Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பாக புதுடில்லியின் தற்போதைய நிகழ்ச்சி நிரல் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? கடந்த இரு தசாப்த காலங்களாக சமஷ்டி முறைமையை உள்வாங்குமாறும் அதிகாரத்தை பரவலாக்குமாறும் இலங்கைக்கு நம்பிக்கையூட்டுவதற்கான முயற்சிகளை புதுடில்லி மேற்கொண்டு வந்தது. இப்போது புதுடில்லியின் நிகழ்ச்சிநிரல் என்ன?இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யார்.

இந்தியாவின் த ரிபியூன் பத்திரிகையில் இலங்கை தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்த வேண்டுமென்ற தலையங்கத்தில் குல்திப் நய்யார் எழுதிய கட்டுரையொன்று நேற்று புதன்கிழமை த ரிபியூனியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பெரும்பான்மைச் சிங்களவருக்கும் சிறுபான்மைத் தமிழருக்குமிடையில் நல்லிணக்கம் தொடர்பாக இந்தியா இப்போது சாதகமான நிலைப்பாட்டில் உள்ளது. சமீபகாலத்தில் இந்தியாவானது மாகாணங்களுக்கு சமஷ்டி முறைமையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. இரு சமூகங்களும் சேர்ந்திருப்பதைத் தவிர, வேறு தெரிவு இருக்க முடியாதென்பது உண்மையாகும். ஆனால்,குறிப்பாக வாழ்க்கையின் சகல மட்டங்களிலும் தமிழர்கள் மனதில் ஊக்கமில்லாத தன்மையைக் கொண்டிருப்பதை முதலில் இல்லாமல் செய்துவிட வேண்டும். தாங்கள் சமத்துவமான பிரஜைகள் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர்கள் மனதளவில் கொண்டிருக்கும் ஆர்வமில்லாத நிலைமை இல்லாமல்போக வேண்டும்.

புதுடில்லியில் இடம்பெற்ற தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விடுத்திருந்த அறிக்கையை நான் வாழ்த்துகிறேன். அதிகார பரவலாக்கல் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழி தொடர்பாக அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளுடன் சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தின் மத்தியிலும் இத்தகைய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் அளித்திருந்தது.

விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னர் புதுடில்லி தலையீட்டை மேற்கொண்டிருக்க வேண்டுமென்று சிலர் விவாதிக்கின்றனர். இதன் மூலம் தமிழர்களை உள்வாங்கிக் கொள்ளுமாறு கொழும்புக்கு தெரிவிப்பதற்கான இடத்தைக் கொண்டிருந்திருக்க முடியும் என்று அவர்கள் விவாதிக்கின்றனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களை விநியோகித்தது தொடர்பாக அதிகாரபூர்வமான செய்திகள் உள்ளன.அந்தத் தருணத்தில் தமிழர்களுக்கு உறுதியான சலுகைகளைக் கொடுக்கக்கூடிய விதத்தில் கொழும்பை தயார்படுத்தி வைத்திருந்திருக்க வேண்டும். கொழும்பு புலிகளை முழுமையாக அழிக்க விரும்பியிருந்தது. அதனால் இதனை (இந்தியாவின் கோரிக்கையை) கொழும்பு செய்திருக்கும். ஆனால், இதற்கு முரண்பட்ட வகையில் கொழும்புக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் விடயத்தில் இந்தியா ஒருபோதும் பின்வாங்கியிருக்கவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியிருந்த தனது பாவத்தை நெஞ்சில் கொண்டிருந்த இந்தியாவானது அதனால் ஆயுதங்களை வழங்கியதாக அனுமானிக்கப்படுகிறது. முன்னர் தமிழர்களுக்கு உதவியளிப்பதற்கான படையொன்றை உருவாக்க வேண்டுமென்ற கொள்கையை இந்தியா கொண்டிருந்தது. தமிழர்கள் வடக்கிலுள்ள தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சகல இடங்களிலும் தவறான விதத்தில் நடத்தப்பட்டனர். அவர்களுக்குரியவை வழங்கப்படவில்லை. தனி நாட்டு அபிலாசையைப் போஷிக்கும் விதத்தில் புலிகள் பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றமை துரதிர்ஷ்டமானதாகும்.

சில சமயம் புலிகளின் அச்சுறுத்தலானது ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொண்ட வழிமுறையினால் முடிவுக்கு வந்திருக்கக்கூடும். ராஜீவ் காந்தியைக் கொன்ற சக்தியானது அழிக்கப்பட்டிருப்பது குறித்து புதுடில்லி மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். அதேசமயம், சௌத் புளக்கில் (இந்திய வெளிவிவகார அமைச்சு) கொழும்பின் மீதான இந்தியாவின் "பிடி%27 யானது குறைந்துவிட்டதென்ற உணர்வு காணப்படுகிறது. ஏனெனில் இலங்கை தொடர்பாக இந்தியாவிடம் தொடர்ச்சியானதும் உறுதியானதுமான கொள்கை இல்லாததே இதற்குக் காரணமாகும். இலங்கையிலுள்ள நிலைவரத்தின் அடிப்படையிலேயே இந்தியாவின் பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.

தமிழர்களுக்கான இடத்தை வென்றெடுக்கும் இலக்கை புதுடில்லியானது கொண்டிருந்திருக்குமானால் நீண்டகாலத்திற்கு முன்பாகவே அதாவது ஜனாதிபதி ஜயவர்தனவின் பதவிக் காலத்திலேயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும். ராஜீவ் காந்தி கப்பலின் மாலுமியாக இருக்கும்வரை அவரின் தலைமையில் தாங்கள் எதனையும் செய்ய முடியுமென்று ஜே.ஆர்.ஜயவர்தன ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.

உறுதியான அதிகாரப்பகிர்விற்குப் பதிலீடாக நல்லிணக்கம் என்ற மனதில் பதிவை ஏற்படுத்தாத வார்த்தை ஏன் இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஏனென்றால் இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான பெய்ஜிங்கின் அறிவிப்பையடுத்து புதுடில்லியை பீதி ஆட்கொண்டிருப்பதே காரணமாகும். சீனாவானது திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொறுப்பேற்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவைச் சுற்றிவளைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை சீனா கடைப்பிடித்து வருகிறது. நேபாளத்திலும் கூட அதிகளவு முதலீடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் இந்தக் கொள்கையைக் கண்டிப்பதற்குப் பதிலாக இலங்கையின் சமஷ்டி கட்டமைப்பு முறைமையை அமுலாக்க வேண்டுமென்ற தனது தீர்மானத்திலிருந்தும் பின்வாங்கும் நடவடிக்கையை புதுடில்லி மேற்கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக மன்மோகன் சிங்கின் அரசாங்கத்திற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி இறுதிக் காலக்கெடுவைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அவர் தனது டில்லி விஜயத்தின்போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஏ.ராஜாவை பாதுகாப்பதற்கு மட்டுமே தனது ஆர்வத்தைச் செலுத்தியிருந்தார். 40 ஆயிரம் கோடி மோசடிக் குற்றச்சாட்டில் ராஜா சிக்கியிருந்தார். தமிழர்கள் பற்றி கருணாநிதி கதைத்திருந்தாலும் கூட அதனை அவர் முழுமையாக மேற்கொண்டிருக்கவில்லை.

அதேசமயம், இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக அதிகளவிலான கதைகள் வெளிவந்துள்ளன. தமிழர்களின் உயிரிழப்புகள், துஷ்பிரயோகங்கள்,ஜெனீவா சாசனத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் எதிரான குற்றங்கள் என்பன பற்றி அதிகளவு செய்திகள் வெளிவந்துள்ளன.

படுகொலைகள்,சித்திரவதை,காணாமல்போதல், உணவு, நீர், மருந்து விநியோகமின்றி தடுத்து வைத்திருத்தல்,உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் என்பன தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டிருந்தது. சர்வதேச சட்ட முறைமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஆட்லறி மற்றும் வெள்ளைப் பொஸ்பரஸ், கொத்தணிக் குண்டுகள் போன்ற சட்டவிரோத ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்றமானது ஏற்கனவே விசாரணையை நடத்தியுள்ளது. தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, ஐ.நா. பாதுகாப்புச்சபை என்பன சுயாதீனமான விசாரணை ஆணைக்குழுவை அமைத்து விசாரணையை மேற்கொள்வதற்குத் தவறிவிட்டன என்று நிரந்தர மக்கள் நீதிமன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டுமென அந்த நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் என்பன குறித்து விசாரிக்க அதிகாரமுள்ள உண்மை மற்றும் நீதியாணைக் குழுவை அரசாங்கம் அவசரமாக நியமிக்க வேண்டுமென்று மக்கள் நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

கொழும்பானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைத்துள்ளது. எட்டு உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் முதல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலப்பகுதி வரையிலான நிகழ்வுகளை இந்த ஆணைக்குழு விசாரணை செய்யுமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுவதால் இந்த ஆணைக்குழுவானது ஐயுறவுடன் நோக்கப்படுகிறது. மனித உரிமைகள், நல்லாட்சி,பதிலளிக்கும் கடப்பாடு என்பன தொடர்பாக கரிசனையுள்ள விவகாரங்கள் குறித்து அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுவதால் சந்தேகத்துடன் இந்த ஆணைக்குழு பார்க்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோற்கடித்துவிட்டார். ஆனால், தமிழ் மக்களின் மனங்களில் உள்ள துன்ப உணர்வுகளை இன்னமும் இல்லாமல் செய்துவிடவில்லை என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ உணர்ந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்ள அவர் எதனையாவது செய்யவில்லையாயின், ஏனைய சில விடுதலைப்புலிகள் மேலெழுந்துவிடக்கூடும். ஏற்கனவே வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் சிங்களவர்களையும் இலங்கைத் தமிழர்களையும் சமமாக நடத்தும் நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ கொண்டிருக்கவில்லையென்று சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இந்த விடயமானது ஜனநாயக ரீதியாக நாடு உள்ளதென்ற நன்மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆதலால் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருகிறேன். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை என்ன? இரு தசாப்தங்களாக கொழும்பை நம்பிக்கையூட்ட முயற்சித்துக் கொண்டிருந்த சமஷ்டி முறைமை மற்றும் அதிகாரப்பரவலாக்கம் என்பவை தொடர்பாக எந்தப் பெறுபேறும் கிட்டவில்லை. இப்போது புதுடில்லியின் நிகழ்ச்சிநிரல் என்ன?

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=3304&catid=1

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புதடில்லியிலுள்ள வடவரது சௌத்புளக் எப்பிடி மிச்சமிருக்கிற தமிழரையும் ஆயுதப்போரை அழித்ததுபோல் அரசியல் ரீதியாகவும் கொன்றொழிப்பதெனத் திட்டமிடுகிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனது ஆங்கிலப் பதிவிற்கு உங்களது கருத்துகளை, நியாபூர்வமான இணைப்புகளுடன் எழுதுங்கள். நாம் தவறவிடும் விடயமாக உள்ளதும் இதுவே. நாம் எமக்குள் மோதுவதில் வல்லவராக இருப்பதைவிட, இது போன்ற ஊடகவியலாளர்களோடு

கருத்துக்களைப் பகிர்வது பயன்தரக் கூடியது.

http://flashnewstoday.com/?p=36769

http://in.answers.yahoo.com/question/index?qid=20100601084458AAbbEkZ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.