Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அபிவிருத்தியில் ஒப்பந்தகாரர்களும் ஊழல்களும்

Featured Replies

வடபகுதியில் அரசாங்கத்தினாலும் சர்வதேச அமைப்புக்களினாலும் செய்யப்படுகின்றதாக கூறப்படும் அபிவிருத்திபணிகளில் 400 இற்கு மேற்பட்ட தனியார் ஒப்பந்தகாரர்கள் வேலைகளை செய்கின்றார்கள்.

இவர்களில் 350 இகு மேற்பட்டவர்கள் தென் இலங்கை சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பல அமைச்சுக்களின் கீழ் சிபார்சுகளின் அடிப்படையில் இலஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை எடுத்து செய்கின்றனர். இதனால் செய்யப்படுகின்ற வேலைகளில் நேர்த்தியின்மை, தரமின்மை காணபப்டுவதனை உள்ளூர் தமிழ் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

இதனால் குறித்த பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வடமாகாண ஆழு நர் சந்திரசிறியினால் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். எனினும் ஒப்பந்த காரர்கள் சிலர் வேலை செய்துள்ளதாக பணம் எடுத்தபின்னரும் வேலைகளை குறித்த காலத்திற்குள் செய்யாதுள்ளதனால் நிதி வழங்கியோர் நச்சரிப்பிற்கு வடக்கு அபிவிருத்தி நிர்வாகம் உள்ளாகியுள்ளது.

இதனால் வடமாகாண ஆழுனர் சந்திரசிறி அனைத்து ஒப்பந்தகாரர்களையும் சந்தித்து மீழ ஒழுங்குபடுத்தப்போவதாக கூறியுள்ளார். இதனை உடனடியாக செய்யுமாறு உதவி வழங்கும் அமைப்புக்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

போர்க்காலத்தில் இலங்கையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியினால் இலங்கை முழுவதும் செய்யப்பட்ட பணிகளில் வடக்கு கிழக்கு பகுதியிலேயே திட்ட முன்னேற்றம் அதி கூடிய புள்ளிகளை பெற்று முன்னேற்றத்தில் இருந்தது. இதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகமே காரணமாக இருந்தது.

ஆனால் இன்று இலங்கையிலேயே ஒப்பந்த பணிகள் ஆமைவேகத்தில் மிக மோசமான பின்னடைவினை கொண்டபகுதியாக வடக்கு கிழக்கு உள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றால் அவை எதிரணிகளால் அல்லது பல அமைப்புக்களால் உடனடியாக வெளியே வந்துவிடும் என்ற பய உணர்வு அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் வடக்கு கிழக்கில் அந்த பயமும் இல்லை போதாக்குறைக்கு ஆயுதப்படைகளின் பாதுகாப்பு வேறு.

இதனால் ஊழல்களிற்கான சாம்ராட்சியமாக வடக்கு கிழக்கு மாறிவருகின்றது.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.