Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்று அகலும் இந்தத் தமிழர் அவலம்...?

Featured Replies

போரின் காரணமாக, வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை, இம்சைக்கு உள்ளாக்குவதில் பெயர் பெற்று விளங்கியது மெனிக்பாம் எனப்படும் செட்டிகுளம் முகாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக, அங்கிருந்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளுடன் ஓட்டமும் நடையு மாகச் சென்ற அகதிகளில் மிகப் பெரும்பாலானோர் மெனிக்பாமில் முட்கம்பி வேலிகளுக்குள் மிருகங்கள் போன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு மனிதச் "சித்திரவதைகளும்' மனிதாபிமானமற்ற கொடூரங்களும் அதிகாரத்தனத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டதும் மறக்க முடியாதவை. (Human rights abuse) அதனால் மெனிக்பாம் அகதிகள் முகாம் சர்வதேசரீதியில் பெயர் பெற்றது.

அங்கிருந்த பெரும்பாலானோர் பின்னர் விடுவிக்கப் பட்டு உறவினர் வீடுகளில் வசித்ததும் ஆகப் பிந்தி அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமரச் சென் றதும் பல மாதங்களுக்கு முந்திய நிகழ்வுகள்.

ஆனால், இன்னமும் அந்த மெனிக்பாமில் அதா வது செட்டிகுளம் முகாமில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் (அவர்களில் பலரும் இளைஞர், யுவதிகள்) ஒரு வருடத்துக்கும் மேலாகத் தடுத்து வைக்கப் பட்டி ருக்கும் தகவல் நாடாளுமன்றத்தில் பிரசித்தப்படுத்தப் பட்டுள்ளது.

அவர்கள் மீது தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக் கப்படவில்லை. சிறை வைக்கப்படுவதற்கான கார ணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மெனிக்பாமில் அவர்கள் சிறைக் கைதிகளையும் விடக் கேவலமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அவர் களைப் பார்வையிடச் சென்ற தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத் தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது கரும்புள்ளிப் பதிவு! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதீத அதிகாரம் கொண்டவர் என்பதனை எடுத்துக்காட்டிய சம்பவம் அது.

மெனிக்பாம் வாசிகளுக்கு நீதி வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படவில்லை. தமிழ் தெரிந்த நீதிபதிகள் குறைவு என்ற காரணம் கூறப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தகவலுக்கு மறுபுறத்தில், போரின் பின் னர், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8,074 தமிழ் இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் தகவலும் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ மாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் புனர்வாழ்வுக்கு வகை செய்யப்படும் என்று புனர்வாழ்வுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி எப்போது செயல்வடிவம் பெறும், அதாவது புனர்வாழ்வு அளிப்ப தற்கான கால எல்லை எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா அல்லது புனர்வாழ்வு வறையறையற்ற காலத்துக்குத் தொடருமா என்பது பற்றிய விவரம் எதனையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை!

புனர்வாழ்வு முகாம்கள் என்பன அங்கு தங்குபவர் களின் நரகலோகமாக விளங்குகிறது என்று (பொல நறுவை மாவட்டம்) வெலிக்கந்தைக்குச் சென்று வந்த ஜாதிக விமுக்தி பெரமுனவின் தலைவர்கள் வெளி யிட்ட தகவல்கள் அம்பலப்படுத்தி இருந்தன. (இது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே எழுதியுள்ளோம்).

புனர்வாழ்வு என்ற மறைப்புக்குள் அவர்களை நீதி மன்றங்களின் முன்நிறுத்தாமல் வருத்தும் அரசு அவர் களுக்கு நல்வாழ்வு அளிப்பதாகச் செய்யப்படும் பிர சாரம் வெறும் கண்துடைப்பு ஒருவகையான பழி வாங்கல் என்பது திட்டவட்டமாகிறது. போர் முடிவடைந்து பதினைந்து மாதங்கள் கடந்து விட்டன.

வன்னிக்குத் திரும்பிச் சென்று மீளக்குடிய மர்ந்த மக்களின் நிலையோ இன்னமும் சின்னாபின்ன மாகியே கிடக்கிறது. எழுந்து கால் ஊன்ற அல்லது முந்தைய வாழ்வின் கால்வாசிக்குத் தானும் திரும்பு வதற்கு இன்னும் சில வருடங்கள் சென்றாலும் ஆகாது என்ற நிலை. அவர்கள் படும் துன்பங்களையும், இல்லாமை களையும் தனியே நோக்க வேண்டும். எழுத வேண்டும்.

புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ் இளைஞர் யுவதி களின் வாழ்வு "உருமாற்றப்படுகிறது'. நாடாளுமன் றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின் பிரகாரம் மெனிக்காமில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் இன்னும் நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக அடிமைகளாக அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள். இவை யாவற்றுக்கும் அடித்தளமாகவும் ஊக்கியா கவும் விளங்குவது அவசரகாலச் சட்டம். அது மாதாந்தம் அரசின் வாக்குப் பலத்தால் நீடிக்கப்பட்டு வருகிறது. அதனை நியாயப்படுத்தி சில தகவல்கள், சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதனை அண்டிப் பயங்கர வாதத் தடைச் சட்டமும் தனது கொட்டத்தைக் காட்டு கிறது. அதனையும் அரசு பூப் போன்று ஏந்தி மணக் கிறது; வேறு எதனையும்விட நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவமும் முதலிடமும் வழங்கப்படுகிறது என்ற போர்வையில்.

போர் முடிவடைந்ததால் நாட்டின் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் காண விரும்பும் அரசு, அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் கையில் ஏந்தி நிற்பது எதிர்மறையான பலனையே தரும் என்பது அரசறிவியலாளர்களினதும் சர்வதேச ஜனநாயக விரும்பிகளினதும் கருத்தாகும். இதனை மனதிற் கொள்ளாமல் எமது நாட்டின் அரசு தனது முடிவும் செயற்பாடும் சரியானதே என்ற நிலைப் பாட்டில் நின்று தாண்டவமாடுவது எவருக்கும் புரியாத புதிர் அல்லவே!.

[ உதயன் ] - [ Aug 06, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.