Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டல்ல… சூதாட்டம்! -IPL CRICKET

April 17, 2010

iplcheerleadersmumbai.jpg

previewde4.jpg

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தைக் காட்டிலும் மேலதிகமான பணம் படைத்த அமைப்பாக இருக்கிறது. அதனால்தான் மத்திய அமைச்சர் சரத் பவார் அந்த வாரியத்தின் தலைவர் பதவியை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எதிர்ப்புகளை முறியடித்துக் கைப்பற்றினார். அப்போதே இந்திய கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்பதை மீறி, வேறு தளங்களுக்குத் தாவிவிட்டது.இப்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், ஐபிஎல் போட்டியில் கொச்சி அணிக்கான ஏலத்தில் தலையிட்டார் என்பதும், இதில் ரூ.70 கோடி அளவுக்கான பங்குகளை, அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறப்படும், சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணிக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது என்பதையும், ஐபிஎல் போட்டிகளில் அரசியல்வாதிகள் இன்னும் பலபேர் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதையும் இது உறுதிப்படுத்தி இருக்கிறது.சசி தரூர் தன் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் மறுத்துப் பேசியிருப்பதும், இது குறித்து விசாரித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் அறிவித்திருப்பதும், அமைச்சர் சசி தரூரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் ஆகிய இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது, ஐபிஎல் டிவென்டி20 விளையாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாபம் கிடைப்பதால், இதில் அரசியல்வாதிகள் தற்போது பினாமி பெயர்களில் நுழைவது ஆச்சரியமளிக்கவில்லை. இவர்கள் வெளிப்படையாகத் தகராறைத் தொடங்கியது ஏன் என்பதில்தான் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.சசி தரூர் தன் காதலிக்கு இலவசமாக கொச்சி அணியிலிருந்து 18 சதவீதம் பங்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகப் புகார் எழுப்பியுள்ள, ஐபிஎல் கமிஷனர் லலித் மோடிக்கு, உண்மையிலேயே யார் உரிமையாளர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் என்றால் இதை ஏலம் எடுப்பதற்கு முன்பாகவே உறுதி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.கொச்சி அணி ஏலம் எடுக்கப்படும் நாள் திடீரென தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏலம் மார்ச் 21-ம் தேதி நடைபெற்றாலும் அதற்கான ஒப்பந்தம் ஏறக்குறைய 20 நாள்கள் கழித்து, ஏப்ரல் 10-ம் தேதிதான் கையெழுத்தாகியுள்ளது.சாதாரண ஏலக்கேட்பு நிகழ்ச்சி அல்லது டெண்டரில்கூட குறைந்தபட்ச டேவணித் தொகை செலுத்தவும், தங்களது முகவரி, வருமான வரி செலுத்திய ஆதாரங்கள், தங்களுக்குள்ள சொத்து மதிப்பின் விவரம் எல்லாவற்றையும் படிவத்தில் குறிப்பிட்டு ஆக வேண்டும். பினாமியாகவே இருந்தாலும்கூட அவரது பெயர், முகவரி இடம்பெற்றாக வேண்டும். இவை எதையுமே சரிபார்க்காமல், ஏலம் நடத்தி, ஏலத்தில் பங்கேற்றவருடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டு, இப்போது இந்த பிரச்னையைக் கிளப்புவது ஏன்? ஏலக் கேட்பு ஆவணங்கள் கொடுத்தவர்களுக்கும்கூட உரிமையாளர்கள் யார் என்று தெரியாது என்று இப்போது நல்லபிள்ளையாகப் பேசுவது ஏன்?ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் யார்யார் என்ற நிருபர்கள் கேள்விக்கு மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஏலத்திலிருந்து விலகிக்கொண்டால் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டுக்கு 50 மில்லியன் டாலர் பணம் தருவதாக லலித் மோடி பேரம் பேசினார் என்று ரெண்டஸ்வஸ் செயல் அலுவலர் சைலேந்திர கெய்க்வாட் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை மோடி மறுத்துள்ளார்.ஐபிஎல் போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுப்பதே நாகரிகமான செயலாக இல்லை. கிரேக்க அரசில் அடிமைகளை விலை கூவுவதுபோல, வீரர்களை ஏலத்தில் எடுப்பதே அந்த விளையாட்டின் தரத்தைக் குறைத்து வியாபாரமாக்கியது. இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக விளையாட்டுத் தேதிகளை தள்ளி வைக்காமல், தென்ஆப்ரிக்காவில் ஐபில் போட்டிகளை நடத்தியபோதும், இவர்கள் பணத்தில்தான் குறியாக இருக்கிறார்கள், இவர்களுக்கு விளையாட்டைவிடப் பணம் தான் முக்கியம் என்பதும் அப்பட்டமானது. அந்த நேரத்திலாவது இந்திய அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் வழக்கம்போல இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததால், அரசின் தலையீடு அல்லது கண்காணிப்பு எதுவுமே இல்லாமல் விருப்பம் போல செயல்பட்டு வந்தார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆட்டத்துக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கின்ற ஒன்றை மட்டுமே முதலீடாக வைத்து, எந்த உழைப்பும் இல்லாமலேயே ஒரு கூட்டம் மிக எளிதாக, பல ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்கும் என்றால் அதை இந்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் என்றால்… இதன் பின்னணியில் என்னென்ன ரகசியங்கள் இருக்கின்றனவோ!ஐபிஎல் நடத்தும் டிவென்ட்டி20 ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இதை நடத்துகிற, ஏலத்தில் பங்கேற்கும் அமைப்புகள், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத நிலையில் இதை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும்?சசி தரூர் மீதான புகாரை விசாரிப்பது மட்டுமன்றி, ஐபிஎல் போட்டியில் இதுவரை ஏலம் எடுத்த அமைப்புகளின் பங்குதாரர் அனைவரது விவரங்களையும் வெளியிடுவதோடு, இவர்களது லாபக் கணக்குகளையும் வருமான வரி மற்றும் தணிக்கைத் துறைக்கு உட்படுத்துவதாக நடவடிக்கை அமைய வேண்டும். இப்பிரச்னை எழுந்தவுடன் வருமான வரித் துறையினர் ஐபிஎல் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால் அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கிரிக்கெட் ஆட்டம் சூதாட்டமாக மாறிவிட்டது. முன்பு அதன் பெயர் பெட்டிங். இப்போது ஐபிஎல்! லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விட்டோம், சூதாட்டத்தை மக்கள் நலன் கருதித் தடை செய்து விட்டோம் என்று கூறும் அரசு, இந்த சூதாட்டக் கொள்கைக்குத் தடை விதிக்கத் தயங்குவதேன்? ஆட்சியாளர்களுக்கும் பங்கு போகிறதா என்ன?

நன்றி- தினமணி

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை நாசமாக்கும் வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்..

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பண ஊழலிலும், ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மத்திய அமைச்சர் சசிதரூர் போன்றோரை காங்கிரஸ் ஆட்சியில் வைத்திருக்கக் கூடாது; உடனே வெளியேற்றுங்கள் என்று பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வர்த்தக சூதாட்டம்-கிரிக்கெட்

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாகவும் ஆகிவிட்டது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன.

விளையாடுகின்ற விளையாட்டாளர்களையும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கியே வெற்றி_ தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்!

நம் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும்கூட இப்போதை விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் சில நாள்கள் நடக்கும்.

ஆனால் இப்போது அய்.பி.எல்., (மி.றி.லி) என்ற அமைப்பு_ கிரிக்கெட் அணிகள் உருவாகி, ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடை-பெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு, இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

நாட்டை நாசமாக்கி வரும் கிரிக்கெட் போதை

பஞ்ச பாண்டவர் காலத்திலேயே பாரதக் கலாச்சாரமாக இந்த கிரிக்கெட் போதை, நாட்டை நாசமாக்கி வருகிறது என்பது தான் இதற்கு மூலவேர் ஆகும்!

கடந்த சில நாள்களாக, ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது_இந்த அய்.பி.எல். (மி.றி.லி) 20 ஓவர் கிரிக்கெட்டுகளில் புழங்கிய பண விளையாட்டும், பரஸ்பர குற்றச்சாட்டு ஊழல்களும்தான்!

நடுத்தர வர்க்கம் முதல் எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளைப் போல, இது மக்களைச் சுரண்டுகிறது, 3 ஆண்டுகளாக.

அய்.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் உள்ளனவாம்! உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் (உலக மயத்தின் மற்றொரு கூறு போலும் இது) இதில் பங்கேற்கிறார்களாம்!

மர்மம் நீடிக்கிறது

இதனால்_ போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அய்.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளைச் சேர்க்க முடிவு செய்-யப்-பட்டதாம். சமீபத்தில் அந்த 2 அணிகளுக்கான (கொச்சி, புனே அணிகள்) ஏலத்தின் மூலம் நடந்தனவாம். கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் அய்.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம்!.

இதில் கொச்சி அணி தேர்வு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் (ஸிமீஸீபீணீஸ்ணீக்ஷ்) என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கி-யுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம்!. இதனால் (எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா?) கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமையாளர்கள் யார்? யார்? என்று மர்மம் நீடிக்கிறது.

செய்தியாளர்களிடம் அய்.பி.எல். போட்டி ஆணையர் லலித் மோடி என்பவர், கொச்சி அணி உரிமையாளர் யார் என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது என் கடமையாகும்.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய்கள் மதிப்பு) இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

சசி தரூர் என்ற கேரளப் பார்ப்பனர்

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக்கொண்டே அறிவு ஜீவி, சசிதரூர் என்கிற (கேரளப் பார்ப்பனர் இவர்) பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளுமன்றத்திலும்,எதிர்க்கட்சியான பா.ஜ.க., இடதுசாரிகளாலும் பேசப்பட்டு வருகிறது!.

அந்த இலவசப் பங்கு பெற்றதாகக் கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம்!. இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்!

ஏன் நனைந்து சுமக்க வேண்டும்?

இத்தகையவர்களை அமைச்சகளாக, மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் ஏன் நனைந்து சுமக்கிறது என்பது நம்மைப் போலவே பலருக்கும் புரியவில்லை!.

இது போலவே சர்ச்சைகளுக்குப் பெயர்போன அமைச்சர் மேலும் 2,3 பேர்கள் இடம்பெற்று, மத்திய ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்ற நிலையும் உள்ளது.

ரூ.70 கோடி கைமாறியிருக்கிறது

சசி தரூர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அய்.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில், தலையிட்டார் என்றும், அவரது உத்தரவின் பேரில் சுனந்தா (காஷ்மீர் அழகிக்கு) ரூபாய் 70 கோடி கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது!.

லலித் மோடியின் இணையதளத்தில், சசி தரூர் ஏன் அய்.பி.எல். ஏலத்தில் தலையிடுகிறார் என்று கேட்டிருந்தார்; அதற்கு சசிதரூர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம்!.

ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளில் லலித்மோடிக்கு ரகசியமாக பங்கு உள்ளது. அதுபற்றி அவர் ஏன் வாயைத் திறப்பது இல்லை என்று சசிதரூர் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி ஊழல் ஒரு தொடர் கதை_ இத்துறையில் எனக்காட்டி வருவதாக தெரிகிறது!

இதற்கிடையில் கொச்சி அணியின் செய்தித் தொடர்பாளர் சத்திய ஜித் கெய்க்குவாட் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், லலித்மோடி எங்களைத் தொடர்புகொண்டு ரூ.230 கோடி தருகிறேன்; கொச்சி அணியை நான் சொல்பவர்களிடம் விற்றுவிடுங்கள் என்றார், நாங்கள் மறுத்துவிட்டோம் என்று ஒரு தகவல்!

திடீர் சோதனை

இதற்கிடையில் ஒரு நல்ல செய்தி: வருமான வரித்துறையினர் இந்த அய்.பி.எல். அலுவலகங்களை திடீர் சோதனையிட்டனர் என்பது _ கொள்ளை லாபக் குபேரர்களை வருமான வரித்துறை விட்டுவிடக் கூடாது. திமிங்கலங்கள் தப்பி, சிறுசிறு மீன்கள்தான் வலையில் சிக்குவது வழமை. இதற்கு மாறான நடவடிக்கையாக அது அமையவேண்டும்.

காங்கிரசுக்கு தலைவலி-திருகுவலி

காங்கிரஸ் கட்சி_ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி_ திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது. இந்த கிரிக்கெட் ஊழல்களுக்கு என்றுதான் முற்றுப்புள்ளியோ?

----- நன்றி விடுதலை (16.04.2010)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.