Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அமைதிக்காகத்தான் போராடுகிறதா?

Featured Replies

போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையில் சிறிலங்கா அமைதிக்காகப் போராடுகிறது என்று Gulf News இணையத் தளத்தில் அதன் துணை ஆசிரியரான Mick O'Reilly [Deputy Managing Editor] எழுதியுள்ளார்.

அப்பயணக் கட்டுரையில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணமான தனது அனுபவங்களை அவர் பதிவு செய்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

வீதியோர மின்கம்பத்தில் உச்சியில் அமர்ந்திருந்த வெண்ணிற நாரையொன்று தனது பால்போன்ற வெள்ளை நிற இறக்கையினை மெல்ல அசைத்தவாறு ஆளரவமற்ற அந்தக் கடற்கரையில் பறந்து செல்கிறது.

இந்த நாரை கடல் நீரில் நீந்துவதற்கு ஏற்ப கடல் வெதுவெதுப்பாக இருந்தாலும் கொழும்பு-3 இனை அண்டிய கடற்பகுதியில் நீச்சலுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறதே.

குடியரசு அதிபர் மாளிகை முதல் 15/5 பாலதாச மாவத்தையில் அமைந்திருக்கும் பாதுகாப்பு அமைச்சினது தலைமையகம் வரையிலான பகுதிகள் இந்தக் கடற்பகுதிக்கு அண்மையில் இருப்பதே இத்தடைக்கான காரணம்.

இந்த வீதியில் இடைவிடாது பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டிகளும் வாடகை வண்டிகளும் இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் பலரை இறக்கிவிட்டுச் சென்றன. ஆனால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கைக்கொள்ளப்படும் இந்த இராணுவ வளாகத்திற்கு ஒரு சிலர் மாத்திரமே பாதுகாப்புச் சோதனைகளின் பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிறிலங்காவினது வடக்குப் பகுதியிலுள்ள யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான பாதுகாப்பு அனுமதியினைப் பெறுவதற்காகவே இந்தக் கூட்டம் இராணுவத் தலைமையக வாசலில் அலைமோதுகிறது.

37ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தொடர்ந்த மோசமான இனப்போர் 14 மாதங்களின் முன்னர் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் செய்பவர்கள் மீது இப்போதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

"நான் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவள்" என தனது கணவர் சில்வஸ்ராருடன் தற்போது அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழ் கிறிஸ்தவரான மேரி கூறுகிறாள். "யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு இப்போதும் சொந்தமாக வீடு இருக்கிறது. இருந்தும் குடாநாட்டுக்குச் செல்வதற்காக பயண அனுமதியினைப் பெறுவது கடினமானதாகவே இருக்கிறது" என்கிறார் அவர்.

மே 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர்கள் தங்களது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்போது கொழும்பிலிருந்து பலாலி விமானத்தளத்திற்கு விமானத்தில் பயணம் செய்திருந்தார்கள்.

ஆனால் இம்முறை இவர்கள் ஏனைய மூவருடன் சேர்ந்து ஒவ்வொருவரும் 10,000 ரூபாய் செலுத்தி வாடகை வாகனமொற்றில் 300 கி.மீ தரை வழியாகப் பயணித்து குடாநாட்டுக்குச் செல்வதற்கு விரும்புகிறார்கள்.

"ஆனால் பாதுகாப்பு அமைச்சிடமிருது நாம் பயண அனுமதியினைப் பெறவேண்டுமாம்" என்கிறார் மேரி.

பயண அனுமதியினைப் பெறுவதற்காக இந்தப் படை முகாமின் வாசலை, துருப்பிடித்த மஞ்சள் நிறத்திலமைந்த பாரிய இரும்புச் சட்டங்களால் படையினர் மறித்திருக்கிறார்கள். ஆயுதந்தாங்கிய ஏழு படை வீரர்கள் இங்கு காவலில் கடமையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தின்போது சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவினை உணர்த்தும் ஒரு சமிக்கையாக இங்கு இராணுவ உடையில் கடமையில் நின்ற படைவீரர்கள் சீனத்தயாரிப்பான ரி-56 வகையினைச் சேர்ந்த அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைக் கைகளில் வைத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட இதே தினத்தன்று காலையில், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் கொழும்பினது மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஹில்டன் விடுதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில் சீனாவினது துணைப் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

கொழும்பு நகரினது முக்கிய சந்திகளை அண்டிய நடைபாதைகளில், வீதி மறியலுக்குப் பயன்படும் மஞ்சள் நிறத்திலன இரும்புக் கட்டங்களை இன்னமும் காணமுடிகிறது. மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து பயன்படுத்துவதற்காக இவர்கள் இவற்றை இன்னமும் வைத்திருக்கிறார்கள் போலும்.

இலங்கைத் தீவில் தாக்குதல் அச்சம் எங்கும் நிறைந்திருக்கிறது. அத்துடன் மோதல்நிலையினை நாடு எதிர்கொண்டிருப்பதைப் போலவே அரச நிர்வாகங்கள் அனைத்தும் செயற்படுகின்றன. சிறிலங்காவில் இயல்பற்றதொரு அமைதி நிலவுவதாகவே தெரிகிறது.

இங்கு கடமையில் இருக்கும் படைவீரர்கள், கடந்த ஆண்டு இடம்பெற்ற போரில் பெரும் பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் ஏயார் மொபைல் படைப்பிரிவினைச் சேர்ந்தவர்களே. அவர்களது சீருடையின் தோள்பட்டையில் காணப்பட்ட அடையாளங்கள் அதனை உறுதிப்படுத்தின. போரை வெல்வதற்கு மாத்திரமின்றி இந்தப் படையினர் அமைதியினை நிலைநாட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இராணுவக் காவல்துறையினரோ அல்லது கடற்படைக் காவல்துறையினரோ அல்லது விமானப்படைக் காவல்துறையினரோ அணிவதைப் போலன்றி இவர்கள் பச்சை நிறத்திலமைந்த சப்பாத்துக்களை அணிந்திருந்தார்கள்.

வெள்ளை நிற பிக்கப் ரக வானமொன்று பாதுகாப்பு அமைச்சின் வாயிலை அண்மித்தபோது கடமையிலிருந்த படைவீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். வாகனத்தின் முன் இருக்கையில் இராணுவ அதிகாரி ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

கொழும்பு-3 இல், பாலதாச மாவத்தையின் அமைந்திருக்கும் பாதுகாப்பு அமைச்சினது வாசலில் கடமையில் இருக்கும் இந்தப் படைவீரர்கள் பாதுகாப்புக் கருதி குறித்த இந்தப் பிக்கப் வாகனத்தின் அடிப்பகுதியையும் வாகனத்தின் பின்பகுதியினையும் அவதானத்துடன் சோதனையிட்ட பின்னர் அமைச்சினது வளாகத்திற்குள் வாகனம் நகர்ந்து செல்கிறது.

பாதுகாப்பு அமைச்சினது வாசலில் யாழ்ப்பாணத் செல்வதற்கான படையினரின் எழுத்துமூல அனுமதியினைப் பெறுவதற்காக இருபதிற்கும் அதிகமான மக்கள் காத்திருக்கிறார்கள். கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் பிரதிகள் மற்றும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் குடாநாட்டுக்குச் செல்வதற்கான காரணம், எப்போது திரும்புவார்கள் என்பது போன்ற விபரங்கள் இவர்கள் கையளிக்கவேண்டும்.

அங்கு கடமையிலிருக்கும் ஆறு காவல்துறையினர் மற்றும் அனுமதியினைப் பெறுவதற்காக வந்திருக்கும் பொதுமக்களின் புழுக்கத்தினைப் போக்கும் வகையில் தலைக்குமேலே மன்விசிறி ஒன்று சுழன்றுகொண்டிருந்தது. மரத்தினால் அமைக்கப்பட்ட மேசையின் பின்னர் எழுத்தர் ஒருவர் அமர்ந்திருந்தவாறு அங்கு அனுமதி பெற வருபவர்களது விபரங்களைப் பதிந்தவாறிருக்கிறார்.

அனுமதிக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள் இந்தக் எழுத்தர் ஊடாகத்தான் குடாநாட்டுக்கான தங்களின் பயணத்திற்கான எழுத்துமூல அனுமதியினைப் பெறவேண்டும். அனுமதி நிராகரிக்கப்பட்டிருந்தால் வேறு கதையில்லாமல் திரும்பிவிடவேண்டியதுதான்.

"நாங்கள் பயண அனுமதியினைப் பெற்றுவிட்டோம்" எனக் கூறிய மேரி தனது கணவர் சில்வேஸ்ரருடன் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பயணத்திற்காகத் தயாராகிறாள்.

எழுத்தர் தெளிவான கையெழுத்தில் பதிவு செய்துகொண்டிருந்த அநேகமான கடிதங்கள் 'உங்களது சேவக்காக' என்ற வாசகத்தைத் தாங்கி தபால் செலவில்லாத இலவச கடித உறைகளைக் கொண்டிருந்தது. அவை புலனாய்வு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் தலைமைச்செயலம், பீஜிங்கிலுள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு, விமானப்படை புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் முகவரியிடப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கான அனுமதி கோரும் கடிதங்கள் அவை.

வயது முதிர்ந்த தமிழ் பெண் ஒருவர் அமைதியாக அமர்ந்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் வாயிலில் அமைந்திருக்கும் இந்த விடுதிக்கு இவர் தொடர்ந்தும் நாலாவது நாளாக வந்திருக்கிறார். ஆனால் இந்தப் பெண்ணுக்கு இன்னமும் பயண அனுமதி கிடைக்கவில்லை. இவரது மகள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் அதேநேரம் மகன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட வேளையில் கொல்லப்பட்டு விட்டாராம்.

"இன்றோ அல்லது நாளையோ எனக்குப் பயண அனுமதி வழங்கப்படலாம்" என்றார் அவர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் வீட்டில் இருக்கவில்லை. தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விரும்பும் வயதான இந்தப் பெண்ணுக்கு இன்றும் பயண அனுமதி வழங்கப்படவில்லை.

அமைச்சினது வாசலிலுள்ள பயண அனுமதி வழங்கும் விடுதியிலுள்ள தொலைபேசி மணி அடித்துக்கொண்டிருந்தது. இராணுவ காவல்துறையைச் சேர்ந்த, சிவப்பு நிறத் தொப்பி அணிந்த கோப்பிரல் தரத்தினைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தொலைபேசியை எடுத்து உரையாடிவிட்டு என்னிடம் அதனைத் தந்தார்.

"நீங்கள் யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கலாம்" என மேஜர் ரவீந்திர என்னிடம் கூறினார். "ஆனால் நீங்கள் வீதி வழியாகப் பயணிக்க முடியாது. கொழும்புக்கும் பலாலிக்கும் இடையே இடம்பெறும் விமானசேவை மூலமே நீங்கள் அங்கு செல்ல முடியும்" என்றார் அவர்.

எண்ணற்ற தொலைநகல்கள், தொலைபேசி உரையாடல்கள், எனது கோரிக்கைகள் மற்றும் பலமணி நேரக் காத்திருப்பின் பின்னர் ஒருவாறாக எனக்குரிய பயண அனுமதிக் கடிதம் கிடைத்தது. ஈற்றில் குறிப்பிட்ட இரண்டு திகதிகளுக்குள், யாழ்ப்பாணத்திற்கு வான் வழியாக மாத்திரம் பயணிப்பதற்கான பயண அனுமதிக் கடிதத்தினை அதே கோப்பிரல் தர அதிகாரி என்னிடம் கையளித்தார்.

அனுமதிக் கடிதத்தில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. எமது பயணம் தொடர்பான நெகிழ்வுத்தன்மை அந்தக் கடிதத்தில் இல்லை. ஆனால் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வர்த்தக வான்வழிப் போக்குவரத்து இப்போது இல்லையாம்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் நாளொன்றுக்கு ஒரு முறை மாத்திரம் விமானப்படை விமானமொன்று பறப்பில் ஈடுபடுகிறது. பாதுகாப்பு அமைச்சினது அனுமதிக் கடிதம் இல்லாமல் இந்த விமானத்தில் பயணிப்பதற்கான விமானப் பயணச் சீட்டினை நீங்கள் பெற முடியாது.

முட்கம்பிச் சுருள்களாலும், சீனத் தயாரிப்பு ரீ-56 துப்பாக்கிகளுடன் காவற்கடமையில் ஈடுபட்டிருக்கும் ஏயர் மொபைல் படைப்பிரிவினைச் சேர்ந்த படை வீரர்களாலும், மண் அரண்களாலும் சூழப்பட்ட விமானப்படைத் தலைமையத்தின் மத்தியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் படை வீரர்கள் வீசப்படும் பந்தினை தங்களது துடுப்பு மட்டைகளால் பதம்பார்க்கிறார்கள்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள அந்தப் பிரதேசத்தில் இவர் ஏன் நிற்கிறார் என்ற தொனியில் அங்கு ஆயுதம் தாங்கியவாறு கடமையில் நின்ற படைவீரன் ஒருவன் என்னைப் பார்த்தான்.

இந்தப் படை வீரரது மூக்கு நுனியில் ஏதோவொரு தழும்பு இருப்பதை நான் அவதானித்தேன். 'கிறிக்கெற்' விளையாடியா இந்தத் தழும்பு ஏற்பட்டது எனக் கேட்டேன். கடமையில் நின்ற அந்தப் படைவீரன் 'இல்லை' எனப் பதலளித்துவிட்டுச் சிரித்தான்.

இரண்டு மணி நேரமாகக் காத்திருந்த பின்னர் விமானப்படைக் கப்டன் ஒருவர் எனது கடவுச் சீட்டுடனும், பயண அனுமதிக் கடிதத்துடனும், யாழ்ப்பாணத்திற்கான விமானப் பயணச் சீட்டுடனும் என்னிடம் வந்தான். கொழும்பிலுள்ள ரத்மலானைப் பகுதியிலேயே விமானப்படைத் தளம் அமைந்திருக்கிறது.

இரண்டு ஹெர்குலிஸ் ரக விமானங்கள் மற்றும் இரண்டு அன்ரனோ ரக விமானங்கள் என்பன ஓடுபாதையில் தரித்து நின்றன.

வெளிநாட்டவர் எவரும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லுவதற்குத் துணியக்கூடாது என்ற எண்ணத்துடனோ என்னவோ, "ஏன் யாழ்ப்பாணத்திற்குப் போகிறீர்கள்" என ஒரு சார்ஜன் என்னைச் சந்தேகத்துடன் கேட்டார். "அங்கு விடுதலைப் புலிகள் இல்லையே. நீங்கள் அங்கு செல்வதற்கான காரணம்தான் என்ன" என்றார் அவர்.

இங்கிருந்த படைவீரர்கள் உள்ளிட்ட 40 வரையிலானோரும் பலாலிக்குச் செல்வதற்காகவே காத்திருந்தார்கள். இன்னொரு விமானத்திற்காக அவர்கள் காத்திருந்தாhகள்.

யாழ்ப்பாணத்திற்கான விமானப் பயணம் 80 நிமிடங்கள் வரை எடுத்தது.

விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஊடாக ஆனையறவு வழியாக எட்டு மணி நேரப் பயணத்தினை மேற்கொண்டுதான் நாங்கள் யாழ்ப்பாணம் செல்லவேண்டும்.

மைல்கணக்கான வீதிகள், மைல்கணக்கான கண்ணிவெடி வயல்கள், குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி அழிந்த மைல் கணக்கான கட்டடங்கள் எல்லாவற்றையும் தாண்டியே நாம் தரைவழியாக யாழ்ப்பாணம் செல்லவேண்டும்.

20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவு வங்காள விரிகுடாவில் கண்ணீர் துளியினை ஒத்த வடிவத்தில் அமைந்திருக்கிறது.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் ஏற்பட்ட வெறுப்புணர்வு, போர், வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றுக்கு ஊடானதாகவே குடாநாட்டுப் பயணம் அமைகிறது. இலங்கைத்தீவில் போரினால் ஏற்பட்ட வடுக்கைளப் போக்குவதற்கு அந்த நாடு கடுமையாகப் போராடிவருகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20100630101427

இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் தமிழினத்தை அழிக்க போராடுகிறார்கள்.

அமெரிக்கர்களின் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தைப்போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.