Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீழ் அனுப்பலா மீழ் குடியமர்வா?

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 3, 2010 ஈழ நாதம் ஆசிரியர் பத்தி

மெனிக் முகாமில் இன்னமும் 27 ஆயிரம் பேர்தான் உள்ளனர் அவர்களையும் நாம் விரைவில் விட்டுவிடுவோம் என சிறிலங்கா அரசு சந்திக்கு சந்தி நின்று பிரச்சாரம் செய்கின்றது என்றே கூறலாம்.

இதில் சர்வதேச ஊடகங்கள் சிலவும் கூடவே நிறுவனங்களும் சிங்கள அரசின் இந்த பிரச்சாரத்தை அப்படியே விழுங்கி விடுவது வினோதம் அல்லது நிலவரம் தெரியாமை என்றும் கூறலாம்.

உண்மையில் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்கு மஹிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறலாம். சர்வதேச அழுத்தத்தை குறைத்தல் மீழ் குடியமர்வு என்ற பெயரில் நிதி வளங்களைப்பெறுதல் போன்றவற்றிற்காகவே மீழ் குடியமர்வு என்ற பெரும் திட்டத்தினை மஹிந்த குடும்பம் நடாத்திக்கொண்டிருக்கின்றது.

ஆனால் உண்மையில் இங்கு இடம்பெற்றது மீழ் குடியமர்வு அல்ல மாறாக ஓர் மீழ் அனுப்பல் என்றே கூறலாம்.

மக்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றார்கள் என பல்லூடகங்களால் பல அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ததுடன் அவர்கள் மீழ் அனுப்பல் முடிந்துவிட்டது. நிதியினையும் அரசாங்கம் பெற்றாகிவிட்டது.

ஆனால் மீழ் குடியமர்வு என்றால் அதற்கென அடிப்படைத்திட்டங்கள் உள்ளன. அதற்கென ஓர் மீழ் குடியமர்வு பொதி என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட வரைபு உள்ளது.

கண்ணிவெடி அகற்றல், உலருணவு நிவாரணம், தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கான உதவிகள், தற்காலிக குடிசை அமைப்பதற்கான உதவிகள், பாடசாலை வசதி, குடி நீர் வசதி என அடிப்படை வசதிகளுடன்மீழ் குடிஏற்றம் செய்யப்படும்.

இவற்றையெல்லாம் அரசாங்கம் தந்தபின்னர்தான் மீழ் குடியமர்வு சாத்தியம் என்றால் 10 வருடங்களானாலும் மீழ் குடியேற்றம் முற்றுப்பெறாது என பலர் கருதியதாலும், முதலில் மக்களை அவரவர் இடத்திற்கு விட்டால் போதும் என கருதியதாலும் அரசின் கொள்கைகளை சர்வதேசமும் ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதனால் அரசாங்கமும் மீழ் குடியேற்றம் செய்துவிட்டோம் என மார்தட்டிக்கொண்டிருக்கின்றது.

மீழ் குடியேறிய மக்களின் நிலை என்ன?

வெளி நாட்டு உதவிகள் இல்லாதோர், நிலம் இல்லாதோர், நிலம் பறிக்கபப்ட்டோர், குடும்பங்களில் உழைப்பாளரை இளந்த அங்கத்தவர்கள், சிறையில் உள்ள குடும்ப அங்கத்தவர்கள், இயலாதவர்கள், தொழில் ஒன்றும் இல்லாதவர்கள், தம் தொழிலை உடனடியாக ஆரம்பிக்க முடியாதவர்கள் என தம் சொந்த இடங்களுக்கு வந்துள்ளவர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.

அண்மையில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற மக்கள் தாமாக கூலி வேலை செய்து வந்த பணத்தில் 100 ரூபா படி லொறி ஒன்றிற்கு கொடுத்து தம் ஊர்களுக்கு சென்றனர்.

இப்போ பருவகாலம் தொடங்கியுள்ளது. முகாமில் இருந்தது போலவே தம் ஊர்களிலும் இருக்கும் மக்கள் குடிசைகள் கூட ஒழுங்காக இல்லை, கூரைகள் இல்லை வரப்போகின்ற மழை காலத்தினை எப்படி எதிர்கொள்ளப்போகின்றார்கள் என இப்போதே அவர்கள் மனதில் பீதி கிளம்பியுள்ளது.

மழைகாலங்களில் உணவிற்கு கூட தட்டுப்பாடு ஏற்படும், கூடவே படுத்து உறங்க கூட வசதிகள் இல்லாவிடில் அந்த மக்கள் என்ன செய்வார்கள்?

அண்மையில் முல்லைத்தீவில் வசிக்கும் சுஜி கண்ணையா என்ற விதவைத்தாய் கூறுகையில் சில தகரங்களுடன் கூரைபோட்டு குடிசையில் இருக்கின்றோம் மழை வந்தால் இந்த குடிசை ஈடுகொடுக்காது என ஐக்கிய நாடுகள் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

உண்மையில் வன்னியில் மீழச்சென்றுள்ள மக்களில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு முறையான பாதுகாப்பான குடிசைகள் இல்லை. இவற்றை மழை காலத்திற்குள் அமைக்க முடியுமா? இல்லை ஆகவே நிலமை என்ன?

இதனைவிட உலர் உணவு நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழில் செய்வதற்கான வசதிகள் குறைவு, கடற்றொழிலை இன்னமும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் சிங்கள அரசு தமது நிர்வாக இயந்திரங்களை மட்டும் புனரமைத்து நிர்வாக இறுக்கங்களை மக்கள் மேல் சுமத்திவருகின்றது.

இதுதான் அபிவிருத்தியா? இதுதான் மீழ் குடியமர்வா?

வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், பல்வேறு பண்டங்களை விற்கும் தென் இலங்கை வர்த்தகர்கள் தமது வியாபாரங்களை வன்னி முழுவதும் ஏன் வடக்கு கிழக்கு முழுவதும் பரப்பி வைத்துள்ளனர்.

இவர்களின் வியாபார வலைப்பின்னல்களிற்குள் சிக்காமல் யாரும் நடமாட முடியாது. வடக்கு கிழக்கில் படைகளின் பிரசன்னம் போலவே இந்த வியாபாரிகளின் பிரசன்னம் இருக்கின்றது. ஆனால் இவர்கள் படையினர் எவ்வாறு தாம் மக்களிற்கு பாதுகாப்பாக இருக்கின்றோம் என கூறி கதைவிடுகின்றனரோ இந்த வியாபாரிகளும் தாம் மக்களிற்கு சேவை செய்ய வந்துள்ளதாக கூறுகின்றனர்.

எந்தவொரு நிறுவனமும் ( நிதி) மக்களிற்கு கடன்களை வழங்கி சுய தொழிலை ஆரம்பிக்க உதவ தயாராக இல்லை மாறாக வெளி நாட்டில் உள்ள குடும்பங்களின் பணங்களை சேமிப்பு என்ற பேரில் கறப்பதற்கே தயாராக உள்ளனர்.

அப்படி ஒரு குடும்பத்திற்கு கடன் வழங்க முனைந்தாலும் அதிக வட்டியும் குறுங்கால கடனுமாகத்தான் ( 22 வீதத்தில் 18 மாத கடன்) இருக்கின்றது.

அடுத்ததாக வடக்கில் மீழ் குடியேற்றம் அபிவிருத்தி என்று கூறும் அரசு அந்த வேலைத்திட்டங்களை செய்வதற்கு 400 இற்கு மேற்பட்ட ஒப்பந்தகாரர்களை தெற்கில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. ஆளணிக்காக படைத்தரப்பினையும் சிங்கள கூலிகளையும் இறக்கி வேலைகள் நடக்கின்றன. அல்லது துணை ஆயுத குழுக்களால் ஒப்பந்த வேலைகள் செய்து கொடுக்கபப்டுகின்றன.

படைத்தரப்பிடமோ அல்லது துணை ஆயுத குழுக்களிடமோ மக்களும் அதிகாரிகளும் குறை நிறைகள் பற்றி பேசமுடியாது. ஊழல் என்பது நிரம்பி வழிவதாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒப்பந்த பணிகளை மேற்பார்வை செய்ய கொடையாளர்களுக்கு அனுமதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கொடையாளர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. அதற்கான காரணமும் புரியவில்லை.

அடுத்ததாக தம் சொந்த இடங்களுக்கு திரும்ப வந்துள்ள மக்களின் பாதுகாப்பும் உளவள துணைச்சேவையும் பற்றி பார்க்கையில் பாதுகாப்பு என்பது சூனியமாகவே உள்ளது.

ஆண்கள் துணை இல்லாத குடும்பங்கள் இரவில் தனித்து வீடுகளில் தங்க முடியாது. பெண்கள் தனித்து நடமாட முடியாது. பிரதேசங்களில் இருக்கும் சிங்கள படைகள் பகல் முழுவதும் நோட்டம் விடுவர். யார் வீட்டில் ஆண்கள் இல்லை, யார் யார் மாலை நேரம் வீட்டை விட்டு வெளியே வருவர் என்ற தகவலை திரட்டிய பின்னர் இரவு நேரங்களில் சிவில் உடைகளில் வீடுகளிற்குள் புகுந்து பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இவ்வாறு அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் கனகாம்பிகை குள ஊரில் ஒரு வீட்டிற்கு சென்ற சிப்பாய் தாக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக கிளிநொச்சியில் இன்னொரு சம்பவத்தில் தாயும் மகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஆகவே மீழக்குடியேறிய மக்கள் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு அச்சமும் உள ரீதியான பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர்.

ஆகவே இப்போது சொல்லுங்கள் வடக்கு கிழக்கில் நடந்தது நடப்பது ஓர் மீழ் குடியேற்றமா? அல்லது மீழ் அனுப்பலா என்று.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.