Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த உத்தரவுப் பிரகாரம் கே.பி. கைது செய்யப்பட்டார்? நீதிமன்ற அறிவுறுத்தலா, கோத்தபாயவின் நடவடிக்கையா?

Featured Replies

எந்த உத்தரவுப் பிரகாரம் கே.பி. கைது செய்யப்பட்டார்? நீதிமன்ற அறிவுறுத்தலாஇ கோத்தபாயவின் நடவடிக்கையா?

கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளாரா? அவ்வாறாயின் அவர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரிலா? அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நடவடிக்கையின் பிரகாரமா?

இவ்வாறு நாடாளுமன்றில் நேற்றுக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநயக்கா.

இது தொடர்பாக அவர் சபையின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மிகப் பயங்கரமானவனவரான கே.பி. தொடர்பாக நான் இந்தச் சபையில் சில கேள்விகளை முன்வைக்கின்றேன்.

கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளாரா அப்படியாயின்இ அது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவா? இல்லாவிட்டால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நடவடிக்கைக்கு அமைவாகவா? அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்? அவர் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததும் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி கே.பி. புலிகள் அமைப்பின் அடுத்த தலைவராகத் தன்னைத்தானே கே.பி. பிரகடனப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி அவர் தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அந்தக் கைதை அப்போதைய பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தினார். அத்தோடு கே.பியிடமிருந்து இரகசிய தகவல்கள் பெறப்படுகின்றன என்றும் கூறினார்.

கே.பியிடம் அதிக சொத்துகள் இருக்கின்றன என்றும் அவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய 2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ம் திகதி கூறி னார்.

அதனைத் தொடர்ந்து கே.பியின் தகவலின்படி கொழும்பில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல மீட்கப்பட்டன என்று அவர் ஹொரணையில் வைத்துக் கூறினார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கே.பி. உதவினார் என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில்இ இவ்வருடம் ஜூன் மாதம் 20ம் திகதி கே.பி. யாழ்ப்பாணம்இ வவுனியாஇ கிளிநொச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார் என்று அரச ஊட கங்களே தெரிவித்தன.

ஜூலை 29ம் திகதி பத்திரிகையில் கே.பியின் பேட்டி ஒன்று வெளியானது. வடக்குஇ கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பொன்றையும் அவரது தலைமையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதி ஒருவர் இவ்வாறு பல்வேறு இடங்களுக்குச் செல்லவோஇ பத்திரிகையில் பேட்டி வழங்கவோ சட்டத்தில் இடமில்லை. அவர் அரச சாட்சியாக மாற்றப்படுவார் என்று கெஹலிய கூறியிருந்தார்.

புலிகள் அமைப்பில் இருந்து செயற்பாட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பலவந்தமாகக் கடத்திச் சென்று புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்ட இளைஞர்இ யுவதிகள் சிறையில் வாடுகின்ற நிலையில்இ அந்த அமைப்புக்குத் தலைமை வகித்தவர்களுக்கு மன்னிப்பளிப்பது விசனத்திற்குரியதாகும். என்றார்.

http://www.pathivu.com

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.