Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த இடப்பெயர்வை எப்படி அழைப்பது?

Featured Replies

விடுதலைப்புலிகளின் காலத்தில் காணிகள் இல்லாதவர்கள், வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள், மாவீரர் போராளிகள் குடும்பங்கள், விதவைக்குடும்பங்கள் என நூற்றுக்கணக்கான குடும்பங்களிற்கு காணிகள் பகிர்ந்தளிக்கபட்டன. வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன, மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஓர் அரசாங்கம் என்ற வகையில் அபிவிருத்தி, புனர்வாழ்வு என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அரசாங்கம் ஆகியோரின் ஒப்புதல்களுடனேயே புனர்வாழ்வுக்கழகம் போன்ற உள்ளூர் அமைப்புக்கள் செய்தன.

இந்த திட்டங்களிற்குரிய காணிகள் அனைத்தும் உரிய முறையில் சட்ட ரீதியாக அனுமதிகள் பெற்றே செய்யப்பட்டன. முடிக்குரிய நிலங்கள் அதற்கான பதிவுகளுடனும், தனியார் காணிகள் அதற்குரிய கொடுப்பனவுகள் மூலமும், சில வெளி நாட்டில் உள்ளவர்களின் காணிகள் அதற்குரியவர்களின் அனுமதி மற்றும் கடிதங்களுடனுமே செய்யப்பட்டன.

கூடுதலான காணிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. சில காணிகள் தேவாலைய, மற்றும் ஆலையங்களுக்கு சொந்தமானவை இவற்றிற்கும் உரிய அனுமதிகள் பெறப்பட்டே பொதுமக்கள் குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது சிலர் அரசியல் மற்றும் மாற்று குழுக்களின் செல்வாக்குடன் இந்த குடியிருப்புக்களை விட்டு மக்களை துரத்திவருகின்றனர். உடன்படாத குடும்பங்களை இவர்கள் எல்லோரும் மாவீரர் குடும்பம் என்றும் இயக்க ஆதரவிற்க்காக புலிகளால் பலாத்காரமாக பறித்து கொடுக்கப்பட்டதென்றும் இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் முறைப்பாடு கொடுத்தும் வருகின்றனர். இதனால் முகாம்களில் இருந்து தம் நிலங்களுக்கு போன சில குடும்பங்கள் மீண்டும் அவ்விடத்தை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்க வேண்டிய அவலம்.

கிளிநொச்சியில் ஒரு கால் இழந்த , ஒரு கஸ்டப்பட்ட குடும்பத்தின் நிலை நேற்று முந்தினமும் நடந்துள்ளது. ஆகவே இவர்களுக்கு இடம்பெயர்வுதான் சாகும்வரை வாழ்வாக இருக்குமா?

உண்மையில் இந்த காணிகளில் பெரும்பலானவை பொது நிறுவனங்களின் உடையது ஆகவே இதனை அந்த மக்களே தொடர்ந்தும் குடியிருக்க கொடுத்தால் என்ன?

காசு வாங்கிக்கொண்டு கடித மாற்றத்துடன் தங்கள் காணிகளை விற்றவர்கள் மீண்டும் இந்த காணிகள் தமது என்று கூறிக்கொண்டு அந்த மக்களை துரத்த முற்படுவதில் என்ன நியாயம்?

ஏன் இப்படி செய்கின்றார்கள்? வெளி நாட்டில் உள்ளவர்கள் கூட சிலர் இப்போ அங்கு சென்று அந்த காணிகளில் இருப்பவர்களை எழும்புமாறும் தாம் அந்த காணிகளை வேறு ஆட்களுக்கு விற்கப்போவதாகவும் கூறுகின்றார்களே இது ஏன்?

இதுவா எங்கள் உணர்வு உண்மையில் இராணுவம் எம் நிலங்களைப்பறிப்பதற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தயவு செய்து இதனை நிறுத்துங்கள் நீங்கள் காசுப்பேய்களாக இருப்பின் அதனை வெளி நாட்டில் உள்ள எம் அமைப்புக்கள் அல்லது அங்குள்ள அமைப்புக்கள் ஊடாக இந்த பிரச்சினைகளை தீருங்கள்.

அதற்காக சிங்களப்படைகளிடம் போய் மீண்டும் மீண்டும் துன்பப்பட்ட மக்களை நிர்க்கதியாக்காதீர்கள்.

ஈழ நாதம்

தட்டுவன்கொட்டில் பகுதியில் வீடமைப்பு திறந்து வைத்த விடுதலைப்புலிகளின் ஐக்கிய நாடுகள் சபை இணைப்பாளர் பா.தியாகராசா அவர்கள் ( 2006).

thadduvankoddil%20village%20housing.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.