Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இந்தியத் தலையீடு உடனடியாக இடம்பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இந்தியத் தலையீடு உடனடியாக இடம்பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிகழ்வு

[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 15:25 GMT ] [ புதினப் பணிமனை ]

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த கொடூரமான இனப் போரின் பின்னர், இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏதும் இடம்பெறாது என்றும் இதுநாள் வரைக்கும் கவனிக்காது கைவிடப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இலங்கை தனது முழுக் கவனத்தையும் செலுத்தும் எனவும் ஊகிக்கப்பட்டது.

போர் அற்ற அமைதியான ஒரு சூழலில், புதிய இன முரண்பாட்டுக்கான சாத்தியம் பெரிதும் குறைந்துவிட்ட புறநிலையில் நாட்டினது பொருளாதார மேம்பாட்டின் ஆதாரமாகத் திகழும் உல்லாசப் பயணத்துறை தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், கடந்த சில வாரங்களாக கொழும்பில் இடம்பெற்றுவரும் அதிர்ச்சிதரும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து மேற்குறித்த இந்த அனுமானங்களுக்கு அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இவ்வாறு எழுதியுள்ளார் Arindam Chaudhuri. அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.

Arindam Chaudhuri தொடர்ந்து எழுதியிருப்பதாவது:

உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காமல் - விடுதலைப் புலிகளின் தலைவரைக் கொன்று, அதன் முழத் தலைமைப் பீடத்தையும் இல்லாதொழித்து, சிங்கள மக்கள் மத்தியில் என்றுமில்லாத செல்வாக்கினைப் பெற்றிருந்த நிலையில் - இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே - அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுத்தார் இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச.

ஆனால், தனது நெருங்கிய நம்பிக்கைக்குரிய நபரும் விடுதலைப் புலிகளை இல்லாதொழித்துப் பெற்ற வெற்றியின் உண்மையான சொந்தக்காரனுமான - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, போரின் வெற்றியினால் தான் பெற்ற செல்வாக்கில் பங்கு கேட்டு, குடியரசுத் தேர்தலில் இறங்குவார் என மகிந்த ராஜபக்ச எண்ணியிருக்கவில்லை.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கர்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் - விடுதலைப் புலிகளை அழித்து அண்மைய உலக வரலாற்றில் அதியுச்ச திறனும் மதிநுட்பமும் கொண்ட ஜெனரல்களில் ஒருவராக பொன்சேகா திகழ்கிறார்.

இத்தகைய தகுதிகளைத் தன்னகத்தேகொண்ட ஒருவர் தேர்தல் அரசியலிற்குள் வருவதானது, நாட்டில் ஆரோக்கியமான சனநாயகம் நிலவுவதைக் காட்டும் ஓர் சுட்டியாகவே கருதப்படும்.

ஆனால் ராஜபக்சவோ, தனிப்பட்ட ரீதியில் தனக்கு அவமானத்தினை ஏற்படுத்தும் செயலாகவும் மக்கள் மத்தியில் தனக்குக் கிடைத்திருக்கும் செல்லவாக்கிற்கும் தனது அரசியல் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமையும் நிகழ்வாகவுமே பொன்சேகாவினது அரசியல் பிரவேசத்தினைக் கருதினார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 57 சதவீத வாக்குகளைப் பெற்று உறுதியான வெற்றியினைத் தனதாக்கிய ராஜபக்சவிற்குள் பழிவாங்கும் எண்ணம் புகுந்துகொண்டது.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தனக்கு ஏற்படக்கூடிய உயிராபத்துத் தொடர்பில் பொன்சேகா கடுமையான கரிசனையினை கொண்டிருந்தார்.

தேர்தல் முடிவுகளை ராஜபக்சவிற்குச் சாதகமாக மாற்றும் வகையிலான வாக்கு மோசடிகளும் இதர முறைகேடுகளும் இடம்பெற்றதாகச் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

தனது தனிப்பட்ட பாதுகாப்புத் தொடர்பில் அதிகம் கவலைகொண்டிருந்த பொன்சேகா இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உதவியையும் நாடியிருந்தார்.

ஆனால், இந்திய அரசாங்கமோ வழமையான பாணியில் இது ஒரு உள்நாட்டு விடயம் எனக் கூறி, தனது பாதுகாப்புத் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்ற பொன்சேகாவின் மத்தியஸ்தத்திற்கான வேண்டுகையையும் அவரது அரசியல் தஞ்சத்திற்கான கோரிக்கையையும் நிராகரித்தது.

ஏற்கனவே இலங்கையில் நேரடித் தலையீட்டினை மேற்கொண்ட அவப்பேறான அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் இந்த முடிவு அமைந்திருக்கலாம். இவ்வாறாக இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடாமல் ஒதுங்கியிருந்தமையானது ராஜபக்சவினது தான்தோன்றித் தனமான செயப்பாடுகளுக்கு வழிவகுத்தது.

பாராளுமன்றைக் கலைத்த ராஜபக்ச, நாட்டினது பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்களை மக்களுக்கு வழங்கினார் என்றும் சதிப் புரட்சிக்கான முனைப்புக்களில் ஈடுபட்டார் என்றும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினைத் தீட்டினார் என்றும் குற்றம் சுமத்தி முன்னாள் இராணுவத் தளபதியைக் கைதுசெய்தார்.

கைது செய்யப்பட்ட பொன்சேகா தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவரவில்லை. இச்சூழ்நிலையிலும், அதிர்ச்சி தரும் வகையில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கிறது!

கைதுக்கு முன்னர், ஏதாவதொரு விடயம் தொடர்பில் ஒரு முறை ஒரு கருத்தையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வேறொரு கருத்துக்களையும் ஜெனரல் தனது அறிக்கைகளில் வெளிப்படுத்தியிருந்தாலும், பொன்சேகாவே இலங்கைத் தீவின் உண்மையான தேசபக்தன் என்பதிலும் அவரே உண்மையான போர் வீரர் என்பதிலும் மாற்றுக் கருத்துக் கிடையாது.

களத்தில் நின்று போரை வழிநடத்திய இந்தத் தளபதி இல்லாது இருந்திருந்தால், இலங்கையோ அல்லது தொடந்தும் பதவியில் இருக்கப் போகின்ற குடியரசுத் தலைவரோ போரை வென்றிருக்கவோ அல்லது போரை வென்ற புகழைப் பெற்றிருக்கவோ முடியாது.

நேர்மையான அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருந்திருந்தால் பொன்சேகாவை ஓர் போர் வீரன் என நடத்தியிருப்பதோடு அவருக்குரிய அதியுச்ச கௌரவங்களையும் வழங்கியிருக்கும்.

ஆனால், அரசியல் நிலைமைகளில் சடுதியான மாற்றம் ஏற்பட - அவமானகரமான வகையில் பொன்சேகா கைது செய்யப்பட்டமையானது எந்தளவிற்கு மோசமான வகையில் மகிந்த ராஜபக்ச தனக்குள்ள அதிகாரங்களை துஸ்பிரயோகப்படுத்தி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

அரசியல் குழப்பங்களால் அல்லலுறும் நாடுகளில் இவ்வாறாக தேர்தலொன்றில் வெல்லும் கட்சி, உண்மைக்குப் புறம்பான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைமையைக் கைதுசெய்யும் மர்மமான போக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டுவது இங்கு பொருத்தமானது.

இந்தியாவின் அண்டை நாடுகள் எவையோ அவற்றின் அரசியல் நிலைமைகளை அவதானித்தால் நான் எதனைக் கூறவிளைகிறேன் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

நாட்டினது முன்னாள் இராணுவத் தளபதி நடத்தப்படும் முறை தொடர்பில் இலங்கையின் அனைத்து மக்களும் சந்தோசமடையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போர், புலிகள் என்ற பொது எதிரிக்கெதிராக நாட்டினது சிங்களவர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதற்கு வழிவகுத்திருந்தது.

அதே போலவே, ராஜபக்சவிற்கு ஆதரவான மற்றும் எதிரானவர்களுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இச்சம்பவங்கள் இலங்கைத் தீவில் வன்முறைசார் குழப்பங்கள் மீண்டும் ஒரு முறை தலை தூக்குவதற்கு தூண்டுதலாக அமையலாம்.

சிதைந்து சீரழிந்து போயிருக்கும் நாட்டினது பொருளாதார மேம்பாட்டினையும் வலுவற்ற நிலையிலிருக்கும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளையும், தனது முதன்மையான இலக்குகளாகக் கொண்டு செயலாற்றவேண்டிய இந்த வேளையில் அரசாங்கமானது பொன்சேகாவிற்கு எதிரான முனைப்புக்களை முடுக்கிவிட்டதன் ஊடாக இன்னொரு உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுவதற்கான விதையினை விதைத்திருக்கிறது.

ஒரு புறத்தே இந்திய அரசாங்கத்தின் செயலற்ற நிலை கவலையைத் தருகிறது. மறு புறத்தே, இலங்கையினது குடியரசுத் தலைவர் தனது சொந்த முடிவின் அடிப்படையிலேயே இவ்வாறு செயற்படுகிறாரா அல்லது தென்னாசியப் பிராந்தியத்தில் அதியுச்ச நலன்களைக் கொண்டிருக்கும் வேறு ஏதாவது தரப்பினரால் இவ்வாறு நடந்துகொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா என்ற குழப்பங்கள் தொடர்கின்றன.

ராஜபக்ச அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய உறவினைக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அத்துடன், புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை அரசாங்கத்திற்குச் சீனா தன்னாலான உதவிகளை வழங்கி வந்திருக்கிறது.

இறுதிப் போரின் போது, இலங்கை இராணுவத்திற்குச் சாதகமாகக் களமுனை மாறுவதில் சீனாவினது ஆயுதங்கள் பெரும் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், குறிந்த இந்த மனநிலையில் ராஜபக்சபைச் செயற்பட வைத்ததன் ஊடாக சீனா தான் விரும்பிய ஏதோவொன்றை அடைய முனைகிறதா?

குடியரசுத் தலைவர் ராஜபக்ச நாட்டினது எதிர்க் கட்சிகளை அடக்கியொடுக்கும் முறை மற்றும் அவர்களுக்கு எதிராக அவர் முன்வைக்கும் குற்றச் சாட்டுககள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குமிடத்து இலங்கையினது சனநாயக முறைமையினை இல்லாதொழிப்பதற்குச் சீனா மறைமுகமாக முயல்கிறதா?

தற்போதைய நிலையில் மேற்குறித்த இந்தக் கரிசனைகள் வெறும் கேள்விகளாகவே இருக்கும் அதே நேரம், இந்தியா பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க வேண்டுமா அல்லது ராஜபக்சவினை நிராகரிக்க வேண்டுமா என எவரும் கோரவில்லை. தவிர, ராஜபக்சவினைச் சரியாகக் கையாண்டால் அவர் இந்தியாவின் உற்ற நண்பராக இருப்பார் என்பது தான் இங்கு முக்கியமானது.

தென்னாசியாவின் இராசதந்திர வட்டகையில் இந்தியா மீண்டும் பிகாசிக்கத் தவறினால் - குறிப்பாக இலங்கை விடயத்தில் - தென்னாசியாவின் தலைமை தானெக் கூச்சலிடும் சீனா இந்தப் பிராந்தியத்தின் நல்லது, கெட்டவற்றில் அக்கறையெடுத்துச் செயற்படும், பிராந்தியத்தின் வெளிநாட்டுக் கொள்கையினைத் தீர்மானிக்கும் புதிய சக்தியாக மாறிவிடும்.

ஆதலினால், இலங்கையில் இந்தியத் தலையீடு உடனடியாக இடம்பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது!

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

http://www.puthinappalakai.com/view.php?20100228100589

Edited by sam.s

காலங்காலமாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்து கொண்டுதானே இருக்கின்றது. இதிலென்ன உடனடித் தலையீடு? அப்படித்தான் செய்தாலும் சீனா தான் ஆக்கி வைத்திருக்கும் காலூன்றலை விட்டுவிடுமா?

சும்மா.. உட்றான்கோ.. அவங்களுக்கு தெர்யும்... நீட்டினால் ஒட்ட நறுக்கப்படும் எண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திகளை பதினப்பலகையில் வெட்டி ஒட்டுவதன்மூலம் கி.பி.அரவிந்தன் அவர்கள், இந்திய ஆதரவு நிலையினை உண்டாக்குவதற்காக புலம்பெயர் தமிழர்களின் மண்டையைக் கழுவமுயற்சிக்கிறார். கடந்த சனியன்று அகில இலங்கைத்தமிழக்காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, வெளியிட்ட கருத்துக்களை, வீரகேசரி தனது இணையப்பதிப்பில் இட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்தாலேயோ தெரியவில்லை தற்போது வீரகேசரியின் இணையத்தளத்தில், அச்செய்தி அவசரஅவசரமாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இராமாயனத்தில் சீதை களங்கமற்றவள் என்பது இராமனுக்குத்தெரியும், ஆனால் காலத்தின்கோலம் ராமனே சீதையின் தீக்குளிப்பை ஏற்றுக்கொணடான. அதுபோல் தமிழர் கூட்டமைப்பினர் புலத்தில், தேர்த்தலில் தோல்வியெனும் தீக்குளிப்பைச் சந்தித்தேதீரவேண்டும் காரணம் இந்திய ஆதரவு நிலையெனும் களங்கத்தில் ஊறிவிட்டனர். தமிழர்க்கான உரிமைப்போராட்டமென்பது எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் முடிவடைந்து விடப்போவதில்லை, அதன்பின்பே புதிய பரிணாமத்தைப் பெறப்போகின்றது. அதற்கு முந்தைய படிநிலையே தற்போதைய தேர்த்தல்களம். ஈழத்தமிழர்களது வளமான, சுதந்திரமான வாழ்வு அண்மித்துவிட்டது அதுகூட்டமைப்பைத் தோல்வியடையச்செய்வதன்மூலம், வீணாகிப்போய்விடப்போகின்றது என்பதெல்லாம் வீண்கதை. இந்தியா எனும் எதிரிக்கு, அதனது பெயரை உச்சரிக்கும் எவரையுமே நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இத்தேர்த்தலின்மூலம் உணர்த்துவதற்க்கு தமிழனுக்குக் கிடைத் சந்தர்ப்பமாக நாம் இத்தேர்த்தலைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த கட்டுரை இந்திய வெறியர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுகிறது. தமிழரின் நலத்தில் துளியும் அக்கறை இல்லை என்பதுவும் விளங்கும்.

================

கீழுள்ள இணைப்பையும் (கட்டுரையின் ஆங்கில வடிவம்), அதில் எழுதியுள்ள ஆங்கில கருத்துக்களையும் பொறுமையாக பார்க்கவும்.

இந்த இடத்தில் தான் தமிழர்கள் கோட்டைவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் ஆங்கிலத்தில், ஆங்கில தளங்களில், சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்டுவதில்லை.

தொடர்ந்து சிங்கள இனவாதிகளால் முன்வைக்கப்படும் தமிழன விரோத கருத்துக்கள் நாளடைவில் சர்வதேச பார்வையில் தமிழரை கேவலமானவராக நினைக்க வைத்துவிடும்.

ஈழத்திலுள்ள தமிழரை விட, புலம்பெயர் தமிழர் இதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற பலர், பொழுது போகாமல் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்ட முன்வரவேண்டும்.

You Tube இலும் பொருத்தமான காட்சிகளின் கீழ் ஆங்கிலத்தில் சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்ட புலம்பெயர் தமிழர் முன்வரவேண்டும்.

தமிழில் எழுதிக்கொண்டிருப்பது எமது வளர்ச்சிக்கு மட்டுமே உதவும். அதுவும் அவசியம் தான், ஆனால் சர்வதேச அபிப்பிராயம் இக்காலத் தேவையாக உள்ளது.

http://www.infolanka.com/news/IL/1098.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரை இந்திய வெறியர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுகிறது. தமிழரின் நலத்தில் துளியும் அக்கறை இல்லை என்பதுவும் விளங்கும்.

================

கீழுள்ள இணைப்பையும் (கட்டுரையின் ஆங்கில வடிவம்), அதில் எழுதியுள்ள ஆங்கில கருத்துக்களையும் பொறுமையாக பார்க்கவும்.

இந்த இடத்தில் தான் தமிழர்கள் கோட்டைவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் ஆங்கிலத்தில், ஆங்கில தளங்களில், சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்டுவதில்லை.

தொடர்ந்து சிங்கள இனவாதிகளால் முன்வைக்கப்படும் தமிழன விரோத கருத்துக்கள் நாளடைவில் சர்வதேச பார்வையில் தமிழரை கேவலமானவராக நினைக்க வைத்துவிடும்.

ஈழத்திலுள்ள தமிழரை விட, புலம்பெயர் தமிழர் இதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற பலர், பொழுது போகாமல் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்ட முன்வரவேண்டும்.

You Tube இலும் பொருத்தமான காட்சிகளின் கீழ் ஆங்கிலத்தில் சிங்களவனை, தமிழர் விரோதிகளை தோலுரித்துக் காட்ட புலம்பெயர் தமிழர் முன்வரவேண்டும்.

தமிழில் எழுதிக்கொண்டிருப்பது எமது வளர்ச்சிக்கு மட்டுமே உதவும். அதுவும் அவசியம் தான், ஆனால் சர்வதேச அபிப்பிராயம் இக்காலத் தேவையாக உள்ளது.

http://www.infolanka.com/news/IL/1098.htm

முற்றிலும் உண்மை உண்மை உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய தலை ஈடு சரி.

அது உந்த கேனை தமிழநாட்டு தமிழன் ,புற்ம்போக்கு அரசியல் வாதிகள் சரியாக பயன் படுத்த விடாமல் அரசியல் செய்கிறார்கள்.

தமிழகம் ஒரு தீர்வை சொன்னால் மத்திய அரசு செய்ய கூடிய அளவுக்கு ப்லம் இருக்கும் போது. அவன் கிழடன் எட்டப்பன்

நடிகைகளை கூட்டி வந்து டான்ஸ் ஆட விட்டுட்டு வீணி ஊத்தி கொண்டூ, யாற்றை மார்பு நல்லா ஆடுது எண்டு பார்த்து கொண்டு இருக்கிறான்.

நாச்மாப்போவான். இம்மியளவும் கவலை இல்லை.

பிறகு செத்தவீட்டு தமிழகதமிழன் இப்பிடி இருக்கேக்க வடைந்தியன் என்ன செய்வான்.

இதுக்கு முதல் விடை காண வேனும்.

அப்ப ராஜீவ்காந்தி (காங்கிரஸ்)

ஈழ தமிழர்களை படுகொலை பணனியவர்களுக்கு துதி பாடுகிறர்களா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.