Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீண்ட இருளில் ஒரு ஒளிக்கீற்று..............

Featured Replies

நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது.

பல அமைப்புகளிலும் பதவி மாற்றம் என்றாலே விலகுபவர் அல்லது விலக்கப்படுபவர் அல்லது ஓய்வு கொடுக்கப்படுபவர்மீது பழிகள் சுமத்துவது ஒரு சம்பிரதாயம்போன்று தொடர்ந்துவருவதுவும்,

இதற்கெதிராக பதவி விலகுபவரரும் எதிர்ப்பரப்புச் செய்வதுவும் என பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு நாமே களம் அமைத்துக் கொடுப்பதுவும் ஏன்?

இங்கு கொண்ட கொள்கைக்கும் பொது நலத்துக்கும் மேலாக நாற்காலிக்கனவுகள்தான் முன்னிலைவகிக்கிறதா?

ஒருவர் பாக்கியில்லாமல் வெளியேறுவோர் எல்லோருமே ஒழுக்கமற்றவர்கள் அல்லது பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா?

இருபகுதியினரும் இணைந்து சுமூகமாக பதவிமாற்றங்களைச் செய்வதில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன?

சுமூகமான பதவி ஓய்வுகள் ஏன் இடம்பெறுவதில்லை?

விலகியவர்கள் மதிப்பளிக்ப்படாதுவிடப்படுது ஏன்?

இப்படியாகப் பல ஏன்... ...........என்ற கேள்விகளிற்கு மத்தியில் அண்மையில்

நான் சென்றிருந் ஒரு தமிழாலய ஆண்டுவிழா நீண்ட இருளில் ஒரு ஒளிக்கீற்றாயத் தென்பட்டது.

ஜேர்மனியின் ஒரு சிறிய நகரத்தில் இயங்கும் தமிழாலயம் தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டு விழா மிகவும் சிற்ப்பாக மண்டபம் நிறைந்த அண்ணளவாக 500 பார்வையாளருடன் இடம் பெற்றது. இதில் என் கவனத்தை ஈர்த்த இரண்டு முக்கியமான விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சிகளைத் தயாரித்ததுமுதல் அன்றைய விழா ஒழுங்குகள்வரை சகலவிடயங்களையும் மணவர்களே முன்னின்று செய்ய அந்தக் கல்விநிலைய நிர்வாகி நிறைகுடம் தழும்பாது என்பதற்கேற்ப அமைதியாக இருந்து தனது மாணவர்கள் அவர்களது திறமைகளைச் சுயமாக வெளிக்காட்ட இடம் கொடுத்தது பாராட்டத்தக்க முன்மாதிரியாக இருந்தது.

அடுத்து இத்தமிழாலயம் தொடங்கியகாலத்திலருந்து இன்றுவரை நிர்வாகிகளாக உதவிநிர்வாகிகளாக ஆசிரியர்களாக இருந்து பதவி விலகிய ஓய்வுபெற்ற சகலரும் வருகை தந்திருந்தததுமட்டுமல்லாமல் பலவிதமான பின்புல உதவிகளையும் முன்னின்று செய்ததைக் காணக்கூடியதாக இருந்ததுடன், அவர்கனைவரும் பட்டயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுவும், அரிய நிகழ்வாக இருந்தது.

உறவினர்வீட்டு நிகழ்கொன்றில் உபசரிப்பதுபோன்று சிற்றுண்டிவகைள் காப்பி இரவு உணவு என வந்திருந்த அனைவருக்கும் இலவசமாகக்கொடுத்து உபசரித்ததுவும் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்

இப்படி இந்தச்சிறிய நகரத்தில் தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் தாண்டி ஒரு நிர்வாகமும் மக்களும் ஒரு பொது நோக்கிற்காய் ஒன்றிணைய முடிவது சாத்தியமென்றால், இரண்டு இழுவைமாடுகள்கூட ஒன்றிணைந்து ஒரு இலக்கைச் சென்றடையலாமெனில்

ஏன் எமது ஒட்டுமொத்த சமுதாயத்தால் இது முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் வீடுதிரும்பினேன்.

மாணவர்களுக்குமட்டுமன்றி அனைவருக்குமே முன்னுதாரணமாச் செயற்படும் இத்தமிழாலய நிர்வாகத்தினருக்கும் இந்நகரத்து உறவுகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்

Edited by ampalathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது.

ஏன் எமது ஒட்டுமொத்த சமுதாயத்தால் இது முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் வீடுதிரும்பினேன்.

மாணவர்களுக்குமட்டுமன்றி அனைவருக்குமே முன்னுதாரணமாச் செயற்படும் இத்தமிழாலய நிர்வாகத்தினருக்கும் இந்நகரத்து உறவுகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்

அம்பலத்தாருக்குத் சமூக மன்றமாகப் பார்க்கப்படும் ஒரு விடயத்தை எடுத்தாராய்தமைக்குப் பாராட்டுகள்.

நீண்ட இருளில் ஒரு ஒளிக்கீற்று…….

பொதுநலத்துக்கு மேலாக நாற்காலிக் கனவுகள்தான் முன்னிலை வகிக்கிறதா?

ஆம்! நாற்காலிக் கனவுகளே முன்னிலை வகிக்கிறது.

ஒரு நிறுவனம் என்பது அதனது தளம் கடமைகளை முன்னெடுத்துச் செல்லும் விடயங்கள் சமூக மேம்பாடு என்பவற்றைக் கருத்தில் கொண்டும், செயற்பாடுகளின் தேக்கம் ஏனையோருக்குச் சந்தர்ப்பம் வழங்குதல், ஒருவரிடம் உள்ள ஆற்றல்களைச் சமுதாயத்துக்காகப்; பயன்படுத்துதல் என்பவற்றை நோக்காக் கொண்டே பதவி மாற்றங்கள் நிகழ்கிறது. ஆனால் யேர்மனியை மையமாகக் கொண்டு பார்த்தால் இந்தப் பதவிமாற்றங்கள் பெரும்பாலும் எதிர்வினைகளையே தோற்றுவித்திருக்கிறது என்பதையே பல இடங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதற்கான காரணம்தான் என்ன?

பதவியைக் கொடுக்கும்போது ஏற்பவர்கள் விடச் சொன்னால் விட மறுப்பது ஏன்?

தமக்கு வாழ்க்கைக்கால ஏகபோக உரிமையென்ற நினைப்பா?

தம்மைவிட ஏனையோர் தகுதியற்றவர் என்ற எண்ணமா? அல்லது வேறு எவருமே வளர்ந்துவிடக்கூடாது என்ற போக்கா?

உண்மையான தேசிய அக்கறை கொண்டவர்கள் இப்படிச் செய்வார்களா?

இப்படியானவர்களை அண்டிப் பிழைப்போருக்குத் தன்மான உணர்வில்லையா?

ஒருவர் ஒரு செயற்பாட்டிற்கென வரும்போதோ, பெரிய அளவில் சமுதாய மட்டத்தில் அறியப்பட்டவாராகவோ அன்றி ஆற்றலுடையவராகவோ இருக்கமாட்டார். ஆனால் அவர் இணைந்துள்ள நிறுவனமூடாகக் கிடைக்கும் பட்டறிவினூடாகவும், கருத்தூட்டலூடாகவும் தன்னை முதலில் வளர்த்துக் கொள்கிறார். இதில் ஒன்று தானாக நிகழ்வது. இன்னொன்று இணைந்தவுடன் செயற்பாட்டில் இருப்பவரது நகர்வாக இருக்கும். ஆனால் இவர்களை உள்வாங்கிச் செயற்படுத்துவோர் இவற்றைப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவரது வளர்ச்சியானது சமுதாயத்துக்குப் பயன்படுமென்பதை இலக்காக் கொள்வதே காரணமாகும். ஆனால் ஒரு மூன்று நான்கு வருடங்களின் பின், அதாவது அந்தச் சமூக மட்டத்தில் ஏற்படும் தொடர்பு காரணமாகக் கிடைக்கும் அனுகூலங்களின் பயனாக அவருக்கு தான் ஒரு நிரந்தரப் பதவிக்குரியவன் என்ற எண்ணத்தின் காரணமாக மெதுவாகச் சுயநலன், உறவுசார்ந்த நலன் என்பன எட்டி பார்த்துப் பாயத் தொடங்கும் போதே அது தொடர்பானவர்களின் முகங்கள் தெரியத் தொடங்குகின்றது. இது சிலர் தாம் பத்துவருடம், பதினைந்து வருடம் என்று இருந்து பதவிகளை விட்டுக் கொடாது இருப்பவர்களும், மாற்றங்களை ஏற்படுத்த முனையும் போது மக்களில் தமக்குச் சார்பானவர்களை வைத்துக் கொண்டு நிறுவனங்களைப் பிரிப்பதுமெனத் தரங்கெட்ட செயற்பாடுகளும் நிகழ்கின்றன. நிகழ்ந்து வருகின்ற என்பது மனவேதனைக்குரிய விடயமாகும். அத்தோடு நேர்மையான கருத்துகளை முன்வைப்போரை குழுவாகச் சேர்ந்து ஓரங்கட்டுதல். இதற்குச் சிலருக்கு தம்மால்(அதாவது தனது பொறுப்பூடாக) வழங்கக்கூடிய பதவிகளைக் கொடுத்து மடக்கி வைத்துக் கொண்டு நிறுவனங்களைச் சீரழித்தல் சரியான செயற்பாட்டு நகர்வைச் செய்யாது விடுதல் என்று பல்வேறு கைங்கரியங்களில் ஈடுபடும் புலித்தோல் போர்த்திய நரிகளும் இல்லாமல் இல்லையெனலாம். இது மட்டுமா சிலர் ஏதோ தமது குடும்பத்தினரால் செய்யப்பட்ட முதலீடு போன்று நடப்பதும் உள்ளது. கூட்டம் நடக்கும் போது நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால், நிர்வாகியின் சம்சாரமோ, உறவோ பதிலளிக்கும் நிலைமைகளும் உள்ளது. இந்த நிறுவனங்களோடு மக்கள் நிற்கிறார்களென்றால், அது ஏதோ தனக்காக என்ற எண்ணப்போக்கும் உள்ளது.

தனக்கு தனது உறவுகளுக்கு என்ற எண்ணத்துடன் செயலாற்றுவது ஏன்?

கேள்வி கேட்கக்கூடியோரை ஓரங்கட்டுவது அல்லது சிறுபதவிகளைக் கொடுத்து தமக்குள் வைத்திருப்பது சரியா? இது உண்மையான நிர்வாகமா?

தமது புகழ்பாடுவோருக்கு முதலிடம் என்ற போக்குச் சரியா?

கலைநிகழ்வுகள், கற்பித்தல், போட்டிகள் என்பவற்றிற்கூடத் திட்டமிட்டுப் பெற்றோரைப் பழிவாங்க பிள்ளைகள் மீது வெறுப்பைக் காட்டுவது சரியா?

இவற்றினூடாக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இதுபோன்ற செயல்களால் புதைக்கப்படுவது அனுமதிக்கக் கூடியதா?

மக்கள் இந்த நிறுவனங்களோடு ஏன் நிற்கின்றார்கள் தெரியுமா? தேசியம் சார்ந்து சிந்திப்போரால் உருவாக்கப்பட்டு, பெரும்பான்மையாகத் தேசியத்தினது நலன்நோக்கியோரே இது போன்ற நிறுவனங்களோடு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் "வழித் தேங்காயை எடுத்துத் தெருப் பிள்ளையாருக்கு அடிப்பது" போன்ற செயற்பாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்த உரிமையை யாரும் இவர்களுக்குக் கொடுக்கவில்லையென்பதையும் இவர்களை உணர வைக்க வேண்டும். தமிழ் தேசியத்தினது வளர்முகத்தையும் ஒற்றுமையையும் நோக்காகக் கொண்டே இவை அமையப்பெற்றன. இவற்றுக்காக இதயசுத்தியோடு உழைத்தவர்கள் பலர் மறைவாக இருக்கிறார்கள். இதுமட்டுமா? தமது சுகங்களைத் துறந்து ஈகிகளாய்ப்போன பல்லாயிரம் இளையோரதும், தமிழினத்தின் இருப்புக்காகத் தம்மையே அர்பணித்த பலலட்சம் மக்களதும் குருதியில் சுகம்காணப் பதவிகளைப் பயன்படுத்துவதும் அநாகரீகமானது என்பதை உணராதோரும் உள்ளனர் என்பதே உண்மையானது. இதனை இன்று நாம் எமது கண்க@டாகக் கண்டுவருகின்றோம். இவை களையப்பட வேண்டியவை. இவற்றை நாம் ஒரு வரையறுக்கப்பட்ட பதவிக் காலமாகக் கொள்ளும்போது மட்டுமே உண்மையான செயற்பாடுகளை சமூகம் பெற வழியேற்படும். புற்றுவளராது தடுக்கவும் முடியும் என்பதே உண்மையாகும்.

இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடலாம் என்று எண்ணுகின்றேன். எனது நண்பரொருவரை யேர்மனியின் முக்கிய நகரமொன்றில் சில மாதங்களின் முன் எதேச்சையாகச் சந்தித்தித்தேன். மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டார். என்னவென்று விசாரித்தால் தனது கார் விட்ட இடத்தைத் தேடுவதாகக் கூறினார். சரி அவரோடு சேர்ந்து இரண்டு மூன்று ஒழுங்கைகள் சுற்றி ஒருவாறு கண்டுபிடித்தோம். அப்போது அதால் ஒரு பொலிஸ்வாகனம் போகவும் ஆள் படாரென்று சில்லைப் பார்ப்பதுபோல் குனிந்து பார்த்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டார். அப்போது நான் போக வேண்டிய இடத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஏற்றினார்.என்னிடம் பான்காட் இருந்தபோதும் என்ன விசயமென்று அறியும் நோக்கில் காரில் ஏறிக் கொண்டேன். காரில் சென்றபோது அவரிடம் கேட்டேன். ஏன் பதட்மாக நின்றீர்கள். என்ன பிரச்சினை என்று…. அவர்கூறிய விடயம் என்னை அதிர வைத்தது. தன்னை ஏதோ ஆலயத்தினது நிர்வாக சபைத் தெரிவென்று கூப்பிட்டதாகவும், தாமும் அந்த ஆலயத்திலே திருவிழா செய்வதால் வந்ததாகவும், ஆனால் ஆலயத்தின் நிர்வாகத்தை பொதுநல நோக்கிற்கெதிரான சிலர் கைப்பற்ற முயன்றதாகவும் நியாயத்தைக் கேட்டவர்களோடு தாறுமாறாக நடந்து கொண்டதோடு, அங்கிருந்த சிலர் பொலிஸைக் கூப்பிட்டு நியாயத்தைக் கேட்டவர்களைக் காட்டிக் கொடுத்ததாகவும் அதனால் தான் ஒருவாறு தப்பி வந்ததாகவும் கூறினார். அப்போது அவர் இன்னுமொரு விடயத்தையும் கூறினார். அதாவது முள்ளிவாய்கால் பலரது உண்மை முகங்களைக் காணவைத்துள்ளதோடு, தமிழினத்தில் பல முட்களையும் தோற்றுவித்துள்ளதாகக் கூறினார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை என்பதை ஆழமாக உற்று நோக்குவதூடாக அறியக்கூடியதாக உள்ளது.

இன்னும் நிறைய விடயங்களை எழுதலாம். இந்த ஒன்றே போதுமானது. பதவிகளால் சீரழிவது சமுதாயம் என்பதைப் பதவிகளில் இருப்போரும், இந்தப் பதவிகளை வைத்துச் தான் சார்ந்த சமூகத்தை வளர்த்துள்ளாரா? அல்லது தமது குடும்பத்தையும் உறவுகளையும் வளர்க்கின்றாரா? என்பதை மக்கள் உற்று நோக்குவதும் தட்டிக் கேட்பதுமே இதுபோன்ற அவலங்களை துடைத்திட வழிசமைப்பதாக அமையும்.

ணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா?

ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் எல்லோரையும் அப்படிக் கூற முடியாது.

இருபகுதியினரும் இணைந்து சுமூகமாக பதவிமாற்றங்களைச் செய்வதில் என்ன சிக்கல்கள்இருக்கின்றன?

இல்லை. சிக்லென்பது இல்லை. அது தான் என்ற 'ஈகோ' வை விடும்போது சாத்தியமானதே.

சுமூகமான பதவி ஓய்வுகள் ஏன் இடம்பெறுவதில்லை?

'ஈகோ' காரணமாகச் சுமூகமான பதவி ஓய்வுகள் நிகழ்வதில்லை. அல்லது ஏனையோரை ஏற்கும் மனப்பாங்கின்மை. அல்லது மற்றையோரின் திறனைக் குறைத்து மதிப்பிடல்.

விலகியவர்கள் மதிப்பளிக்ப்படாதுவிடப்படுது ஏன்?

விலகிய ஒருவருக்கு மதிப்பளித்தால், அது அவர்தொடர்பான நல்ல விடயங்களைக் கூற வேண்டும். அது அந்தத் தமிழாலய வளர்ச்சியில் தற்போது இருப்போரால் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது நிலையென்ற எண்ணமாகும்.

பத்தாண்டில் ஒரு தமிழாலயத்தில் அதனை ஆரம்பித்தவர் இருக்கமாட்டார். அதில் அவரது, அதாவது ஆரம்பித்தவரது நோக்கம் ஆரம்பித்து வழிகாட்டுவதைக் கொண்டதாக இருக்கும்.

பல ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். அவர்கள் ஏனையோரை உள்வாங்கும்வரை நின்று செயற்பட்டோராய் இருப்பார்கள்.

நிர்வாகத்தின் செயற்பாடு ஒவ்வாமையால் வெளியேறியோராயிருப்பர்.

செயல்பாட்டு முரணைப் பகைமுரணாகப் பார்க்கும் போக்குடைய நபர்கள் பதவிகளில் இருப்பதன் விளைவு.

இதனை நாம் பின்வரும் நிரல் மூலம் காணலாம். அதாவது ஒரு பிள்ளை பன்னிரெண்டாம் ஆண்டில் படித்துத் திறமையான சித்தியோடு வெளியேறும் போது, அந்தப் பன்னிரெண்டாம் ஆண்டு ஆசிரியர் தாமே அந்தப் பிள்ளையை வளர்த்துவிட்டதாக உரிமை கொண்டாடும் நிலைக்கு ஒப்பிடலாம். அதாவது ஒருபிள்ளையின் வளர்ச்சியானது மழலையர் நிலையில் இருந்து ஆரம்பித்து படிமுறைவளர்ச்சியூடகவே பன்னிரெண்டாம் ஆண்டுக்கு வருகின்றது. இதற்குப் பல்வேறு மறைமுக நேரடியான துணைக்காரணங்கள் இருக்கின்றன. (1) பெற்றோர் (2) பிள்ளையின் ஆர்வம் (3) சூழல் (4) மழலையர் நிலை முதல் பன்னிரெண்டாம் ஆண்டுவரை கற்பித்த ஆசிரியர்கள்.

இதைபோன்று ஒரு தமிழாலய வள்ச்சியை ஒப்பிட்டுப்பார்த்தால் புரிந்து கொள்வது இலகுவானதல்லவா?

தமிழாயத்தின் வளர்ச்சியின் பின்னால்…

தமிழாலயத்துக்கு இடமெடுத்தவர், வாகனமோடியவர், சிற்றுண்டி செய்தவர், மாவரைத்தவர், கணவனையோ மனைவியையோ தொண்டில் அனுமதிப்பவர், வெளியேநின்று ஒத்தாசை புரிபவர் என்று ஒரு பெரும் மறைமுகமான இணைப்புவட்டம் வேலைசெய்தே தமிழாலயம் நகர்கின்றது.

எனவே இவற்றைப் பாரபட்சமின்றி, தனியுரிமையாகப் பார்க்காது, நானென்று இல்லாது, நாங்கள் என்ற தளத்திலே நகர்வதும் ஏனையோருக்கும் சுழற்சி முறையியே பொறுப்புகளைப் பகிர்வதூடாக , அனைவரையும் பொறுப்பிற்குரியவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துதல் மூலம் ஒரு சிறந்த இறுக்கமான ஒற்றுமையை வளர்க்கலாம். இது தொடர்பாக உரியவர்கள் கவனத்திற் கொள்ளள வேண்டும்.

சமூக நலனநோக்கில் சிந்தை கொள்வாரா?

Edited by Valukkiyaru

நாற்காலியை வேறு ஒரு வகையாகவும் நோக்கலாம் அம்பலம் மாமா. அதாவது பொதுநலம் செய்வதை ஆக்களுக்கு தூண்டுகிற கருவியாகவும் அதை பார்க்கலாம். ஏதாவது incentives இல்லையெண்டால் சனன்களை உள்ளுக்கை சேவை செய்ய இழுக்கிறது ரொம்பக்கஸ்டம் எண்டு நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

நாற்காலியை வேறு ஒரு வகையாகவும் நோக்கலாம் அம்பலம் மாமா. அதாவது பொதுநலம் செய்வதை ஆக்களுக்கு தூண்டுகிற கருவியாகவும் அதை பார்க்கலாம். ஏதாவது incentives இல்லையெண்டால் சனன்களை உள்ளுக்கை சேவை செய்ய இழுக்கிறது ரொம்பக்கஸ்டம் எண்டு நினைக்கிறன்.

அப்படியென்றால் எங்கட ராஜபக்சவின்ரை மந்திரிசபைபோல வந்தவனுக்கெல்லாம் கதிரை போடவேணுமென்று சொல்லவாறியளோ? மருமகனே. கடைசியில வேலியிலபோற ஓணாணுகளையெல்லாம் மடியில கட்டின கதையாப்போகுமப்பு

  • தொடங்கியவர்

தமிழாலயத்தின் வளர்ச்சியின் பின்னால்…

தமிழாலயத்துக்கு இடமெடுத்தவர், வாகனமோடியவர், சிற்றுண்டி செய்தவர், மாவரைத்தவர், கணவனையோ மனைவியையோ தொண்டில் அனுமதிப்பவர், வெளியேநின்று ஒத்தாசை புரிபவர் என்று ஒரு பெரும் மறைமுகமான இணைப்புவட்டம் வேலைசெய்தே தமிழாலயம் நகர்கின்றது.

எனவே இவற்றைப் பாரபட்சமின்றி, தனியுரிமையாகப் பார்க்காது, நானென்று இல்லாது, நாங்கள் என்ற தளத்திலே நகர்வதும் ஏனையோருக்கும் சுழற்சி முறையியே பொறுப்புகளைப் பகிர்வதூடாக , அனைவரையும் பொறுப்பிற்குரியவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துதல் மூலம் ஒரு சிறந்த இறுக்கமான ஒற்றுமையை வளர்க்கலாம். இது தொடர்பாக உரியவர்கள் கவனத்திற் கொள்ளள வேண்டும்.

சமூக நலனநோக்கில் சிந்தை கொள்வாரா?

முதலில் பொறுமையாக ஆராய்ந்து விபரமான கருத்தாடலைத் தொடர்ந்தமைக்கு நன்றிகள் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் தனியே தமிழாலயங்களுக்குமட்டுமன்றிப் பொதுவாக அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயற்ப்பட்டால் நம் சமூகம் தானே தலைநிமிரும்.

Edited by ampalathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.