Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாய் நிலம் நிர்வாகியையும் ஆசிரியரையும் சுட்டுக்கொல்லும்படி பதிவு இணையம் தூண்டியுள்ளது

Featured Replies

புலத்திலுள்ள தமிழ் மக்களுக்கு பொய்களைச் சொல்லி முள்ளிவாக்கால் பேரவலத்துக்கு துணைபோன பதிவு இணையம் பாரிசிலிருந்து வெளிவரும் தாய்நிலம் பத்திரிகை எரிக்கப்டாமலே அது எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் அது ஒட்டுக் குழுவின் பத்திரிகை என்றும் அது பிரச்சாரம் செய்தது.தற்போது அது தாய்நிலத்தின் நிர்வாகியையும் ஆசிரியரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று மறைமுகமாக செய்தி வெளியிட்டுள்ளது.

நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டபடி 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல அந்த அமைப்பு அதிகார பூர்வமாக ஆயதங்களை மௌனிப்பதாக கடந்த வருடம் அறிவித்துவிட்டது. அதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதற்காக எவரையும் பயங்கரவாதிகளாக கருதி அவர்களுக்க அகதி அந்தஸ்த்து மறக்கக் கூடாது. சிறீலங்கா அரசாங்கத்தின் தேவைகளுக்காக செயற்படும் சிலர் தான் விடுதலைப்புலிகளை ஜனநாயக மறுப்பாளர்களாகவும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவர்களாகவும் மக்ளை மிரட்டுபவர்களாகவும் காட்டுவதற்கு முயல்கிறார்கள் என்றும் இவ்வாறு செய்யும் நபர்கள் உண்மையில் விடுதலைப்புலிகள் அல்ல என்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்பதையும் உண்மையான விடுதலைப்பலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதையும் நிரூபிக்கும் விதத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரெஞ்சு நீதிமன்றத்தில் வாழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம். இந்த வழக்கு முள்ளிவாக்கால் பேரவலத்தக்குப் பின்னர் பிரான்சில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் நலனை மையமாகக் கொண்டு தொடக்கப்படுகிறது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்துள்ள பிரான்ஸ் ஏன் அதற்கான அடிப்படைகளை வைத்து எங்களை அங்கீகரிக்ககூடாது என்பது தான் எமது கோரிக்கையாகும்

விடுதலைப்புலிகள் மக்களை மிரட்டுகிறார்கள்

கட்டாயப்படுத்தி பணம் பறிக்கிறார்கள்

தாங்களுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

ஊடகங்களை ஜனநாயக முறையில் செயற்பட அனுமதி மறுக்கிறார்கள்

ஊடகங்களுக்கும் ஊடகவிலாளர்களுக்கு கொலை பயமுறுத்தல் விடுக்கிறார்கள்.

இவை தான் பிரான்ஸ் அதிகார மட்டத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பாக இருக்கும் எண்ணப்பாடாகும்

இதை உடைத்து விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தும் சிறீலங்கா அரசுக்கு வேலை செய்யும் நபர்கள் தான் விடுதலைப்புலிகள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதற்கு பின்னணியில் இருக்கிறார்கள் அதற்கான வேலைகளை புலம்பெயாந்த நாடுகளில் திட்டமிட்டு செய்கிறார்கள் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கிடையாது என்பதை நாங்கள் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப் போகாறோம்.

இந்த வழக்க நீதி மன்றத்துக்கு வரும் போது நாங்கள் மக்கள் முன் வருவோம்.

எனவே முதலில் விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாத தடையை நீடிப்பதற்கு ஏற்ற விதத்தில் திட்டமிட்டு செயற்படும் பதிவு ஈழநாடு என்பவற்றுக்கு தாயகத்தை நேசிக்கும் அனைவரும் தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் இவர்களுடனான தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இது தான் இவர்களுடைய செய்தி …..

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த காலம் முதல், தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளிடமும் பொது மக்களிடமும் தனது இலட்சியத்தை வலியுறுத்தும்போது, ‘நான் தமிழீழ இலட்சியத்தை எந்தக் காலத்திலாவது, என்ன காரணத்திற்காகவாவது கைவிட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், என்னை சுட்டுக் கொல்லத் தயங்க வேண்டாம்’ என்ற கட்டளையையும் விடுத்திருந்தார். அவரது அந்த ஆணை அவருக்கானது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்துடன் தமிழீழ விடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும்......

சமீப காலத்தில், பிரான்சில் வேலையே அற்ற இரு மனிதர்களால் ஒரு பத்திரிகை வெளியிடப்பட்டு வருகின்றது. 32 பக்கங்களும் வண்ணத்தில் அச்சிடப்படும் அந்தப் பத்திரிகையை வெளியிடும் அளவிற்கு அவர்களிடம் வளம் இருப்பதற்கான எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இலவசமாக வெளிவரும் அந்தப் பத்திரிகையில் தமிழீழ மக்களது அவலங்கள் திட்டமிட்ட வகையில் இருட்டடிப்புச் செய்யப்படுவதுடன், தமிழீழம், தமிழீழ மக்கள் என்ற சொற் பதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு நாசகாரத் திட்டமொன்றின் முன் முயற்சியாகவே நோக்கப்படுகின்றது. அடுத்த வேளைக்கும் அடுத்தவர்கள் கையை எதிர்பார்க்கும் நிலையில், தமிழீழம் சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பணம் செலவளித்து, இலவசமாக ஒரு பத்திரிகை வண்ணமயமாக்கப்பட்டு வெளியிடப் படுகின்றதென்றால், அதன் அர்த்தத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் அதைத் தெளிவு படுத்த வேண்டிய கட்டாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாரிசிலிருந்து சிவபாலன்

கடந்த வாரப் பத்திரிகையில் காலத்தின் வஞ்சனையை களைவது யார் என்ற வன்னிப் பேரவலம் பற்றி ஒரு கட்டுரை வந்ததை படிக்க முடிந்து இஸ்ரேலில் இருந்து ஈழம் வரை படிக்க முடிந்தது. ஜேவிபி பிடிப்பது தமிழர்களின் இரத்தக் கொடியா என்பதையும் படிக்க முடிந்து.அடுத்தவரை வசைபாடும் தூற்றும் கட்டுரைகள் எதையும் தாய் நிலத்தில் படிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்து ஊடகங்களில் கபில்நாத் கொலை வெளிப்படுத்தப்பட்டதா? பாராளுமன்றத் தேர்தலில் ஊடகங்கள் மக்களது கருத்தைப் பிரதிபலித்தனவா? மக்களைச் சரியாக வழிப்படுத்தினவா?

யாழ்ப்பாணத்தில் உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி ஆகிய மூன்று தினசரிகள் வெளிவருகின்றன. கபில்நாத் கொலையின் முக்கிய சூத்திரதாரியான ஈபிடிபி உறுப்பினரான ஜீவா என்பவரைக் கைதுசெய்யுமாறு நீதிபதி ரி.ஜே. பிரபாகர் பிறப்பித்த பிடியாணையையும் அறிக்கையையும் நடுநிலையான பத்திரிகையெனத் தன்னைப் பீற்றிக்கொள்ளும் வலம்புரி நாளிதழ் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தது.

http://www.globaltamilnews.net/

Edited by kalaivani

  • தொடங்கியவர்

sasi Says:

August 23, 2010 at 6:29 am

பாரிசிலிருந்து கரும்புலி சிவபாலன் சொல்கிறார்…..இலட்சியத்தைக் கைவிட்டவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ என்ற நாமத்தை உச்சரிக்கத் தகுதியற்றவர்களாம்!

விடுதலைப் புலி என்பவன், தமிழீழம் என்ற இலட்சியக் கனவை நெஞ்சில் நெருப்பாகச் சுமப்பவன். அதற்காக எதையும் இழப்பதற்குத் தயாரானவன். அதற்காகவே, கழுத்தில் நஞ்சையும் நெஞ்சில் விடுதலை நெருப்பையும் ஒன்றாகவே சுமந்து செல்பவன். தனக்கான எல்லாவற்றையும் விடுதலை வேள்வித் தீயில் எரித்துப் போட்டவன். தேசியத் தலைவரையும், விடுதலைப் போராளிகளையும் மட்டுமே தனக்கான உறவுகளாய் வரித்துக் கொண்டவன். எதிரியின் வலையில் சிக்கிக் கொள்ள மறுத்துத் தன்னையே நெருப்பாக்கிக் கொடும் பகையை எரிப்பவன். அவன்தான் விடுதலைப் புலியாம்!!

மே16இல் கஸ்ரோ அண்ணாவை விட்டு ஓடிய அறிவும், நந்தகோபனும், மற்ற 12ஆயிரம் பேரும், நடேசண்ணையும், புலித்தேவனும் எந்த வகைக்குள் அடக்குவது? ஏன் இவையள் தங்களை நெருப்பாக்கவில்லை? இந்த இடத்தில் தங்களை தப்பிக்க தலைவர் தான் சரணடைய சொன்னவர்; ஆயுதத்தை மௌனிக்க சொன்னவர்; குப்பியை எறிந்துபோட்டு போக சொன்னவர் என்பதையும் சொல்லுவீங்களோ கரும்புலி சிவபாலன்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் தடுத்து நிறுத்த முடியாத பிரவாகமாக புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை முன் நகர்த்தும் வல்லமை கொண்டது என்பதை முருகதாசன் திடல் நோக்கி நீண்ட நடை பயணம் அனைவருக்கும் உணர்த்துகின்றது…….

28 நாளாக ஏதோ சாதனைக்கு நடைப்பயணம் செய்தவர் போல் நேர் முக வர்ணணை எல்லாம் ஜிரிவியில் கொடுத்தார்கள்.ஆனால் ஜெனிவாவில் என்ன நடந்தது என்று எவரும் எதுவும் சொல்லவில்லை. அடுத்த கணமே சிவந்தன் லண்டனுக்கு விமானத்தில் ஏறிவிட்டார். ஜிரிவியில் நாடு கடந்த அரசின் சுகன்யா என்ற பெண்மணி சொன்னார் லட்சக்கணக்கில் முருகதாசன் திடலில் திரண்டிருப்பதாக சிரித்துக்கொண்ட வெளிச்சம் நிகழ்ச்சியாளர் தினேஸ் உண்மையில் எவ்வளவு பேர் வந்துள்ளனர் என சுகன்யாவிடம் கேட்க எட்டாயிரம் பேர் இருக்கும் என்றார். இந்த தொகையையும் கேட்ட நான் கூட்டத்தோட கூட்டமாக சென்ற எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன் எவ்வளவு சனம் வந்தது என்று சுமார் ஒரு 5ஆயிரம் என்றார்.சுகன்யா ஜரோப்பிய மக்களுக்கு பூச்சுத்துகிறார் என்று யாருக்கு கதைவிடுகிறியள். இப்போது சனத்துக்கு எல்லாம் நல்லா விளங்கிவிட்டுது. இனி கஸ்டம் பாருங்கோ. ஒரு நண்பர் சொன்னார் ஒரு விசயத்துக்கு இந்த இன்ர நெற் வந்தது நல்லம். ஏனென்றால் பலதையும் பத்தையும் அறியலாம். ஆனந்தசங்கரி அடிக்கடி கடிதம் எழுதுவதுபோல் யாராது சிலதை கண்டுபிடிச்சு எழுதுவாங்கள் என்றார்.

நண்பர் ஒருவர் சொன்னார், ‘கே.பி. தமிழ் மக்கள் மத்தியில் அம்மணமாகி, அசிங்கப்பட்டு நிற்கிறார். இப்போதும் கே.பி. குறித்து ஊடகங்கள் எதற்காக எழுதுகிறார்கள்?

கேபி இப்போது அம்மணமாகி அசிங்கப்படுகிறார் என்பது உண்மைதான். ஆனால் காலகாலத்துக்கும் வரலாற்றின் பதிவுகளில் சிலர் அம்மணமாகப்பொகிறார்கள். என்ன செய்ய காலம் யாரைத்தான் விட்டு வைச்சுது.

Reply

suresh Says:

August 23, 2010 at 6:53 am

கருணாவை நீண்ட காலத்துக்கு மாவட்ட தளபதியாக தலைவர் விட்டதால் தான் கருணாவின் துரோகங்கள் தலைவருக்கு தெரியாமல் போய்விட்டது என்று கருணாவின் பிரிவின் போது பலர் முணுமுணுத்த ஞாபகம்.அதேபோல் கஸ்ரோவும் தனக்கு கிடைத்த ‍ஆறுவருட பொறுப்பில் இயக்கத்துக்கும் போராட்டத்துக்கும் விசுவாசமாக தனக்கு கீழ் இருந்த போராளிகளை வளர்க்காமல் தனக்கு மட்டும் விசுவாசமாக வளர்த்துள்ளார் என்றுதான் எண்ண வைக்கிறது.

கஸ்ரோ பொறுப்பு எடுத்தவுடன் தனக்கு விசுவாசமானவர்களையே பொறுப்புகளிலும் போட்டார். எனக்கு தெரிய இங்கு கனடாவில் தனக்கு தெரிந்த ஜெயம் என்ற வல்வெட்டிதுறை முன்னாள் புலியை ஒரு ஏரியாவுக்கு பொறுப்பாக போட்டார். ஆனால் ஜெயம் முன்னர் காசு கேட்டு வீட்டுக்கு போன ஏரியாகாரரை பேசி துரத்தியவர் என்றும், உலகதமிழர் இயக்கதுக்கு எதிராக கனக.மனோகரனுடன் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர் என்று பழைய ஏரியாகாரர்கள் பலர் குறைபட்டுக் கொண்டதுமல்லாமல் செயற்பாட்டில் இருந்து கூட விலகினர். அதேபோல் இப்போது கனடா பொறுப்பாளர் தமிழ் என்பவர் கூட மொன்றியலில் காசு கேட்டு போனவர்களை விரட்டியடித்தவராம். பின்னர் சமாதானதுடன் நாட்டுக்கு போய் புலியானவர். இப்படியானவர்கள் தான் கஸ்ரொவின் விசுவாசதுக்குரியவர்கள்.

இதேபோல் கஸ்ரோ கனடாவுக்கு ரெஜிக்கு பின்னர் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மரியதாஸ் முன்னர் கேபியின் ஆளாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து சுவிஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரித்தவர். பின்னர் கஸ்ரோவுக்கு தகடுகொடுத்து ரெஜியை விலக்கப்பண்ணியவர் இந்த மரியதாஸ். இந்த மரியதாஸ் பற்றி இன்னொரு தகவலும் உண்டு. மாத்தையாவை கைது செய்த காலத்தில் தலைவரை படுமோசமாக திட்டி திரிந்தவர். அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.கண்டுகொள்ளாதேங்கோ.

1993இல்தலைவரின் பாதுகாப்புபிரிவில் இருந்த ரிச்சார்ட் பெண் பிரச்சனையில் தப்பியோடிய போது எனக்கு தெரிந்த ஒருவர் சொன்ன வாக்கியம் தான் ஞாபகதுக்கு வருகிறது.” தலைவர் யார் யாரை எல்லாம் நம்பினாரோ அவர்கள் எல்லாம் இயக்க பணத்துடனும் இயக்க ஆயுதங்களுடனும் ஓடித்தப்பினர்” என்பதெ அது.

Reply

M.Malimagan Says:

August 23, 2010 at 11:42 am

நல்ல பின்னூட்டங்கள். பாாிசில் கருப்புலியா? எதற்கு அங்கத்தைய சனாதிபதிக்கு மலை போடவோ! ரஜீவிற்கு போட்டது மாதிாி. இதில் பொிய வேடிக்கை என்னவென்றால் புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளில் எல்லாம் ஏாியாக்களை மெயிட்டன் பண்ணியள் ஆனால் ஈழத்தழில்தான் எல்லா நம்மட ஏாியாக்ளையயும் சிங்களவங்களிட்ட கொடுத்திட்டு போயிருக்கிறியள். வெற்றிகரமாக. ஈழத்திலும் புலிகள் தமக்கு நெருக்கமானவர்களாக காட்டிக் கொண்டவர்கள் அனேகர் நேர்மையான மணிதர்களோ நல்லவர்களோ அல்ல அனைவரும் நம்பர் வண் வியாபாாிகள் இதன் காரணமாகவே பல நல்ல மணிதர்கள் புலிகளை நோக்கிச் செல்வதை தவிர்த்து வந்தனர். இது குறித்து ஒரு முறை புதுவையிடம் பிறிதொரு கிவிஞர் கேட்டிருக்கிறார். அதற்கு புதுவை சொன்ன பதிலோ நீங்கள் மசிர் ஒரு கரும்புலியை வீட்டில் வைத்திருப்பியளோ, நாங்கள் சொல்றதையெல்லாம் செய்வியளோ ஆனால் அவர்கள் செய்வார்கள். எனவே இங்கு புலிகள் பலரை இப்படித்தான் பணிக்கு அமர்த்தினர். அவுர்களும் புலிகள் போனபின் அகப்பட்டதை சுருட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். இது அவர்களது பிழையல்ல

Reply

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.