Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் உடனடியாக 150 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்த சிறிலங்கா அரசு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் உடனடியாக 150 சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்த சிறிலங்கா அரசு நடவடிக்கை

திகதி:16.09.2010

யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடியமர்வதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல தெரிவித்துள்ளார்.

இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் வசித்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் வெளியிட்டுள்ள சிங்களவர்களில் பலர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில்- குறிப்பாக வெதுப்பக தொழிலை மேற்கொண்டவர்கள் என்றும் பிரிகேடியர் மெடவெல தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கு விண்ணப்பித்துள்ள 150 சிங்களக் குடும்பங்களையும் குடியமர்த்தும் நடவடிக்கைளை சிறிலங்கா இராணுவத்தின் பொதுசனத் தொடர்பு பணியகம் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்ட அந்தப் பணியகத்தின் அதிகாரி ஒருவர்,

“ யாழ்ப்பாணத்தில் குடியேற விண்ணப்பித்துள்ள 150 சிங்களக் குடும்பங்களும் தற்போது அனுராதபுரம், மிகிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் 50 வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த சிங்களக் குடும்பங்களே மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றன.

இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் முன்னர் வசித்து வந்துள்ளனர்.

அவர்கள் தமது காணிகளின் உரிமைப் பத்திரங்களையும் வைத்திருக்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள்.“ என்று தெரிவித்தார்.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

05m.jpg

arjuna_Krishna_chariot.jpg

நமக்கு இந்த கதைகளில் ஆராய்ச்சி செய்வதினும் பார்க்க .. அந்த யுகங்களில் நடைபெற்றதாக சொல்லபடும் ராமாயணம் மற்றும் மகாபரதம் கதைகளை உற்று நோக்குங்கள்... ஒருவன் ஒரு பொருளை அதாவது அடுத்தவருடையதாக இருந்தாலும் குறிப்பிட்ட கால அளவு அனுபவித்து விட்டால் அந்த பொருள் அவருக்கே சொந்தம் .. ராமன் வனவாசம் போனதும் பாண்டவர்கள் வன வாசம் போனதும் இந்த கால அளவை நிலை நிறுத்தியே ... ஆக கலியுகத்தில் இப்போ 10 வருடம் அடுத்தவருடைய சொத்தை ஆட்டை போட்டு அனுப்வத்தால் அது அவருக்கு சொந்தமாகிவிடுகிறது... மனுதர்மசாஸ்திரம் வழி எழுதப்பட்டுள்ளதாக சொல்லபடும் குந்திய அரசியல் சட்டம் சொல்வதும் இதுவே... ஆக இதெல்லாம் 50 வருடத்திற்கு முன் வாழ்ந்து வந்ததாக சொல்லபடுவதேல்லாம் புருடா... அதிலும் பார்க்க இவ்வாறு சட்ட சரத்துகள் ஏதும் உள்ளனவா? மகாவம்சத்தில் ஏதும் இருக்குதா? தோழர்கள் விளக்குக..நான் கூறியபடி சிங்களவன் இந்த அடுத்த 10 வருடத்திற்கு அவர்களை அங்கு வாழவிட்டு "அரசியல் தீர்வு".. "அண்டார்டிக்கா தீர்வு" என காலத்தினை கடத்தி நிரந்தர சிங்களதேசமாக்க அடிபோடுவதாக தெரிகிறது.. முதலில் அரசியல் தீர்வுக்கு தோழர்கள் முயற்சிக்கவேண்டும்

டிஸ்கி:

* கிருதயுகம் (17,28,000) ஆண்டுகள் (முழுவதும் நேர்மையான உலகம்)

* திரேதாயுகம் (12,96,000)ஆண்டுகள் (கால்பங்கு மொள்ளமாறித்தனம் முக்கால் பங்கு நேர்மை)

* துவாபரயுகம் (8,64,000) ஆண்டுகள் (பாதி மொள்ளமாறித்தனம் .. பாதி நேர்மை)

* கலியுகம் (4,32,000) ஆண்டுகள் ( முக்கால் பங்கு மொள்ளமாறித்தனம்.. கால்பங்கு நேர்மை)

எனக்கு இந்த யுகங்கள் மீது நம்பிக்கை இல்லையெனினும் இந்த காலகட்டத்தில் நடப்பவைகள் .. அந்த கதைகளில் வருபது போல உண்மையாக இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது... :rolleyes::unsure::wub:

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.