Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் மாதத்தின் பின் ‐ புதிய அரசியல் சாசனம் ‐ நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய பிரதர் பதவி ‐ மாகாண சபைகளுக்கு அதிகாரம்? வடபகுதி மக்களுக்கு வழங்கும் தீர்வுதிட்டம் குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் நவம்பர் மாதம் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை மேற்கொண்ட பின்னர், புதிய அரசியல் சாசனத்துடன் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய பிரதர் பதவியை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கத்தின் உட்த்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைத் துரந்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாகவும் இதற்காக தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டுமுறை மாத்திரமே வகிக்க முடியும். அரசியல் சாசனத்தை திருத்தியதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

அதன்பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும். இதனையடுத்து பெயரளவிலான ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்படும் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. புதிய அரசியல் திருத்தத்தில் நாடாளுமன்ற முறையிலும் சில மாற்றங்களை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாண சபைகள், அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவகையில் தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சரத்துக்கள் நீக்கப்பட்டு, மாகாண சபை முறைமையை வலுப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு அந்த அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடபகுதி மக்களுக்கு வழங்கும் தீர்வுதிட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பன குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இந்தியா தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.