Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளைப் பேணுவதாயின் அவசரகால விதிகளை நீக்குங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளைப் பேணுவதாயின் அவசரகால விதிகளை நீக்குங்கள்!

[ உதயன் ] - [ Apr 27, 2010 04:00 GMT ]

அவசரகாலச் சட்ட விதிகளைத் தளர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கின்றது என்ற செய்தியை புதிய வெளிவிவ கார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் கால்கோள் இட்டுக் காரணமாக அமைந்திருக்கும் ஒரு விட யம் குறித்து அரசு கவனம் செலுத்தத் தயாராகி வருவது நல்லதோர் சமிக்ஞையே.

1971 இல் தென்னிலங்கைக் கிளர்ச்சியை அடுத்து, பொதுசனப் பாதுகாப்புச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் அவசர கால ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டன. அன்று தொட்டு இடையிடையே சிலகாலம், அமைதியும், சமாதான மும் நிலவிய சொற்ப வேளைகள் தவிர ஏனைய காலம் முழு வதும், இந்தத் தேசத்தில் அதிகாரம் செலுத்திய அரசுகள் எல்லாம் அவசரகாலச்சட்ட த்தின் கீழேயே இந்த நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றன.

சுமார் மூன்றரை தசாப்த காலம் அவசரகாலச் சட்டம் இலங்கைத் தீவைப் பற்றிப்பிடித்து இங்கு நிலைத்து நீடித் திருக்கின்றது. நெருக்கடி வேளையில் அவசர காலங்களைச் சமாளிப் பதற்காக தற்காலிகமாகக் கொண்டுவரப்படும் அவசர காலச் சட்டம், இலங்கையைப் பொறுத்தவரை நிலையான தாக நீடித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இலங்கையின் துரதிஷ்டமின்றி வேறில்லை.

அரசமைப்பு ரீதியாக தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக் கும் வழங்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்தி மறுக்கும் விசேட ஏற்பாடு களைக் கொண்டிருக்கும் அவசரகாலச்சட்ட விதிகள், அத்தோடு அரச அதிகாரிகளுக்கு குறிப்பாக முப்படை யினர் மற்றும் பொலிஸாருக்கு கட்டுமட்டில்லாத அதிக அதிகாரங்களையும் வழங்கி நிற்கின்றது.

ஆட்களைக் கேட்டுக் கேள்வியின்றிக் கைது செய்வதற் கும், தமக்கு விரும்பிய இடத்தில் தடுத்துவைத்து இரகசிய சிறைக்கூடங்களைப் பேணுவதற்கும், அத்தகைய தடுப்பு முகாம்களில் பிரஜைகள் சித்திரவதை செய்யப்படுதல், மோசமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படு தல் போன்ற கொடூரங்கள் இடம்பெறுவதற்கும், சட்டத்துக்கு முரணான வகையில் மனித மரணங்கள் ஏற்படுத்தப்படு வதற்கும், மரணித்தவர்களின் சடலங்களை அதிகாரிகளே தம் மிஷ்டப்படி எடுத்து, புதைத்து இல்லாமல் செய்து கழிப் பதற்கும் இந்த அவசரகாலச்சட்ட விதிகளில் உள்ள சட்ட ஓட் டைகளே இலகுவாக வழிவகுத்துக் கொடுக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த பரகசியம்.

அது மாத்திரமல்ல, அதிகாரிகளும் ஆளும் தரப்பினரும் தமக்கு தனிப்பட்ட ரீதியில் முரண்பட்டவர்களையும் அரசி யல் எதிரிகளையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி, ஒடுக்கும் விதத்தில் சட்ட அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு இந்த அவசரகாலச்சட்ட விதிகளே வழிவகுத்துக் கொடுக் கின்றன என்பதிலும் சந்தேகமில்லை.

அவசர நெருக்கடி நிலைமையின் பேரில், நீதிமன்றின் நீதித்துறையின் சட்டவாட்சியைக் கட்டுப்படுத்தி, மட் டுப்படுத்தி விட்டு, அந்த அதிகாரங்களை தற்றுணிவு அடிப் படையில் பிரயோகிப்பதற்கு அதிகார வர்க்கத்திடம் போதிய வரையறை, கட்டுப்பாடுகள், மட்டுப்படுத்தல் கள், ஆய்வுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தல் போன்றவையின்றி கையளிப்பதினால் இந்த மோசமான நிலைமை அரங்கேறுகின்றது. அவசரகாலச் சட்ட விதிகள் அளவுக்கு மிஞ்சிய அதிகா ரங்களை நீதித்துறையின் முறையான கட்டுப்பாடின்றி அதி காரிகளுக்கு வழங்குவதால் மனித உரிமை மீறல் துஷ் பிரயோகங்களுக்கு அது தாராளமாக வழிவகுத்து நிற்கின்றது.

அதேவேளை, அவசரகாலச் சட்ட விதிகளை இப்படித் துஷ்பிரயோகம் செய்து புரியப்படும் மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டங்களின் கீழ் குற்றச் செயல்களாக அர்த்தப்படுத்தப்பட்டு, தண்டிக்கப்படக் கூடியவை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

யுத்தம் முடிவுற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ள சூழலில், அந்தப் பின்னணியில் முதன்முறையாக நடத்தப் பட்ட பொதுத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரும் புதிய அரசு, மனித உரிமை மீறல்களுக்குத் தாராளமாக வழி செய்து நிற்கும் அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய அரசின் தலையாய முக்கிய பிரதான பணியாக இந்த விடயம் அமையவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த வாரம்தான் கோரியிருந்தது.

இலங்கை உண்மையில் முன்னோக்கி நகர விரும் பினால், இத்தகைய அவசரகாலச் சட்ட விதிகள், பயங்கர வாதச் சட்டங்கள் போன்றவற்றைக் கைவிட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு சட்டத்தின் பிடியி லிருந்து விலக்களிக்கும் முறையற்ற போக்கையும் துறந்து, மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டங்களை இனியும் காலம் தாமதியாது அது விரைந்து கொண்டு வரவேண்டும் என் றும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்திக் கேட்டிருந்தது.

அந்தக் கோரிக்கையைக் குறைந்த பட்சம் பரிசீலனைக்கு எடுக்கும் இணக்கத்துக்காவது இலங்கை ஆளும் வர்க்கம் சம்மதித்திருக்கின்றமை ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடே.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவது என்பது வெறும் பரிசீலனைக்குரிய விடயம் என்பதுடன் அமைந்துவிடாது முடிந்துவிடாது உண்மையில் முழு அளவில் நடை முறைப்படுத்துவதாகவும் அமையவேண்டும். அப்போதுதான் இலங்கையில் வகைதொகையின்றி அரங்கேறும் மனித உரிமை மீறல்களும், துஷ்பிரயோகங்களும் ஓரளவுக்காவது கட்டுப்பாட்டுக்கு வரும் சூழல் உருவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.