவலங்கள்,குறைகள்,கு ற்றங்கள் ஏன் நல்லவை

கெட்டவை எல்லாம் வெளிச்சத்துகு வரவேண்டும்.விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டும்.கருத்துக்கள் மோதவேண்டும்.சிந்தனைகள் பிறக்க வேண்டும்.மனம்

திறந்து நல்லது கெட்டது பேசும் சமுதாயம் உருவாக வேண்டும்.அதை ஏற்றுக்கொள்கிற

மனப்பக்குவம் வேண்டும்.அதை வளர்க்க வேண்டும்.

அதை விட்டு "இதை பேசுவதற்கு இவன் யார்?" என்ற குறுகிய எண்ணம் கொண்ட சிலரின்

விமர்சனம் பயனற்றது.செய்தி சொல்லும் ஊடகவியலாளனின் தனிப்பட்ட குடும்ப

வாழ்வையும்,அவனின் தனிப்பட்ட நடத்தைகளையும் கிண்டிப்பார்த்து "இவர் எப்படி இதை

பேசலாம்?" என்று கேட்பது அநாகரிகமான செயல்.அப்படிப்பாத்தால் கண்ண தாசன் கவிஞன்

ஆகியிருக்க முடியாது.தத்துவ பாடல்கள் எழுதியிருக்க முடியாது.சமுதாயத்துக்கு

கருத்து சொல்லியிருக்கவும் முடியாது.

இன்பத்தமிழொலியின் முக்கியத்துவம் அதன் எதிர்காலப்பணியின் அவசியம் அதன்

முன்னேற்றம் என்பது நாம் கண்கூடாக காணும் எமது கடமை. ஊடகப்பணி என்பது எத்துணை சிரமமான பணி என்பது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமல்ல

நேயர்களாகிய எமக்கும் புரியும். எனவே தோள்களில் சுமையோடும் மனதில் வலியோடும் தொடர்ந்தும் நிதமும் ஒலிவாங்கியின் முன் அமர்ந்து வானொலியின் எதிர்காலம் பற்றி சிந்திப்பது என்பது மிகவும் கடினமானது.

அந்த வலியை சுமையை கனவை நாமும் பரிவோம்.அதன் மூலம் அவர்களை, இனபத்தமிழொலியை இன்பமாய் வானலையில் ஒலிக்க வைப்போம்.

நம்பிக்கையோடு..

உங்களின் தமிழ்ப்பொடியன்

சகோதரன் ரமணா

உங்கள் உதவிக்கரங்கள் இணைய....!!!*

இணையத்தளம் ஊடாக:

www.inbathamil.com.au

E-mail: oli@primus.com.au This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it *

தொலைபேசி ஊடாக:sms:0425324953

Office : 61 2 97982993

TalkBack : 61 2 97982994

Fax : 61 2 97982995

அஞ்சல் ஊடாக: Tamil Community Media Australia Pty Ltd.

2/251 Liverpool Road Ashfield, N.S.W 2131

Australia

P.O Box 1224

Burwood

N.S.W 1805

Australia

ஆனந்த இரவு,கருத்துக்களம்,நேருக்கு நேர்,களமும் நாமும்,வணக்கம்

அவுஸ்திரேலியா,மழலை அமுதம் போன்ற நிகச்சிகள்,இன்பத்தமிழொலியின் பெருமை

சொல்லும் நிகச்சிகள்.

"இன்பத்தமிழொலியின் வெள்ளி ஆனந்த இரவு" என்பது பல்வேறான விமர்சனத்துக்கு

உள்ளாகிறது.ஆனந்த இரவு நிகழ்ச்சி விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதை விட அதை

தொகுத்து வழங்கும் பிரபாகரன் விமர்சனத்துக்கு உள்ளாகிறார் என்பதே உண்மை.

"ஆனந்த இரவு " என்பது கேட்கும் நேயர்களுக்கு சந்தோசமாகவும் சம்பந்தப்பட்ட ஒரு

சிலருக்கு கசப்பான இரவாகவும் அமைகிறது எனலாம்.

:rolleyes::):D

  • தொடங்கியவர்

Currently there is a fundrising Radio Appeal for Australia's Pioneer 24 hour

Radio station "Inbathamil Oli Radio" -

Please Show your full support by contributing minimum of $100.00 for that

Appeal.

Inbathamil Radio and it's Director Balasingham Pirabaharan deserve your

support & credit and please be part of the dedicated 1000 listeners for year

2010.

This Radio station dedicate lot of time and efforts for growth of Tamil

Language, our people & Nation's struggle, Tamil culture and Religious

matters and be part of major Relief & Rehabilitation's efforts towards North

East of Srilanka.

You can make the contribution towards Special Days(any day of the year) to

remember Thousand of Martiers and Innocent Tamil lives lost in the war and

for your loved ones Birthdays and Anniversary's.

This is the main Radio stations doing a wonderful job, what needed for the

current situations in here & back home.

Also so many Tamil community radios broadcast through this Inbathamil

Radio. Few Dangerous snakes in our community trying to spoil it's Image

& good efforts with the help of Traitors & SL Agents, but good natured

people and leading Tamil Organisations giving their full support to Keep the

Radio Station on Air and into strong position for the future.

So many unfortunate thinks happen in Tamils life, up there in Srilanka,

India & here, but we need to be Strong to face any challenges comming in our

way, for this, keep our Media in Very strong Position(Dosen't matter TV or

Radio or News Papers)

Please Don't let down your "Inbathamil Radio".

Leave it for your Right decisions.........

There is few options below to make Donations:

*உங்கள் உதவிக்கரங்கள் இணைய....!!!*

*By Website - இணையத்தளம் ஊடாக: **www.inbathamil.com.au

*

*By E-mail: info@inbathamil.com.au*

**

*By SMS: 0425324953*

**

*By Telephone - தொலைபேசி ஊடாக: *

*TalkBack : 61 2 97982994(all States) or **Melboune: 9095 8994*

*

Office : 61 2 97982993

Fax : 61 2 97982995

**

*

*By Post - அஞ்சல் ஊடாக:*

*

Inbathamil Radio

P.O Box 1224

Burwood, N.S.W 1805

Australia

*

**

*or*

**

*Tamil Community Media Australia Pty Ltd.*

*2/251 Liverpool Road *

*Ashfield, N.S.W 2131 *

*Australia *

**

**

Please read this well written comments by Tamil community young Volunteer &

Activist :

  • கருத்துக்கள உறவுகள்

உது என்ன விளம்பரமா?அல்லது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.