Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணங்களாய் இருந்தது போதும் -கண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிணங்களாய் இருந்தது போதும் -கண்மணி

050502010_kanmani.jpg

குருதி சகதியில் கும்மாளமிட, குத்தாட்டம் போட இங்கிருந்து ஒரு குழு இலங்கை செல்வதாக செய்திகள் வருகிறது. அதற்கான விளம்பரங்களைப் பார்க்கும்போது மனம் கூடுதலாக வலிக்கிறது. காயப்பட்ட வடுக்கள், காய்வதற்கு முன்னால் இந்த கயவாளிகளுக்கு இப்படி ஒரு கயமை தோன்றியது எப்படி? என நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் எங்கிருந்து குண்டுவிழும் என்று தெரியாமல், ஏன் நாம் சாகிறோம் என்பது புரியாமல், செத்து மடிந்த நாளை, தமது அங்கங்களை இழந்த அந்த நாளை, கண்ணுக்கு முன்னால் தமது உறவுகள் சிதறிக் கிடந்த அந்த நாளை, எம் இன உறவுகள் மனச்சுமையோடு உற்றுநோக்கும் அந்த நாளை சிங்கள இனவெறியர்கள் மனமகிழ்வோடு கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். தமிழர் தாம் விழுந்ததை அவர்கள் விழாவாக்க முயற்சிக்கிறார்கள். நம்மையும் அறியாமல் நமது குருதியின் ஓட்டம் கூடுகிறது. குருதியிலே கலந்த அணுக்களுக்கு பதிலாய் அவை நெருப்புத் தழலாய் கொதிக்கிறது. நாம் மறக்க முடியாமல் மனதை இருக்கமாக்கிக் கொண்டு அய்யோ என்று கதறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த அயோக்கியர்கள் எம்மை வீழ்த்திய நாளை விழா எடுத்து மகிழப்போகிறார்களாம்.

நாமெல்லாம் ஒரே நாட்டில் வாழ்கிறோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டிலிருந்து பிளவுப்படக்கூடாது என்றெல்லாம் வாய்சவடால் அடித்த அந்த பாசிச இனவெறி கும்பல் இன்று ஒரு இனத்தை ஒரே இடத்தில் கூட்டி வைத்து கொன்றொழித்த நாளை கொண்டாடி மகிழப் போகிறது. அந்த கொண்டாட்டத்தைக் காண கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்போகிறது. சிங்கள இன அடக்குமுறையை நாம் அம்பலப்படுத்தியப்போது அவர்களின் இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று கூறிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் அதன் கூட்டாளிகளும் சிறப்பு அனுமதி பெற்று அந்த நிகழ்ச்சிக்கு செல்வார்களோ! எம் இன அழிப்பை நியாயப்படுத்திய அயோக்கிய ஆங்கில நாளேடு இந்துவின் கூட்டாளிகள் அந்த கூடாரத்திலே நின்று சிரிப்பார்களோ! அய்யகோ! எம் இனத்தின் வீழ்ச்சி கூட இந்த உலகத்திற்கு கொண்டாட்டமாகி விட்டது.

நாகரீகமான இக்காலக்கட்டத்தில் ஒரு மரணத்தை கொண்டாடும் அளவிற்கு அவர்களின் மனம் வக்கிரப்பட்டுக் கிடப்பதை என்னச் சொல் கொண்டு வர்ணிப்பது? என்ன வார்த்தைகளால் அதை விவரிப்பது? என புரியவில்லை. இந்த கேடு நிறைந்த மனநிலையை நாம் எப்படி பார்த்தாலும் நமது மனவலி கூடுகிறது. இதயத்தை கசக்கிப் பிழிந்த ஒரு உணர்வு நம்மை வாட்டி வதைக்கிறது. இதயமே வெடித்து சிதறும் ஒரு நிலை நம்மை சிதறடிக்கிறது. ஆனாலும் ராஜபக்சேவுடன் கரம் குலுக்க இங்கிருக்கும் தன்னல விரும்பிகள் தம்முடைய சிரித்த முகத்தை அந்த சிங்களனுக்குக் காட்டி மகிழ்ந்து வந்தார்களே! அந்த கொடியவனின் கரங்களைப் பற்றி புகைப்படத்திற்கு நின்று நிழலானார்களே! ரத்தக் கறை படிந்த அந்த பாசிச வெறி பிடித்த பேரினவாதியின் பக்கத்தில் நின்று சிரித்ததை நாம் படமாகப் பார்த்தோமே. அவன் கொடுத்த பரிசைப் பெற்று, அவனுக்கு பரிசு கொடுத்து அகமகிழ்ந்தார்களே! அப்போதே நாம் இந்த பெருங்கொடுமைக்கு அங்கீகாரத்தை அவர்கள் மூலமாய் வழங்கிவிட்டோம்.

அப்போதே நாம் நமது தன்மானத்தை அந்த சிங்கள நாயின் கால்களில் தாரையாக வார்த்துவிட்டோம். எதிர்த்து நிற்க துணிச்சல் அற்று, நம்மையே நாம் இழந்து நின்றோம். அடக்குமுறைக்கு துணைபோனோம். அடங்கமறு என்பதை மறந்துபோனோம். முடியவில்லை. நினைத்தாலும் மறக்க முடியவில்லை. ஒருவரா? இருவரா? ஓராயிரமா? ஈராயிரமா? கொத்துக்கொத்தாய் அல்லவா நமது குலக்கொடிகளை பலியாக்கினோம். காற்றை பிணவாடை நாசப்படுத்தியது நமக்கு நினைவில் இருக்கிறதா? ஓராண்டு நிறைவுப்பெறப் போகிறது. இந்த ஓராண்டு நிறைவு நம்மை நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் காலத்தில், நிரந்தரமாய் நமது மகிழ்வை சிறை வைக்கும் வகையில் உடலால் அல்ல, மனதால் நம்மை சித்ரவதை செய்ய இந்த விழா நிகழப்போகிறது. என்னச் செய்யப்போவது? அதைக்கண்டு மீண்டுமாய் நம்முடைய பணியிலே மூழ்கப் போகிறோமா? நமக்குத்தான் தொலைக்காட்சியிலே தொடர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றதே?

நாம் தொலைக்காட்சி தொடர்களில் தொலைந்துபோய் எத்தனை காலங்கள் ஆகிறது. நம் மனதை, அறிவை, பண்பாட்டை, அடையாளத்தை அழித்து, ஆக்கிரமிப்பு செய்ய நம்முடைய வரவேற்பு அறையிலே ஒரு பண்பாட்டு நாசக்காரனை அல்லவா நிறுத்தி வைத்திருக்கின்றோம். அவன் மூலமாக நமக்குள் எரிய வேண்டிய தன்மானம் நீர்த்துப் போகிறதே? நாம் நினைத்துப் பார்த்தோமா? பாசத் தலைவனுக்கு நடைபெறும் பாராட்டுவிழாவில் குத்தாட்டம் போடும் நடிகைகளின் அங்கங்களை ஆவென வாய் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் அசிங்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா? எத்தனை அநியாயங்கள். எவ்வளவு கேவலமான கலாச்சார சீரழிவுகள். அத்தனையும் தாங்கிக் கொண்டுதான் நாம் இன்னமும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகளை ஏன் என்று கேட்கும் துணிச்சல் அற்றவர்களாய், பிள்ளைப் பூச்சிகளாய் முடங்கிப் போயிருக்கிறோம். நம்மைப் பார்த்துதான் புரட்சிக் கவிஞன் பாடினான்,

பள்ளம் பறிப்பாய் பாதாளத்தின் அடிபுறம்

அழுந்துக அழுந்துக.

பள்ளங்களில் விழும் பிள்ளை பூச்சியே

தலையை தாழ்த்து, முகத்தை தாழ்த்து,

தோலையும் உதட்டையும் தொங்கவை

ஈனகுணத்தை, உடலை, உயிரை, சுருக்கு.

நக்கிக்குடி, அதை நல்லதென்று சொல்

தாழ்ந்து, தாழ்ந்து நாயினும் தாழ்ந்து

குனிந்து தரையைக் கவ்வி

ஆமையைப் போல அடங்கி ஒடுங்கு.

ஓட்டுப் பூச்சியே, ஊமைத் தேரையே

அழு, சிரி, அஞ்சு, குனி, பிதற்று

கன்னங்கருத்த இருட்டின் கரையில்

தொங்கும் நரம்பின் துளியே

இதைக் கேள்.

மனிதரில் நீயும் ஒரு மனிதன், மன்னன்.

இழித்தீர எழுந்து நன்றாய் எண்ணுவாய்

தோளை உயர்த்து, சுடர்முகம் தூக்கு

மீசையை முறுக்கி மேலே ஏற்று.

எமது உறவே! மீண்டும் படி. எமக்கு இன்னல் வந்தால் எழுந்து நிற்கச் சொன்ன அந்த புரட்சிக் கவிஞன் இல்லாத நாள் பார்த்து நமது இனம் சூறையாடப்பட்டது. நாமெல்லாம் கேட்கமாட்டோம் என்பதால், அந்த இன ஆதிக்க வெறியர்கள் நம் இன அழிப்பின் நாளை கொண்டாட இங்கிருந்து நமது சின்னத்திரை நடிகர்களை சிங்காரித்து குத்தாட்டம் போட அழைத்திருக்கிறார்கள். இவர்களும் இங்கிருந்து போகப்போகிறார்கள். இவர்களுக்குள் சிறிதாவது தமிழ் உணர்வு, தமிழர் என்ற தாகம் இருக்குமேயானால், எம் இன உறவுகளின் இழவு வீட்டில் எம்மை சிரித்தாட அழைக்கிறாயே? உன்னை செருப்பால் அடிப்பேன் என்று சீறியிருப்பார்கள். ஆனால் நாம் பணம் கொடுத்து ரசிக்கிறோமே! இவர்களில் எத்தனை பேர் தமிழர் என்று எண்ணிப் பார்த்தால், இதுதான் காரணம்.

எம் இனம் எழுந்தாலும், மடிந்தாலும் இவர்கள் திரையில் நடிப்பதைப் போன்றே நிஜத்திலும் நடிப்பார்கள். இதைநாம் பார்த்து அறிந்திருக்கிறோம். பிணம் விழுந்த வீட்டில் பணம் பறிக்கச் செல்லும் அவர்களை என்னச் சொல்லி அழைப்பது. எமக்கான ஒரு அங்கீகாரத்தை அழித்தொழித்தவனை உடல் குலுக்கி மகிழ்வூட்ட இவர்கள் போகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில், நமது நெஞ்சம் பதறிப் போகிறது. கடந்த ஆண்டு நாம் மறுக்கப்பட்டோம். ஓடினோம், ஓடினோம், சாவின் விளிம்பிற்கே ஓடினோம். வானிலிருந்து வான்படை குண்டு வீசுகிறான். மண்ணிலிருந்து தரைபடை செல்லடிக்கிறான். அய்யோ! செத்து மடிந்த அந்த நாள் நினைவுகூறும்போதே நெஞ்சம் வலிக்கிறதே! அதைக் கொண்டாட இவர்கள் இங்கிருந்து வருகிறார்களாம். நாம் உயிர் இருந்தும் பிணங்களாய் உருமாறிக் கிடந்தோம். போதும். இத்தனை காலம் நமது தமிழ் சொந்தங்கள் பிணங்களாய் படுத்துக்கிடந்தது போதும்.

உயிர்பெற்று எழுங்கள், எம் இனம் காக்க. உயிர்பெற்று எழுங்கள், எம் மொழி காக்க. உயிர் பெற்று எழுங்கள், நம் குலம் காக்க. நாம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. மறந்துவிடாதீர்கள். நடக்கப்போகும் அநீதியை தடுத்து நிறுத்த, இனி நாம் சின்னத்திரை நடிகர்களின் தொடர்களை பார்க்க மாட்டோம் என்று முடிவெடுங்கள். அவர்களின் வாழ்வு, அவர்களின் வளம், அவர்களின் சொகுசு நமது நேரம் செலவழிப்பில்தான் கொட்டிக்கிடக்கிறது. நாம் நமது நேரத்தை இழந்து, நமது தன்மானத்தை இழந்து, அந்த தொடர்களை பார்ப்பதால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இனிமேலாவது இதை தவிர்க்க உறுதி எடுங்கள். இது நமது மானம் காக்கும் உறுதியாக இருக்கட்டும்.

http://meenakam.com/?p=15453

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.