"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 71 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
701 வங்காளி வாலிபருக்கு 701 தமிழ் குமாரி பெண்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பணியாட்களுடனும் வணிகர்களுடனும் திருமணம் செய்ய இலங்கை வருவதால், எல்லா வகையிலும், தமிழர்களுக்கு இலங்கை மீது அதிக உரிமை இருப்பதே தெரிகிறது.
அன்றைய காலக்கட்டத்தில், ஒரு உதாரணத்துக்கு. விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் வங்காள ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும் மொத்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் இரத்தமும் ஆரம்ப காலத்தில் முதலில் கலக்கிறது. இப்ப சொல்லுங்கள் யாரின் இரத்தம் கூடுதலாக இருக்கும்? யாருக்கு இலங்கை மீது அதிக உரிமை இருக்கும்? மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி நாகர், இயக்கர் குடிகளின் இரத்தமும் கட்டாயம் நாளடைவில் சேர்ந்து இருக்கும். எனவே சிங்கள வம்சத்தின் கலப்பு எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை? ஆனால் அதை அவர்கள் புரியும் பக்குவத்தை மகாவம்ச, ராஜவலிய கதைகள் தடுத்துக்கொண்டே இருப்பது தான் உண்மை.
இயல்பிலேயே தனது சொந்த நாட்டில் ஒரு குற்றவாளியான விஜயனும் அவனது தோழர்களும் தங்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் வெவ்வேறு கப்பலில் தவிக்க விட்டுவிட்டு, விஜயன் தனது முதல் அல்லது இரண்டாவது மனைவியை [இலங்கையின் பூர்வீக குடியான குவண்ணாவை] வேறொரு வெளிநாட்டுப் பெண்ணைத் [மதுரை தமிழ் இராசகுமாரியை] திருமணம் செய்து கொள்ள, தனது பிள்ளைகளுடன் துரத்தினார் என்கிறது மகாவம்சம். இந்த நிலையில், விஜயனை இலங்கையின் முதல் நாகரிக குடிமகன் என்று சொல்லமுடியுமா ? அல்லது இலங்கையின் உரிமைகோரலின் அடிப்படை எதையும் அவன் உருவாக்க முடியுமா? அது மட்டும் அல்ல பௌத்தம் கூட அப்போது இலங்கையில் நிறுவப்படவில்லை. சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை? அது, சிங்கள மொழி ஆரம்பிக்க தொடங்கியதே, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே! இலங்கையில் இருந்தது சிவா, நாக வழிபாடு மட்டுமே!! இன்னும் ஒன்றைக் கவனியுங்கள், விஜயன் தனது தூதர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்புகிறான், செய்திகள் பரிமாறப்படுகின்றன, தமிழ் புரியாத இலங்கையாக இருந்து இருந்தால், தன் மகளையும், 700 தோழிகளையும் அங்கு எப்படி திருமணம் செய்து வாழ ஒரு வீரமிக்க, செல்வந்த அரசன் அனுப்பினான்? செய்திகளை எப்படி பொதுமக்களிடம் பரிமாறினர் ? கொஞ்சம் சிந்தியுங்கள்?
மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள குவண்ணாவின் முழு அத்தியாயமும் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டும், பாண்டிய நாட்டு மன்னன் தன் மகளை சமீபத்தில் இலங்கையில் வந்து ஒரு துணை மானிடப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வரும் அறியப்படாத ஒரு பொல்லாத, நாடுகடத்தப்பட்ட ஒருவனிடம் அனுப்பியிருப்பானா? அப்படி அனுப்பினான் என்று மகாநாமா கூறினால், கட்டாயம் எதோ ஒன்றில், எதோ ஒரு நோக்கில் பைத்தியமாக இருக்க வேண்டும்? அதே நேரம், தென் இந்தியா வரலாற்று குறிப்புகளில், பாண்டிய அரசிலோ அல்லது தமிழ்நாட்டிலோ, ஒரு இளவரசி, தோழிகள் சகிதம், தனது உதவியாளர்களுடனும் வணிக மக்களுடனும் இலங்கையில் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ வாழ்வதற்காக வந்ததாக எந்த குறிப்புகள் எதுவும் இல்லை.
அத்தியாயம் 07, தொடக்கத்தில் தெளிவாகக் கூறுகிறது: உலகின் வழிகாட்டியாகிய புத்தபெருமான் அகில உலகத்தின் மீட்டெழுவதற்கான செயல்களைச் செய்து முடித்ததும், தெய்விக அமைதியின் உச்ச நிலையை அடைந்தவராக, பேச்சாற்றல் மிக்கவர்களில் பெரியவரான அவர், பெரிய தேவர் கூட்டத்தின் நடுவில், தம்முடைய நிர்வாண [முத்தி] நிலையில் படுக்கையில் இருந்த பொழுது, தனது அருகில் நின்ற சக்கனிடம் (Sakka / தேவர்களின் அரசன் இந்திரன்) பேசினார்: "சீகபாகு / சிங்கபாகு" வின் மகன் விஜயன் லால நாட்டி லிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வருகிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவகற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாககர் [மனதில் நிறைநிலை அடைந்தவர் / புத்தபெருமான்] கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீல தாமரை மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த *தேவனிடம் [நீல வண்ணமுடைய - விஷ்ணு] ஒப்படைத்தான்.
புத்த சமய தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காகத் [‘serene joy and emotion of the pious’] தான் மகாவம்ச கதையை தொகுத்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் வெளிப்படையாக கூறி இருப்பதால், ஏன் மகாநாம தேரர் புத்தரின் அமானுஷ்ய சக்திகள் மற்றும் இந்து கடவுள்களுக்கு கட்டளையிடும் அவரது திறன் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் புனைவுகளை அறிமுகப்படுத்துகிறார் என்பது வெளிப்படையாக எமக்குப் புரிகிறது. புத்தர் கடவுளைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அத்துடன் இந்து கடவுள்களை வழிபடுவதையோ அல்லது பிராமண பூசாரிகளால் இந்து கோவில்களில் செய்யப்படும் விழாக்களையோ மற்றும் சடங்குகளையோ நம்பவில்லை என்ற உண்மை அவரின் போதனைகளிலும் வாழ்விலும் செயல்களிலும் எங்கும் பறந்து விரிந்து இருந்தபோதிலும், மகாநாமதேரர் இப்படியான தரவுகளை புகுத்தியிருப்பது வேடிக்கை மட்டும் அல்ல, புத்த மதத்தின் உண்மைக்கும் களங்கம் விளைவிக்கிறது, எதோ பக்திமான்கள் மகிழட்டும் என புத்தரையும் கூத்து போட வைப்பது சரியா? ஒன்று மட்டும் ஞாபகப் படுத்துங்கள், புத்தரைப் பின்பற்ற உலகத்திலிருந்து, அதாவது ஆசையில் இருந்து, முழுமையாக ஓய்வு பெறுவது அவசியம். இப்ப சொல்லுங்கள், எந்த புத்தகுரு அல்லது புத்த பத்திமான் இப்படி இலங்கையில் வாழ்கிறார்? அப்படி வாழ்ந்தால், ஏன் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில், அவர்களின் காணியை பறித்து, புத்தர் சிலையாக எழும்புவாரா?
இப்போது என் நினைவுக்கு வருவது என்னவென்றால், புத்தருக்கு, நாடு கடத்தப்பட்ட, கெட்ட நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தனிப்பட்ட ஆர்வம் இருந்தால், மற்றும் புத்தர் ஏற்கனவே இலங்கை உயிர் வாழ் இனங்களுக்கு, தனது போதனையை போதித்து இருப்பதாலும், விஜயனும் அவனது கூட்டாளிகளும், ஏன் இலங்கையில் அரசை நிறுவியபோது அல்லது அதற்குப் பின்னாவது, தனது 38 ஆண்டு ஆட்சி காலத்தில், எப்போதாவது, பௌத்தர்களாக இருக்கவில்லை? மேலும், இலங்கையில் அவர்களின் முதல் வாழ்க்கை இயக்கர்களிடையே [சமஸ்கிருதம்: यक्ष yakṣa; பாலி: yakkha / உருவமற்ற, மனிதரல்லாதவர்கள்] தொடங்குகிறது , புத்தர் யாரை பயமுறுத்தி, இலங்கையில் வாழத் தகுதியற்றவர் என்று விரட்டி, வேறு ஒரு தீவுக்கு அகற்றினாரோ, அப்படிப்பட்ட இயக்கர்களைத் தான் முதலில் விஜயன் சந்திக்கிறான்?, அப்படி என்றால், புத்தர் தன் பழைய கதையை மறந்து விட்டாரா? ஏன் - தான் தேர்ந்தெடுத்த, பெருமைக்குரியதாக அவராலேயே கருத்தப்பட்ட, துர்நடத்தை கொண்ட விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திக்க, இயக்கர்களை அனுமதித்தார்? அது மட்டுமின்றி, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தருடன் மிகவும் நட்பாக, அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது வருகையில் இருந்த நாகர்களை, விஜயனும் அவரது கூட்டாளிகளும் ஏன் சந்திக்கவே இல்லை? பல ஏற்பாடுகளை செய்த புத்தருக்கு ஏன் இவைகள் ஞாபகம் வரவில்லை? மற்றொன்று, மகாவம்சத்தின் பிந்தைய அத்தியாயத்தில், விஜயனுக்குப் பிறகு இலங்கைக்கு புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அசோகரின் மகன் அல்லது தூதுவர் மூலம்? அது மட்டுமின்றி, புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பியது அசோகர் மட்டுமே! சிங்களம் என்ற இனம் ஆரம்பிப்பதற்கு விஜயன் என்ற உருவம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்ததே தவிர, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை ! இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தொடர அவருக்கு ஒரு பெருமைமிக்க உரித்தான குழந்தைகள் கூட இல்லை. இந்துவாக பிறந்து இந்துவாகவே இறந்தான்!
Part: 71 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
As of that time, by all counts, Tamils had a larger claim on Lanka as ladies came with attendants and trade people. Vijaya, a criminal by nature in his own country, chased away his first wife to marry another woman cannot form the basis of claim of Lanka for Buddhists. Even the Buddhism was not established in Lanka at that time. The entire episode of Kuvanna is not in the Dipavamsa. Would the king of Pandya country have sent his daughter to an unknown person who recently landed in Lanka and living with a sub-human woman? Mahanama must be crazy! There are no references to this in the Pandya kingdom from which the princess came with her attendants and trades people.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 72 தொடரும் / Will follow
துளி/DROP: 1952 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 71
https://www.facebook.com/groups/978753388866632/posts/32969445186037370/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.