Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூர்யாவும்,கார்த்தியும் - மனம் திறக்கிறார் நடிகர் சிவக்குமார்

Featured Replies

இன்று தமிழ் சினிமாவின் பெருமிதமான தந்தை சிவ குமார்.இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவின் ஹாட் நட்சத்திரங்கள்.மகன்களுக்கு போட்டியாக இன்றும் இளமையுடன் இருக்கும் சிவக்குமாரிடம் சூர்யா, கார்த்தி பற்றி பேசினோம்.

ஓவியக் கலைஞனாக புகழ்பெற சென்னை வந்தீர்கள்.அக்கலையில் தேர்ச்சி பெற்ற பின் அதைவிட்டு,நடிக்கப் போனீர்கள்.இப்போது அங்கிருந்து மேடைப் பேச்சுக்குத் தாவி விட்டீர்கள். மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

‘‘100 வயது தொட்ட மொரார்ஜி தேசாயிடம், இவ்வுலகில் நிலையானது எது என்று கேட்டார்கள்.மாறுதல்கள் என்றார் அவர்.மாறுதல்கள்தான் நிலையானது.நதியிலே ஓடும் வெள்ளத்தில் ஒரு விநாடியில் நீங்கள் பார்த்த நீர், அடுத்த வினாடி அங்கில்லை, முன்னால் போய்விடுகிறது.

40 ஆண்டு கால திரையுலகில் கிட்டத்தட்ட 200 படங்களில் 175-ல் கதாநாயகனாக நடித்தேன். அவற்றில் கதை அமைப்பு, நடிப்பு, இசை என்ற அளவில் மிகச் சிறந்த படங்கள் 20 ஆவது நிச்சயம் தேறும்.

நடிப்புத்துறையில் பணம்,புகழ் இரண்டிலும் நான் உச்சம் தொட்டவனில்லை. செய்யாத வேடங்களும் மிச்சம் இருக்கின்றன..

இப்போது பெரிய திரை,சின்னத்திரை நடிப்புக்கு தற்காலிக கும்பிடு போட்டு படிப்பு, எழுத்து, மேடை என்று புதுப் பயணம் துவங்கியுள்ளேன்.

ஓராண்டு முழுக்க ஒதுக்கிக் கற்ற கம்பராமாயணத்தை 100 பாடல் வழி 2 மணி 10 நிமிட நேரத்தில் பேசிய உரை, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது. ‘என் கண்ணின் மணிகளுக்கு’ உரை இன்றைய இளைய தலைமுறையை சிந்திக்க வைத்திருக்கிறது. ஆகவே புது அவதாரம் புத்துணர்ச்சி தரும் அவதாரமே.’’

உங்கள் பிள்ளைகளின் திரையுலக வெற்றிக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்த சூத்திரம் என்ன?

‘‘பிள்ளைகள் மனதில் பெற்றோரின் குணம், பழக்க வழக்கம், குடும்பத்தின் சூழல் - 50% இடம் பிடித்து விடுகிறது. மீதி 50% தான் அவன் தன் முயற்சியால்,திறமையால் பெற வேண்டியது.மோசமான சூழலில் வளர்பவன் 50% பாதிக்கப்பட்டிருப்பான்.

என் குழந்தைகளுக்கு நான் பெரிதாக எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் காபி, டீ, மது, புகை பழக்கமில்லாதவன். அதை அவர்கள் பார்க்கிறார்கள். யோகாசனம் 50 ஆண்டுகளாகச் செய்கிறேன். அதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.நாம் செய்ய முடியாத அரிய பணியைச் செய்பவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். ஒரு சாண் வயிற்றுக்காக சாக்கடைக்குள் உயிரைப் பணயம் வைத்துச் சென்று சுத்தப்படுத்துகிறவனை கடவுளுக்குச் சமமாக மதிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

ஆத்திகம் - நாத்திகம் பேசி காலத்தை வீணாக்காதீர்கள். அடுத்தவனை சமமாக மதியுங்கள் -சக மனிதனை நேசியுங்கள். இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவுங்கள். இந்த மனித நேயம்தான் உயர்ந்த பக்தி என்று சொல்லிக் கொடுத்துள்ளேன்.

வெற்றியில் ஆட்டம் போடாதீர்கள். தோல்வியில் துவண்டு விடாதீர்கள். இது மல்யுத்த மேடை.ஒரு கணம் அடுத்தவனை வீழ்த்துவோம். மறுகணம் நாம் வீழ்வோம். மீண்டும் எழுந்துகொள்ள வேண்டும்.

திரையுலகில் உங்களுடையது வெறும் துவக்கம்தான். இன்னும் நீண்ட பயணம் எதிரே உள்ளது என்று சொல்லியிருக்கிறேன்.’’

சூர்யா, கார்த்தி ஒப்பிடுங்கள்.

‘‘இரண்டும் என் கண்களே. சூர்யாவின் சாதனை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. கார்த்தி நான் நினைத்த எல்லையைத் தொட இன்னும் அவகாசம் இருக்கிறது.இலக்கு பற்றி யோசிக்காத,ஏழைகிராமத்து இளைஞனின் அடக்கம், தயக்கம், பயம் 15 வயதுக்கு முன் என்னுள் எப்படி இருந்ததோ, அதை சூர்யாவின் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் நான் பார்த்தேன்.

ஓவியக் கலையில் திறமையை வளர்த்து, திரையுலகில் கதாநாயகனாக வளர்ச்சி பெற்றபோது என்னிடத்தில் இருந்த தன்னம்பிக்கை,துணிவு, ஆளுமை, மற்றவர்களிலிருந்து நான் விசேஷமானவன் என்ற உணர்வு இவற்றை கார்த்தியின் பள்ளி, கல்லூரி நாட்களில் கண்டேன்.

கல்லூரியில் ஒரு நாள் முழுக்க நண்பர்களோடு அளவளாவினாலும் இரண்டு வார்த்தை சூர்யா தெளிவாகப் பேசமாட்டான் என்பார்கள். அந்த இளைஞன் ‘சிங்கம்’ படத்தில் சீறிப் பாய்வது, அக்காலத்தில் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாதது.

10 வயது இளைஞனாக இருக்கும்போது, அவர்களின் பாட்டி கிராமத்தில் பல சாதி ஏழைக் குழந்தைகளுடனும் தோள் மீது கைபோட்டு பாசத்தைப் பொழிந்தான். ஆடு, மாடு, கோழி, நாய்க் குட்டிகளைக் கண்டால் அள்ளி அணைத்து மகிழ்வான்.

அகரம் பவுண்டேஷனில் அந்த நேசம் ஏழைக் குழந்தைகள்பால் வெளிப்படுவதைப் பார்க்கிறேன். பிறப்பு, சூர்யாவைச் சுற்றி உருவாக்கிய இரும்புக் கோட்டையைத் தகர்த்து வெளியேற பெரிய போராட்டம் நடத்தி வென்றவர்.

சூர்யாவை திரையுலகில் நுழைத்தபோது,‘சிவகுமார் புத்திசாலி என்று நினைத்தேன். அவனும் முட்டாள்தான்’ என்று பேசினார்கள். துவக்கத்தில் வெற்றிப் படங்களுக்காக சூர்யா தவித்த சூழலில் -கார்த்திக்கும் திரையுலகின் மீது ஒரு விருப்பம் இருந்தது.

‘அண்ணன் காலூன்றும் வரை நீ காத்திருக்க வேண்டாம். அமெரிக்கா போய் படி’என்றேன். சந்திர மண்டலத்துக்கு வேண்டுமானாலும் போகிறேன். ஆனால் இந்தியாதான் என் நாடு.சினிமாதான் என் தொழில் என்று தெளிவாகச் சொல்லிவிட்டுப் போனான்.

சுயமாகச் சம்பாதித்து, மூன்றரை ஆண்டுகள் படிப்பு முடித்து வந்தான். மணிரத்னம் அவர்களிடம் பெற்ற பயிற்சி,கதை தேர்வுக்கும், இயற்கையான நடிப்புக்கும் துணை நிற்கிறது.’’

இன்றும் இளமையாக இருக்கிறீர்களே எப்படி?

‘‘நான் 70 வயதை அடுத்த ஆண்டு தொடவிருக்கிறேன். என்னைவிட இளமையாக உடல் ஆரோக்கியத்திலும், முகத் தோற்றத்திலும் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய முகவசீகரத்திற்கு 1958 முதல் யோகாசனத்தோடு எனக்கு உள்ள தொடர்பும் முக்கிய காரணம் என்பதை அடித்துச் சொல்வேன். மூளை சுறுசுறுப்பாக இயங்க யோகா பெரிதும் உதவுகிறது.

40 வயதுக்குப் பிறகு சைவத்துக்கு மாறுவது நல்லது. உடல் உழைப்பு குறையும் போது சைவ உணவு எளிதாக ஜீரணமாகும்.நோய்களைத் தவிர்க்க உதவும்.’’.

நன்றி குமுதம்

படங்களைப் பார்வையிட...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4761

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.