Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகாம்பிகை ஆலயத் தேர் ஓடும் வீதியைஇராணுவ முகாமாக்கும் முயற்சியில் படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனகாம்பிகை ஆலயத் தேர் ஓடும் வீதியைஇராணுவ முகாமாக்கும் முயற்சியில் படையினர் எதிர்காலத்தில் மத முரண்பாடு ஏற்படலாம் என்கிறார் சரா எம்.பி.

கிளிநொச்சி, ஓக. 9

கிளிநொச்சி, கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் தேர் ஓடும் வீதியின் பெரு மளவு பகுதியில் முட்கம்பிகளை அடைத்து இராணுவ முகாமாக்கும் முயற்சியில் படை யினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின், குறிப்பாக கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வோடு ஒருமித்திருக்கும் இந்த ஆலயத்தினை இராணுவ மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரச மரங்களுக்கும் கோயில்களுக்கும் இடையிலான முரண் படுநிலை மத ரீதியான மோதல் தோன்று வதற்கு வித்திடப்பட்டுள்ளதோ என்ற சந் தேகம் எழுகின்றது.

இவ்வாறு ஆதங்கத்தோடு கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

கிளிநொச்சி கனகாம்பிகை குள அம்மன் ஆலயப் பகுதிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன் ஆகியோர் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தனர். இதன் பின்னரே மேற்கண்டவாறு சரா எம்.பி தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

கனகாம்பிகை குள அம்மன் கோயிலின் தேர் இழுக்கும் வீதியில் அரைவாசிக்கும் அதிகமான நிலப்பரப்பில் முட்கம்பி வேலி இட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காகப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் குறித்த ஆலயத்தின் ஆகம வழிபாட்டுமுறை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி மக்களின் வாழ்வியலோடும், வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புடைய இந்த ஆலயத்தின் தேர் இழுக்கும் வீதியைப் படையினர் இவ்வாறு கையகப்படுத்தி இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் மத ரீதியான முரண்பாட்டுநிலை ஒன்று தோன்றி விடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது.

வன்னியில் அரச மரங்களும், புத்தர் சிலைகளும், விகாரைகளும் புதிதாக முளைத்து வரும் சூழலில் பாரம்பரியமாக இந்த மண்ணில் மக்களின் ஆன்மீக வழிபாட்டுக்கு வழி சமைத்த இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டிருப்பதும், அவற்றின் வழிபாட்டு முறைமைகள் தடுக்கப்பட்டிருப்பதும் ஆலயப் பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதும் தமிழ் மக்களின் மனங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளன. காலப்போக்கில் இன ரீதியான வேறுபாடு, மதம் சார்ந்த யுத்தமாக உருவெடுத்துவிடுமோ என்ற அச்சம் கனகாம்பிகை குளம் அம்மன் ஆலயச் சூழலை பார்க்கின்ற போது எழுகின்றது என்றார்.

இது குறித்து சிறிதரன் எம்.பி தெரிவிக்கையில்

தமிழ் மக்களின் பொருளாதார நிலையோடு நெருங்கிய தொடர்புடையது கனகாம்பிகைக் குளம் அம்மன் ஆலயம். கிளிநொச்சி ஒரு விவசாயப் பிரதேசமாக எழுச்சி பெறுவதற்கு கனகாம்பிகை குளம் பிரதான காரணமாகும். இந்தக் குளத்தின் பாதுகாப்புக்கும் அமோகமான விவசாய விளைச்சலுக்கும் கனகாம்பிகைக் குளம் அம்மனே காரணம் என்ற ஐதீகம் இன்றுவரை எம் மக்களிடம் தொடர்ந்தும் நிலவிவருகின்றது. இவ்வாறு மக்களோடு நெருங்கிய தொடர்புடைய ஆலயச்சூழலை இராணுவ மயப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த மக்களினதும் மனங்களை நோகடிக்கும் செயலாகும். இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும் என்றார்.

நேற்றைய விஜயத்தின் போது குறித்த கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து பார்வையிட்ட இரு எம்.பிக்களும் கோயில் அறங்காவல் சபை ஒன்றுகூடலிலும் அன்னதான நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

இதேவேளை கனகாம்பிகை அம்மன் ஆலயத் திருப்பணிக்கென சரவணபவன் 2 லட்சம் ரூபாவை நேற்றைய தினம் வழங்கினார்.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.