Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர்

Featured Replies

அபிவிருத்தி என்ற போர்வையில் மற்றொரு முள்ளிவாய்க்கால் போர் திணிக்கப்படுவதாகவே தமிழர்கள் கருதுகின்றனர்

prof.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு முழு நாடும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் முள்ளிவாய்க்கால் போர் போன்று முழு வீச்சில் ஒட்டுமொத்த தமிழினத்தின் இருப்பும் பாரம்பரிய நிலமும் கலை கலாசாரங்களும் கபளீகரம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் மிக ஆழமாக உணரத் தொடங்கி விட்டனர் என்று பேராசிரியரும் யாழ்.சிந்தனைக் கூடத்தின் அமைப்பாளருமான இரா.சிவச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத கால கட்டத்தில் தமிழ் மக்கள் வாய் மூடி மௌனிகளாக்கப்பட்டனர். சுதந்திரம் இழந்திருந்தனர்.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாதிருந்தனர் என்றே தென்னிலங்கை கூறுகின்றது .

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வழி சமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்துள்ளது. தமிழ் மக்கள் தமது மௌன விரதத்தைக் கலைக்கவும் வழி பிறந்துள்ளது என்றும் தென்னிலங்கை கூறுகின்றது. இப்போது போர் முடிந்து ஒருவருடம் கழிந்து விட்டது. முள்ளிவாய்க்கால் போரும், மனிதாபிமானத்துக்கான போரும் அவை நடத்தப்பட்டதற்கான இலக்கை எட்டி விட்டனவா? என்ற கேள்வியை வட பகுதி மக்களிடம் கேட்பீர்களாக இருந்தால் அவர்கள் இல்லை என்றே பதில் கூறுவார்கள் என்று தெரிவித்த அவரிடம் கேள்விகளைத் தொடுத்தபோது,

கேள்வி: போர் முற்றுப்பெற்றுவிட்டது. போருக்குப் பிந்திய நிலையை தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்.குடா நாட்டு மக்கள் எவ்வாறு நோக்குகின்றனர்? மக்கள் எத்தகைய மன நிலையில் உள்ளனர்?

பதில்: மனிதாபிமானத்துக்கான போரின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று கூறப்பட்ட போதும் அவர்கள் முழுமையாகப் பீதிக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று கூறுவது தான் பொருந்தும். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் போர் அபிவிருத்தி என்ற போர்வையிலும் உல்லாசப் பயணிகள் என்றபோர்வையிலும் அரங்கேறி வருகின்றது.

கேள்வி: வடபகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போரின் காரணமாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பதை வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் உணரவில்லையா?

பதில்: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றி இப்பகுதி மக்களை அரசாங்கம் கலந்தாலோசித்ததா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே வரும். அபிவிருத்தி என்பது எமது பிரதேசத்திற்குரிய அபிவிருத்தியாக இருக்க வேண்டும். மக்களின் கருத்துகள் கேட்கப்படவேண்டும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறுகிறார்கள். இங்கிருக்கும் வளங்கள் இங்குள்ள மக்களுக்கே போதாமல் இருக்கும் போது பல்தேசிய கம்பனிகள் மூலம் உலகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முயன்றால் வட பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கற்பாறைகள் தோண்டப்பட்டு சுண்ணாம்புக் கல் இருப்பு விரைவில் தீர்ந்து விடும்.

அது மாத்திரமல்ல யாழ். குடாநாட்டில் சுண்ணாம்புக் கல் அகழ்வதை தீவிரப்படுத்தினால் கடல் உட்புகும் அபாயமும் உள்ளது. கடந்த 30 வருடங்களாக போர் நடைபெற்றது. காங்கேசன்துறை தொழிற்சாலை செயலிழந்து கிடப்பதாக கூறப்பட்டது.ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அப்பகுதிகளிலுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சுண்ணாம்புக்கல் அகழ்வு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அது தற்போதே தெரியவந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் மிக ஆழமாக தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன. சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டு சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுள்ளன.

வட பகுதி கரையோரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரத்திலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக்கல் அகழப்படுமாக இருந்தால் கடல் நீர் உட்புகுவது மாத்திரமல்ல வட பகுதியில் உள்ள தரைக்கீழ் நீரும் உப்பாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே இத்தகைய அபிவிருத்தியை பல்தேசியக் கம்பனிகளும் செய்யுமாயின் பாரதூரமான விளைவையே கொண்டுவரும்.

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. கட்டடங்கள் இடிக்கப்படவுள்ளன. ஆனால் இது பற்றி எந்தவிதமான ஆலோசனையும் வடபகுதி மக்களிடம் கேட்கப்படவில்லை. காணிகளைச் சுவீகரிக்காமலும் கட்டடங்களை இடிக்காமலும் மாற்றுத்திட்டம் பற்றி யோசிக்கலாம். மாற்றுத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு நிறையவே வழிவகைகள் உள்ளன.

எவ்வித இடர்களையும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இலகுவாக யாழ்.குடாநாட்டில் பெருந்தெருக்களை அமைக்க முடியும். ஆனால், இதுபற்றி எவரிடமும் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கப்படவில்லை.

பண்ணையில் அமைந்துள்ள கண்ணாபத்தை பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு கருதி முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டது. வடபகுதிக்கே உரிய மீன்வளம் முற்றாக சூறையாடும் அபாயம் உள்ளது.

மொத்தத்தில் போருக்குப் பிந்திய நிலையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சூழல், வளங்கள் கலாசார விழுமியங்கள் என்பன சூறையாடப்படுவதாகவே வட பகுதி மக்கள் கருதுகின்றனர்.

வடபகுதி அபிவிருத்தி என்பது அந்த மண்ணுக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கொழும்பின் நலன்களுக்கேற்ப செய்யப்படக் கூடாது.

எனவே அரசாங்கமோ அல்லது வேறு எவருமோ கூறுகின்ற அபிவிருத்தி என்பது தமிழர்களுக்கு நன்மை அளிக்கப்போவதில்லை என்ற கருத்து தமிழ் மக்களிடையே நிலவுகின்றது. போருக்குப் பிந்திய சூழ்நிலையில் வடபகுதியில் அமைக்கப்படவுள்ள இராணுவ முகாம்கள் பற்றி மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இராணுவ முகாம்களும் குடியேற்றங்களும் தம்மை தமது பாரம்பரிய மண்ணில் சிறுபான்மையினராக ஆக்கி சிதறடித்துவிடும் என்ற அச்சமும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மொத்தத்தில் வட பகுதி மக்கள் மௌனிகளாக இருப்பதும், அமைதியாக இருப்பதும் என்பது அரசாங்கம் கூறுகின்ற அபிவிருத்தியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் அல்லது அங்கீகரித்துள்ளார்கள் என்பது அர்த்தம் அல்ல. சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியாத நிலையிலேயே அவர்கள் மௌனமாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி

வீரகேசரி வாரவெளியீடு

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26126

காணி பிடிக்கிறார் கெளதம புத்தர் உறுதிக்காரச் சிவன் எங்கே?

வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடக்கின்றதோ இல்லையோ கெளதம புத்தபிரான் மட்டும் வடக்கில் அதிக காணிகளைக் கைப்பற்றி விட்டார்.

வீதிகள், குளங்கள், அரசமரங்கள், கடற் கரையோரங்கள் எங்கும் கெளதம புத்தபிரானின் குடியிருப்புகள் எதற்காக இப்படி? அறத்தின் வழியில் அகிம்சையின் பாதையில் மனுக்குலத்தை வழிப்படுத்த போதித்த கெளதம புத்தபிரானுக்கு சிவனின் குடும்பம் குடியிருக்கும் வடக்கில் ஏன் இத்தனை விருப்பு?

ஓ! தன் பக்தர்கள் வடபுலத்தில் குடியேற்றப் படுவதற்கு முன்னதாக தான் குடியிருக்க வேண் டும் என்பதற்காகவா?பரவாயில்லை, நிலையில்லாத இந்த உலகில் இவை மட்டும் நிலையாகிவிடுமா என்ன? இவை யெல்லாம் தற்காலக் கவலைகள் தான். யுத்தத்தில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக கவலை என்று கூறியவர் கெளதம புத்தபிரான்.

எனவே அவரின் காணி சுவீகரிப்புக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனா லும் சொந்தக்காணிக்காரச் சிவன் குடும்பம் தம் வீட்டில் குடியிருக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போதுதான் மனம் வெதும்புகின்றது.எத்தனையோ சைவாலயங்கள் யுத்தத்தால் உடைந்து சிதைந்து போயுள்ளன. பல ஆலயங் கள் கவனிப்பாரற்று பூசை வழிபாடுகள் ஏதும் அற்று இருண்டு போயுள்ளன.

நிலைமை இதுவாக இருக்கும் போது அவசர அவசரமாக கெளதம புத்த பிரான் காணி பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்து மதத்திற்கும் பெளத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.இந்து மதக்கடவுள்கள் அதாவது சிவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விகாரைகளில் வைத்து வழிபாடாற்றப்படுகின்றனர்.

அதேநேரம் சமய கிரியை முறைகளிலும், அனுஷ்டானங்களிலும், சிற்ப சாஸ்திரங்களி லும் இந்து-பெளத்த கொள்கைகள் ஒத்துப் போவதை அவதானிக்க முடியும்.நிலைமை இதுவாக இருக்கும் போது வட புலத்தில் அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக வன்னிப் பெருநிலப்பரப்பிலும், யாழ். குடாநாட்டிலும் புத்தபிரானை பிரதிஷ்டை செய்வதென்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

எனவே சமயங்கள் கூறும் அறவழிகளைப் பின் பற்றுவதே மனித குலம் மேன்மையுறுவதற் கான வழியாகும். இதைவிடுத்து சமயத்தால், இனத்தால் மக்களை பிரித்து விரோதங்களை தோற்றுவிப்பதை தெய்வங்கள் ஒரு போதும் ஏற்பதும் இல்லை; அவை நிலைக்க விடுவதும் இல்லை.

ஆகையால் இலங்கை திருநாட்டில் அவரவர் வாழ்வியல் கோலங்களைப் பின்பற்றவும் தத்தம் சமய விழுமியங்களைத் தாம் வாழும் இடங்களில் நிலைநிறுத்தவும் கூடிய சட்டங்கள் உருவாக்கப் பட்டு அவை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பிரதிஷ்டைகளுக்கு தனியான பாதுகாப்பு அமைப்புகள் தேவையானவையாக இருக்கும்.

[ வலம்புரி ] - [ Aug 09, 2010 04:00 GMT ]

தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்

அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.

அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான்.இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.

தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?

ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.

அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்...! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள் ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளை ஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.

அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டும். அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத் தோடு அரசியல் களத்தில் குதியுங்கள் எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள.

[ வலம்புரி ] - [ Aug 12, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.