Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் எம் உறவுகளை காப்பற்றுங்கள்: தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன் இன்று பேசுகையில் :

இலங்கயிலிருந்து ஏதிலிகளாக சென்ற 75 தமிழ் குடும்பங்களும் அதில் 15 பச்சிளம் குழந்தைகளும் மலேசியா அரசாங்காத்தால் கைது செய்ய பட்டு அவர்களை அந்த நாட்டிற்குள்ளும் விடாமல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் ஒப்படைக்காமல் கடந்த முன்று நாட்களாக பசியும் பட்டினியுமாக வாடி கொண்டு இருக்கிறார்கள்.தயவு செய்து இந்த அவையின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறேன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய மத்திய அரசின் மூலமாக அவர்களி உயிர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை இந்த அவையில் முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும் அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்.

தமிழ் மக்கள் தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், உறவுகளைப் பறிகொடுத்து, உடைமைகளை இழந்து, உடுத்த உடையுடன் ,நீதிக்காகவும் தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்புப் போரினால் தங்களின் பாரம்பரிய குடியிருப்புப்பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள், அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றி குடும்பத்தோடு வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிக்கும் நிலை தொடர்கதை ஆகிவிட்டது சிங்கள இனவெறியர்களால் நிர்க்கதியாக்கப்பட்டு, வாழவழியில்லாமல் துரத்தியடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் அல்-ஜசீரா டிவி வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில்,வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் “அரசு பயங்கரவாதம்” கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும்,மேலும் சேனல் 4 வெளியிட்ட பயங்கர காட்சிகளின் பாதிப்பும்,உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத இந்த வாழ்க்கை தொடர்ந்து சிங்கள் இனவெறி அரசால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிகராக ஏதிலிகள் பிரச்சினை மோசமாக உள்ள ஏனைய நாடுகளின் வரிசையில் இலங்கையும் முன்னணியில் திகழ்கின்றது என ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பொறுப்பாளார் ஸாம் ஸர்பாரி:சட்டவிரோதமான முறையில் அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் அகதி முகாம்களில் மக்களுக்கு போதியளவு பாதுகாப்பு அற்ற நிலைமையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட மனிதவுரிமை சட்டத்தின் படி (Art.14 Abs 1) வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. என்று கூறுகிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு 75 தமிழ் சொந்தங்களும் அதில் 15 பச்சிளம் குழந்தைகளும் மலேசியா அரசாங்காத்தால் கைது செய்ய பட்டு அவர்களை அந்த நாட்டிற்குள்ளும் விடாமல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமும் ஒப்படைக்காமல் கடந்த முன்று நாட்களாக பசியும் பட்டினியுமாக வாடி கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் இருந்து புலம் பெயரும் அகதிகள் குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்தவில்லை என ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன், இலங்கை தமிழ் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழல் ஒன்றை தேடி அந்த நாட்டில் இருந்து தொடர்ந்துவெளியேறி வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பான இடம்பெயர்விற்கும், புகலிட கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தின் இந்த நடவடிக்கை காரணமாகத்தான் அப்பாவி தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்வதாகவும் அவர் கூறியுள்ளார் இவ்வாறு தொடர்ந்து இன்னல்களை சந்திக்கும் எம் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து அகதிகளாக வெளியேறுகிறார்கள்.

எனவே கைது செய்யட் பட்டிருக்கும் எம் தமிழ் உறவுகளை மலேசிய அரசாங்கம் அவர்களது உயிரை காப்பாற்றி மனிதாபிமானத்தோடு அவர்களை ஏற்று கொண்டு அந்த பச்சிளம் குழந்தைகளையம் காப்பாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்.மலேசியா வாழ் எம் தமிழ் உறவுகளும் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

தி.வேல்முருகன்

பண்ருட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்

மாநில அமைப்பு செயலாளர் (பாட்டாளி மக்கள் கட்சி)

http://www.facebook.com/pages/parui-vel-muruka/228584773834

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.