Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பேரின் முயற்சி... வெளிவரும் அதிர்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=877

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைப்பற்றி இதுவரை தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்தான் பேசிக்கொண்டு இருந்தன. ஆனால், சிங்களவர்கள் மத்தியில் அது தொடர்பாக பேச்சே இல்லை. தற்போது, அந்த இனத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மூன்று பேர் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து அதில் ஏராளமான விவரங்களைத் தொகுத்து அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்!

1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை ஏவப்பட்டபோது, அதை அங்கு இருந்த சிங்கள முற்போக்குச் சக்திகள் கண்டித்தனர். 'பேரினவாதம்

என்பது சிறுபான்மைத் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல... அது சிங்களவர்களுடைய உரிமைக்கும் உலை வைத்துவிடும்' என்று எச்சரித்தனர். 'நவ சமாஜ கட்சி' என்ற இடதுசாரி அமைப்பு வெளிப்படையாகவே தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்காரா, அப்போது தமிழர் களுக்கு ஆதரவாக உரத்துக் குரலெழுப்பிவந்தார். சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் பேசி வந்தன. சிந்தனைத் தளத்திலும் பலர் ஆதரவைத் தெரிவித் தனர். ராஜபக்ஷே அரசை விமர்சித்துவந்த 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்ச மாக சிங்கள மக்களிடையேஇருந்த ஜனநாயகச் சக்திகளின் எண்ணிக்கை குறைந்துபோனது.

தமிழர்கள் மீது இவ்வளவு பெரிய கொடுமை நிகழ்த்தப்பட்டும் ஒரு சிங்களவர்கூட அதைக் கண்டித்துப் பேசுவதற்கு முன்வரவில்லையே என்ற எண்ணம் தமிழர்கள் தரப்பில் இருந்தது. அதற்கு விடை கூறும் விதமாக, இப்போது இந்த அறிக்கை. சுனிலா அபயசேகர, ருக்கி ஃபெர்னாண்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய ஆகிய மூவர்தான் இந்த அறிக்கையை வெளி யிட்டுள்ளனர். சுனிலா அபயசேகர, மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆவணப்படுத்துகிற 'இன்ஃபாம்' என்ற மையத்தை நடத்தி வருகிறார். ருக்கி பெர்னாண்டோ, சட்டம் மற்றும் சமூகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். சுனந்த, தேசப் பிரிய மனித உரிமை ஆர்வலர், பத்திரிகையாளராகவும் பணிபுரிகிறார்.

'இலங்கைக்கு அளித்து வந்த வரிச் சலுகையைத் தொடர வேண்டும் என்றால், அந்த நாடு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்' என்று ஐரோப் பிய யூனியன் நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில்... இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தும். இதில் அவர்கள் திரட்டித் தந்துள்ள புள்ளிவிவரங்கள், எளிதில் புறக்கணிக்க முடியாதவை. 2006-ம் ஆண்டு முதல் இலங்கையில் நடந்த சட்டவிரோதப் படுகொலை கள், உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு வாயைத் திறந்ததே இல்லை. 2006--2007 ஆண்டுகளுக்கு இடையில் 67 மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2007-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 1,212 சட்டவிரோதப் படுகொலைகள் இலங்கை அரசால் செய்யப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி ஆதாரங்களோடு இலங்கை அரசு நியமித்த இரண்டு விசாரணை கமிஷன்களின் முன்பும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை என்கிறது இந்த அறிக்கையில்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திவரும் நேரத்தில்... கண்துடைப்புக்காக இலங்கை அரசு விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது. ஆனால், அதை அந்த மனித உரிமை அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், ஏற்கெனவே இதுபோன்ற கமிஷன்கள் இலங்கை அதிபர்களால் பலமுறை நியமிக்கப்பட்டன. ஆனால், அவற்றின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதில்லை என்று அவை குற்றம்சாட்டி வருகின்றன. இப்போது வெளியான சிங்கள மனித உரிமை ஆர்வலர்களின் அறிக்கை, அதுபோன்ற கமிஷன்களின் வரலாற்றையும் சுட்டிக்காட்டி உள்ளது. இலங்கையில் நடைபெற்ற 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப் பதற்கு என்று இலங்கை அதிபர் 2006 நவம்பர் மாதத்தில் விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்தார். அது 2009 ஜூன் மாதத்தில் கலைக்கப்பட்டது. அந்த கமிஷன் கொடுத்த அறிக்கை என்ன என்பதுபற்றி இதுவரை எவருக்கும் தெரியவில்லை.

நீதிபதி மகாநாமா திலகரத்னே தலைமை யில் அதன் பின்னர் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. அதுவும் அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், அந்த அறிக்கையும் இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. மனித உரிமைகள் விஷயத்தில், இலங்கை அரசு எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு தேசிய மனித உரிமை ஆணையத்தை அது கையாளுகிற முறையிலேயே தெரிந்துவிடும். அந்த ஆணையத்தின் தலைவராக இருந்தவரின் பதவிக் காலம், கடந்த 2009 டிசம்பருடன் முடிவடைந்துவிட்டது. புதிதாக அதற்குத் தலைவரோ, கமிஷனர் களோ இதுவரை இலங்கை அரசால் நியமிக்கப்படவில்லை.

இலங்கையில் தொடர்ந்து வரும் மனித உரிமை மீறல்களை அட்டவணை யிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழர்கள் வாழும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் மதரீதியான சடங்குகளைக்கூட செய்யவிடாமல், ராணுவத்தினர் தடுத்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. அதுபோலவே, தங்களுடைய நிலத்தைப் பலவந்தமாகக் கடற்படையினர் கையகப்படுத்துவதற்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை யும் இந்த அறிக்கை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. யுத்தக் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளரான திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளித்துவிட்டதாக இலங்கை அதிபர் விளம்பரப்படுத்தி வருகிறார். ஆனால், இதுவரை திஸ்ஸநாயகம் சுதந்திர மாகச் செயல்பட முடியாத நிலை. சிங்களப் பத்திரிகை யாளரான பிரக்கீத் எக்லிகோடா என்பவர் காணாமல் போய் 140 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டன. ஆனால், அவர் என்ன ஆனார் என்பதைப்பற்றி இலங்கை அரசு மௌனம் சாதிக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியின்றி இருக்கும் தமிழர்களுக்கு, மருத்துவரீதியாக கவுன்சலிங்போன்ற சிகிச்சைகளை அளிப்பதற்கு தன்னார்வக் குழுக்கள் முயற்சி எடுத்தன. ஆனால், அவற்றை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள வட்டப்பாளை என்ற கிராமத்துக்குத் திரும்ப வந்து குடியேறிய தமிழர்கள் தமக்குள் நல உதவி அமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சித்த போது, அதையும் இலங்கை அரசு தடுத்துவிட்டது. போரினால் இடம் பெயர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற மாணவர் களையும் ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இந்த ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணம் பகுதியில் கொலை, பலாத்காரம், காணாமல்போகச் செய்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 16 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவரைச் சீரழித்த குற்றத்தின் பேரில் நான்கு ராணுவ வீரர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை 17 பேர்களைக் காணவில்லை என்று தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 9,000-க்கும் மேற்பட்டவர்கள் வவுனியாப் பகுதியில் ரகசிய மாக அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படியான சிறைகள் எங்கெல்லாம் உள்ளன என்பதைப்பற்றியும் அரசாங்கம் வெளிப்படையாக எதையும் தெரிவிக்க மறுத்து வருகிறது.

தமிழர்கள் மீதான இன அழித்தொழிப்புப் போர் முடிவுக்கு வந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும்கூட, முள்வேலி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட தமிழர் கள் முழுவதுமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படாத நிலைதான் உள்ளது. இதற்குச் சரியான பதில் எதையும் இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 772 பேர் மட்டுமே அவர்களுடைய கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களிலேயேதான் தொடர்ந்துவைக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படாததற்கு முக்கியமான காரணம், அவர் களுடைய நிலங்களை எல்லாம் ராணுவம் பலவந்தமாகக் கையகப்படுத்தி வருவதுதான். வன்னிப் பகுதியில் பல இடங்களில் இவ்வாறு நிலம் ராணுவத்தால் கையகப் படுத்தப்படுகிறது. முள்ளிக்குளம் பகுதியிலும், மன்னார் மாவட்டத்தில் சன்னார் என்ற இடத்திலும் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டன.

போரினால் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தம்மிடம் பணம் இல்லை என்று கை விரிக்கின்ற ராஜபக்ஷே அரசு, ராணுவத்துக் காகக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. அது ராணுவத்துக்காகச் செய்யும் செலவில் ஒரு சதவிகிதத்தைக்கூட போரினால் இடம் பெயர்ந்தவர்களுக்கான நலத் திட்டங் களுக்கு ஒதுக்கவில்லை என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் பலவந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகள் பற்றி, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தபேராயர் எழுதிய கடிதத்தின் நகல் இதில் பின் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முசாலி பகுதியில் எவ்வாறு தமிழர்களின் நிலம் அபகரிக்கப்படுகிறது என்பதை விரிவாக ஆதாரத்தோடு குறிப்பிடும் பேராயர், இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

ராஜபக்ஷே, இந்த அறிக்கையைப் பார்த்து பயந்துவிடுவார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அறிக்கையில் உள்ள உண்மைகள் தமிழர்கள் அனுபவிக் கும் கொடுமைகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்!

Published: Jun 26, 2010 13:06:29 GMT

  • 3 weeks later...

அரசன் அன்றறுப்பான், இறைவன் நின்றறுப்பான். ஆம் துன்பங்கள்,துயரங்கள். சோகங்களின் பாதையூடாகத்தான் இன்பத்தின் உச்சியை அடையமுடியும். கிறிஸ்தவமதத்தின் கடவுளாகிய யேசுபிரானை இந்த உலகம் கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்தி.முள்முடி சூடி இறுதியாக சிலுவையில் அறைந்து கொன்றது.ஆனால் அவரது இலட்சியம் இந்த உலகில் பிரகாசித்ததை எந்த சக்தியாலும் தடுக்கமுடியவில்லை.அதேபோல் தலைவரின் உண்மைக்கும். நீதிக்கும், அவரது உயர்ந்த இலட்சியத்துக்கும் முன்னிற்பதற்கும்,தடுப்பதற்கும் தீயசக்திகளால் முடியாது. அவை இப்போ ஆட்டம் காணத்தொடங்கிவிட்டன. விரைவில் அடியோடு அழிந்துவிடுவார்கள். ர்வாழ்வு உதயம் காண ஆரம்பிக்தமிழகும்.

  • 3 weeks later...

சிங்களவர்கள் அறுதிப் பெரும்பான்மையினர் இனவெறிக் கொலைகாரர்கள். காட்டுமிராண்டிகள். இந்த மூவரும் தற்போது விதிவிலக்கு போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.