Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சிங்களக் குடியேற்றம்

Featured Replies

வடக்கில், சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள் வதற்காக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் தமிழ் மக்களின் பத்தாயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த இருப்பதாகத் தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது; அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதானமாக மேற்கூறிய மாவட்டங்களில் அமைக் கப்படும் இராணுவ முகாம்களில் பணிபுரியும் படை யினரின் குடும்பங்களைக் குடியமர்த்தவே தமிழர் நிலம் சுவீகரிக்கப்பட உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

வடக்கு, கிழக்கின் பாதுகாப்புக்கருதி அங்கு நிரந்தர இராணுவ முகாம்களும் படைத்தளங்களும் அமைக்கப் படும் என்றும் அவற்றில் பணிபுரியும் இராணுவத்தினரின் குடும் பங்கள் தங்கிவாழ, அந்தப் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் கூறியபோதே வடக்கின் பெரும் பிரதேசம் கபளீகரம் செய்யப் படும்; பல்லாயிரக் கணக்கான தமிழர் நிலம் அரசினால் கையடக்கம் செய்யப்படும் என்ற ஆபத்துக்குச் சமிக்ஞை காட்டப்பட்டிருந்தது. அது இப்போது செயல்வடிவம் பெறுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குப் பிரகாரம், அரசின் நட வடிக் கைகளால், வடக்கின் மக்கள் தொகையில் சிங்களவர் 30 சதவீதத்தினர் ஆகிவிடும் ஆபத்து தொட்டுக்காட் டப்பட்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்கள் எதனையும் விட, இப் போதைய அரசு, இலங்கையில் தமிழர் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில், மிகக்குறிப்பாக வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை மிகத் தீவிரமாக டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் கிழக்கில் பட்டிப் பளையை அம்பாறை என்று பெயர் மாற்றம் செய்த அள வுக்கும் வடக்கில் நாயாறை பதவியா என்றும் மாற்றும் அளவுக்கும் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தின் வேகத்தை விடவும், அசுர வேகத்தில் தமிழ்ப் பகுதி களைச் சிங்களப் பிரதேசங்களாக்கும் அதி தீவிரப் போக்கைக் கொண்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சம்.

பிரிட்டிஷாரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில வருடங்களிலேயே இதனைத் தனிச் சிங்கள நாடாக்கி ஏனைய இன மக்களை இரண்டாம் தரப்பிரசை களாக்கி ஆண்டான் அடிமை நிலையை உருவாக்க வேண் டும் என்பது சிங்களப் பேரினவாதத் தலைவர்களின் அரசியல் இலக்காகத் தோற்றம் பெற்றது. அதன் விளைவே காலத்திற்குக் காலம் ஊழித் தாண்டவம் ஆடிய இனக் கலவரங்களும் தமிழின அழிப்பும். அவை இந்த நாட்டின் சரித்திரமாகிவிட்டன; தனியாக ஆராயப்படவேண்டியவை.

இலங்கை தனிச் சிங்கள நாடாக மிளிர வேண்டும் என்ற பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களின் இலக்கு, காலத்துக்குக் காலம் முன்னரை விட வீறு கொண்டு தலைவிரித்தாடுவது இங்கு வழக்கமாகி விட்டது. அதற்கான காரணத்தை அவர்கள் அவ்வப் போது நியாயப்படுத்தவும் செய்தனர். அத்தகைய கட் டங்களில் இருந்தும் அதிமிகுந்த வீறு கொண்டு நிற்கும் வேளை இது எனலாம்.

அவ்வப்போது இன அழிப்பிலும், சிங்கள மேலாதிக் கத்திலும் ஈடுபடும் தலைவர்கள் தாம் செய்வது சரியா னது, நியாயமானது என்பதனை மூன்றாமவர் உணரச் செய்வதிலும் பலே கெட்டிக்காரர்கள். இதனை அவர்கள் திட்டமிட்ட வகையில் ஒப்பேற்றி வந்திருக்கிறார்கள். இப்போதும் அதுவே செயலாகிக் கொண்டிருக்கிறது!.

கடந்த ஜூன் மாதப் பிற்பகுதியில் வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களை பெரும் எண் ணிக்கையில் குடியேற்றத் திட்டமிடப்படுகிறதா என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கான ஜனாதிபதி யின் பதில், அரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிப் படுத்தியிருந்தது.

இந்த இரண்டு மாகாணங்களிலும் சிங்கள மக்கள் முன்னர் நிறையவே வாழ்ந்தனர். பிரபாகரனே அவர் களை அடித்துத் துரத்தினார். இனி அவர்கள் அங்கு சென்று வசிக்க விரும்பினால் அவ்வாறு செய்யலாம் என்று தெரி வித்திருந்தார் நாட்டின் தலைவர்.

மக்கள் கலந்து வாழ்வதே நல்லது என்று நம்புபவன் நான். முன்னர் இது ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படு வதில்லை. தமது சொந்த நலன்களை முன்நிறுத்தி அர சியல்வாதிகளே இதனை உருவாக்கினார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு கருப்போட்டவர்களே சிங் கள அரசியல் தலைவர்கள் தான் என்பது இந்த நாட்டின் சரித்திரம்.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் அவசரப்படுவதில் காரணம் இல்லாமல் இல்லை. தமிழர் பிரச்சினையில் தீர்வு என்று வரும் போது, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மட்டும் வாழவில்லை என்பதால் அவை இணைக்கப்படவேண் டும் என்ற கோரிக்கைக்கு இடமே இல்லை என்று தட்டி விடுவதற்கான கபட புத்தி இது.

இனப்பிரச்சினைக்கு நியாயமான, உகந்த தீர்வு காணப்படுவதற்குப் போடப்படும் தடைக் கல்லே வடக் கில் அரச அனுசரணையுடன் நடக்கப்போகும் அவசர அவசரமான சிங்களக் குடியேற்றம்.

இதன் பின்னரும் தமிழர் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்று நம்புவது எப் படி...? இந்தியா உட்பட்ட சர்வதேசம் தானும் இதற்குப் பதில் அளிக்கவும் முடியாது, பரிகாரம் தேடவும் முடியாது. ஐயகோ, தமிழினமே....!.

[ உதயன் ] - [ Aug 05, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.