Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர்: -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர்: - கனேடிய அமைச்சர்

திகதி:14.08.2010,

எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது.

இந்நிலையில் அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என பொதுமக்கள நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சங்கதி

பாதிக்கப்பட்டவன் பாதிக்கப்பட்டிருக்க பழம் தின்றவன் பாடித்திரிகின்றான்...

அண்மையில் அவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் சென்ற உறவுகளுடன் உரையாடியதினால் கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்...

1956 ஆம் வருடம் உடப்பு என்னும் இடத்திலிருக்கும் மக்கள்(முன்னன் தமிழர்) தாங்கள் தனிச்சிங்களச்சட்டத்தினால் பாதிக்கப்படுவோம் என அஞ்சி தம்மை "தமிழ் பேசும் சிங்களவர்கள்" என்று மாற்றிக்கொண்டார்கள்... அவர்களை சிங்களவர்கள் என்று சொல்வதா? இல்லை தமிழர்கள் என்று சொல்வதா என்று தெரியாது...

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சென்றிருக்கின்றார்கள்... போரின் வாசமே தெரியாத அவர்கள் அனைவரும் தாம் "தமிழர் என்பதனால் துன்புறுத்தப்பட்டோம்" என்று பதிந்து தமது புகலிட அந்தஸ்தினை மிகக்குறுகிய காலத்திற்குள் எடுத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளார்களாம். அதாவது அவர்கள் 3- 5 மாதங்களுக்குள் சென்றுள்ளார்கள், அதே நேரம் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட, தமது குடும்பத்தில் ஒருவருமே அற்றவர்கள், மனது குழம்பிய நிலையில் உண்மையான தமிழ் அகதிகள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள், எந்தவிதமான முடிவுகளும் தெரியாது 12- 14 மாதங்களாக அவர்கள் தடுப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது...

இவர்கள் தொடர்பாக பேசவோ, கரிசனை காட்டவோ யாரும் முன்வரவில்லை என்பது உண்மை. உண்மையான அகதிகள் பாதிக்கப்படாதவாறு எந்த நாடாயினும், அந்நாட்டிலுள்ள தமிழ் உறவுகள் உதவ முன்வரவேண்டும் என்பது எனது அன்பார்ந்த வேண்டுகோள். உண்மையிலேயே முற்றிலும் பாதிக்கப்பட்ட பல அகதிகள் இப்போது கனடா சென்றடைந்திருக்கின்றார்கள், அங்கிருக்கும் தமிழ் உறவுகளே, தயவுசெய்து நீங்கள் உதவுங்கள்... அவர்கள் வாழ்வின் வலிகளை தம்மோடு சுமந்து வந்திருக்கின்றார்கள், அரவணையுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.