Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராவணன்-பட விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக் [^], பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா

வசனம்: சுஹாசினி

ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம்: மணிரத்னம்

தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்

பிஆர்ஓ: நிகில் முருகன்

ravanahead.jpg

பொதுவாகவே கதைக்காக ரொம்ப மெனக்கெடாத மணிரத்னம், இந்த முறை வால்மீகி- கம்பரின் ராமாயணம், சமகால ராபின்ஹுட்டான சந்தனக் காட்டு வீரப்பன் கதை என கலந்து கொடுத்துள்ள 'வீரப்பாயணம்', இந்த ராவணன்!.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக ஹை-கிளாஸ் இயக்குநராக ஆராதிக்கப்படும் ஒரு கலைஞரிடமிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த நேரடி தமிழ்ப் படம், தமிழ்ப் படமாக வந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி!.

பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம், அதாவது ராவணன்). அண்ணன் சிங்கம் (பிரபு- அதாவது கும்பகர்ணன்), தம்பி சக்கரை (முன்னா- அதாவது விபீஷணன்), தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி- அதாவது சூர்ப்பணகை) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.

அவனை வேட்டையாட சிறப்பு அதிரடிப்படை வருகிறது, தேவ் (பிருத்வி ராஜ்-அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். இந்த ராமனின் காதல் மனைவி ராகினி (ஐஸ்வர்யா ராய்- அதாவது சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக கார்த்திக் வருகிறார்.

வீராவின் தங்கைக்கு திருமணம் [^] நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

அந்த கோபத்தில், போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகிறார் வீரா. உடனே அவளைத் தேடி போலீஸ் அதிகாரி தேவ் பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார்.

ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான். அதை மறுக்காமல் அமைதி காக்கிறாள் ராகினி.

ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் போலீஸ் அதிகாரி கொல்கிறான். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் போலீஸும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான போலீஸ் அதிகாரி தேவை கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பிவிடுகிறான்.

கணவனோடு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள் ராகினி... அதன் பிறகு நடப்பது தான் க்ளைமாக்ஸ்.

படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை ஏகப்பட்ட குளறுபடிகள்...

நடப்பது தமிழ்ப் பழங்குடியினரின் கல்யாணம்... பின்னணியில் காசி, மதுரா நகரங்களில் உள்ளது போன்ற மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்... திருநெல்வேலி [^]க்குப் பக்கத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் ஏது இதெல்லாம் என்ற கேள்வி நெஞ்சுக்குள் எழ அதை கப்பென்று அமுக்கிவிட்டு அடுத்தக் காட்சிக்குப் போகிறோம்.

ஹோ வென்ற இரைச்சலுடன் அருவி... கட்டற்று ஓடும் வெள்ளத்துக்கு நடுவே ஒரு மெகா சைஸ் சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில். வெள்ளத்தின் இன்னொரு பக்கம் கோட்டை கொத்தளம் மாதிரி செட்டப். நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி... இப்படி சமீர் சந்தாவின் கலை இயக்கத்தில் எக்கச்சக்க ஓட்டைகள். தன்னை முன்னிருத்தும் அவரது முயற்சியில் காட்சிகள் தோற்றுப் போவதை கவனிக்கவில்லையே!.

திடீர் திடீரென்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை என கதாபாத்திரங்களின் ஸ்லாங் மாறிக் கொண்டே இருக்கிறது... வசனங்களில் அபத்த நெடி. யார் எழுதியது... ஆ... சுஹாசினி. ரொம்பக் கொடுமை!.

எத்தனை அடி உயரத்திலிருந்து குதித்தாலும், எரியும் பாலத்திலிருந்து விழுந்தாலும் கதாநாயகனுக்கோ, வில்லனுக்கோ சின்ன சிராய்ப்புதான். ரியலிஸம்?.

தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த ஹீரோ, பின்னர் அந்த நினைப்பை தூக்கிப் போட்டுவிட்டு குடி- கும்மாளம், தூக்கி வரப்பட்ட இன்னொருத்தன் மனைவி மீது காதல் என அலைபாய்கிறான்...

அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ... ஆனால் 'தாய் மாதிரி' அன்பானவன் என்று அதே பாத்திரத்துக்கு பில்ட் அப் வேறு!

ரஹ்மான் இசையில், கெடா கெடா கறி, வீரா வீரா என இரண்டு பாடல்கள் அட்டகாசம். எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே... பாடல் நன்றாக இருந்தாலும், பாடப்படும் சூழல் படத்தின் மீதான மதிப்பைக் குறைக்கிறது. அதுஎன்ன காட்டுப் பகுதி பயணம் என்றால் இன்ஸ்டன்டாக ஒரு கிழவி ஈனஸ்வரத்தில் முனகுவதாக ஒரு பின்னணி?.

தமிழ் உணர்வோ, தமிழருக்கான குறியீடுகளோ, தமிழ் இடவமைப்பு பின்னணியோ இல்லாமல் இருப்பதால் ஏதோ வேறு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வு.

க்ளைமாக்ஸ் காட்சி படு சொதப்பல். ரயிலில் கணவனோடு போகிறாள் மனைவி... கணவனுக்கு அவள் நடத்தை மீது சந்தேகம். உடனே ரயில் சங்கிலியைப் பிடித்து நிறுத்துகிறாள். இறங்கி நேராக தன்னைக் கடத்தியவனிடம் போய், 'என்னைப் பற்றி என் புருஷன்கிட்ட என்ன சொன்னாய்?' என்று கேட்பதாகக் காட்சி. நம்பகத்தன்மை என்பதை விட... சிறுபிள்ளைத்தனமான சித்தரிப்பு என்பதே பொருத்தம்.

குறைகள் மட்டுமேவா என்றால்... நிறைகளும் உண்டு.

அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.

அடுத்து விக்ரமின் நடிப்பு. அது ஒரு முழுமையற்ற பாத்திரம், பெரிய ஈர்ப்பைக் கிளறாத ஒன்றுதான் என்றாலும் அதற்காக அபாரமாக மெனக்கெட்டிருக்கிறார் அந்த மனிதர்.

ஐஸ்வர்யா ராயின் அழகை அள்ளி அள்ளித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஐஸும் அம்சமாக வருகிறார். அந்த இறுதிக் காட்சியில் விக்ரம் மீது அவருக்கு காதல் வரும் உணர்வைக் காட்டியுள்ள விதம் க்ளாஸ். ஆனால் ப்ருத்வி ராஜூக்கு ஜோடியாக.. நல்லாவே இல்லை!.

மலையாளம் கலந்த தமிழில் சதா கத்திக் கொண்டே வரும் ப்ருத்வி ராஜ் வந்தாலே அலர்ஜியாகி விடுகிறது.

கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம். ஏற்கெனவே குண்டாக இருக்கும் பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாகவே உள்ளது.

பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு ஜலக்கிரீடை காட்சியுடன் அவரை பேக்கப் பண்ணிவிட்டார் போலிருக்கிறது.

நாயகன், பம்பாய் என மணி ரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களோடு ஒப்பிடாமல் பார்த்தால், டைம் பாஸ்!

thatstamil.com

ராவண் ரூ.38 கோடி-ராவணன் ரூ.11 கோடி!

June 22, 2010

மணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்கா வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.

இதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் ‘நவீன ராமாயணமாக’ இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வசூல் எவ்வளவு?:

முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.

இந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.

அவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், “எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்…” என்றார்.

தமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.

தெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=40775

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.