Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசத்தில் 18 அமைப்புக்களை வைத்துக் கொண்டு ‐ 18 அமைப்புக்களும் 18 அரசியல் வழிமுறையைக் பின்பற்றிக் கொண்டு TNAஐ விமர்சிக்கின்றன – GTNனுடன் மனம் திறக்கிறார் அரியநேந்திரன்

Featured Replies

விடுதலைப் புலிகள் இருந்த போது புலம் பெயர்ந்த நாடுகளிலே தமக்கான அமைப்புக்களை ஏற்படுத்தியும் அங்கிருந்த பொது அமைப்புக்களைப் பயன்படுத்தியும் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள மக்களுடன் உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வந்தார்கள். ஆனால், மே 18இன் பின்னர் தற்போது நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது என்றும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் பல்வேறு பிரிவுகளாகப் புலம் பெயர்ந்த தேசங்களில் பிரிந்து போயிருக்கிறார்கள். எனவே இன்றுள்ள சூழ்நலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள தமிழ் மக்களோடு உறவையும் தொடர்பையும் பேண எவ்வாறான வழிமுறைகளைக் கையாளப் போகின்றது? அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பே நேரடியாக புலம் பெயர் நாடுகளில் தமது பிரிதிநிதிகளை அல்லது பிரதிநதித்துவ அமைப்புக்களை நிறுவி அவற்றைப் பேணப் போகின்றதா?

விடுதலைப் புலிகள் மௌனிக்க வைக்கப்பட்டதன் பிற்பாடு புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கான அமைப்புக்;களுள் ஒற்றுமை இருக்கின்றதா என்பது ஆராயப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எனது முதலாவது கோரிக்கையாக இருக்கின்றது. அவர்கள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் இருந்தால் தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான பணியைச் செய்வதற்கு வாய்ப்பாக இருக்குமே தவிர அங்கு அவர்கள் 18 அமைப்புக்களை வைத்துக் கொண்டு அந்த 18 அமைப்புக்களும் 18 அரசியல் வழிமுறையை வைத்துக் கொண்டு அந்தப் 18 அமைப்புக்களும் தமிழ்; தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு இருப்பது என்பது வேறு விடயம். ஆனால், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ அல்லது இந்த மக்கள் இழந்த தம் உரிமையை மீளப் பெறுவது குறித்தோ அவர்களுக்கான மீள் கட்டமைப்புப் பணி குறித்தோ ஏதாவது செய்ய வேண்டுமானால் அங்குள்ள அமைப்புக்கள் ஏதாவது ஒரு பொதுக் கொள்கையின் கீழ் பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டும். அப்படி அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சி நிரலின் கீழ் வருவார்களாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுடனான உறவையும் தொடர்பையும் பேணுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பே புலம் பெயர்ந்த நாடுகளின் அதற்கான அமைப்புக்களை நிறுவிப் பணியைத் தொடர்வதென்பது. ஏதிர்காலத்தில் அவ்வாறு செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எண்ணியுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தளவில் அதுவும் கூட மிகவும் சிக்கலானது தான். உதாரணமாக பிரிட்டனில் தமிழ் தேசியக் கூட்டமைப்ப ஒரு அலுவலகத்தைத் திறக்கின்றது என்று சொன்னால் அங்குள்ள பல்வேறு அமைப்புக்களும் தாங்கள் தான் உண்மையான தேசிய சக்திகள், தாங்கள் தான் சரியான கொள்கையைக் கொண்டவர்கள் என்று கூறி அங்குள்ள அலுவலகத்தையும் செயலிழக்கச் செய்து விடுவார்கள். அது இன்னும் நிலைமையை மோசமாக்கி விடும். ஆகவே, புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புக்களும் ஒன்று பட்டு ஓரணியில் கீழ் வருவது ஒன்று தான் இங்குள்ள மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக அவர்களுடைய எதிர்காலத்திற்கு சுபீட்சம் விளைவிக்கும் ஒன்றாக அமையும். எனவே அந்த மக்களுக்காக ஒன்றுபடுங்கள் என்று நான் அவர்களிடம் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான். இங்குள்ள பல்வேறு தரப்பினரும் தாம் தாம் தமிழ் தேசியத்தை தோளில் சுமப்பதாக கூறிக் கொண்டு மாறி மாறி ஒருவரை மற்றவர் விமர்சித்துக் கொண்டு இருப்பதைத் தான் காணக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் தங்களுள் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது மிக அவசியமானது தான். ஆனால் என்னுடைய கேள்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தோடு உடன்படுபவர்களை இணைத்துக் கொண்டு செயற்படுவது அவசியமல்லவா? உதாரணமாக இலங்கை அரசின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று சொல்லி இருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புவதட பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்களுடனான தொடர்பில் ஒரு மந்தகதி நிலவுவதாகத் தோன்றுகிறதல்லவா?

நீங்கள் கூறியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதுரவான சக்திகள் யார் என்று கண்டு பிடிப்பது எம்மைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. உதாரணமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர் என நாம் ஒருவரை இனம் கண்டு அவரை எம்முடன் இணைத்துக் கொண்டால் அவர் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்ய அங்குள்ள ஏனையவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவருக்கு துரோகி பட்டத்தையும் சூட்டி விடுவார்கள் இது தான் அங்குள்ள நிலைமை. அவர் துரோகி என்று கண், காது மூக்கு வைத்து பிரச்சாரப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி விடும். இது தான் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்றும்படி தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களை இனம் கண்டு சேர்த்துக்கொள்வது என்பதில் எமக்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இத்தகைய நிலைமைகள் தான் எமக்கு அச்சத்தைத் தருகின்றது. உதாரணமாக அண்மையில் பும் பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற தேர்தலிலில் வென்றவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு அவரை ஒதுக் கவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவிர அதனை முன்னிற்று நடாத்தயவரை ஒதுக்கி விட்டு இன்னொருவரைக் கொண்டு வருவதாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. முன்னர் தியாகி என்று கூறப்பட்டவர் தற்போது துரோகியாகச் சொல்லப்படுகிறார். எனவே யாரை இணைத:துக் கொள்வது என்பது எமக்கு மிகப் பெரும் சிக்கலாக இருக்கிறது.

எனவே நான் முன்னரே கூறியது போல அங்கிருக்கும் அமைப்புக்கள் தஙடகளழனட சுயநலன்களை கைவிட்டு இங்குள்ள மக்களின் இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக அந்த அடிப்படையில் ஒற்றுமைப்பட வேண்டும். அவ்வாறு நிலைமை ஏற்பட்டால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட ஏதுவாக இருக்கும்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24502&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் குறிக்கோள்கள் ஒன்றாக இருந்து அணுகு முறைகள் வித்தியாசமாக இருக்கலாம்.ஆதலால் இவர்களை ஒன்று பட்டு செயற்பட அதாவது குறிப்பிட்ட வேலைத்திட்டங்களிலாவது ஒன்றாக செயற்பட்டு தமது புரிந்துணர்வுகளை வெளிப்படுத்தலாம். இதற்கு மக்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.சுயநலவாதிகள் இவர்களில் இருந்தால் மக்கள் தான் இனம் காணவேண்டும்.

இதய சுத்தியுடன் செயற்படும் போது தான் மக்களின் ஆதரவை பெற முடியும். இது கடந்த கால வரலாறு.

இனவாத மகிந்த அரசு பல வகையிலும் எம்மை பலவீனப்படுத்த பிராயத்தனம் எடுக்கும் போது நாம் எல்லோரும் இதனை ஒரு சவாலாக எடுத்து செயற்பட வேண்டும்.எமக்காக மரித்த மாவீரர்களுக்கும் நாம் மரியாதை செய்யும் நாட்களாக இவ்வாரத்தை உறுதி எடுத்து செயற்பட வேண்டும்.

மக்களுக்கும் மற்றும் உணவு ,உடை ,உறைவிடம் இன்றி வாழும் மக்களுக்கு சுதந்திர வாழ்க்கை அமையவும்,சிறையில் வாடும் போராளிகளை வெளிக்கொணரவும் அயராது உழைக்க வேண்டிய அவசியமுள்ளது.இதற்கு நேசக்கரமூடாகவோ,அல்லது பொது அமைப்புகளினூடாகவோ, தனிப்பட்ட ரீதியிலோ உதவலாம்.

தானுண்டு தன் குடும்பம் என்று வாழாமல் சிறிய பங்களிப்பாவது எமது மக்களுக்கு செய்யும் போது அதுவே மிக பெரும் சக்தியாக உருவெடுக்கும்.

இணைப்புக்கு நன்றி DAM.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளைத்தான் விமர்சிக்க ஏலாது...அப்புடி விமர்சிச்சா கூட்டி காட்டி எண்டு நிறைய வரும், நீங்கள் கூட்டமைப்புக்காரர் .... விமர்சனம் எல்லாத்தையும் எதிர்கொள்ளுற தில்லு உங்களுக்கு வேணும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.