Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் குற்றங்களும் மனித நாகரிகமும் – தமிழ்நெற் ஆசிரியர் குழு

Featured Replies

போர் குற்றங்களும் மனித நாகரிகமும் – தமிழ்நெற் ஆசிரியர் குழு

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன. இந்தப் போரில் வெற்றிப் பெற்ற நாடுகள் தமது காலனித்துவ நாடுகளுக்கு ஈற்றில் விடுதலை வழங்கின சிறிலங்காவின் தேசியப் பிரச்சனையாக கையாள்வதில் கூட்டாளிகளான அமெரிக்காவும் இந்தியாவும் தவறிழைத் துள்ளன இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் போர், இந்திய ஒருமைப்பாடு, மேற்குலக நாகரிகம் ஆகியவற்றின் மீது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம் எந்தளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் புலம்பெயர் தமிழ் மக்களின் இறுக்கமான ஒற்றுமைக்கும் இணைப்பிற்க்கும் உண்டு கவர்சிகரமான ஏமாற்றுகளுக்கு இடங்கொடாமல் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களோடும் சிங்கள முற்போக்குச் சக்திகளோடும் தமிழீழத்திற்க்ககான வரலாற்றுக் கடமை நோக்கில் அணுகக் உறவுகளைப் பேண வேண்டும். இதன் மூலம் அரசியல் நீதியைப் பெற முடியும் அத்தோடு தமிழ் மக்களைப் போல் பிறிதோர் இனம் துன்பப்படுவதையும் தடுக்க முடியும் பங்காளிகளான அமெரிக்காவும் இந்தியாவும் ஓசைபடாமல் சிறிலங்காவில் கால்பதிக்க விளைகின்றன. அவர்களுக்கு இடையில் கேந்திர பங்காளிக் கூட்டுறவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு இறுதி இராசதந்திரச் சந்தர்ப்பம் வழங்கப் படுகிறது உங்களுடைய அமைதியான சிறி லங்கா இருப்பு சிறி லங்கா –தமிழீழம் ஆகிய இரு நாடுகளின் சமநிலைப் பேணலில் தங்கியுள்ளது

– தமிழ்நெற் ஆசிரியர் குழு

பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் அன்ரணி பீவர் எழுதிய "டி.டே நோர்மான்டிக்கான போர்" என்ற 2009ம் ஆண்டு நூலில் நேச நாட்டுப் படைகள் புரிந்த போர் குற்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன பல போர் களங்களைக் கண்ட இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய போர் வீரனின் உரையாடலை அவர் தனது நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார் “போர் கைதிகளைப் பிடிக்கவில்லை கொல்வதை விட எமக்கு வேறு வழியில்லை“ இது போன்ற நேச நாட்டுப் படைகள் செய்த பாரிய போர் குற்றங்கள் இந்த நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன 1944 ல் நடந்த நோர்மான்டித் தரையிறக்கத்தில் "கொல்லப்பட்ட ஜேர்மன் தான் நல்ல ஜேர்மன் “என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டது.

நோர்மான்டியில் மாத்திரம் 2,50,000 பொதுமக்களும் போர் வீரர்களும் கொல்லப்பட்டனர் முன்பு அறியப்பட்டதிலும் பார்க்க மிகக் கூடுதலான போர் குற்றங்களை நேச நாட்டுப் படைகள் செய்திருக்கின்றன என்ற தகவல் இந்தப் புத்தகத்தின் மூலம் கிடைக்கின்றன புத்தகம் பற்றிய ஆய்வுரை டெயர் ஸ்பீக்கல் என்ற ஜேர்மன் வார சஞ்சிகையின் ஏப்ரல் 2010 இதலில் காணப்படுகிறது

ஆறு தசாப்தங்கள் சென்ற பின் நேச நாட்டுப் படைகள் புரிந்த போர் குற்றங்கள் பற்றிப் பேசுவதில் என்ன லாபம் என்று கேட்கலாம். தோல்வியைக் கண்ட ஜேர்மன் இராணுவத் தலைமை நியூரென்பேர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர் இந்தத் தீர்ப்பாயம் வெற்றி பெற்ற நாடுகளுக்கு சார்பாகவும் தோல்வி கண்ட நாட்டுப் படைத் தலைமைக்கு எதிராகவும் தீர்ப்புக்களை வழங்கியது வெற்றி பெற்ற நாட்டவர்களை 20ம் நூற்றாண்டின் கதாநாயகர்களாகத் தீர்ப்பாயம் தூக்கிப் பிடித்தது மனித நாகரிகத்தின் பாதுகாவலர்களாக அவர்கள் சித்தரிக்கப்பட்டனர் உலகின் சிந்தனை மற்றும் அரசியலில் அவர்களின் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர் திரைப் படங்கள் போன்ற கலாசார வெளிப்பாடுகளில் அவர்கள் உயர்ந்து நின்றனர் அனைத்தும் இன்று கேள்விக் குறியாக மாறிவிட்டன.

சுமகாலச் சிந்தனைக்கு அன்ரணி பீவரின் புத்தகம் சிறந்த பங்கிளிப்புச் செய்கின்றது நியூரென்பேர்க் தீர்ப்பாயத்தின் நம்பகத் தன்மையும் வெற்றி பெற்றவர்கள் நடத்தும் விசாரணைகளின் நேர்மையும் விமர்சனத்திற்க்கு உட்படுகின்றன குற்றவியல் நீதி மன்றங்களின் குறைபாடுகள் பற்றிய கரிசனையும் எழுகின்றது

தமிழ் மக்களின் விடுதலைப் போரையும் ஜேர்மன் விவகாரத்தையும் எவ்விதத்திலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது எனினும் சிறிலங்கா போர் குற்ற விசாரணைகள் நகரப் போகும் திசை பற்றி எதிர்வு கூற எம்மால் முடிகின்றது அதற்கான குறியீடுகள் நிறுவப்படுகின்றன கொழும்பும் புதுடில்லியும் இப்போது தமது களத்தில் வீழ்ந்த படையினருக்கு நினைவாலயங்களையும் நினைவுச் சின்னங்களையும் கொழும்பில் கட்டியெழுப்புகின்றன அஞ்சலி நிகழ்ச்சிகளில் இரு பகுதியினரும் கலந்து கொள்கின்றனர் அதே சமயத்தில் தமிழீழ விடுதலைப் புலியினர் அமைத்த அனைத்து நினைவுச் சின்னங்களும் போராளிகளின் துயிலும் இல்லங்களும் இடித்துத் தரை மட்டமாக்கப்படுகின்றன

இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் எழுப்பிய நினைவாலயமும் தகர்க்கப்பட்டுள்ளது இந்தியப் படையினரும் சிறிலங்காப் படையினரும் புரிந்த பாரிய போர் குற்றங்கள் பற்றிய ஆதாரங்களையும் நினைவுகளையும் தமிழ் மக்கள் வைத்திருக்கிறார்கள் சிறிலங்கா அரசு கைப் பெற்றப்பட்ட தமிழர் தாயகத்தில் தனது படையினருக்கு நினைவுச் சின்னங்களை அமைக்கின்றது ஆனால் ஜே.வீ.பீ கிளாச்சியில் கொல்லப்பட்ட படையினருக்கு அப்படி ஒன்றும் அமைக்கப் படவில்லை இது ஒரு இனத்திற்க்கு எதிராக நடத்தப்பட்ட போர் என்று எடுத்துக் காட்டப் போதுமானது உண்மையில் இந்தப் போர் பயங்கரவாதத்திற்க்கு எதிரான போர் அல்ல அது தமிழர்களுக்கும் அவர்களுடைய தேசியத்திற்க்கும் எதிரான போர்

இப்போது நிறுவப்படும் சிறிலங்கா மற்றும் இந்தியப் போர் நினைவுச் சின்னங்கள் ஒரு முக்கிய செய்தியை மேற்கு உலகிற்கு உணர்த்துகின்றன இந்திய படை அதிகாரிகள் கொழும்பில் நிறுவப்பட்ட இந்தியப் படையினருக்கான நினைவுச் சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்துகின்றனர் இதன் உட்பொருள் யாதெனில் மேற்கு நாடுகள் சிறிலங்காவின் போர் குற்ற விசாரணைகளை முன்னெடுக்கக் கூடாது என்பதாகும் இந்த முறை இந்த செய்தியை இந்தியாவால் பகிரங்கமாகக் கூற முடியவில்லை ஏனென்றால் உள் நாட்டில் அதற்கான வரவேற்பு மிகக் குறைவு

போர் குற்றங்கள் தொடர்பான அடிப்படை விடையங்களும் இரகசியங்களும் இனிமேல் தான் தெரியவரும் அல்லது தெரிய வராமலே போகலாம் பிழையான தரவுகளையும் போர்க் குற்றங்கள் நடந்து கொண்டிருந்த போது அது பற்றிய தகவல்களையும் வெளியிட்டதைச் சில இந்திய அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்

போரில் வெற்றி பெற்றவர்களால் நடத்தப்படும் போர் குற்றவியல் விசாரணைகள் மூலம் நியாயம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நியாயமான சந்தேகங்கள் இருந்தாலும் ஒன்றை மாத்திரம் மறந்து விடக் கூடாது இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவர்கள் அதற்கான பெரும் விலை கொடுக்க நேர்ந்ததோடு தமது காலனித்துவ நாடுகளுக்கு விடுதலை கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்

20ம் நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களில் காலனித்துவ நாடுகளை கைப்பெற்றவதற்க்கும் கைப்பற்றியதை தக்கவைப்பதற்க்கும் ஆதிக்க நாடுகள் மோதிக் கொண்டன. அதே ஜரோப்பிய வல்லரசுகள் பல நூற்றாண்டுகளாக பல தரப்பட்ட போர் குற்றங்களைச் செய்துள்ளன எனினும் விடுதலை கொடுப்பதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை 2000 வருடங்களுக்கு முன் ரோம சாம்ராச்சியத்திடம் நாடிழந்த யூதர்களும் தமது நாட்டை மீளப் பெற்றள்ளனர்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் போரின் மூல காரணத்திற்கு அரசியல் நீதி வழங்காமல் போர் முடிவுக்கு வர முடியாது வெற்றி பெற்ற நாடு இதிலிருந்து தப்பிக்க முடியாது சிறிலங்கா தீவில் வரலாற்றில் இது வரை காணப்படாத விதத்தில் போர் நடைபெற்றுள்ளது.

இந்தத் தீவில் போர் நடந்த விதத்திற்க்கு முக்கியமாக அமெரிக்காவும் இந்தியாவும் பொறுப்பானவையாகும் மிகுதி நாடுகள் அனைத்தும் போரைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன அல்லது இந்த இரு நாடுகளுக்கும் பின்னால் நின்றன.

இழுபறிப்படும் தமிழீழ விடுதலைப் போர் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலகமான பென்ரகனில் கிளர்ச்சி எதிர்ப்பபு நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது புதுடில்லியில் இந்த விவகாரம் வக்கிரமான கைகளின் பொறுப்பிற்குச் சென்று விட்டது

தமிழர் தரப்பினர் ஒரு முக்கிய கேள்வியைக் கேட்கிறார்கள் நோர்வே மத்தியஸ்தர்களின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுக்களும் இணையத் தலைமை நாடுகளின் நடவடிக்கைகளும் கூட்டாக கிளர்ச்சி எதிர்ப்பு முன்னெடுப்பின் அங்கமாக இடம் பெற்றனவா இதே கேள்வி 2010 ஜனவரி மாதத்தில் நடந்த டப்பிளின் தீர்ப்பாயத்திலும் கேட்கப்பட்டது.

இந்த சமச் சீரற்ற போர் நடந்து கொண்டு இருந்த போது உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்கள் தெருவில் இறங்கிப் போரை நிறுத்தும் படி குரல் கொடுத்தனர் தமிழர்களின் ஒற்றுமையை அவர்கள் இவ்வாறு வெளிப்படுத்தினர்.

தமிழர்களை நசுக்கும் நாட்டிற்குச் சார்பாகப் போருக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சர்வதேச அரசியல் ஒழுங்கில் என்னத்தைச் சாதித்து விட்டன? பல்லாயிரம் மக்கள் கொள்ளப்பட்டனர் பொதுமக்கள் அடைக்கப்பட்டனர் தமிழீழ மக்கள் தொடர்ந்து அவமரியாதைக்கு உட்படுகின்றனர் இவ்வளவும் தான் சாதிக்கப்பட்டன.

ஒன்று மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது போர் முன்னெடுப்போடு தொடர்புடைய நாடுகள் நியாயமான அரசியல் நீதியை வழங்கத் தவறுமேயானால் அது அவற்றின் மீது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்

குறிப்பாக அமெரிக்கா மீதும் நேற்றோ உறுப்பு நாடுகள் மீதும் அது அளவிட முடியாத தாக்கங்களை ஏற்படுத்தும் எதிர் காலத்தில் இவர்களால் எந்தவொரு சர்வதேச அரசியல் ஒலுங்கையும் நிலை நாட்ட முடியாது என்ற நிலை தோன்றி விடும் அமெரிக்காவும் நேற்ரோ உறுப்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பினால் எந்த அரசியல் நீதியை வெளியேற்றத்திற்கு முன்பாக வழங்கப் போகிறார்கள்

அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் பிரவேசம் எப்படி முடிந்தாலும் சிறிலங்காவில் அமெரிக்கா அரசியல் நீதி வழங்கத் தவறுமேயானால் அது மேற்கு நாகரிகத்தின் சரிவுக்கு வழி வகுக்கும் இந்தியாவை பொறுத்த வரையில் அதனுடைய 1987ம் ஆண்டின் இராணுவத் தோல்வி சில படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஆணவத்தை பாதித்தது இந்தியா அரசியல் நீதி வழங்குவதில் இம் முறை தோல்வி காணுமேயானால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து விடும்.

ஒரு வேளை இதே காரணத்திற்க்காத் தான் சீனாவும் ரஷ்யாவும் இப்போது சிறிலங்காவில் தலையிடுகின்றன. அமெரிக்காவையும் இந்தியாவையும் அரசியல் நீதி வழங்கும் முயற்சியில் தோல்வி அடையச் செய்வது இந்த இரு நாடுகளின் நோக்கமாக இருக்கலாம் இந்த நாடுகள் ஏற்கனவே நொந்து போன தமிழர்களை மென் மேலும் நொந்து போகச் செய்கின்றன

நீதியற்ற போர், இதற்க்காக் கிடைத்த உதவிகளும் அனுசரனைகளும், நீதியற்ற போரின் மூலம் பெற்ற வெற்றி நிரந்தரமாகும் சாத்தியம், வல்லரசுகளின் போட்டி, இலங்கைத் தீவின் கேந்திர அமைவிடம், இவற்றின் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த சாதக நிலை என்பன கொழும்பு அரசுக்கு அசாத்திய துணிச்சலைக் கொடுத்துள்ளன.

அரசியல் நீதி வழங்கும் தேவை ஏற்படவில்லை என்ற துணிச்சல் இதற்க்கு முன் நடவாத இனவாதப் போரை நடத்தி முடித்த சிறிலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது அரசியல் நீதி விவகாரத்தை கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையாகக் கையாளலாம் என்ற துணிச்சலும் அதற்கு வந்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பூமியில் கொழும்பு அரசு நாளாந்திரம் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது சிறிலங்காவின் போர் குற்றங்கள் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெறவில்லலை.

நொந்து போனவர்களை வெற்றி பெற்றவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கும் சர்வதேச அரசியல் ஒழுங்கு தொடர்ச்சியாக போர்க் குற்றங்கள் நடப்பதற்க்குச் சாதகமாக இயங்குகிறது மிகத் தெளிவாக மீண்டும் மீண்டும் சிறிலங்காவினால் உணர்த்தப்படும் செய்தி யாதெனில் அரசியல் தீர்வுக்கு இடமில்லை தன்னாட்சி பெற்ற தமிழீழம் வெகு தொலைவில் அதைப் பொறுத்தளவில் இருக்கிறது இப்போதெல்லாம் தமிழர்களுடைய உயிர், தன்மானம், சொத்து, சுதந்திரம் மீதான நாளாந்திரத் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கின்றது.

எம்.கே பத்திரகுமார் என்றவர் கொழும்பில் பணியாற்றிய இந்திய இராசதந்திரி மே 2009ல் எழுதியதில் இருந்து சிலவற்றை இதன் கீழ் தருகிறோம்.

போர் குற்றச் சாட்டுக்களை சிங்களவர்கள் மீது சுமத்தலாம் என்று ஜரோப்பியர்கள் எண்ணுகிறார்கள் இது மிகவும் சாத்தியமற்ற சிறுபிள்ளைத்தனம். எதிர்வரும் காலத்தில் எப்படி நகர்வுகளைத் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று சிங்களவர்களைத் தனிப்பட்ட முறையில் கேட்டோம் அவர்கள் பதில் கூற மறுத்து விட்டார்கள்.

தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வை வைத்திருக்கிறார்கள் என்பதை மாத்திரம் எமக்கு நன்கு தெரியும் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு வரைபடத்தை அவர்கள் தயாரித்து விட்டார்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை, ஆகிய கிழக்குப் பகுதிகளில் அவர்கள் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ளனர் இந்தப் பகுதிகளில் தமிழர்கள் இப்போது பெருபான்மை இனமாக இல்லை அதே போல் வடக்கிலும் தமிழர்கள் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் சிறுபான்மை இனமாக மாற்றப்படுவார்கள் ஆனையிறவுக்கு வடபால் அமைக்கப்படவுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு அருகாமையில் தமிழர்கள் வாழ்வார்கள்.

ஒரு பத்து வருடத்தில் தெற்கு ஆசியாவின் இரத்தம் தோய்ந்த இனப் பிரச்சனை வெறும் வரலாற்றுக் குறிப்பாக மாறிவிடும் இந்தியாவின் கரங்களில் தமிழர் இரத்தம் படுவது எமது இந்திய வரலாற்றில் இது முதல் தடவை அல்லவே நாம் சொல்வதை நம்புங்கள் அதனால் ஒரு தீங்கும் வராது இரத்தம் கையை நனைக்கலாம் அது கையை கறை படுத்துவது இல்லை.

பத்திரக்குமார் கொஞ்சம் கிண்டலடிக்கலாம் என்றாலும் கொழும்பின் கிளர்ச்சி எதிர்ப்பு நிலைப்பாட்டை அமெரிக்காவும் இந்தியாவும் கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு உண்டு கொழும்பின் குறிக்கோள் இந்த இரு நாடுகளின் குறிக்கோளாகவும் இருக்கலாம் ஏனென்றால் சிறிலங்கா, அமெரிக்கா, இந்தியா, ஆகியவை ஒன்றிடமாவது தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கிடையாது.

தமிழர்களைக் கட்டிப் போட்டுவிட்டு நடத்தப்படும் போர் குற்ற விசாரணைகளால் என்ன பயன் கிட்டப் போகிறது தமிழர் பிரச்சனைக்கு இந்த விசாரணைகள் எந்த வகையில் உதவப் போகின்றன என்பது தான் கேள்வி.

போர் குற்ற விசாரணைகளைக் கொழும்பு மீது அழுத்தம் பிரயோகிக்கும் கருவியாகப் பயன்படுத்த விளையும் நாடுகள் தமிழ் மக்களுக்கு மறைமுகமாகச் சொல்லும் செய்தி என்னவென்றால் எல்லாப் பாதைகளும் ராஜபக்சவை நோக்கிச் செல்கின்றன அதன் படி நீங்களும் செல்லுங்கள்.

கொழும்பின் பலம் போர் குற்ற விசாரணைகளை அழுத்தம் பிரயோகிக்கும் கருவியாகப் பயன்படுத்த விளையும் நாடுகளின் நிலைப்பாட்டில் இருந்து பிறக்கிறது.

போர் குற்ற விசாரணைகளின் அழுத்தங்களைக் குறைப்பதற்க்கு சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு இணக்கப் பாட்டிற்கு வர எத்தனிக்கிறது இந்த இணக்கப்பாட்டையும் அது கிளர்ச்சி எதிர்ப்புப் பாணியில் நடைமுறைப்படுத்த முனைகின்றது.

மேற்குலகின் புலம்பெயர் தமிழர்கள் இனிமேல் நிரந்தரமாக மேற்கு நாடுகளில் தான் வாழப் போகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள் ஒரு விடயத்தை உறுதியாக நம்பவேண்டும் சிறிலங்காவின் துருப்புச் சீட்டு அதன் கேந்திர அமைவிடம் என்பது தெரிந்த விடயம் அது போல் மேற்குலகில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒற்றுமையும் இறுக்கமான பிளவுபடாத பினைப்பும் தமிழர்களுடைய பலமான துருப்புச் சீட்டாக அமையும்.

பல தரப்பட்ட காரணங்களுக்காகத் தமது உடம்புத் தோலைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோருடன் ஒரு சமரசத்திற்க்கு வர கொழும்பு அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது இதன் மூலம் போர் குற்ற விசாரணைகளின் பளுவைக் குறைக்க அது தீர்மானித்துள்ளது.

கொழும்பு முகவர்கள் இப்போது நோர்வே முன்னெடுத்த அமைதிப் பேச்சுக்கள் ஏன் தோல்வி அடைந்தன பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது தமது இனத்திற்க்கு நியாயம் கிடைக்கப் போராடுவதோடு நசுக்கப்படும் பிற சிறுபான்மை இனங்களுக்கும் நியாயம் மற்றும் அரசியல் நீதி கிடைக்கப் போராட்டம் நடத்த வேண்டும் இதனால் மனித நாகரிகம் பெரும் நன்மை பெறும்.

இந்த அரிய நோக்குடன் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளனர் மேற்கூறிய பொறுப்புக்களை புலம் பெயர் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்க முடியாது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரச் செயல்கள் பிற இனங்களுக்கு எதிராக நடத்தப் படுவதைத் தடுப்பதிலும் புலம் பெயர் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும்.

முகிலன் என்ற அமெரிக்காவில் வாழும் தமிழ் நாட்டு எழுத்தாளர் தமிழர்களுக்கு எதிரான போர் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் சில தமிழ் மக்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி எழுதியுள்ளார் இந்த தமிழ் மக்கள் போர் நிறுத்தத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள் இறுதி வரை போர் முன்னெடுக்கப் படவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்று அவர்கள் அத்தோடு எழுதியும் வந்தார்கள்.

இப்படியானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்புக் காரணமாகக் கிளர்ச்சி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று புலம் பெயர் தமிழ் மக்கள் எண்ணுவார்களானால் அது மிகப் பெரிய தவறு உண்மையான காரணம் வேறு.

ராஜபக்ச அரசு அவர்களுக்கு வலை விரித்துள்ளது தான் உண்மை அவர்களுக்கு அரசியல் அந்தஸ்து கொடுப்பதாகவும் அவர்களுடைய கிளர்ச்சி எதிர்ப்பு எழுத்துகளுக்கு மதிப்பு அளிப்பதாகவும் அவர் விரித்த வலையில் அவர்கள் நன்றாக மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது மாத்திரம் உண்மை இவர்கள் தமிழர் தரப்பு நியாயம் நீதியை மறுப்பவர்களாக மாற்றப் பட்டுள்ளனர்.

இவர்கள் இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றங்களைப் புரிந்துள்ளனரே என்றும் புலிகள் புரிந்த போர் குற்றங்கள் அரசிலும் பார்க்கக் கூடுதலானவை என்றும் வாதிடுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் போர் குற்ற விசாரணைகள் தேவையில்லை என்றும் வாதிடுகின்றனர் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் எந்தளவுக்கு தூரத்திற்குச் செல்வதற்கும் இவர்கள் தயாராக உள்ளனர்.

போர் குற்றங்களுக்கு துணை போவது மூலம் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் மென் மேலும் தமிழீழத்தில் போர் குற்றங்கள் புரிவதற்கு இப்படியானவர்கள் ஊக்கிவிப்பு வழங்குகிறார்கள். இவர்கள் முழு மனித சமுதாயத்திற்க்கும் எதிரானவர்கள் இவர்களை உலக சமுதாயம் ஒதுக்கித் தள்ளவேண்டும்.

மீள் குடியேற்றத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவ வேண்டும் என்பதற்க்கு மறுப்புக் கிடையாது முன்பும் புலம்பெயர்;தமிழ் மக்கள் உதவிகள் வழங்கியிருக்கிறார்கள் இப்போதும் வழங்குகிறார்கள் இனிமேலும் வழங்குவார்கள் அது பற்றி விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை தமிழீழ மக்களின் தன்மானம் காப்பது தான் புலம்பெயர் தமிழர்களின் இப்போதைய மிகப் பெரும் பொறுப்பு.

சிங்கள குடியேற்றங்களைச் செய்வதற்குப் பணம் வைத்திருக்கும் சிறிலங்கா அரசிற்கு தமிழர் தாயகத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கும் அரசிற்கு மீள் குடியேற்றம் செய்வதற்க்கு மாத்திரம் பணம் இல்லையா? ஏன் அதற்க்கு மாத்திரம் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியை நாட வேண்டும் சொந்த மண்ணில் குடியேறும் தமிழனுக்கு ஓரவஞ்சகம் செய்யும் அரசின் நிலைப்பாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தமிழீழ மக்களைத் தள்ளக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள் இப்போது அது வல்ல பிரச்சனை அவர்களுக்கு பிச்சை வேண்டாம் கடிக்க வரும் நாயும் வேண்டாம் என்ற பழமொழி தான் மிகவும் பொருத்தம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று அவர்கள் அலறுகிறார்கள்.

தமிழ் மக்கள் பிரச்சனையோடு தொடர்பற்ற இராசதந்திர மார்க்கத்தை புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் விரும்புகின்றனர் அவர்கள் சொல்வது ஓரளவு சரியாக இருக்கலாம் இப்போது தேவைப்படுவது சுற்றிவளைக்காமல் நேரடியாக முன்னெடுக்கப்படும் மைய நீரோட்ட அரசியல் முன்னெடுப்பாகும் தமிழ் மக்கள் வெளிப்படையான அரசியலையும் மக்கள் நாடித் துடிப்பை அறிந்து அதற்க்கு அமைவாகச் செயற்படும் அரசியல் தலைமையையும் விரும்புகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது ஒரு சாரார் மாத்திரம் முன்னெடுக்கும் கோட்பாடு என்று ஒரு சிலர் கூறுகிறார்கள் தமிழ்த் தேசியம் மைய நீரோட்ட அரசியல் அல்லவென்றும் அவர்கள் வாதிடுகின்றனர்

தமிழ் மக்கள் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் கடுஞ்சினம் அடங்குவதற்க்கு அவர்களுடைய அபிலாசைகளுக்கு பொருத்தமான அரசியல் நீதி கிடைக்க வேண்டும்

புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழ் நாட்டு மக்கள், சிங்களவர் மத்தியில் இருக்கும் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக வேண்டும் மிக நெடிய அரசியல் அல்லது வல்லரசுகளின் கேந்திர நுளைவுக்கு எதிரான போராட்டத்திற்கு அவர்கள் தம்மைத் தயார் படுத்த வேண்டும் போர் குற்றம் தொடர்பான விசாரணைக் குழுக்கள் நீதி வழங்காமல் ஏமாற்றும் பட்சத்தில் வாஷிங்ரனுக்கும் புது டில்லிக்கும் எதிரான போராட்டங்கள் முனைப்புப் பெறவேண்டும்

உண்மை என்னவென்றால் அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைத் தீவுக்குள் நுளைந்து அதைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குத் தடங்களாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே தமிழர்களின் இறையான்மையை வழங்க மறுத்த பேதமையை சிங்கள மக்கள் மிக விரைவில் உணர்வார்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் வளையை நசுக்கி விட்ட பின் கேந்திர பங்காளிக் கூட்டுறவாளாகளான அமெரிக்காவும் இந்தியாவும் சிறி லங்காவுக்குள் அமைதியாக நுழைவதற்கு தயாராகிறார்கள் இது சாத்திய மாவதற்க்கு தமிழீழம் சிறிலங்கா ஆகிய தேசங்களின் சம நிலையைப் பேணுவதற்க்கு அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் எல்லோரும் நன்மை பெறுவார்கள் இன்றைய காலகட்டத்தில் இது தான் அரசியல் யதார்த்தம்.

நன்றி. தமிழ்நெற்

மொழியாக்கம் க.வீமன் - பதிவு இணையத்தளம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.