Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்கள் தங்கியிருந்த கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நேற்றிரவு வெள்ளைவானில் சென்ற சிலர் தாக்கிய சம்பவத்தில் 3 மாணவர்கள் காயம்‐

Featured Replies

யாழ் பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்கள் தங்கியிருந்த கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நேற்றிரவு வெள்ளைவானில் சென்ற சிலர் தாக்கிய சம்பவத்தில் 3 மாணவர்கள் காயம்‐

27 June 10 05:03 pm (BST)

யாழ் பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்கள் தங்கியிருந்த கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நேற்றிரவு வெள்ளைவானில் சென்ற சிலர் தாக்கிய சம்பவத்தில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும் இது மாணவர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல் நடவடிக்கை என காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்த ஏற்கனவே பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய மாணவர் ஒருவர் யுவதி ஒருவரை குறித்த தனியார் வீடொன்றில் செயற்பட்டு வந்த மாணவர் விடுதிக்கு அழைத்து சென்றதாகவும் இதனை ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் மூவர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தின் பின்னணியில் குறித்த மாணவர் வெள்ளை வான் ஒன்றில் சிலரை அழைத்து வந்து அந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகின்றது. 3 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் அரசியல் பின்னணி உள்ளவராக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் தம்மால் இதனை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் காவற்துறையினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்தச் சம்பவம் சீற்றத்தையும் மறுபுறம் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணிசமான மாணவர்கள் வெளிமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் கல்வி கற்பற்றாக சென்றுள்ள நிலையில் இவ்வாறான சிலரின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஏனைய மாணவர்களின் கௌரவத்திற்கு ஊறு விளைவிக்கலாம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26431&cat=1

வெள்ளை வானை எரித்தால் சரியாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.