Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த நிபந்தனை பொன்சேகா நிராகரிப்பு

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010

mahintha and sarath

தன்னிடம் மன்னிப்பு கேட்டால் பொன்சேகாவின் சிறைத்தண்டனையினை குறைப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று மஹிந்த நேற்றுக்கூறினார்.

மூன்றாம் தரப்பினரின் அழுத்தங்களின் ஊடாகவோ அல்லது போராட்டங்களின் மூலமோ சரத் பொன்சேகாவுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சரத்பொன்சேகா மன்னிப்பு கேட்கமுடியாது என கூறியுள்ளார். தான் நிரபராதி என்றும் கூடவே தான் ஒரு இராணுவ தளபதி என்பதனை மஹிந்த மறக்க கூடாது எனவும் மஹிந்த கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்க சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரமாட்டார் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறினார்.

சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பானது ஓர் அரசியல் பழிவாங்கலே என்றும் அவர் சொன்னார். அத்துடன், சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்களின் ஆதரவு திரட்டப்படும் எனவும், சிவில் நீதிமன்றத்தினூடாக சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய கூட்டங்களில் அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடுவதன் மூலம் சரத் பொன்சேகாவை விடுவிக்க முடியாது என பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.