Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கு'ரங்காரின்" குரங்காட்டம்

Featured Replies

தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் பழக்கம் அரசியல்வாதிகளிடம் நீண்ட காலமாக இருந்துவரும் அவர்களின் இரத்தத்திலேயே ஊறுவிட்ட ஒன்று. அதிலும் மக்களிடம் இருக்கும் போது அரசியல் தலைவர்களைக் கிழி கிழி என்று கழிக்கும் கிழிக்கும் மக்கள் சேவகர்கள் பதவிக் கதிரையை அடைந்ததும் முற்றிலும் புதிய மனிதர்களாக மாறிவருவதுடன் நம்பி வாக்குப் போட்ட மக்களின் விருப்பங்களுக்கு மாறாக தாம் நினைப்பதையே மக்களின் விருப்பமாக பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை இவர்களுக்கு உள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் இலங்கை வரலாற்றில் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் போது சமஷ்டி பற்றிய சித்தாந்தங்களை கோட்பாட்டு ரீதியாகத் தெரிந்துகொண்டு இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததுடன் சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெறுவதற்காக 1956 இல் அதிரடியாக தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலை பறிபோவதற்குக் காரணமாக இருந்த புண்ணியவான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க போன்றவர்களின் வரலாறு நமக்குப் புதிதல்ல.

அந்த வகையில் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய எஸ்.சிறிரங்கா விடுதலைப் புலிகளுக்கு அல்லது தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாளர் என்று இனங்காட்டிக்கொண்ட ஒருவராவார். அரசியல்வாதிகளைப் பேட்டி எடுக்கும்போது தமிழ்த் தேசியத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட ஒருவரைப்போல தன்னைச் சித்தரித்துக்கொண்டு அரசியல்வாதிகளைப் புரட்டி எடுப்பதுடன் இரு கட்சிகளைச் சார்ந்தவர்களிடையே சிண்டு முடிந்து விடுவதும் இவரது வழக்கமான பாணிகளில் ஒன்று.

அப்படியான காலங்களில் ரங்கா தமிழ்த் தேசியம் பேசியே தன்னுடைய அரசியல்வாழ்வுக்கு அத்திவாரம் போட்டவர். அவரது அரசியல்வாதிகளை நோக்கிய கேள்விக்கணைகள் கூட தமிழ்த் தேசியத்தின் சார்பாகவே விளங்கும். இவருக்கென யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசங்களில் பரந்த ரசிகர்களும் இருந்துள்ளார்கள். இவர் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் என பலர் நம்பினார்கள். ஆனால், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகியது போல பாராளுமன்றத் தேர்தலில் மலையக மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சிறிரங்கா, இலங்கையின் சாக்கடையான அரசியலுக்குள் தன்னை உள்ளீர்த்துக்கொண்டுவிட்டார். 'பூனை இல்லாவிட்டால் எலிக்குக் கொண்டாட்டம்" என்ற வகையில் விடுதலைப் புலிகளின் வெற்றிடமான இந்தக் கால கட்டத்தில் அவரது அறிக்கைகளும் அவருடைய அரசியல் இணைவுகளும் அவரது அரசியல் முதிர்ச்சியை உண்மையில் எடுத்துக்காட்டியுள்ளன.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ஆயுட்கால ஜனாதிபதிப் பதவியை திட்டமிட்டு வாழ்நாள் பேராசிரியர் போன்று வாழ்நாள் ஜனாதிபதி என்ற புதிய அத்தியாயத்தைத் தொடக்கிவைத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்று அரசியலமைப்புக்கான 18 வது சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இது தொடர்பில் ரங்கா தெரிவித்த கருத்து நகைப்பக்கிடமானது மட்டுமன்றி அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும் தமிழர்களைக் கோமாளிகளாகக் கருதும் நிலையையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

அதாவது அவருடைய கூற்றின் சாராம்சம் என்னவென்றால், 'இலங்கையின் எதிர்க்கட்சிகள் 18 வது திருத்தத்தை எதிர்க்கும் அளவுக்கு பலமற்று இருப்பதால் அதற்கு எதிராக வாக்களித்து எதுவும் நடைபெறப்போவதில்லை. எனவே நடக்காத ஒன்றுக்கு எதிர்த்து வாக்களிப்பதை விட, நடக்கப்போகும் ஒன்றுக்கு ஆதரவளிப்பதே மேல் என்ற சாரப்பட அவரது கருத்து அமைந்திருந்தது.

ரங்காவின் இந்த கோமாளித்தனமான பல்டி தமிழர்களுக்கு மிக்க கோபத்தையும், எரிச்சலையும் ஊட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 'அறப்படித்த பல்லி கூழ் பானைக்குள் விழுந்த மாதிரி" ஏதோ தான் ஒரு நீதிபதி போலவும், மின்னல் நிகழ்ச்சிக்கு வரும் பழுத்த அரசியல்வாதிகளை குற்றவாழிகளைப் போலவும் நினைத்து கிண்டலடிக்கும் ரங்கா நிச்சயமாக அந்த அரசியல்வாதிகளிடம் மாட்டுப்படுவாராயின் அவர் முகத்தில் காறித்துப்புவார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்துக்கு அவர் தன்னுடன் கூட்டிச் சென்ற பரிவாரங்களில் ரங்காவும் ஒருவர். அவர் பாராளுமன்ற உறுப்பினராகச் சென்றாரா அல்லது ஊடகவியலாளராகச் சென்றாரா என்பது முக்கியமானதல்ல. ஜனாதிபதியுடன் சென்றார் என்பதே இங்கு கவனிக்கத்தக்க விடயம்.

ரங்கா ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு காலத்தில் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்று யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மிளிர்ந்த ஆனந்தசங்கரி ஐயாவே விடுதலைப் புலிகளின் கருத்தியலுக்கு எதிராக நின்றார் என்பதற்காக யாழ்ப்பாண மக்களால் இன்றுவரையில் நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே உள்ளார். எனவே நடைமுறைச் சாத்தியமற்ற 18 வது திருத்தத்தை ஆதரித்து எதிர்கால தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கைக்கும் இன்னல் விளைவிக்கும் செயலுக்கு துணைபோன ரங்கா ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாது என்ற வார்த்தையைத் தவிர இவ்வுலகில் மற்ற எல்லாம் மாறிவிடும். இதற்கு நல்ல உதாரணம் - 'கிழட்டு நரி" என வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978 இல் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் தனக்காகவும் மட்டுமே கொண்டுவந்தார். இறுதியில் அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக் கதிரையை அமைக்கவிடாதபடி - அதாவது ஜனாதிபதிப் பதவியை நினைத்தக்கூடப் பார்க்க முடியாதபடி செய்துவிட்டது. எனவே இன்று ராஜபக்ஷவின் 18 வது திருத்தம் எதிர்காலத்தில் அவருக்கு ஆப்பாகவும் மாறலாம்.

இதைவிட ஜெயிக்கும் கட்சியில் சேர்பவன் நிகழ்காலத்தில் நன்றாக வாழ்வான். வருங்காலம் அவனை மன்னிக்காது. ரங்காவுக்கு ஒரு சின்ன உதாரணத்தைக் காட்டமுடியும். எந்த ஆபிரிக்காவினால் நெல்சன் மண்டேலா தீவிரவாதி என தடை செய்யப்பட்டாரோ அவர் பின்பு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் புரட்சிப் போராளி என ஏற்றுக்கொள்ளப்பட்டார். எம் தமிழினத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று பண்டாரவன்னியன். அதற்கு முன் எல்லாளன். பின்னர் தேசியத் தலைவர். மறுபக்கத்தில் எட்டப்பன், காக்கை வன்னியன், கருணா. இதில் எப்பக்கத்தில் சேர்வது என்பதை அவரவரர்களே முடிவு செய்துகொள்ளட்டும். காற்று ஒரே திசையில் அடிப்பதில்லை என்பதை ரங்கா புரிந்துகொள்ளட்டும்.

பூராயத்தின் வெளிச்சம் பகுதிக்காக சிரித்திரன்

http://www.pooraayam.com/spot-light/1048-q-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.