Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீழகுடியேற சென்றுகொண்டிருக்கும் வடமராட்சி கிழக்கு ஒரு பார்வை

Featured Replies

ஈழநாதம் புதன் கிழமை

வடமராட்சி கிழக்கு பிரதேசம் என்பது யாழ் மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய உதவி அரசாங்க அதிபர் பிரிவினை கொண்டதும் 19 கிராமங்களை கொண்ட கரையோர, தரவை பிரதேசமாகும்.

இங்கு மீழ குடியேற செல்லலாம் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் ஆங்காங்கே செல்ல ஆரம்பித்தனர். நேற்றும் ஆழியவளை கிராமத்திற்கு மக்கள் தென்மராட்சியில் தற்காலிகமாக தங்கி இருந்த மக்கள் தாமாகவே லொறிகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றனர். செல்கின்றனர்.

அங்கு தமது கிராமத்தின் அடையாளங்கள், தாம் இருந்த வசிப்பிடங்கள் ஆகியவற்றை தேடும்பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது. ஆழுக்கு நூறு ருபா கொடுத்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வந்ததாக கூறினர்.

ஒருபக்கம் தம் கிராமத்திற்கு வந்துவிட்டோம் என்ற வியப்பும் இன்னொரு பக்கம் இனி என்ன செய்யலாம் என்ற தவிப்பும் இந்த மக்களின் முகத்தில் காணப்பட்டது.

அத்துடன் நேற்று முன் தினம் தான் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு அரச இளம் உத்தியோகத்தர் கிளி நொச்சியில் தென்னை மரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தார் என்பதும் மக்கள் அந்த விடயத்தை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.

வடமராட்சி கிழக்கு கூடுதலாக கரையோர கிராமங்களைக்கொண்டது. போரின் போதும், சமாதானத்தின் போதும் ஏன் விடுதலைப்போராட்டம் தொடங்கும் முன்பாகவும் இந்த பகுதிக்கு மின்சாரம், போக்குவரத்து, உட்பட ஏனைய அடிப்படை சேவைகள் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

இந்த பகுதிகளை சேர்ந்த மக்களே தமக்கான பொதுசேவைகளை தாமே நிதி திரட்டி செய்வார்கள். பருத்தித்துறை - ஆழியவளை வீதி, சுண்டிக்குளம்- நாகர்கோவில் கரையோர வீதி, குறுக்கு வீதிகள், புதுக்காடு- தாழையடி வீதிகளினை இங்கு உள்ள கிராம சங்கங்கள், கழகக்ங்கள்,கூட்டுறவு சங்கங்கள்,கடற்றொழில் சமாசங்களே அவ்வப்போது திருத்தி அமைப்பார்கள்.

பாடசாலைகளும் அவ்வாறுதான் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா, உடுத்துறை மத்திய கல்லூரி, செம்பியன்பற்று மகாவித்தியலையம் உட்பட நான்கு பாடசாலைகள் உயர்தர வகுப்புக்களை கொண்டது. இதனைவிட 9 சிறிய பாடசாலைகளையும் கொண்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசம் யாழ்ப்பாணம் - வன்னியினை இணைக்கும் கிழக்கு கரையோர நிலப்பரப்பினை கொண்டுள்ளதால் விடுதலைப்போராட்ட காலத்தில் இது ஓர் கேந்திர முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாக இருந்தது.

1985, 1986, 1988 (இந்திய அமைதிப்படை) 1991 ஆகாய கடல்வெளி நடவடிக்கை, 1995 யாழ் இடம்பெயர்வு, 1999 ஓயாத அலைகள் மூன்று, 2004 சுனாமி பேரழிவு, 2007 மற்றும் இறுதியாக 2009 வன்னி பெரும் யுத்தம் ஆகிய காலப்பகுதிகளில் ஒன்பது தடவைகள் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒவ்வொரு தடவையும் தாம் இடம்பெயந்து மீழ வரும் போது தமது வாழ்க்கையினை முதலில் இருந்தே ஆரம்பிப்பார்கள்.

இப்போதும் அப்படித்தான். சுனாமியால் கிட்டத்தட்ட 1000 பேர் வரை இந்த பிரதேசம் இழந்தது. போரின்போது இந்த பிரதேசம் சனத்தொகையில் குறைவாக இருந்தாலும் பெருமளவான கரும்புலிகள் உட்பட்ட மாவீரர்களை இழந்துள்ளது. வீதிகளைக்காணவில்லை, கோயில்கள், ஆலையங்களின் கூரைகள் இல்லை, வான் பயிர்களின் வனப்பை காணவில்லை, குடிசைகள் இருந்த இடத்தையே காணவில்லை, ஆங்காங்கே சில சீமெந்து வீடுகள் சுவர்களுடன் மட்டும் இருகின்றன. ஏற்கனவே இந்த பிரதேசம் வரண்டும், மிரண்டும், திரண்டும் இருக்கும் புவியியல் அமைப்பை உடையது, பற்றைக்காடும், சில பசுந்தரைகளும் மணல் திட்டுக்களும் கொண்ட பிரதேசம் காலங்காலமாக இங்கு வாழ்ந்த மக்களால் செப்பனிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் பட்டியல் 2009 வரை 600 இற்கு மேற்பட்ட மாவீரர்களை தியாகம் செய்துள்ளது. இதனை விட 800 இற்கு மேற்பட்ட பொது மக்களை இழந்துள்ளது. இதன்படி சராசரி அண்ணளவாக வீட்டிற்கு ஒருவரை இந்த பிரதேச மக்கள் இழந்துள்ளனர். 22 கரும்புலிகள், பல தலை சிறந்த கப்பலோட்டிகள், விடுதலைப்போர் படைத்தளபதிகள், நிர்வாகிகள் ( அரசாங்க அதிபர்கள் உட்பட),அரச ஊழியர்கள், கலைஞர்கள் (மேஜர் சிட்டு , ஈழத்து படகர் பாடகர் பாலச்சந்திரன் உட்பட) பல்கலை மாணவர்களைக்கொண்ட இந்த பிரதேசம் தம் முயற்சியினால் முன்னேறும் ஓர் பிரதேசம் ஆகும்.

சுனாமியின் போதும் முள்ளிவாய்க்காலின் போதுமே இவர்களுக்கு பேரவலம் கொடூரமாக நிகழ்ந்தது.

இவ்வாறு பல துன்ப ஆறுகளை, நெருப்பாறுகளை கடந்து மீண்டும் நடை பிணங்களாக தம் மண்ணுக்கு மக்கள் வந்து நிற்கின்றனர். வாழ்வோம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு.

வீரம் செறிந்த, தன்முயற்சியுடைய மக்கள் மீண்டும் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்க நாமும் வாழ்த்துகின்றோம். கடந்த காலங்களைப்போல எத்தகைய தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு உங்கள் முயற்சியினால் உங்களை கிராமங்களை கட்டியெழுப்பும் உங்கள் உழைப்பினை பாராட்டுகின்றோம். நாமும் முடிந்தவரை கைகொடுப்போம் எம் அன்பு உறவுகளே.

நன்றி

பகலவன்

Vanni%20VEast.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.