Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீடோவின் செயற்பாடுகளை கேபி தனது எதிர்காலத்திற்காக பயன்படுத்துவாரானால் தலைமப் பதவியில் இருந்து விலகுவேன் ‐ தலைவர் சி. தவரட்னம்

Featured Replies

கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தனக்கான எதிர்காலம் கருதி வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பாரானால் தான் அதனது தலைமைப் பதவியிலிருந்து உடனடியாக விலகி விடுவேன் என அதன் தற்போதைய தலைவர் சி. தவரட்னம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட மீனவ சாமச சம்மேளனத்தின் தலைவராக நீண்ட காலம் சி. தவரட்னம் இருந்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பெயர் குறிப்பிட்டு சொல்லக் கூடிய முக்கிய தலைவராக அவர் நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றார். அவர் யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள கேபியின் ஊரான மயிலிட்டியைச் சேர்ந்தவராவார்.

குளோபல் தமிழ்ச் செய்திகளுடனான விசேட உரையாடலில் கேபி தனது நெருங்கிய உறவினர் என தெரிவித்த தவரட்னம்இ கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் அரசியல் நோக்கம் கருதி வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தினை நகர்த்தினால் தான் அதனது பணியிலிருந்து விலகி விடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையிலேயே தான் மீனவ சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முக்கிய பிரமுகராகவே இருந்து வருவதாக கூறிய அவர் அதற்கான சந்தர்ப்பத்தை அது அரசியல்மயப்படுத்தப்பட்டுப் போவதை தான் என்றுமே விரும்பியதில்லை என தெரிவித்தார்.

தற்போது கேபி கொண்டுள்ள எண்ணம் போன்று பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே தான் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பாக கேபிக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணக்கரு இருப்பதாக தான் எண்ணவில்லை எனவும் தவரட்னம் தெரிவித்தார்.

ஆனாலும் தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை வட கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என கேபி ஒருமுறை தன்னிடம் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார். வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டுப்பணம் இந்த இந்த வங்கிக் கணக்கினூடாக வரும் என தான் நம்புவதாகவும் தவரட்னம் கூறினார்.

அவற்றில் கேப்பிக்குரிய வருவாய்களும் உண்டு எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே வட கிழக்கு மக்களுக்கு உதவுவோரும் இந்த வங்கிக் கணக்கினூடாக பணத்தினை வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர் ஆனால் கேபி தன்னிடமுள்ள பணத்தின் ஒரு பகுதியை இலங்கை அரசிடம் வழங்கியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு கொடுக்காது ராஜபக்ஸ குடும்பத்துடன் சமரசம் ஒன்றை எட்டியிருக்க சாத்தியம் இல்லை எனவும் தவரட்னம் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகள் பற்றி கேபி வாய்திறக்க மறுக்கின்றாரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு திருப்திகரமான பதிலெதுவும் தவரட்னத்திடம் இருந்து வரவில்லை. ஆனாலும் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்இ இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் முக்கிய நோக்கம் என தவரட்னம் கூறுகின்றார்.

மேலும் வங்கியில் இரண்டு கணக்குகளைக் கையாளப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இவ்வாறு இரண்டு வங்கிக் கணக்குகளை கையாளப் போதாக தெரிவித்த அவர் இந்த வங்கிக் கணக்குகளை யார் கையாள்வார்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அது தொhடர்பில் முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் தலைவர் செயலாளர் இருவரோ அல்லது தலைவர் பொருளாளர் எனவோ வகைப்படலாம் எனக் கூறிய அவர் தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக அமைப்பில்; பொருத்தமானவர்கள் பெரும்பாலும் இல்லை எனவும் உரியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அந்தப் பணிகளில் உள்ளீர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே கேபியோடு சமரசமான போக்குடன் உடன்பட்டுச் செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் முக்கிய துறைகள் சார்ந்த ஒரு தொகுதிப் போராளிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களில் சிலர் வன்னியிலுள்ள தமது வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டும் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேச்சுக்களையும் இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது.

http://www.globaltamilnews.net

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.