Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மைக் கட்சிகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சர்வாதிகாரி மகிந்த

Featured Replies

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம் பெருமையாக ஒரு விடயத்தைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது நாம் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும் 'கிங் மேக்கர்" நாம்தான் என்று அவர் சொல்வார். உண்மைதான்! அந்தக் காலத்தில் ஹக்கீம் கிங் மேக்கராக இருந்துள்ளார்தான். இ.தொ.கா. தம்மை கிங்மேக்கர்கள் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. கிங்மேக்கர்களாக இருந்த இந்தக் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிப்பவராக இன்று மகிந்த ராஜபக்ஷவே உள்ளார்! இதனை ராவூப் ஹக்கீமின் கட்சிக்கு கடந்த வாரம் நடந்த நிகழ்வு உதாரணமாக உள்ளது. ஹக்கீமின் கட்சி மட்டுமல்ல. மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கும் இதுதான் நடந்துள்ளது.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அரசுக்கு ஆதரளிப்பதென சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த வாரம் எடுத்துள்ள தீர்மானம் கொழும்பின் அரசியல் போக்கில் ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தான் நினைத்தவாறு அரசியலமைப்பை மாற்றிக்கொள்வதற்கான பலத்தை இது அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கின்றது. மறுபுறத்தில் எதிர்க்கட்சிகளை மிகவும் பலவீனமான நம்பிக்கையற்ற ஒரு நிலைக்குத் தள்ளவிட்டுள்ளது. இதனைவிட எம்மைப் பொறுத்தவரையில் இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது சிறுபான்மையினக் கட்சிகள் செல்லாக் காசாகிவிட்டன என்பதைத்தான்.

முஸ்லிம் காங்பிரஸின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தனது செயற்பாடுகளை அரசாங்கம் துரிதப்படுத்தியிருக்கின்றது. செப்டம்பர் நடுப்பகுதிக்குள் இதனைச் செய்துவிடுவதற்கான முனைப்பில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. அரசின் இந்தத் திட்டம் தமது எதிர்கால அரசியலை மிகவும் பாதிப்பதாக அமையும் என்பதால் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு போராட்டம் என எது நடைபெற்றாலும் எதற்கும் அஞ்ச வேண்டிய நிலையில் அரசாங்கம் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதியாகிவிட்ட நிலையில் தனது இலக்கிலிருந்து அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அரசாங்கத்தின் திட்டத்தின்படி அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டால் ஒரு சர்வாதிகாரப் பாதையை நோக்கி நாடு பயணிக்க ஆரம்பித்துவிட்டது என்பதே அதன் அர்த்தமாக இருக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கு நெருக்கமான ஒரு வெற்றியை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. எதிர்க்கட்சியினரைத் தமது பக்கத்துக்கு இழுத்தெடுத்துக்கொள்வதன் மூலமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான உபாயங்களை அரசாங்கம் வகுத்துக்கொள்ளும் என்பது அப்போதே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரை தமது பக்கத்துக்கு இழுத்தெடுத்தன் மூலம் தனது இலக்கை நோக்கிய பயணத்தை அரச தரப்பு ஆரம்பித்தது. இதனைவிட ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட உறுப்பினர் காதர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில் மேலும் நான்கு பேருடைய ஆதரவே தேவை என்ற நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை நோக்கி அரசின் பார்வை திரும்பியிருந்தது.

ஹக்கீமைப் பொறுத்தவரையில் பலமான எதிர்க்கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் அக்கறையுள்ளவராகவே இருந்துள்ளார். ஐ.தே.க. தலைமையில் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்பதிலும் அவர் பற்றுறுதி கொண்டவராகவே இருந்துள்ளார். ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றையும் இணைத்துக்கொண்டு பலமான பலமான எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் ஹக்கீம் எடுத்திருக்கும் முடிவு எதிர்க்கட்சிகளை நிச்சயமாக அதிர்ச்சியடையச் செய்வதாகவே அமைந்திருக்கும்.

ஐ.தே.க.வின் மூன்று உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதன் மூலமாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தன்னுடைய பலத்தை 146 ஆக அதிகரித்திருந்தது. 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (அதாவது 150) பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் நான்கு உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை என்ற நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் மீது ஆளும் கட்சி வலை வீசியது. இன்னும் 6 வருட காலத்துக்கு எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பதை விரும்பாத மு.கா. உறுப்பினர்கள் சிலர் அரசின் இந்த வலையில் வீழ்ந்தார்கள்.

பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த காலப்பகுதியிலிருந்தே அரசுடன் மு.கா. இணைந்துகொள்ள வேண்டும் என அதன் நான்கு உறுப்பினர்கள் வலியுறுத்திவந்திருக்கின்றார்கள். ஆளும் கட்சியின் தலைமையும் அவர்களுடன் உறவுகளைப் பலப்படுத்தி வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இவர்களுடைய ஆதரவைப் பயன்படுத்தலாம் எனக் கருதிய அரசாங்கம், அவர்களுடன் இரகசிய பேரம் ஒன்றில் இறங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்கள் ஹக்கீமுக்குத் தெரியவந்து, அவர்களைத் தடுத்துநிறுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்னரே ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஹக்கீம் முன்வந்ததாகக் கூறப்படுகின்றது. அரசாங்கத்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை ஹக்கீம் எடுக்கவில்லையாயின், முஸ்லிம் காங்கிரஸில் ஒரு பிளவு நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள மு.கா.விலிருந்து ஆறு பேரை தமது பக்கத்துக்கு இழுத்தெடுப்பதற்கான திட்டங்களுடனேயே அரசாங்கம் செயற்பட்டுவந்ததாகத் தெரிகின்றது. ஹக்கீம் இராஜதந்தரமாக காய்நகர்த்தவில்லை எனில் மு.கா. மற்றுமொரு பாரிய பிளவைச் சந்தித்திருக்கும். ஹக்கீமும் கட்சியின் செயலாளரும் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

ஆக, ஹக்கீமின் நகர்வு கட்சியைப் பாதுகாப்பதற்கானதும், தனது தலைமையைப் பாதுகாப்பதற்கானதுமான ஒரு நகர்வு மட்டும்தான். இதில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களோ அல்லது சிறபான்மையின நலன்களோ சம்பந்தப்படவில்லை. ஏனெனில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களைத் தனித்தனியாக உடைத்து எடுக்கக்கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் மட்டும்தான் இந்த ஆதரவை வழங்குவதற்கு ஹக்கீம் உடன்பட்டிருக்கின்றார்.

கடந்த வாரம் வரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்த ஹக்கீம், இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஒருவர் எத்தனை தடவையும் பதவியிலிருக்க முடியும் என்ற அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராகிவிட்டார்.

சிறுபான்மையினக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, அல்லது அச்சுறுத்தல் மூலமாக அவர்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொண்டு கட்சித் தலைமையை வழிக்குக் கொண்டுவரும் உபாயத்தை அரசாங்கம் கையாள்கின்றது என்பதற்கு ஹக்கீமுக்கு நிகழ்ந்த சம்பவம் ஒரு உதாரணம்.

இந்தப் போக்கு ஜனநாயகத்தை மட்டுமல்ல சிறுபான்மையின சமூகத்தையும் மிக மோசமாகப் பலவீனமாக்குவதாகவே இருக்கப்போகின்றது. சிறுபான்மையின சமூகத்துக்கு எதனையுமே பெற்றுக்கொடுக்காமல் அவர்களுடைய ஆதரவை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இனித் தொடரப் போகும் சர்வாதிகார ஆட்சியில் சிறுபான்மையினர் நிலை எவ்வாறானதாக இருக்கப்போகின்றது என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாகவே இருக்கின்றது.

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

http://pooraayam.com/news-analysis/783-2010-08-31-22-30-38

முஸ்லிம் காங்கிரஸ் போன்று பச்சோந்தித்தனத்தைக் காட்டாத கூட்டமைப்பை பாராட்டலாம்.

சம்பந்தர் நாட்டில் இல்லாதபடியாலோ தெரியவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.