Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு மக்கள் ஆணை கொடுத்தது உண்மையானால், வடக்கு கிழக்கு மக்கள் கொடுத்த ஆணை என்னவாயிற்று?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மக்கள் ஆணை கொடுத்தது உண்மையானால், வடக்கு கிழக்கு மக்கள் கொடுத்த ஆணை என்னவாயிற்று? ச. வி. கிருபாகரன்

மிக அண்மையில், பி. பி. சி. தொலைக்காட்சியின் “காட் ரோக்” (கடும் உரையாடல்) இலங்கை பற்றிய நிகழ்ச்சியை, திரு ஸ்ரிபின் சுக்கார் மிக ஆழமாக, அழகாக, ஆதாரங்களுடன் அதற்குரியவர்களுடனான நேர்காணலுடன் தொகுத்து அளித்திருந்தார். ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இவ் நிகழ்ச்சியை உலகம் பூராகாவும் மக்கள் கண்டுகளித்தனர்.

இதில் பல சம்பவங்கள் மனித உரிமையாளர்கள், மனிதாபிதமான பணிப்பாளர்கள், சட்டவல்லுனர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் கவனத்தை மிகவும் கவர்ந்தன.

தொலைக்காட்சி, வானெலி, பத்திரிகை போன்ற ஊடகங்களில், ஓர் நேர்காணல் என்பது, அவ் நபரின் கருத்தை பிரதிபலிப்பதுடன், அவ் நபரினாது மனதில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை, உடல் மொழி (body language) உளரீதியாக (psychology) பல விடயங்களை அறியவும், அவற்றை அடிப்படையாக கொண்டு மேலதிக ஆய்வுகளுக்கும் இடமளிக்கிறது.

உடல் மொழி உளரீதியான பிரதிபலிப்புக்கள்

பி. பி. சி. தொலைக்காட்சியின் “காட் ரோக்” நிகழ்ச்சியில், பாதுகாப்பு செயலாளர் திரு கோத்தபாய ராஜபக்சவின் நேர்காணல், அவர் வெளிபடையாக கூறுவதற்கு மேலாக, அவரது உடல் அசைவுகளும், உளம் ரீதியான பிரதிபலிப்பும் எமது பல நீண்டகால கேள்விகள் சந்தேகங்களுக்கு விடை காணக் கூடியதாகவுள்ளது. உதாரணமாக பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை பற்றிய விடயம் - இலங்கையின் வரவு செலவு திட்டத்தில் எண்பது வீதமான பங்கை ராஜபக்சவின் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவது - தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தளபதி சரத் பொன்சேக்கா, யுத்தக் குற்றம் போன்ற கேள்விகளை பி. பி. சி. தொலைகாட்சியின் ஸ்ரிபின் சுக்கார் இவரிடம் வினாவும் வேளையில், இவரது பதில்கள் காரசாரமாக மிகவும் கோபமாகவும் அமைவதுடன், அவ்வேளையில் இவருடைய உடல் உள பாவனைகள் பல செய்திகளை கூறுகின்றன. இதை அவதானிக்க தவறியோர் மீண்டும் ஒருமுறை பார்க்கும் பொழுது இவற்றை அவதானிக்கலாம்.

அடுத்தபடியாக, இவர் கூறும் பதில்கள் பல, மிக வேடிக்கையாக அமைகிறது. உதாரணமாக, “எனக்கு தெரியவில்லை மற்றவர்கள் ஏன் இவற்றை பற்றி அக்கறை கொள்கிறார்கள் - பொய்யான அறிக்கைகள், இவை விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்கள் - எமக்கு எதிரானவர்களின் பிரச்சாரங்கள் - சுயநலன்களை அடிப்படையாக கொண்டுள்ளது” போன்றவை. ஒரு கட்டத்தில், பாதுகாப்பு செயலாளர் ஸ்ரிபின் சுக்காரிடம், “அமெரிக்கா ஜனதிபதி;, பிரித்தானிய பிரதமர் ஆகியோருக்கு எதிராக எழுதுகின்ற பல பத்திரிகைகளை, என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியுமென” இவர் சவால் விட்டதும், ஸ்ரிபின் சுக்கார், “நான் பிரித்தானியா அரசுக்கு எதிராக எழுதும் காரணத்திற்காக, நான் தலையில் துவக்கு ரவைகளுடன் முடிய மாட்டேன்” என பதில் கூறினார்.

ஸ்ரிபின் சுக்கார் ராஜப்சவின் குடும்ப ஆட்சி பற்றி கேள்விகள் எழுப்பிய பொழுது, பாதுகாப்பு செயலாளர், “ஜனதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் - பசில், நமல், சமல் போன்றோரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர், இதை தான் மக்கள் விரும்புகிறார்கள் அப்படியே இருக்கட்டும”; எனப் பதில் கூறினார்.

அது மட்டுமல்ல, “இவ் நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் ஜனதிபதியையும், இவ் அரசாங்கத்தை தெரிவு செய்கிறார்கள். மக்கள் தாம் செய்வது சரியென எண்ணுகிறார்கள் எனக் கூறியுள்ளார்.”

ஜனநாயக ரீதியான வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாக்கும் விருப்பமும் என்னவாயிற்று?

பாதுகாப்பு செயலாளரின் இப்பதில்களின் அடிப்படையில், ஓர் முக்கியமான கேள்வியை இவரிடம் மட்டுமல்லாது, பாதுகாப்பு செயலாளரின் பதில்களை ஏற்கும் சகலரிடம் கேட்க விரும்புவது என்னவெனில், “நீங்கள் மக்கள் விரும்பியபடி யாவற்றையும் செய்பவர்களானால், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக 1977ல் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருந்தொகையாக வாக்களிந்திருந்தனரே. அது மட்டுமல்லாது, அதனை தொடர்ந்து நடைபெற்று சகல பொதுத் தேர்தல்களிலும் தமது அரசியல் உரிமைகளுக்காக வாக்களிந்திருந்தனரே. கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு மக்கள் வாக்களித்திருந்தனரே! இவை அவ் மக்களின் விருப்பம் இல்லையா? அந்த மக்களின் விருப்பத்திற்காக பாதுகாப்பு செயலாளரும் அவரது அரசாங்கமும் இன்றுவரை எவற்றை நடைமுறை படுத்தியுள்ளார்கள்? அப்படியானல் ஜனநாயகத்திற்கு எதிராகவும், வடக்கு கிழக்கு வாழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் அரசாங்கம் யாவற்றையும் நடைமுறைப்படுத்துகிறது என்பது பொருளா?

அடுத்து பி. பி. சி. தொலைகாட்சி நேர்காணலில் பாதுகாப்பு செயலாளார் தளபதி சரத் பொன்சேகாவை தூக்கிலிடுவோம் என்பது தான் இவர்கள் கூறும் இலங்கையின் ஜனநாயகமா? இப்படியான விடயங்களை ஓர் தொலைக்காட்சி கூறுவதற்கு, பாதுகாப்பு செயலாளார் யாரிடம் அனுமதியை பெற்றிருக்கிறார்?

கோத்தபாய பாதுகாப்பு செலாளர் மட்டுடல்லாது, அமெரிக்கா குடியுரிமை உள்ளவராக இருந்த பொழுதும், இலங்கையில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை மூடும் நோக்குடனேயே, தான் அப்பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கை தொடர்ந்ததாக வெளிப்படையாக கூறுவது உலகத்தின் கண்களை திறக்க வைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நான் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளனோ அல்லது விசிறியும் அல்ல. ஆனால் ஊடகச் சந்திப்பை பொறுத்தவரையில் இவருக்கும், பாதுகாப்பு செலாளருக்குமிடையில் நீண்ட இடைவெளிகள் நிறைய உண்டு. சரத் பொன்சேகா செய்ய வேண்டிய தவறுகளை செய்துவிட்டு, ஊடகவியலாளர் முன், மென்மையான குரலுடன் இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்பது போல் தோன்றுகிறார். ஆனால் பாதுகாப்பு செயலாளார் தனது நேர்காணல்களில் மக்களின் சந்தேகங்களை நிருபிக்கும் வகையிலும், மேலும் பல சந்தேகங்களை உண்டாக்குவதற்கு வழிவகுக்கிறார்.

உண்மையை கூறுவதனால், ஓர் தொலைக்காட்சி நேர்காணலிலேயே பாதுகாப்பு செலாளார் இப்படியாக பதில் கூறுவதனால், அந்தரங்க சந்திப்புக்கள், தனிப்பட்ட கூட்டங்களில் விசேடமாக பாதுகாப்பு படைகளுக்கான உத்தரவு, ஆணை பிறப்பிக்கும் பொழுது என்ன நிலையாக இருக்குமென்பதை சாதரண மக்கள் ஊகித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

தேசிய கீதம் பற்றிய முரண்பாடு

பாதுகாப்பு செயலாளரை பொறுத்தவரையில், பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றிய நியாயத்தை கேட்பதை, பிரச்சாரம் என்கிறார். ஆனல் பத்திரிகையாளர் திருமதி பிரட்ரிக்கா ஜான்ஸ், லசந்தவின் கொலை, அவரது பத்திரிகையின் வரலாறு, துணிகரமான பத்திரிகையாளரின் கடமை போன்றவற்றை மிக ஆணித்தரமாக எடுத்து கூறுகிறார்.

சிறுபிள்ளை இராணுவத்தின் புனர்வாழ்வு பற்றிய தகவல்கள் மிக நல்லவிடயம். ஆங்கில ஆசிரியை திருமதி பேனடையின் அன்டர்சனால் இவ்விடயம் மிக அழகாக எடுத்துக் கூறப்படுகிறது.

ஆனால்,இவ் புனர்வாழ்வு நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிரிகேடியர் சுதந்த ராணசிங்கவிடம், பி. பி. சி. தொலைகாட்சியின் ஸ்ரிபின் சுக்கார், “நீங்கள் சிங்கள மொழியில் எந்த தொடர்புமில்லாத பிள்ளைகளை, சிங்கள மொழியில் உங்கள் தேசிய கீதத்தை படிக்க நிர்ப்பந்தித்தீர்களே, இது சரியான செயலா?” என வினாவியபொழுது, பிரிகேடியர் ரணசிங்க, “உலகில் எந்த நாட்டிலும் பல மொழிகளில் தேசிய கீதம் பாடுவதில்லையே” என கிணற்றுத் தவளை போல் பதில் கூறுவது மிக விசித்திரமாகவுள்ளது.

உண்மையை கூறுவதானால், சுவிற்சர்லாந்தில் ஜெர்மன் மொழியில் உள்ள தேசிய கீதம், அவ் நாட்டில் உள்ள மற்றைய உத்தியோக மொழிகளான – பிரெஞ்சு, இத்தாலி, றோமானிஷ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் ஆபிரிக்காவில் உள்ள பதினொரு உத்தியோக மொழிகளில், விகிதாசாரம் கூடிய ஐந்து மொழிகளான – சுலூ, கோசா, சேசோத்தா, ஆபிரிக்கான, ஆங்கிலம் ஆகிய மொழிகளை உள்ளடக்கியே தென் ஆபிரிக்காவின் தேசிய கீதமான “ஆபிரிக்காவை கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்பது உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, அறுபதாம் ஆண்டளவில், வடக்கு கிழக்க்கு மாகாணங்களில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் வற்புறுத்தலில் பிரகாரம், அவ்வேளையில், பண்டிதர் எம் நல்லதம்பி அவர்களினால் இலங்கையின் தேசிய கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, “நாமோ நாமோ தாயே......” என்று அவ்வேளையில் பாடப்பட்டது. தற்பொழுது இலங்கை அரசு சர்வதேச ரீதியாக, தமிழும் இலங்கையின் உத்தியோக மொழிகளில் ஒன்றேன பிரச்சாரம் செய்கிறார்களே தவிர, அதை நடைமுறைப்படுத்தாமல், தொடர்ந்து தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி வருகின்றனார்.

பாலஸ்தீனருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் இலங்கை, தமிழர் அரசியல் பிரச்சனைகளுக்கு என்ன செய்கிறார்கள்?

ஜெனிவாவில் நடந்து முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் 14வது கூட்டத் தொடரில், கடந்த யூன் 14ம் திகதி உரையாற்றிய இலங்கையின் பிரதிநிதி, திருமதி கிஸ்னுக்கி செனிவிரத்தின உரையாற்றுகையில், “பாலஸ்தீனம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட அரபு நிலப்பரப்புக்களில், மனிதபிமான நிலை மோசமடைவதையிட்டு இலங்கை தனது கரிசனையை தெரிவித்துக் கொள்வதாகவும், பாலஸ்தீனிய மக்களின் அரசியல் பிரச்சனைகள், இரண்டு தேசம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் எனவும், பாலஸ்தீனிய பிரதேசங்களில் உடனடியாக சட்டவிரோத குடியேற்றங்கள் நிறுத்தபடவேண்டுமென, அதேவேளை, இஸ்ரேல் சர்வதேச சமூதாயத்தின் வேண்டுகோளை மதித்து, பாலஸ்தீன பிரதேசங்களுக்கான தடைகளை உடனடியாக தளர்த்த வேண்டுமென” கேட்டுக்கொண்டார். (ஐக்கிய நாடுகளின் செய்திச்சேவை)

http://www.ohchr.org/en/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=10149&LangID=E

இலங்கை வழமையாக தமிழர் பிரச்சனைக்கு கூறுவது போல், இஸ்ரேலும் தற்போதைய பாலஸ்தீனிய பிரச்சனையை, ஓர் “பயங்கரவாதப் பிரச்சனையென” கூறுவதை இலங்கையின் ஜெனிவா பிரதிநிதி அறிந்திருப்பாரென நம்புகிறேன். அப்படியானல், இஸ்ரேலுக்கு உபதேசம் புத்திமதி கூறும் சிறிலங்கா, இலங்கைதீவில் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு அதேவிதமாக அணுக ஏன் தவறுகிறார்கள்? “படிப்பது தேவராம், இடிப்பது சிவன் கோயிலா”?

அண்மையில் சர்வதேசத்தின் கண்துடைப்புக்காக இலங்கையினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு நியாயத்தையும் பெற்று தரப்போவது இல்லை. காரணம், இதில் நியமிக்கப்பட்ட அங்கத்தவர்கள் பலர், மிக நீண்ட காலமாக இலங்கைக்காக சர்வதேச பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களில் சிலருடன் ஐ. நா. மனித உரிமை கூட்டங்களில,; தர்க்கப்பட்டுள்ளேன்.

இதில் வியப்புக்குரிய விடயம் என்னவெனில், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட சகல இலங்கை அரச பிரதிநிதிகள் கூறுவது என்னவெனில், முப்பது வருடகால பிரச்சனையை சில மாதங்களிலோ, சில வருடங்களில் சரி செய்ய முடியாதாம். ஆனால் வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றவும், ஆங்காங்கே புத்த கோயில்கள் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கும், அரசிடம் தாராளமான நிதி இருப்பதுடன், மனித வலுவும், காலநேரமும் ஓரு பிரச்சனையாக காணப்படவில்லையே! இது தான் இலங்கையின் இராணுவ வெற்றியின் பெறுபேறுகளா?

சுவருக்கும் காது இருக்கிறது

அடுத்து, கொழும்பில் மற்றைய இனத்தவர்களைவிட தமிழர் கூடுதலாக வாழ்வதாக பல சிங்கள அரசியல்வாதிகள் தினமும் முணுமுணுக்கிறார்கள். ஆனால் இதே சிங்கள அரசியல்வாதிகள் தான், நீங்கள் தமிழர் அல்லா, நீங்கள் யாவரும் “இலங்கையை” சேர்ந்தவர்கள் என பெரிய ஞானம் பேசுகிறார்கள்.

“சுவருக்கும் காது இருப்பதாக” பலர் கூறுகின்றனர். இதன் பிரகாரம், தன்னை “பயங்கரவாத்தின் நிபுணர்” எனக் கூறிவந்த ஒருவர், தற்பொழுது நோர்வேயின் வெற்றிடத்தை நிரப்பியுள்ளதாக அறிகிறோம்.

இறுதியாக. அண்மையில் சில நண்பர்களுடன் உரையாடும் வேளையில் மேல் கூறப்பட்ட விடயங்களை உள்ளடக்கி ஓர் கட்டுரை எழுதவுள்ளதாக கூறியபொழுது, அவர்கள் “நீயே உனது சவக்கிடங்கை கிண்ட முயற்சிக்கப்போகிறாய்” என்றார்கள். அவர்களுக்கு கூறிய பதில், “நீதி, நியாயம், உண்மை ஆகியவற்றை உலகிற்கு காண்பிப்பதற்கு, இது தான் பரிசு ஆனால், அதை நிட்சயம் ஏற்றுக்கொள்வேன்” என்றேன். வில்லியம் சேக்ஸ்பியர், கூறியதாவாது, “கோழைகள் தமது இறப்புக்கு முன் பலதடவைகள் இறப்பார்கள், துணிவுள்ளோரும் வீரர்களும் வாழ்க்கையில் ஒரு தடவை தான் இறப்பார்கள்”.

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

நன்றி பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.