Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் பெருமையை பிறர் கூறக்கேட்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆக்கம் விகடன் வார இதழில் இருந்து பெறப்பட்டது,

நன்றி விகடன்.

கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து

வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி,

அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.

எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம்.

"தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம்.

உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி):

"நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை,

சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து

குழந்தைகள் நடந்தால், அவர்களும்வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும்,

ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழைஅழித்ததைத் தவிர!"

சைமன் (நெதர்லாந்து):

"ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்குமுக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச்

செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே,

இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!"

டிட்மிடா (ஜெர்மனி):

"தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க

வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த கல்விப் பயணம் எந்த ஒரு

அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே, அது போலத்தான்

இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப்போகும்!"

தாமஸ் லேமன் (ஜெர்மனி):

"ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனதில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான

கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது.

உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான

விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது, தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்!"

கலையரசி (சீனா):

"இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம்கொள்கிறீர்கள். பிறகு, மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன் என்னோடு

தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும்.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும், ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனதில் பதியும். ஆகவே, ஆரோக்கியமான தமிழ் வாழும்

இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ்மீதுகொண்ட காதலால்தான் என் பெயரை கலையரசி என்று மாற்றியுள்ளேன்.

எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெக் (கனடா):

"சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணை இல்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது.

பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை.

காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அவை சுவையுடன் இருத்தல் அவசியம்."

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):

"பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்கு தமிழும் தப்பவில்லை.

உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக

நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில்

நானும் பிழைக்க முடியும்' என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும்

இல்லையா. எனவே, எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்!"

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):

"உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்... பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை.

தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது, அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான்

அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவி ஆனாவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தை முதலில்

தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்!"

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):

"இதுபோன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன்

மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இதுபோன்ற நிகழ்வுகள் வெறும்

விளம்பரங்களாக இல்லாமல், ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு இருக்க வேண்டும்!"

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):

"நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம்

வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது, தமிழைச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான்.

இது போன்ற வரலாற்றையும், மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை

இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு, வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும்

வகையில் கொண்டுசேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!"

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கம் விகடன் வார இதழில் இருந்து பெறப்பட்டது,

நன்றி விகடன்.

கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி,

அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.

எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம்.

உண்மைதான்..

சில நாட்களுக்கு முன்பு எனது அயல்நாட்டு நண்பருடன் துபாய் பார்ஸாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஹங்கேரியைச் சேர்ந்த மூத்த பொறியாளர் ஒருவரை அலுவலக வேலை நிமித்தம் சந்திக்க நேர்ந்தது.. அவருடன் அறிமுகமான பின் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருக்கையில் அவர் திடீரென "வணக்கம் நலமாக இருக்கிறீர்களா..?" எனக் கேட்டுவிட்டு "அகர முதல" என்ற குறளையும் தடுமாறியபடி கூறினார். இத்தமிழ் வார்த்தைகளை எங்கே கற்றீர்களென வினவியபோது, இராக்கில் ஒரு தமிழ் நண்பருடன் சில மாதங்கள் திட்டப்பணியாற்றியபோது கற்றதாகக் கூறினார்.

இங்கே சென்னைத் தமிழின் வாசனையில் வாழும் எனக்கு, ஒரு அயலவரின் உச்சரிப்பில் நம் தமிழ், குழந்தையாக இருந்தாலும் மிக மிக இனிமையாக உணர்ந்தேன்.

தாமஸ் லேமன் (ஜெர்மனி):

"ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனதில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது, தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்!"

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):

"பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்கு தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்' என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா. எனவே, எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்!"

மிகவும் பிடித்த கருத்துக்கள்..வரவேற்கப்பட வேண்டியவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.