Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரகுமாரனை இல்லாதொழிப்பதே முதல்வேலை! "நோர்வேயில் வகுக்கப்படும் இரகசியத் திட்டம்"! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

நாடுகடந்த தமிழீழ அரசுக்காய் எமது குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் பயணிக்கும் நாம் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போரையும் குழப்பங்கள் ஏற்படுத்துவோரையும் மக்கள் மத்தியில் இனம்காட்டி உறுதிமிக்க செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்போம். அந்த வகையில் பல எதிர்பார்ப்புக்களோடு சவால்களை எதிர்கொண்டவாறு சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு முடிவெடுத்த எமது குழுமம் தேர்தல் நடக்கும் நாடுகளில் எமது செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தகவல்களை திரட்டி தேர்தல் கள மதிப்பீடுகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றோம். இத் தேர்தலில் யார் தான் போட்டியிடுகிறார்கள்? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் பிரதிநிதிகளாக வர எவர் எவர் பொருத்தமாக இருப்பார்கள்? என ஒரு மதிப்பீட்டைச் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது. நண்பர்களை இணைத்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டோம். பல்வேறு நண்பர்களுடனும் பேசினோம். எமது மதிப்பீடு ஆரம்பமாகி விட்டது. இவ் மதிப்பீடுகளினூடாக நீங்கள் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன்னோர் மறுபக்கத்தை அறிவதற்க்கு இது ஒரு களமாக அமையும் என்றே நம்புகின்றோம். முதலில் நாம் எமது கள மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து ஆரம்பிக்கின்றோம்

- இன்போதமிழ் குழுமம் தேர்தல் கள நிலைமை மதிப்பீட்டுக்குழு -

தேர்தல் கள மதிப்பீடு - 1 நோர்வே

உருத்திரகுமாரனை இல்லாதொழிப்பதே முதல்வேலை! நோர்வேயில் வகுக்கப்படும் இரகசியத் திட்டம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஏற்பாடுகள் அமர்க்களமாவே இருக்கின்றன. ஊரில் தேர்தல் காலத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வு வருகிறது. வேட்பாளர்கள் உற்சாகமாகவே களத்தில் நிற்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு பல்வேறுவiயான இடையூறுகளைக் கொடுத்து வந்த கட்டமைப்பினரும் தேர்தலில் குதித்துள்ளனர். எல்லோரும் ஒற்றுமையாகி விட்டார்கள் என்றும் மக்களின் ஒரு சாரார் மகிழ்வடைவதனையும் காண முடிகிறது.

எமக்குக் கிடைக்கும் தகவல்கள் அவ்வாறு மகிழ்வடையக்கூடிய நிலை இல்லை என்பதாவே தெரிவிக்கின்றன. சில நாடுகளில் தமது வேட்பாளர்களை நிறுத்தி விட்டும்கூட கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நடாத்தப்படுவதற்குத் தொல்லைகளையும் இடையூறுகளையும் இப்போதும் கொடுத்து வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல், அதேவேளை வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்து அவர்கள் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமது பிடிக்குள் கொண்டு வந்து பொம்மை போல் தலையாட்டிக் கொண்டு இயங்க வைக்க முயல்கிறார்களோ என்ற பலத்த கேள்வி எழுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியினைத் தடுத்து நிறுத்த பெரும்முயற்சி செய்தும், அது முடியாமல் போகவே இந்த புது யுக்தியில் இறங்கியுள்ளார்கள் போலும். உருத்திரகுமாரன் ஒரு அறிக்கையில் குறிப்பட்டது போல ‘உள்ளிருந்து கொல்லும் வியாதி’ போல இவர்கள் இயங்கப்போகிறார்களா என்ற பயமும் எழுகிறது.

இக் கட்டமைப்பின் திட்டங்கள் யாவும் நோர்வேயில் இருந்துதான் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதனால் நோர்வேயில் இருந்து கிடைக்கக்கூடிய தகவல்கள் ஏனைய நாடுகளுக்கும் பயன் உள்ளவையாக இருக்கும். நோர்வேயில் இத் தேர்தலில் யார் தான் போட்டியிடுகிறார்கள்? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் பிரதிநிதிகளாக வர எவர் எவர் பொருத்தமாக இருப்பார்கள்? ஒரு மதிப்பீட்டைச் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் தோன்றியது. நண்பர்களை இணைத்து ஒரு குழுவை அமைத்துக் கொண்டோம். பல்வேறு நண்பர்களுடனும் பேசினோம். எமது மதிப்பீடு ஆரம்பமாகி விட்டது.

நோர்வேயிலும் கட்மைப்பினர் தேர்தலில் குதித்துள்ளனர். ஏனைய இடங்களைப் போலன்றி நேரடியாவே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் தமது உத்தியோகபூர்வ வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளனர். கட்டமைப்புப் பொறுப்பாளரும் வேட்பார்களில் ஒருவர். இத் தேர்தலில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நேரடியாகவே தேர்தலில் நிற்பது, அவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்த முறை, தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் வெளிப்படுத்தும் காரணங்கள், தேசியச்சின்னமான கார்த்திகைப்பூவினை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பிரசுரத்தில் பயன்படுத்தியமை போன்றவை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மக்கள் மத்தியல் இடம்பெறுவதை கவனிக்க முடிகிறது.

நோர்வேயில் தேர்தல் ஆணையகம் வேட்பாளர்களை உத்தியோகபூர்வமாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முன்னரே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வேட்பாளர் பட்டியல் பிரசுரம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை அறிவித்தபோது ஏனைய வேட்பாளர்கள் யார் யார் என்பதனை அறிய முடிந்தது. மொத்தம் 8 பேர்கள் போட்டியிடுகின்றனர். சபாஷ் சரியான போட்டி.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் தனி வேட்பாளர்களுக்குரிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பினும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மூவர் கொண்ட ஒரு கூட்டணியாகவே தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இத் தேர்தலில் கூட்டாக வாக்களிக்க வேண்டியதில்லை. வாக்காளர்கள் விரும்புகிற தனித் தனி வேட்பாளர்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்.

இவ்வளவு காலமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியினை எதிர்த்து வந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நேரடியாக களத்தில் இறங்கியதேன்? நாம் பலருடன் பேச்சைக் கொடுத்தோம். தமது கட்டமைப்பைப் பாதுகாக்க என்றனர் சிலர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கட்டுப்படுத்த என்றனர் வேறு பலர். மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்த இந்த விடயம் மேலும் ஆராயப்படவேண்டியது என முடிவு செய்து கொண்டோம். இது குறித்து மேலும் தகவல்களைத் திரட்டினோம். இவர்களுடன் இருந்து முக்கியமாகச் செயற்படுபவர் ஒருவரின் வாயைக் கிளறினோம். உற்சாகமிகுதியில் சில தகவல்களை வெளியிட்டார். தமது கட்டமைப்பினர் வகுத்திருக்கும் திட்டத்தையும் வெளியிட்டார். கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

”கொள்கைப்பிரச்சினை என்பதெல்லாம் ஒரு புலூடா. எமது கட்டமைப்பைப் பொறுத்தவரை இது அதிகாரத்தை நிலை நிறுத்தும் ஒரு முயற்சி. ஜனநாயகம் என்ற பெயரில் மக்களை அவைகளை உருவாக்கி அவை மூலம் எங்கள் கட்டமைப்பின் பிடியை இறுக்குவதுதான் நாம் வைத்திருந்த திட்டம். இதற்கு இடையூறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டம் இருந்தது. இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் எத்தனையோ இடையூறுகளை ஏற்படுத்தி முறியடிக்கப் பார்த்தோம். அதனையும் தாண்டித் தேர்தல் வரை வந்து விட்டார்கள். இப்போது தேர்தல்களில் போட்டியிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் எமது கட்டமைப்பு நிலைகுலைந்து விடும். இதுதான் நாம் போட்டியிடும் இரகசியம்” என்று கூறி சிரித்தார் அந்தப் பணியாளர்.

”வெற்றி பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைக் கைப்பற்றினால் என்ன செய்யும் திட்டம் உங்களிடம் உள்ளது. உருத்திரகுமாருக்கு உறுதுணையாக இருப்பீர்களா?” என்று கேட்டோம்.

சிரித்தார் இந்தப் பணியாளர். ”உருத்தரகுமாரனை ஒழித்துக் கட்டுவதே முதல்வேலை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் செயலிழக்கச் செய்வதும் சமாந்திரமாக மக்கள் அவைகளை உருவாக்குவதும் நடக்கும்.”

”எப்படி இதனைச் செய்யப் போகிறீர்கள்? சாத்தியமாகுமா?” நாம் அவரது வாயை மேலும் கிளறினோம்.

சற்றுக் கோபம் வந்து விட்டது அவருக்கு. ” இவ்வளவையும் சிந்தித்த நம் தமிழ்வலை மூளைக்கு இது தெரியாதா?” கோபமாகவே கேட்டார்.

”நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உள்ளிருந்தே குழப்பி உருப்படியாக எதனையும் செய்யவிடாது பண்ணி மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்வது முதலில் நடக்கும். அதன் பின்னர் மக்கள் அவைகளை இணைத்து அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போல் செயற்படவைப்பதற்கான வேலைகள் தொடரும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் திட்டம் நடைமுறையில் இருப்பது எமது கட்டமைப்புக்கு எப்போதும் ஆபத்தானது”.

இப்போது எமக்கு கோபம் வந்து விட்டது. கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் ”சிறிலங்கா அரசு செய்யத்துடிக்கும் வேலைகளை நீங்களே செய்கிறீர்களா? விடுதலைக்கு உயிர் கொடுத்த மாவீர்கள், மக்களது ஆன்மா உங்களை சும்மா விடாது” நாம் ஆவேசமாகக்கூற முறைத்தபடி இடத்தை விட்டு நகர்ந்தார் அந்தப் பணியாளர்.

இக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மூன்று பேர்களையும் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களையும் திரட்டினோம்.

”ஒரு கட்டமைப்பு மட்டும்தான் இருக்க முடியும். அது நமது கட்டமைப்பாக மட்டும்தான் இருக்க முடியும். அதற்குத்தான் இந்தப் போட்டி” என வெளிப்படையாகவே பேசித் திரிகிறார் தமிழர் ஒருங்கிணப்புக்குழுவின் இணைப்பாளரும் வேட்பாளருமான முரளி சிவானந்தன்.

முரளி சிவானந்தனின் இவ் அணுகுமுறை சக வேட்பாளரான சிவகணேசன் தில்லையம்பலத்திற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

”இதனை இப்படி பச்சையாகவா சொல்வது. ஓற்றுமையினை ஏற்படுத்துவதற்காகத் தான் போட்டியிடுகிறோம் என்றல்லவா சொல்ல வேண்டும்.” என்று சொல்லி அலுத்துக் கொள்கிறார். மற்றைய வேட்பாளர் ஜெயசிறி பாலசுப்பிரமணியம் அதிகாரத்துக்காகப் பேட்டியிடும் அணிக்குள் இருக்கும் அதிகாரமில்லாத வேட்பாளர். வகுக்கப்பட்டட திட்டத்துக்கேற்ப ஆடுவதே இவர் வேலை.

கிடைத்த தகவல்களை தொகுத்துப் பார்த்தபோது ஒரு விடயம் தெளிவாகப் புரிந்தது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் எவரும் அப்பாவிகள் அல்ல. தேர்தலின் பின்செய்ய வேண்டிய திட்டங்கள் இவர்களிடம் இருக்கின்றன.

”நாங்கள் மூன்று பேரும் வென்றாலும் எம்மிடம் திட்டங்கள் உள்ளன. மூன்று பேரும் தோற்றாலும் திட்டங்கள் உள்ளன. பிரதிநிதிகள் கலந்து தெரிவு செய்யப்பட்டால் திட்டம் தற்போது இல்லை” என்றும் வானொலியில் பிரகடனப்படுத்துகிறார் முரளி சிவானந்தன்.

மூன்று பேர்களும் தோற்கும் வாய்ப்பு இருக்கிறது என இவர்கள் கணிப்பிட்டிருந்தால் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்க மாட்டார்கள். மூன்று பேரும் வெற்றியடைந்து, இவர்களைப் போல் அவர்களின் கட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்களுடன் இணைந்து, முன்னரே வகுக்கப்பட்டுள்ள தமது திட்டத்தின் அடிப்படையில் உருத்திரகுமாரனை நிலை குலையச் செய்வது இவர்களின் நோக்கம். இவர்களின் வெற்றிக்காகத் தீவிரமாகச் செயற்படுவோரில் பலரும் மக்களில் ஒரு சாரரும் இவர்கள் தேர்தலில் நிற்கும் சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது இவர்களுக்குச் சாதகமாக உள்ளது.

தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் இருந்தனைவிட இவர்களுக்கு இவ்வாரம் கூடுதல் பயம் பிடித்து விட்டது போலத் தெரிகிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திட்டத்தினர் தமது திட்டத்துக்கு ஆங்கிலத்தில் குறியீடாகப் பயன்படுத்தும் வபவந எனும் சொற்களைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளத்தை உருவாக்கித் தங்கள் மூன்று வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் வேட்பாளர்களாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனை ளஅள மூலம் பரவ விடுகிறார்கள். விபரம் அறியாத மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளம்தான் அது என நினைக்க வைத்து, இவர்கள் மூன்று பேரும் தான் போட்டியிடுகிறார்கள் என்ற மனப்பதிவை ஏற்படுத்தி தமக்கு வாக்களிக்கும் உளவியல் நிலையைத் தோற்றுவிப்பதுதான் இதன் நோக்கமா? எவ்வளவு பெரிய அயோக்கித்தனம் இது! மக்களை அறிவிலிகளாகக் கருதும் மனப்பாங்கின் வெளிப்பாடல்லவா!

எமக்குக் கிடைத்த தகவல்கள் எமது மதிப்பீட்டு முறையினை மாற்றியமைத்தன. ஆரம்பத்தில் அனைத்து வேட்பாளர்களின் தகைமைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திட்டத்தின் தேவைகளோடு ஒப்பீடு செய்து மதிப்பீடு செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம்.

இவர்கள்; இத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமது கட்டமைப்பின் அதிகாரத்தின் நலன் என்ற அடிப்படையில் இருக்கின்றதேயன்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நலனையோ அல்லது மக்கள் நலனையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதனை உணர்ந்து கொண்டமையாலும், தற்போதய சூழலில் புலத்தில் தலைமை வழங்கக் கூடியவராகக் பரவலாக மக்களால் கருதப்படும் உருத்திரகுமாரனை அரசியலில் இருந்து இல்லாதொழிக்கும் இழிநோக்கினை கொண்டவர்களாக இவர்கள் ...........?

- தேர்தல் கள நிலைமை மதிப்பீட்டுக்குழு இன்போதமிழ் குழுமம் -

http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dMgmU0ecKA0A4a4dd4ycd3cYJ3dc2Coc3b434OS2e220Mq20

எறிக் சொல்கைம் தான் காரணம் என்று கட்டுரையாளர் எழுதாதையிட்டு மகிழ்ச்சி அடைவோம்.

துரோகி ஜில் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.