Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களை எது நல்விதை எது என்பதை இனம்காண்போம்...........

Featured Replies

எம் இனியவர்களே!............

எம் தேசிய விடுதலை போராட்டம் தீவிரமாக கொழுந்துவிட்டு எரியும் போதல்லாம் அதனை அணைப்பதற்க்கு சிங்கள பேரினவாதம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததை யாவரும் அறிந்தே வைத்துள்ளோம்.தமிழ்தேசியத்தை விலைக்கு

வாங்குதல்,பேரம்பேசுதல்,துரோகிகளை உருவாக்குதல்,தேசியத்தை சிதைப்பதற்கான முயற்சிகள் என்பன போன்றவைகளாகும்.சிங்களபேரினவாதத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டு தந்திரோபாய நடவடிக்கையினூடாக எம் தலைவர் கடந்த பல ஆண்டு காலமாக தனியே தனித்துவமாக எம் புலம்பெயர்சமூகத்தின் ஆதரவுடன் போராட்டத்தை வெற்றி நடைபோட வழிகாட்டியாக திகழ்ந்தார் என்பதே நிஜம்.

தமிழரின் படை வலிமையே தமிழனை பாதுகாக்கும் என்னும் கோள்பாட்டிற்கமைய தமிழரின் படை வலிமை பெற்று விளங்கியது.முப்படைகளையும் கொண்ட மரபுவழி தமிழர் படையாக பிரணமித்து கொண்டபோது தான் சிங்கள பேரினவாதம் விழித்து கொண்டு உலகவல்லாதிக்கத்தினதும்,அயல்நாடுகளின் ஆசியுடன் தமிழர்களை அழிக்க தொடங்கி முடிவும் கண்டதாக பீற்றிகொள்கிறது.

சிங்கள பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புக்கள்,சதிவலைகள்,யுத்தங்களில் எம் பிள்ளைகள் போராடி மடிந்த போது அவர் புகழ் பாடி வலுச்சேர்த்தோம்.அவர் நினைவுகளே எம் மனதில் நிறைந்திருந்தது.எம் மனங்களில் கோவில் கட்டியல்லவா பூசித்தோம்.அவர் நினைவு நாள்களில்,நகரங்களில் பொதுக்கூட்டங்களில் அலைமோதும் சனத்திரள்..

உலகமே எம்மால் தானே தாயகத்தை கூர்ந்து பார்த்தார்கள்.படுகொலைகளை வெளிகொணர்ந்த போராட்டங்கள்.கொடும்பனிக்குளிரிலும் சிறியவர்,பெரியவர் என எம் உறவுகளுக்காய் குரல் கொடுத்தோமே......எல்லாவற்றையும் மறந்து தான் போனோமா?

எமை நம்பியே தங்களை ஆக்கி கொண்ட அந்த இனியவர்களை மறந்தோமா? எல்லாவற்றையும் இழந்து வாழ வழியற்று நாதியற்ற இனமாக அல்லலுறும் எம்மக்களின் வேதனைகளை மறத்தோமா?.........எமக்காய் சுடுகலன் ஏந்தி சிங்களத்தின் சிறைகளில் கொடூர சித்திரவதைகளை அனுபவிக்கும் எம் போராளி செல்வங்களை மறந்தோமா?.....மறப்பதற்கா இரவு பகலாய் உழைத்து தாயகத்தையும்,மக்களையும் காத்தோம்.

எம் புலம்பெயர்வாழ் தமிழரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பல்வேறு குழுக்களூடாக தமிழர்களின் உளவுரனை சிதைக்கும் நடவடிக்கைகளை சிங்கள புலனாய்வாளர்கள் திட்டமிட்டபடி அரங்கேற்றுகின்றனர்.அதற்க்கு தகுந்தால் போலஎம்மில் சிலரும் எம்தேசத்தின் மீள் கட்டுமானம் எனும் போர்வையில் சிங்களத்தின் காலடியில் சரணாகதி அடைவதை காண்கிறோம். களை எது நல்விதை எது என்பதை இனம்காண்போம்.

ஒரு புறம் எம்தாயக பகுதி எங்கும் சிங்கள குடியேற்றங்கள் மறுபுறம் மீள்குடியேறிய மக்கள் மீது கொலை வெறிதாக்குதல்கள், பெண்கள் மீதான வன்புணர்வுகள்,சமூக,விரோதசெயற்பாடுகளை தூண்டிவிடும் போதை,விபச்சார நடவடிக்கைகள்.இவை யாவற்றையும் கண்டும் காணாது போல் எம் அரசியற் தலைமைகளின் செயற்பாடுகள்.

இதற்கு மேலாய் தேசியத்திற்காய் முன்னின்று செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளும் சில இணையத்தளங்களின் செய்திகளின் வெளியீடானது எமது தேசியத்தை மேலும் சிதைவுறும் வண்ணம் உள்ளது. அண்மைகாலமாக எம் பெண் போராளிகளை சிங்கள இனவெறியர்களால் நிர்வாணமாக்க பட்டு படுகொலை செய்ததாக கருதபடும் படங்களை நாகரிகம் மறந்து இணையத்தளங்கள் பலவும் வெளியீடு செய்த நிகழ்வு எந்தவொரு தமிழனாலும் இலகுவில் மறந்து விட முடியாது.

தன் சகோதரியை,தன் மகளை கண்ணுற்ற உறவுகளின் மனக்குமுறலை இணையத்தளங்கள் நடத்துவோர்.புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான யதார்த்தமான அறிக்கைகள், பத்திரிகை தர்மம்,என்பன கடைப்பிடிக்கபடுதல் அண்மைகாலமாக காணபடுதல் காணோம்.

அன்பானவர்களே!............

சிதைவுற்ற எம்தேசியத்தை ஒன்று சேர்க்க பாடுபடுவோம்.

உயிர் நீத்த இனியவர்களின் தியாகத்தை ஏற்ப்போம்..

தேசியத்திற்காய் போராடி வெல்வோம்..http://uyirambukal.blogspot.com/2010/07/blog-post_3046.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.