Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்;

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்; பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் பார்வைப் புலம் விரியவேண்டும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-04 14:31:11| யாழ்ப்பாணம்]

02.06.2010 அன்று வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் வைத்திய கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படு கின்றது.-ஆசிரியர்

மீண்டுமொருமுறை எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுத்த வலம்புரி ஆசிரியர் தலையங்கத்திற்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். 02.06.2010 அன்றைய ஆசிரியர் தலையங்கம் எம் சமூகத்தைக் காக்கப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளிடம் இறைஞ்சி நிற்கிறது. நானும் ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற ரீதியில் என்னையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கத் தூண்டியுள்ளது.

பல்துறை நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிகளைக் கொண்ட அதியுயர் கல்வி நிறுவனமாக பல்கலைக்கழகம் விளங்குகிறது. சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியது அதனது கடமையாகும்.எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியிலும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பே காத்திரமானது. பன்மடங்கு ஊதியம், பல்வேறு வசதி வாய்ப்புகள் என்பனவற்றை நாடி மற்றையோர் ஓடிச் செல்கையில், எம் சமூகத்தின் கல்வியின் அதிஉச்ச நிறுவனமான யாழ் .பல்கலைக்கழகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்குத் தலை வணங்குகின்றேன்.

துரதிஷ்டவசமாக புத்திஜீவிகள் எனப்படுவோர் தானும் தன் குடும்பமும் வாழ புத்தியை விற்றுச் சீவிப்போர் என்ற கருத்து எம் சமூகத்தில் பரவலாக நிலவுவதையிட்டு மிகுந்த வேதனையடைகிறேன்.புலமைப்பரிசில் பரீட்சை சித்தியெய்தினால் நல்ல பாடசாலைக்குச் செல்லலாம், க.பொ.த உயர்தரத்தில் நல்ல புள்ளிகளெடுத்தால் கொழும்பு பல்கலைக்கழகம் செல்லலாம், அங்கு முதல் தரத்தில் சித்தியெய்தினால் வெளிநாடு செல்லலாம், அங்கு சுகபோக வாழ்க்கை வாழலாம் என்பதே எமக்குக் காலா காலமாக ஓதப்பட்டு வருகிறது.

சிந்தித்துப் பாருங்கள். இது, தன்னையறியாமலே எங்கள் சமூகமே எம்மை தன்னிலிருந்து பிரிப்பதனைக் குறிக்கிறது. எமக்கு சமூகப் பொறுப்புணர்வு குறைகிறது. எமக்கொரு கடமை இருப்பதையே மறந்து விடுகின்றோம்.

எங்களின் முன் மாபெரும் பணி காத்துக்கிடக்கிறது. மனிதத்தையும் சுயத்தை அறிதலையும் மற்றும் எமது சமூகத்திற்குப் பயன்படுதலையும் கற்றுக்கொடுக்காத கல்வியால் யாதொரு பயனுமில்லை. எமது கற்கை நெறிகள் காலத்தினதும் எமது பிரதேசத்தினதும் எமது தேசத்தினதும் தேவைக ளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருத்தல் வேண்டும்.

நாங்கள் பணிபுரிவது உயர்கல்விநிறுவனம்; கற்பிப்பது வருங்கால வைத்தியர்கள்,பல்வேறு அரச தனியார் நிறுவனங்களை நிருவகிக்க உள்ளோர், பணிபுரிய உள்ளோர், மாணவ சமுதாயத்தை வழிநடத்தவுள்ள ஆசிரியர்கள். இவர்களே சமுதாயத்துடன் நேரடியாக உறவாட உள்ளவர்கள். இவர்களை நல்ல முறையில் உருவாக்குதலே எமது தலை யாய கடமையாகும்.

இவர்களுக்கு சரியான முறையில் தகவல்களைக் கொடுக் கிறோம். மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது எமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மிகவும் பாடுபட்டு அதிக தகவல்களைக் கொடுப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் வன்திறன்களும் தேவையான அளவு பயிற்றப்படுகின்றன.

ஆனால் துரதிஷ்ட வசமாக பெரும்பாலான மாணவர்கள் மென்திறன்களில் பின்தங்கியிருப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.சமூகத்துடன் ஒத்து வாழ்வதற்கும் சமூகத்திலே சிறப்பாகத் தொழிற்படுவதற்கும் இந்த மென் திறன்கள் மிக அத்தியாவசியமானவை. ஒருவருக்குள் உள்ள மென்திறன் மற்றவர்களுடனான மென்திறன் என்பவற்றை வளர்த் துக் கொள்ளல் மிக அவசியம்.

யதார்த்த உணர்வு ,பொறுப்புணர்வு ,நம்பகத்தன்மை , நேரமுகா மைத்துவம் ,திட்டமிடலும் ஒழுங்குபடுத்த லும் , முடிவெடுக்கும் ஆற்றல்,பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், புத்தாக்க முயற்சி , ஆர்வம் மற்றும் நெருக்கீடுகளைச் சமாளித்தல் போன்றன ஒருவருக்குள்ள மென் திறன்களாகும்.

இரக்கம், தொடர்பாடல், நற்பழக்க வழக்கங்கள், உறவுகளைக் கட்டியயழுப்புதல், குழுவாகச் செயற்படல், தலைமை தாங்குதல் மற்றும் ஒரு விடயத்தைக் கற்பிக்கவல்ல ஆற்றல் போன்றன ஒருவருடைய மற்றவர்களுட னான மென்திறன்களாகும். இவற்றிலே எவ்வளவு திறன்களை நாங்கள் கொண்டிருக் கிறோம்? இவற்றைக் கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம், இதன்படி ஒழுகவேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், கற்றாங்கு ஒழுகுவதிலேயே யாவும் தங்கியுள்ளன.

சமூகப் பார்வையும் சமூகக்கடமையும் எங்கள் ஆழ்மனதிலி ருந்து கொண்டு எங்களை இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். உலகமெனும் நாடகமேடையில் எங்களுக்கு அரியதோர் பாத் திரம் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தை சரி வர நடிக்க வேண்டும். எங்கள் சொல்லிற்கும் செயலிற்கும் சமு கத்தில் ஒரு தனி மதிப்புள்ளது.

எனவே, நாங்கள் காலத்தின் தேவைக்கேற்ப சரியான வற்றை சொல்ல வேண்டும், சரியானவற்றைச் செய்ய வேண் டும். முதலில் எங்களது பார்வைப் புலம் விரியவேண்டும். உலக மயமாதல் மூலம் உலகம் ஒரு கிராமமாகி வருகிறது. முன்பு பக்கத்து வீட்டுக்காரன் அயலூரவனுடன் போட்டி போட்ட நாம் இப்பொழுது இன்னொரு நாட்டுடன் , இன்னொரு கண்டத்து டன் போட்டி போடவேண்டியுள்ளது.

அதற்கு ஈடுகொடுக்க வில்லையயனில் எம்மை எட்டி உதைத்துவிட்டு உலகம் தன் பாட்டிற்குச் செல்லும். பெரும்பாலும் நாம் குண்டுச்சட்டியினுள் குதிரையோட்டிக்கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் விதிவிலக் காக இருக்கலாம்.

இப்பொழுது எமது பிரதேச அபிவிருத்தி பற்றி அதிகம் கதைக்கிறோம். அபிவிருத்தியில் மனிதவளம் முக்கியமானது. ஆற்றல்மிக்க இளைய சமுதாயமே எமக்குத்தேவை. அவர்க ளது வலு வீணாகப் போகிறது. இது பற்றிச் சிந்திப்போம் .

இதில் எமது பங்களிப்பு என்ன? ஆகவே, அறிவு, ஆற்றல்- குறிப்பாக மென்னாற்றல் , சமூகப் பொறுப்புணர்வு உள்ள பட்டதாரிகளைத் தொடர்ந்து உருவாக்குதல் மூலம் மறைமுக மாகவும் எமக்குக்கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நேரடியாகவும் எம் சமூகத்தைக்கட்டியயழுப்புவோமாக.

வைத்தியகலாநிதி

செல்வம் கண்ணதாசன்

சிரேஷ்ட விரிவுரையாளர்,

மருத்துவபீடம்த யாழ்.பல்கலைக்கழகம்.

செய்தி வலம்புரி பத்திரிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.