Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவிடயத்திலும் இணக்கம் எட்டப்படாமல் முடிவுற்ற மன்னார் மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியான பதில் கிடைக்காமல் கூட்டமைப்பு எம்.பிக்கள் விசனம்எந்தவிடயத்திலும் இணக்கம் எட்டப்படாமல் முடிவுற்ற மன்னார் மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம்

2010-06-27 07:57:34

மன்னார் மாவட்டத்துக்கான இணைப் புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற போதும் எந்த விடயத்திலும் இணக்கமோ முடிவோ எட்டப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு உதயனுக்குத் தெரிவித்தார்.

மன்னார்,ஜூன்27

மன்னார் மாவட்டத்துக்கான இணைப் புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்ற போதும் எந்த விடயத்திலும் இணக்கமோ முடிவோ எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு உதயனுக்குத் தெரிவித்தார்.

மன்னார் செயலகத்தில் மன்னார் மாவட் டத்துக்கான இணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் ரிசாத் பதி யுதீன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம்,சிவசக்தி ஆனந் தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய கூட்டத்தில் எந்தவொரு விடயத்துக்கும் அரச தரப்பில் இருந்து உறுதியான தகுந்த பதில் கிடைக்காததால் கூட்டமைப்பு எம்.பிக்கள் வெறுப்படைத் தனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தவை வரு மாறு:

மக்களின் மீள்குடியமர்வு, சுகாதாரம், கல்வி, கடற்றொழில், விவசாயம் ஆகிய விடயங்கள் குறித்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டத்தில் மிக விரிவாக எடுத்துரைத்தோம் அவற் றில் எந்த விடயம் தொடர்பாகவும் உறுதி யான பதில் ஏதும் அரச தரப்பால் வழங்கப் படவில்லை.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முள்ளிப் பிரதேச மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக எடுத்துக் கூறினோம். அந்தப் பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதால் உடனடியாக மீள்குடியமர்வு சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட் டது.

மின்விநியோகம், தொண்டர் ஆசிரியர் நியமனம் ஆகிய விடயங்கள் குறித்தும் பிரஸ்தாபித்தோம். அவற்றுக்கும் சரியாக தகுந்த பதில் ஏதும் தரப்படவில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது வளங்கள் சூறையாடப்படுவதாகத் தெரிவித்தோம். அதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

மொத்தத்தில் எந்த ஒரு விடயம் தொடர் பாகவும் உறுதியான ஆக்கபூர்வமான பதில் அரச தரப்பில் இருந்து தரப்பட வில்லை என்றார் செல்வம் அடைக்கல நாதன். (ஒ1)

நன்றி - உதயனிணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.