Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு குறிப்பாய் சீன முதுமொழி ஒன்று .....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு குறிப்பாய் சீன முதுமொழி ஒன்று ....

www.infotamil.ch.

நாய் குலைக்கிறது என்பதற்காக கல்லெறிய முடியாது தான் கல்லெறிந்து நாயைத்துரத்தினால் கடியிலிருந்து நிவாரணம் தேடலாம்,

ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது. ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள் துரோகிகள் என்று துச்சமாகப் பிரசாரம் செய்கிறார்கள் பொய்யுரை வேண்டாம், கேபியை துரோகியாக்கும் காகிதப் புலிகளே மக்கள் மன்ற விவாதத்துக்கு தயாரா? துணிவிருந்தால் வாரும்? ஒற்றுமை என்பது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் இருக்க வேண்டும்

காகிதப்புலிகளே உங்களிடம் சில கேள்விகள்?

அடிக்கடி நீங்கள் கே.பி விவகாரத்தை தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன??

உங்கள் குழுமம் விடுதலையின் பேரால் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கடன் கொடுத்தவர்க்களுக்கு கொடுத்துதவாமல் நீங்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதன் மர்மம் என்ன?

உங்களை நம்பி எத்தனையோ பணியாளர்கள் விடுதலைக்கு கடன் பெற்று தந்தோமே? அதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விடுதலையை நேசித்தோம் என்ற ஒன்றுக்காக நீங்கள் செய்யும் அக்கிரமங்களை பொறுத்துக் கொண்டோம், எத்தனை பணியாளர்களின் குடும்பங்கள் கடன் சுமையால் தவிக்கிறன [நீங்கள் இப்படி தேசிய விடுதல இயக்கத்தை அதுவும் தேசியத் தலைவரை மதிக்கின்றோம் போற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு]

அவர்களின் வாழ்வுக்கு ஓர் ஆறுதலுக்காவது இதுவரை என்ன செய்தீர்கள். ?

கே.பி விவராரத்துக்கு முக்கியம் கொடுத்து வாழ்க்கை ஓட்டும் நீங்கள் எமது மக்களினதும் போராளிகளினதும் விடுதலைக்கும் மறுவாழ்வுக்குமாக என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?

கே.பி யை விமர்சிக்கும் எந்த காட்டுமானோ இல்லை சேரமானோ அதுசரி நீங்கள் மட்டும் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகத்தில் பணி புரிந்த போராளிகளை மட்டும் சிங்களவனுக்கு காசு கொடுத்து வெளியே கொண்டுவருவதன் மர்மம் என்ன? சிறைப்பட்ட மற்றவர்கள் போராளிகள் இல்லையோ?

உங்களின் இன்றைய தேசியத் தலைவர் அறிவு மற்றும் கலையழகன் ஆகியோர் எப்படி வெளிநாட்டுக்கு வந்தார்கள்?

காஸ்ரோவின் சர்வதேச நிதித்தொடர்பாளர்களில் ஒருவரான மலேசிய இராயன் மகிந்த சமரசிங்காவின் கூட்டாளியாக இருந்து கொண்டு காட்டிக்கொடுக்கிறாரே அதை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள்?

பாலகுமார் உட்பட யோகி வரை சரணடைந்தார்களே சிறையில் என்ன நிலையோ தெரியாது? ஆனால் கடைசி வரை அதாவது 2009 மே 10 காஸ்ரோ வீரச்சாவடையும் வரை அவருடன் நின்ற ஊடக பிதாமகன் நந்தகோபன், மற்றும் திலீபன் எப்படி புலம்பெயர்ந்த தேசத்துக்கு வந்தார்கள் இதன் மர்மங்களை மக்களுக்கு சொல்வீர்களா??

கேபி தமிழினத்துரோக்கி அவர் கோட்டபாயவுடன் கட்டித்தழுவுகின்றார் என்றால், கிசோர் மூலம் TRO ரெஜி இன்றும் பசில் ராஜபட்சவுடன் தொடர்பு கொண்டு பின்கதவால் காரியமாற்றி வருகின்றாரே அது எப்படி? அவரை எந்தப்பட்டியலில் இணைக்கப்போகின்றீர்கள்?

கே.பி துரோகம் பண்ணுவதாக சொல்லும் கனவான்களே கருணா கும்பலிடம் சுவிசில் காசுவாங்கினீர்களே அது தவறு என்று நாம் தட்டிக்கேட்ட பொழுது. போராட்டத்துக்கு காசு வேணும் அது எங்கையும் பெறுவோம் அது கருனாவாக இருந்தாலென்ன டக்கிளஸ்சாக இருந்தாலென்ன எமக்கு காசு வேண்டும் என்று காஸ்ரோ சொன்னாரே அதன்படி சுவிசிலுள்ள கருணாவின் தொடர்பாளரிடம் ???? ?????????? 2 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? ஆதாரமும் சாட்சியும் உண்டு இதை எப்படிச் சொல்வது. துரோகம் என்பதா?? இல்லை காஸ்ரோ என்னும் குறுநில மன்னனின் தியாகம் என்பதா?

மாவீரரின் இரத்தத்தால் எழுதிய தேசியக்கொடியை விளையாட்டு விழாவில் கிழித்தெறிந்து காவல்துறையில் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் , நீதி மன்றத்தில் வழக்குப் பதிவுசெய்தவர்களிடம் 1 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? இது தவறு என்று வாதிட்ட கிளைப் பொறுப்பாளாரை தாக்கும்படி காஸ்ரோ தமிழ் இளையோர் அமைப்பிடம் சொல்லி தூண்டி விட்டாரே இதை எப்படி சொல்வது? இந்த தவறினால் இதே விளையாட்டு விழாவை நடத்தவிடாது காவல்துறை தடை விதித்துள்ளதே?

சரி இப்படி பல ஆதாரங்கள் உண்டு

இவற்றை தட்டிக்கேட்டால் எம்மை குறை சொல்வோரும் உண்டு சரி அவர்களாவது மக்களை ஒன்றுதிரண்டு இவ்வாறன குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைகாமல் எம்மை மட்டும் விமர்சிப்பது ஏன்? ஊர்கூடி வடம் பிடித்தால் தேர் அசையும்.

சரி இன்னொன்றையும் கேட்கின்றோம்? தலைவர் இருக்கிறார்? என்று உங்கள் வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட இந்தப் பிரச்சனைகளை அவர் வந்து தீர்த்துக்கொள்வார் தானே? அதுவரையாவது நீங்கள் அமைதியாகி தேசிய விடுதலையின் மீட்கிக்காய் உழைக்க முற்படலாம் தானே?

தலைமையை நேசிக்கும் போராளிகள் உண்மையான விடுதலைத்தாகத்துடன் ஒன்றிணைந்து உருவாக்கி பணிபுரிய ஆரம்பித்திருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தை தவாறான செயல்திட்டத்துக்குரிய ஸ்தாபனம் எனச்சொல்லி நிராகரிக்கும் காஸ்ரோவின் கும்பல்கள் சில தாங்களே உண்மையான விடுதலைப்புலிகள் எனச்சொல்லிக்கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குழப்புவதன் பின்னணி என்ன?

கொடியவரே உமக்கு உண்மையில் தேசியம் வெல்லப்படவேண்டும் மாவீரரின் கனவு நனவாகவேண்டும் என்றால் அதை உணர்ந்து செயல்படவாரும். பொய்களைச் சொல்லி மக்களை ஏன் விடுதலை மீது வெறுப்படைய வைக்கின்றீர்கள்?

உம்மை நாம் கண்டித்தால் கே.பி யின் கையாட்கள் என்பீர்கள், மகிந்தாவின் கையாட்கள் என்பீர்கள் மிஞ்சிபோனால் துரோகிகளின் இணையம் என்று வார்த்தைதவறி கறுப்பு பக்கத்தில் எழுதுவீர்கள்? அவ்வளவு தானே? ‘வரலாறு தான் எமது வழிகாட்டி’ என்று எமது தேசியத் தலைவரே கூறியிருக்கிறார். அந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளத் தவறினால் அது எமது இனத்தை நிரந்தர அடிமைத்தனத்துக்குள் கொண்டு செல்லவே வழிகோலும்.

உண்மைத்துணிவிருந்தால்......

கேட்கிறோம்

நேரடி விவாதத்துக்குத் தயாரா?

போர்க் கைதியான கேபி, விவகாரம் இலங்கை அரசு எதிர் நோக்கும் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளை முறியடிக்கவும் அல்லது எளிதாக முகம் கொடுக்கவும் வழி கிடைக்கும். இவர்றை எல்லாம் கே.பி. அறியாமல் இருக்கிறார் எனக் கருத முடியாது. அவர் ஒரு கைதி அவரின் மேலாளர் கூறுவதை மட்டுமே அவரால் பேச முடியும் என்பதையும் அவர் கூற விரும்பாததை அல்லது கூறாததைக் கூறினார் எனப் பரப்புரை செய்யும் ஆற்றலும் ஆளுமையும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் ஊடகங்களுக்கும் உண்டு என்பது உலகறிந்த உண்மைகள் ஆகும். இதன் மூலம் கே.பி.யின் இன்றைய செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்கவேண்டும் என்பதல்ல எமது வாதம்.

இனி,

இயக்க நிதிக்குப் பொறுப்பானவர்களைக் கே.பி. கடுமையாக எச்சரித்து மக்களின் பணத்தை சரியான வழியில் நிர்வகிக்க வேண்டும் எனக் கால எல்லை நிர்வகித்த நிலையில் பல கோடி சொத்துக்களை தம்வசம் கொண்டுள்ள பேர்வழிகளே அவரது கைதுக்கு துணை நின்றனர்?

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிரான பரப்புரை இலங்கை இந்திய அரசுகள் முன்னெடுத்து வருவதை எவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால்,

புலம் பெயர் தமிழர் ஆதரவு ரீ.ஆர் ரீ தமிழ் ஒலி வானொலியும் அதில் இடம்பெறும் வாதப் பிரதிவாதங்கள் பிரதிபலிக்கும் கடுமையான நாடு கடந்த அரசுக்கு எதிரான நிலைப்பபாடும் புரிந்து கொள்ள முடியாதபடி இருக்கும் சோகம் நிலவுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரது கருத்துகளும் புறந் தள்ளக் கூடியவை அல்ல. அவர்களின் கருத்துகளில் நியாயமான சந்தேகங்களும் தர்க்கரீதியான கேள்விகளும் நிச்சயமாக நடுநிலையுடன் பார்க்க வேண்டியவை என்பதும் மறுப்பதற்கில்லை. இப்படியான நிலை ஏற்படக் காரணமாக இருப்பவை தமிழரின் ஏகோபித்த தலைமை தாமே எனக் கூறி வழிநடத்திய ஒரு அமைப்பு இன்று ஒரு வருட காலமாகியும் ஆக்க பூர்வமான நடவடிக்கை எதனையும் மேற் கொள்ளாது பல கூறுகளாகித் தனக்குள் மோதி நிற்கும் அவல நிலைக்கு உள்ளாகி இருப்பதேயாகும்.

மேலும்,

தலைவர் பிரபாகரனால் இயக்க தேவை கருதி அதன் உத்தியோக பூர்வ வெளியுறவுத் தொடர்பாளராக செல்வராசா பத்மநாதனை அறிவித்த போது கூட அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வராத பேர்வழிகள் இன்று அவரே இயக்க அழிவுக்கு வழி சமைத்த துரோகி எனவும் வாய் கூசாது பேசி வருகின்றனர். இயக்க பணியிலிருந்து அவரை ஒதுக்க அரும்பாடு பட்ட இவர்கள் அவரின் மீள் வருகையை எப்படித்தான் சகித்துக் கொள்ள முடியம்?

இயக்க நிதிக்குப் பொறுப்பானவர்களைக் கே.பி. கடுமையாக எச்சரித்து மக்களின் பணத்தை சரியான வழியில் நிர்வகிக்க வேண்டும் எனக் கால எல்லை நிர்வகித்த நிலையில் அவர் கைது செய்யப் பட்டார் என்பதை அறியும் பொழுது இன்றும் பல கோடி சொத்துக்களை தம்வசம் கொண்டுள்ள பேர்வழிகளே அவரது கைதுக்கு துணை நின்றனர் எனக் ஏன் கருத முடியாது?

இப்போது புதிதாக அவருக்கும் இலங்கை அரசுக்கும் 2006 முதலே தொடர்பு இருந்தது என்ற கதையை இலங்கை அரசு சொல்ல அதனை நாமும் வேத வாக்காக கருதி கே.பி.யை சாடுவது எப்படி நியாயம் ஆகும்?

அவரது இத்தனை வருட கால உழைப்பையும் திறமையையும் பயன்படுத்தித் தலைவரின் பாராட்டுக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்த மனிதனை சிறையில் வாடும் நிலையைக்கூட நினைத்துப் பாராது நன்றி உள்ள தமிழினம் நாக்கூசாது வசைபாடுவது மகிழ்ச்சியைத் தருகிறதா?

எந்த நிலையில் எது முக்கியமோ எது சாத்தியமோ அந்த வழியில் அதனைச் சாதிப்பதே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல் முறை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் கே.பி.யின் செயற்பாடுகள் இன்றும் உள்ளதாகவே பார்க்க வேண்டுமே அல்லாது அவரை நேர்மையற்ற விமர்சனத்துக்கு உட்படுத்துவது முறையாகாது. சிறைப் படுத்தப் பட்டுள்ள போராளிகளையும் மக்களையும் எந்த வகையிலாவது காப்பாற்றுவதே தமது நோக்கமாகத் தமது சிறை வாழ்வைப் பயன்படுத்த முனைகிறார் என்பதே அவரது நினைப்புப் போல் உள்ளது. ஆவரது இன்றைய செயற்பாடு சரியா தவறா என்பது பற்றிய கேள்வியே உண்மையில் விடை காணப் படவேண்டும்.

இதன் மூலம் கே.பி.யின் இன்றைய செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்கவேண்டும் என்பதல்ல எனது வாதம். அவர் சுதந்திர மனிதராக வெளியே நடமாடி செயற்படும் நிலை உருவானால் மட்டுமே நாம் அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்க முடியும். இந்நிலையில் அவரைச் சந்தித்து வந்த வைத்தய கலாநிதியின் ஊடக நேர்காணல் முக்கியமாகக் கவனத்துக்கு நாம் எடுக்க வேண்டும்.

புலிகளின் ஏராளமான சொத்துகள் பற்றியும் அவற்றை யார் எப்படிக் கையாடலாம் என்பதே பலரதும் இன்றைய கவனமாக உள்ளதே அல்லாது மக்களின் நலன் பற்றிய கவனம் எவரிடமும் காணப்படுவதாக தெரியவில்லை. சிங்கள அரசு தமிழ் மக்களின் அவலத்தைக் காட்டி உலக நாடுகளிடமிருந்தும் புலம் பெயர் தமிழரிடமிருந்தும் கறந்து சிங்கள இனத்தை வளம்படுத்த நினைக்கிறது. அதனைக் கோத்தபாயா அவரைச் சந்தித்த புலம் பெயர் புத்தி ஜீவிகளிடம் வெளிப்படையாகவே முதலில் உங்களிடம் உள்ளதைத் தாருங்கள் பின்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முடக்கி வைக்கப்பட்ட நிதியைப் பார்க்கலாம் எனக் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிங்கள அரசின் முனைப்பில் தமிழருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது என்பதை முதலில் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசாலும் தமிழருக்கு நன்மை கிடைக்காது என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடமாக உள்ளது. இந்த நிலையில் நாம் எதுவித நிவாரண உதவி செய்ய நினைப்பின் அதனை வெளிநாட்டு அரசுகள் அல்லது தொண்டர் நிறுவனங்கள் மூலமாகச் செய்வதுதான் உண்மையான உதவியாக அமையும். ஏனவே அதற்கான செயற்பாடுகளைச் செய்வதற்கு நாடு கடந்த அரசு ஒன்றுதான் ஈழத் தமிழருக்கு உள்ள ஒரு வழி முறையாகத் தெரிகிறது.

இந்திய இலங்கை அரசுகள் இரண்டுமே தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளைத் தமது கைக்குள் வைத்துப் பகடையாடி வருகின்றன. இதில் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கம். மேலும் எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் தமிழர் தேசியம் தன்னாட்சி என்பன பற்றியோ குறைந்த பட்சம் சமஷ்டி ஆட்சி பற்றியோ பேச முடியாதபடி அதிபர் ராஜபக்ஷவின் எச்சரிக்கை இருக்கும் நிலையில் புலம் பெயர் தமிழரின் அரசியல் வேலைத் திட்டம் எப்படி தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்ல முடியும்?

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய பேச்சுகள் எழுந்த போது எள்ளி நகையாடிய இலங்கை இந்திய அரசுகளும் சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் துரோகக் குழுக்களும் இன்று உலகப் பரப்பில் தமிழீழ அரசு உருவாகும் நிலை கண்டு அதனை எப்படியும் உருவாக விடாது சிதைத்து விடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் ஒரு வடிவம்தான் இன்று கே.பி.யை பயன்படுத்தி புலம்பெயர் தமிழர் இடையே பெரும் பிளவை உருவாக்கும் முயற்சி பார்க்கப்பட வேண்டும்..

இதனால் இலங்கை அரசு எதிர் நோக்கும் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளை முறியடிக்கவும் அல்லது எளிதாக முகம் கொடுக்கவும் வழி கிடைக்கும். இவர்றை எல்லாம் கே.பி. அறியாமல் இருக்கிறார் எனக் கருத முடியாது. அவர் ஒரு கைதி அவரின் மேலாளர் கூறுவதை மட்டுமே அவரால் பேச முடியும் என்பதையும் அவர் கூற விரும்பாததை அல்லது கூறாததைக் கூறினார் எனப் பரப்புரை செய்யும் ஆற்றலும் ஆளுமையும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் ஊடகங்களுக்கும் உண்டு என்பது உலகறிந்த உண்மைகள் ஆகம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் எடுக்காது நாடு கடந்த அரசையும் அதன் பணியாளர்களையும் பொறுப்பற்ற கீழ்த்தரமான விமர்சனங்களால் தாக்குவது நேர்மை அற்ற செயல் என்பது மட்டும் அல்ல ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றாகவே அழித்துவிடும் நிலைக்குத் தள்ளிவிடும். இன்னும் சிலர் சரத் பொன்சேகா மீது பெரு நம்பிக்கை வைத்து சயர்வதேச விசாரணையில் சிங்களத் தலைமைக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவார் என நினைப்பது பெரும் அபத்தமாகும்.

அமைதிப் பேச்சுகளின் போது புலிகள் விடுத்த அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் மீளவும் மக்கள் குடியேற்றத்துக்கு விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை செயற்பட விடாது தடுத்தவரும் செம்மணிப் படுகொலைகளின் சூத்திரதாரியும் இவரே என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மேலும் தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் தயவுடனும் புண்ணியத்திலும்தான் இலங்கையில் வாழ வேண்டும் என்றவரும் தமிழகத் தமிழ் அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்றும் பேசிய சிங்கள இன வெறியன் என்பதும் நினைவிற் கொள்ளுவதும் அவசியம் ஆகும்.

புலம் பெயர தமிழரும் விமர்சகர்களும் பொறுப்புடன் செயற்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசமைக்கும் பணிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி தமிழினத்தின் விடுதலைப் போரினைப் புலத்தில் முன்னெடுக்க வேண்டும் எனப் பணிவாகக் கேட்கிறேன்.

ஆகவே,

எதிரியை நடுங்க வைக்கும் நாடு கடந்த தமிழீழ அரசா எதிரிக்கு நடுங்கி வாழும் தமிழர் தேசியக் கூட்டமைப்பா புலம் பெயர் தமிழரின் தெரிவு?

கட்டுரையாளர் த.எதிர்மன்னசிங்கம். இன்போதமிழ் குழுமம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.