Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா துரைரட்ணம் தவறான முன்னுதாரணங்களைக்காட்டி வரலாற்றைத் திருப்பிவிட முணையக்கூடாது?

Featured Replies

ஒரு ஊடகவியளான் சமூகத்துக்கான வழிகாட்டி எனவே:

இரா துரைரட்ணம் தவறான முன்னுதாரணங்களைக்காட்டி வரலாற்றைத் திருப்பிவிட முணையக்கூடாது?

[ வியாழக்கிழமை, 06 மே 2010, 09:57.32 மு.ப | இன்போ தமிழ் ]

blog-fight.jpg

பொதுத்தேர்தலில் யாழ்.மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனரா?

அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் நாடு முழுவதிலும் வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தது. அதிலும் யாழ்ப்பாணத்தில் மிகமிகக் குறைந்தளவான வாக்களிப்பே இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆகக் குறைந்தளவு வாக்களிப்பு இடம்பெற்றது ஏன் என்ற கேள்வியை முன்னிறுத்தி பலரும் பலவித வியாக்கியானங்களைக் கொடுக்க முனைகின்றனர். யாழ்ப்பாண மக்கள் பொதுத்தேர்தல் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவான ஒரு விடயம்.

அண்மையில் இரா.துரைரத்தினம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களே- யாழ்ப்பாண மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்டுரையில் அவர் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்து தனது கருத்தை நியாயப்படுத்த முனைந்துள்ளார்.

தவறான புள்ளிவிபரங்களின் மூலம் யாழ்ப்பாண மக்கள் வாக்களிப்பைப் புறக்கணிக்கவில்லை என்று நிறுவ அவர் முனைகிறார். கட்டுரையில் தரப்பட்டுள்ள தவறான புள்ளி விபரங்களின் மூலம் - யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தை அவரே புரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. யாழ்ப்பாணத்தின் யதார்த்தம் பற்றி நீண்டகாலமாக மட்டக்களப்பிலும், கடந்த 6 ஆண்டுகளாக சுவிசிலும் வசிக்கும் இரா.துரைரத்தினம் தெளிவுபடுத்த முற்பட்டிருப்பது வேடிக்கையானது.

இது அவர் மீதான தனிப்பட்ட காழ்ப்பின் அடிப்படையில் எழுதப்படும் கட்டுரை அல்ல.

* இந்தத் தேர்தல் முடிவு மிகவும் முக்கியமானது. இதன் விளைவுகள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. அதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிகாட்டும். அவரது கட்டுரையை எதிர்காலத்தில் யாரும் தவறான முன்னுதாரணமாகக் காட்டி வரலாற்றை திருப்பி விடக் கூடாது. வரலாற்றை சரியாக எடை போடுவதற்கு துணையாக நிற்க வேண்டும் என்பதே எம்நோக்கம். இதில் எந்த அரசியல் நோக்கோ- சார்போ கிடையாது. தவறான புள்ளிவிபரங்களின் மூலம் கற்பனையான நிறுவல் ஒன்றைச் செய்ய முடியும் என்பதற்கு அவரது கட்டுரை ஒரு உதாரணம்.

இனி விடயத்துக்கு வருவோம்.

அண்மையில் இரா.துரைரத்தினம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களே- யாழ்ப்பாண மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்டுரையில் அவர் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்து தனது கருத்தை நியாயப்படுத்த முனைந்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளரில் 23.33 வீதமானோரே வாக்களித்தாக தேர்தல் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு சில ஊடகங்கள் 18 வீதமானோரே யாழ்ப்பாணத்தில் வாக்களித்ததாக செய்தி வெளியிட்டிருந்தன. இது உத்தியோகபூர்வ கணக்கு அல்ல. வெறும் அண்ணளவான மதிப்பே. தபால் வாக்குகள், இடம்பெயர்ந்தோர் வாக்குகள் ஆகியவற்றைச் சேர்க்காதது இந்தத் தவறுக்கு முக்கிய காரணம்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 பேராகும். ஆனால் பொதுத்தேர்தலில் வாக்களித்தவர்கள் 168,277 பேர் மட்டுமே. அதாவது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்காது ஒதுங்கியிருப்பதை தேர்தல் புறக்கணிப்பு என்றே பொதுவாகச் சொல்லப்படும். அடுத்து, வாக்களிப்பில் பங்கேற்றவர்களில் 19,744 பேரினது வாக்குகள்- அதாவது 11.75 வீதமானோரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுவும் வழமைக்கு மாறான ஒன்று.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பது ஒன்றில் சரியாகப் புள்ளியிடத் தெரியாதவர்களால் போடப்பட்டதாக இருக்கலாம்- இதை செல்லுபடியற்ற வாக்குகள் என்று கூறலாம். அல்லது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களால் போடப்பட்டதாக இருக்கலாம் - இதை வேண்டுமென்றே அதாவது தெரிந்து கொண்டே நிராகரிக்கச் செய்யப்பட்ட வாக்குகள் என்று கூறலாம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிக்கத் தெரியாதவர்களால் அதிகமான வாக்குகள் செல்லுபடியற்றுப் போனதாக யாரும் வியாக்கியானம் கூறமுடியாது. யாழ்ப்பாணத்தில் அரசாங்க சேவையில் உள்ளவர்களால் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 314 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அரசாங்க சேவையில் உள்ளவர்கள் கல்வியறிவற்றவர்கள் என்றோ- வாக்களிப்பது பற்றி அறியாதவர்கள் என்றோ கருத முடியாது.

2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 185,132 பேர் வாக்களித்திருந்த நிலையில் 6763 வாக்குகள் தான் நிராகரிக்கப்பட்டன. 2004 பொதுத்தேர்தலில் 305,259 பேர் வாக்களித்த போது கூட நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 21,233 தான்.

2004இல் இடம்பெற்ற வாக்களிப்பை விட 2010 பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஏறத்தாழ பாதி என்றே சொல்லலாம். ஆனால் இரு தேர்தல்களிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ஏறத்தாழ சமமானவையாக இருக்கின்றன.

நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை அறியாமையால் நிராகரிக்கப்பட்டவையல்ல. திட்டமிட்டே செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகிறது. கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு இந்தமுறை அதிகளவு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட்டதால்- வாக்காளர்களுக்கு வாக்களிப்பது எப்படி என்பது பற்றி மிகத் தாராளமாகவே அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.பல பக்கங்களில் இருந்தும் மாதிரி வாக்குச்சீட்டுடன் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அறியாமையால் அதிகளவு வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறுவது அபத்தம். இதில் நகைச்சுவை என்னவென்றால் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் 75 வீதமானவை தமது கட்சிக்கே போடப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது தான். அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 178,369 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 25.66 வீதமானோரே வாக்களித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 2.33வீத வாக்காளர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் வெறும் 6,763 மட்டுமே. அதாவது 3.65வீதம். ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளை விடவும் 12,981 அதிகமான வாக்குகள் பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதை அறியாமையின் வெளிப்பாடாக எப்படிக் கருதமுடியும்? பொதுத்தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்துள்ள போதும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகளவு வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டுகளை செல்லுபடியற்றதாக்கியிருப்பதில் இருந்து ஒரு விடயம் வெளிப்படையாகிறது.

தேர்தல் முறையின் மீதான நம்பிக்கையீனமும், வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையீனமும் யாழ்ப்பாண வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது என்பதே அது. இந்தவகையில் பார்க்கும்போது- யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பது தேர்தலுக்கு நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் வாக்குகள் என்றே கருதலாம்.

பொதுத்தேர்தலில் நாடு முழுவதிலும் 6.92வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் அது 11.75 வீதமாக இருந்ததென்றால் அதற்குக் காரணம் வெறுப்பின் அடையாளம் என்பதை விட வேறெதைக் கூறமுடியும்? இந்தவகையில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும், அளிக்கப்படாத வாக்குகளுடன் சேர்த்தே கணக்கிட வேண்டும்.

குறைந்தது 5 வீதமான வாக்குகளை அறியாமையால் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்று ஒதுக்கி வைத்தாலும்- 6.75வீதமான நிராகரிக்கப்பட்ட வாக்குகளை புறக்கணிக்கப்பட்ட வாக்குகள் என்றே கணக்கிடலாம். அறியாமையால் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்று 9,774 வாக்குகளை ஒதுக்கி விட்டால் கூட, 10,000 வாக்குகளை வாக்களிக்காதவர்களின் தொகையுடன் இணைக்கலாம்.

இந்தவகையில் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் நோக்கில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை என்று 158,277 பேரையே கருதலாம். இந்தக் கணக்கின் மூலம் பார்க்கும்போது- யாழ். மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 22 வீதத்தை விடவும் குறைவாகவே அமைந்துள்ளது உறுதியாகியுள்ளது. அடுத்து- பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் இப்போது யாழ்ப்பாணத்தில் வசிக்கவில்லை என்பது உண்மை.

அவர்களில் கணிசமானோர் வெளிநாடு சென்று விட்டனர். பலர் இடம்பெயர்ந்து உள்ளனர். இதன் காரணமாக வாக்களிப்பு வீதம் குறைந்திருப்பதற்கு நியாயம் உள்ளது. ஆனால் 2008ம் ஆண்டில் புள்ளிவிபரத் திணைக்களத்தால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி யாழ்.மாவட்டத்தில் 18வயதுக்கு மேற்பட்ட 370,620 பேரே வசிப்பதாகவும்- எனவே பதிவுசெய்யப்பட்ட வாக்காளரில் பாதியளவானோரே இப்போது வாக்களிக்கும் நிலையில் இருப்பதாகவும் காட்டப்பட்டுள்ள கணக்குத் தப்பானது.

புள்ளிவிபரத் திணைக்களத்தினால் யாழ்.மாவட்ட சனத்தொகை தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது 2007ம் ஆண்டில் தான். 2008ம் ஆண்டுக் கணக்கெடுப்பு என்பது முதல் தவறு. இந்தக் கணக்கெடுப்பு விபரத்தை இணைப்பில் உள்ள தொடுப்பின்மூலம் பார்வையிடலாம். இந்தக் கணக்கெடுப்பு நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.

இந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதை அடைந்து வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களும்- இந்த தேர்தலில் வாக்களிக்கத் தயாராக இருந்தனர். 2007, 2008, 2009 என மூன்று தடவைகள் வாக்காளர் இடாப்புத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அடுத்து மேற்படி 18 வயதுக்கு மேற்பட்டோரின் கணக்கெடுப்பு என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

2007இல் யாழ்ப்பாணத்தில் வசித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் கணிப்பே அது. ஆனால் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட- வன்னியில் இடம்பெயர்ந்து வாழ்ந்த 65,000 பேர் படையினரால் சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த சனத்தொகையில் 66 வீதமானோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர் என்பது பொதுவான கணிப்பு.

எனவே வன்னியில் இருந்து அண்மையில மீளக்குடியமர்த்திய 65,000 பேரில் கிட்டத்தட்ட 43,000 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இவர்களில் குறைந்தது 35,000 பேராவது வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. அடுத்து யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என்பது கிளிநொச்சி முழுவதையும் உள்ளடக்கியது.

கிளிநொச்சியின் வாக்காளர்கள் எண்ணிக்கை 90,811பேர். இந்தவகையில் 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 370,620 பேருடன் கிளிநொச்சி தொகுதியின் வாக்காளர்கள் தொகையையும், கடந்த மூன்றாண்டுகளுக்குள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையையும், வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய வாக்காளர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் தான்- யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் தற்போது வசிக்கும் வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கையை விட 2010இன் வாக்காளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000 பேரால் அதிகரித்துள்ளது. இதில் பாதியளவான 10,000பேர் கடந்த மூன்று வருடங்களில் 18 வயதைப் பூர்த்தி செய்து புதிய வாக்காளர்களாக சேர்ந்துக் கொண்டதாக கருதலாம்.

கிளிநொச்சியில் 2007இற்குப் பிறகு வாக்காளர் இடாப்பு திருத்தம் நடைபெறவில்லை. அதேவேளை கிளிநொச்சியில் தற்போது வசிக்காத வாக்காளர்களின் எண்ணிக்கை 30,000 என்று கணக்குப் போட்டாலும்- அண்ணளவாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தற்போது குறைந்தது 475,000 வாக்காளர்கள் வசிப்பது உறுதி. இது குறைந்தபட்சக் கணக்காகவே இருக்கும். இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் கூட- இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 33வீதத்தினராகவே இருக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 50 வீதத்தினரே என்று சொல்லப்படுவதும் தவறு. அதுபோலவே இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 வீதமானோர் வாக்களித்தனர் என்று கணக்குப் போடுவதும் தவறு.

யாழ்ப்பாணத்தில் தற்போது வசிக்கும் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினரே ஏதாவதொரு கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் ஏனைய பெரும்பாலானோர்- அதாவது மூன்றில் இரண்டு பங்கினர் தேர்தலில் அக்கறை காண்பிக்கவில்லை. அதை வெறுப்புடன் பார்த்திருக்கிறார்கள். எந்தவொரு அமைப்பாவது கோரித் தான் வாக்காளர்கள் வாக்களிப்பை தவிர்க்க வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்றில்லை. அது வாக்காளர்கள் எடுக்கின்ற முடிவு.

இது தன்னிச்சையாக வாக்காளர்கள் எடுத்துள்ள முடிவு. வெளிப்படுத்தியுள்ள கருத்து. மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் தோல்வியடைந்து விட்டதாக யாராவது கூறித் தப்பி விடமுடியாது. அவர்களுக்கு வாக்களிக்க யாராவது விரும்பியிருந்தால் நிச்சயம் வாக்களிப்பில் பங்கேற்றிருப்பார்கள்.

பெரும்பாலான யாழ்ப்பாண மக்கள் இந்தப் பொதுத்தேர்தலை வெறுப்போடு பார்த்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இதனை தவறான புள்ளிவிபரங்களின் மூலம் நாம் நியாயப்படுத்திக் கொள்ள முயன்றால் அது நியாயமாக அரசியல் பகுப்பாய்வாக இருக்க முடியாது. அது ஆரோக்கியமான அரசியல் போக்கிற்கும் வழிவிடப் போவதில்லை.

கட்டுரையாளர் கபிலன்

இன்போதமிழ் குழுமம்

இதில் நகைச்சுவை என்னவென்றால் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் 75 வீதமானவை தமது கட்சிக்கே போடப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது தான்.

ஒன்றும் புரியாத மடையர்கள் தான் தனக்கு வாக்களித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் டக்ளுஸ் சொல்லியிருப்பார்.

இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்பவர்களும் சிங்கள பயங்கரவாதத்தால் வெளியேறியவர்களே. அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அவசரகால சட்டம், உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு சிங்கள ராணுவம், சிங்கள போலீஸ், சிங்கள பயங்கரவாதிகள் வடக்கு மண்ணில் இருந்து வெளியேறும் வரை அவர்கள் திரும்பி வருவார்கள் என்று கருத முடியாது. அதுவரை முழுமையான குடிசன மதிப்பும் வடக்கில் செய்ய முடியாது.

எனவே அதுவரை அவர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்க ஒரு ஜனநாயக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சிங்கள அரசு அதைச் செய்யாது.

எனவே வழமைபோல் இரா துரைரத்தினமும் தனது அறியாமையை எல்லாரும் ஏற்பார்கள் என்ற போக்கில் கருத்தெழுதி வருகிறார்.

துரைரத்தினத்தார் யாழ்ப்பாணத்தில் வாக்களர்கள் உண்மையில் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு அங்கு இல்லை எண்டு சொல்வதை இன்னும் ஒரு வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம்... குறைந்த அளவு மக்கள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் பிரதிநிதித்துவம் குடுத்து இருக்கும் 10 ஆசனங்கள் தமிழர்களுக்கு மிக அதிகம் என்பது...

மக்களின் எண்ணிக்கை குறையும் போது பிரதிநிதித்துவத்தையும் குறைக்க தானே வேணும்... இதை சிங்களவனுக்கு எடுத்து குடுக்கும் வேலை தான் அது... !

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி 30 வருசத்துக்கு முந்தின மக்கள் சனத்தெகை கணிப்பீட்டு பட்டியல்ப்படிதான் இலங்கையில 2010 லெக்சன் நடந்ததாம், 30 வருசத்துக்கு பிறகு திரும்ப சனத்தெகை கணிப்பீடு நடத்த போறதா செய்தி வந்திருக்கு. 17 லச்சம் வெளியில வந்ததா இங்க எழுதுபட்டுது, 2 லச்சத்து 15 ஆயிரம் போராட்டத்தோட போட்டுது கள்ளமா இருந்து அவுஸ்திரேலியா போறவை நிறையபேர் இந்தியா மலேசியாவில பிடிபடுகினம். இங்க கத்திறதுகளையும் உதுகளயும் கூட்டி கழிச்சு பாத்தா உந்த அண்ணை சொல்லுறது உண்மையா இருக்குமோ எண்டு நினைக்க தோணுது. மாகாணசபை லெக்சன் முடியதான் சனத்தெகை கணிப்பு எடுபடப்போகுது போல கதையள் வருகிது. எண்டபடியா அது முடியவும் குதிரையில சவாரி செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.